என் மலர்
நீங்கள் தேடியது "motor cycle theft arrest"
தேனி:
ஆண்டிப்பட்டி அருகே அம்பேத்கார் தெருவை சேர்ந்தவர் சேர்மலை (வயது56). இவர் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை பூக்கடை முன்பு நிறுத்தி வைத்திருந்தார். மறுநாள் காலையில் பார்க்கும்போது மோட்டார் சைக்கிள் திருடுபோனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
சம்பவத்தன்று கடமலைக்குண்டு அருகே 2 சிறுவர்கள் சந்தேகத்திற்கு இடமாக மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்துள்ளனர்.
அப்போது அதனை பார்த்த சேர்மலை அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் தன்னுடையதுபோல தெரிந்தது. இருப்பினும் அந்த மோட்டார் சைக்கிளில் இருந்த நம்பர் பிளேட் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
சந்தேகத்தின்பேரில் அந்த மோட்டார் சைக்கிளில் வந்த சிறுவர்களை நிறுத்தி விசாரித்தபோது அவர்கள் முன்னுக்கு பின்னாக பதில் அளித்தனர். இது குறித்து சேர்மலை கடமலைக்குண்டு போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் விசாரணை நடத்தி போலீசார் பாலூத்து மற்றும் தேவராஜ் நகர் பகுதியை சேர்ந்த மாதேஸ் (வயது16), தங்கபாண்டி (16) ஆகி 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.






