search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "admission"

    • பி.எட். வகுப்பில் அரசு நிர்ணயித்த கட்டணத்தில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
    • மாணவர்களுக்கு இசை, நடனம் மற்றும் பயிற்சி பட்டறை வகுப்புகள் சிறப்பாக நடத்தப்படுகின்றன.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

    பாடப்பிரிவுகள்

    திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி கடந்த 1995-ம் ஆண்டு முதல் இளங்கலை கல்வியியல் (பி.எட்.) படிப்புடன் இயங்கி வருகிறது. இருபாலரும் பயிலும் இந்த கல்லூரி தேசிய தர மதிப்பீட்டு குழுவின் 'பி' பிளஸ் சான்று பெற்ற நிறுவனம் ஆகும்.

    இளங்கலை கல்வியியலில் (பி.எட்.) ஆங்கிலம், கணிதம், பொருளியல், உயிர் அறிவியல் (தாவரவியல், விலங்கியல், நுண்ணுயிரியல், செடி உயிரியல், உயிர் தொழில்நுட்பம்), பொருளறிவியல் (இயற்பியல், வேதியியல், பயன்பாட்டு இயற்பியல், உயிர் இயற்பியல், பயன்பாட்டு வேதியியல்), வணிகவியல் மற்றும் கணினி அறிவியல் பாடப்பிரிவுகள் கற்று தரப்படுகின்றன. பி.இ. பட்டப்படிப்பு படித்தவர்கள் பி.எட். வகுப்பில் கணிதம் மற்றும் பொருளறிவியல் பிரிவில் சேர்த்து கொள்ளப்படுவர்.

    திறமை வாய்ந்த பேராசிரியர் குழு

    பி.எட். வகுப்பில் அரசு நிர்ணயித்த கட்டணத்தில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இங்கு திறமைவாய்ந்த பேராசிரியர் குழு, தரமிக்க நூலக வசதி, அறிவியல், உளவியல், கல்விநுட்பவியல் மற்றும் கணினி ஆய்வகங்கள் உள்ளன. மேலும் வீடியோ வசதியுடன் கூடிய நுண்ணியல் ஆசிரியர் பயிற்சி வழங்கப்படுகிறது.

    மாணவர்களுக்கு இசை, நடனம் மற்றும் பயிற்சி பட்டறை வகுப்புகள் சிறப்பாக நடத்தப்படுகின்றன. வங்கியில் கல்விக்கடன் பெற ஏற்பாடு செய்து தரப்படுகிறது. பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர்.

    வளாகத் தேர்வு

    மாணவர்களுக்கு வளாகத்தேர்வு மூலம் ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தி கொடுக்கப்படுகிறது. இருபாலருக்கும் தனித்தனியாக விடுதி வசதி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான (TET) பயிற்சியும், ஆராய்ச்சி கல்விக்கான (NET) பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

    அரசு நிர்ணயித்த கல்வி கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

    பி.எட். வகுப்பில் சேர விரும்பும் மாணவ-மாணவிகள் www.drsacedn.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு கல்லூரி முதல்வரை 04639-242181, 220577, 9486381123, 9042282412 ஆகிய தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.

    இந்த தகவலை திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி முதல்வர் சுவாமிதாஸ் தெரிவித்துள்ளார்.

    • 27,28 மற்றும் 29-வது வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய உறுப்பினர் சேர்க்கை நடந்தது.
    • குன்னூர் நகர செயலாளரும் நகர மன்ற உறுப்பினருமான சரவணகுமார் ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    ஊட்டி,

    குன்னூர் நகரில் ஓட்டுப்பட்டறை சுற்றுவட்டார பகுதிகளில் 27,28 மற்றும் 29-வது வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் பூத் கமிட்டி அமைப்பதற்கான பணிகளை எவ்வாறு நடைபெறுகின்றது என்பதனை மாவட்ட செயலாளர் கப்பச்சிவினோத் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் குன்னூர் எம்.எல்.ஏ சாந்தி ராமு, வர்த்தக அணி மாவட்ட செயலாளர் குருமூர்த்தி, கிளை செயலாளர், மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். குன்னூர் நகர செயலாளரும் நகர மன்ற உறுப்பினருமான சரவணகுமார் ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    • மாணவர் சேர்க்கை முதல் கட்ட கலந்தாய்வு மே 31, ஜூன் 1 மற்றும் 2 ஆகிய நாட்களில் நடைபெறுகிறது.
    • முன்னாள் ராணுவத்தினர் குழந்தைகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் போன்ற மாணவர்களுக்கு சிறப்பு கலந்தாய்வு நடைபெறும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மணிமேகலை செய்தி குறிப்பு வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது:-

    கல்லூரியில் இளங்கலை பிரிவில் பி.ஏ. தமிழ், பி.ஏ. ஆங்கிலம், பி.காம் வணிகவியல் மற்றும் இளநிலை அறிவியல் பிரிவில்பி.எஸ்.சி. வேதியியல், பி.எஸ்.சி. இயற்பியல்,பி.எஸ்.சி. கணினி அறிவியல்,பி.எஸ்.சி. கணிதம் ஆகிய 7 பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை முதல் கட்ட கலந்தாய்வு வருகின்ற 31- ந்தேதி, ஜூன் 1 மற்றும் 2 ஆகிய நாட்களில் நடைபெறுகிறது.

    இதில் 31- ந்தேதி சிறப்பு பிரிவு மாணவர்களான மாற்றுத்திறனாளிகள், .என்.சி.சி., என்.எஸ்.எஸ், முன்னாள் ராணுவத்தினர் குழந்தைகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் போன்ற மாணவர்களுக்கு சிறப்பு கலந்தாய்வு நடைபெறும். அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு ஜூன் 2- ந்தேதி (வியா ழக்கிழமை) வேதியியல் துறை, கணிணித் துறை. கணிதத் துறை, இயற்பியல் துறைக்கு கலந்தாய்வு நடைபெறும். இதில் 2- ந்தேதி அனைத்து கலைப்பிரிவு தமிழ் ஆங்கிலம் வணிகவிய ல்போன்ற பாடப்பி ரிவுகளுக்கு கலந்தாய்வு நடைபெறும்.

    தமிழக அரசின் இட ஒது க்கீட்டின் விதிமுறைகளின் படி மாணவர் சேர்க்கை நடைபெறும். கல்லூரி கல்விக் கட்டணம் ரூபாய் 2500(தோராயமாக) செலுத்த வேண்டும். கல்லூரி சேர்க்கைக்கு வரும் மாணவர்கள் இணைய வழி விண்ணப்ப படிவத்தை நகல், மாற்றுச் சான்றிதழ், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பதினொன்றாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஆதார் அட்டை, சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், தேசிய வங்கி கணக்கு புத்தகம் முதல் பக்கம் நகல், 4 வண்ண புகைப்படம் ஆகியவற்றை எடுத்து வரவேண்டும். மேலும் அனைத்து சான்றிதழ்களும் 2 செட் ஜெராக்ஸ் காப்பி எடுத்து வரவேண்டும். கலந்தாய்வுக்கு அலைபேசி . மின் அஞ்சல் மூலமாகவும் வாட்ஸ் அப் மூலம் அழைப்பு வந்தவ ர்களுக்கு மட்டும் கனியாமூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • அடிப்படை வசதிகள், கல்வி கற்பித்தல், நோயாளிகளை கவனத்தில் எதிலும் பிரச்சனை இல்லை.
    • புதுவையின் பெருமை குலைய கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

    புதுச்சேரி:

    புதுவை இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரியில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு திடீரென அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இதனை அறிந்த புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை பார்வையிட்டு மருத்துவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    மருத்துவக் கல்லூரிக்கான உரிமம் புதுப்பிக்கத் தவறியமைக்கான காரணங்களை கேட்டறிந்தார்.

    அப்போது அவர் அதிகாரிகளை கடிந்து கொண்டார்.

    இதை தொடர்ந்து கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேசிய மருத்துவ கழகத்திற்கு பல கல்லூரிகளில் டாக்டர்கள் சரியாக வருவதில்லை என்றும் மாணவர்களுக்கு சரியாக பாடம் சொல்லி கொடுப்பதில்லை என்றும் புகார்கள் சென்றுள்ளது. இதனால் வருகை பதிவேடு மற்றும் சி.சி.டி.வி கேமரா பதிவு மருத்துவ கழகத்தின் இணையதளத்துடன் இணைக்க அறிவுறுத்தி யுள்ளனர்.

    இதனை ஏற்பாடு செய்த புதுவை அரசு மருத்துவ கல்லூரி நிர்வாகத்தினர் இணைப்பு தராமல் விட்டு விட்டார்கள். பெற்றோர்களும் மாணவர்களும் கவலைப்பட வேண்டாம். மிக விரைவில் இந்த குறைபாடுகள் சரி செய்யப்படும். அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த குறைபாட்டிற்கு அதிகாரிகள் காரணம். அவர்கள் அதை முறைப்படுத்தி இருக்க வேண்டும்.

    மருத்துவ மாணவர்களின் படிப்பில் யாரும் விளையாட கூடாது. இதற்கு காரணமானவர்கள் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    இந்த ஆண்டு மாணவர்களின் சேர்க்கையில் ஒரு பிரச்சனையும் கூடாது என்பதற்காக முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். அடிப்படை வசதிகள், கல்வி கற்பித்தல், நோயாளிகளை கவனத்தில் எதிலும் பிரச்சனை இல்லை.

    இது தான் அடிப்படையானது. இவைதான் மருத்துவக் கல்லூரிக்கு மிக முக்கியமானது.

    மற்ற யூனியன் பிரதேசங்களில் மருத்துவக் கல்லூரி இல்லை. புதுவையில் மட்டும்தான் நடத்தப்படுகிறது. அதனால் புதுவையின் பெருமை குலைய கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். மெத்தனமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • லிங்கமாவூரில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான அரசு உண்டு உறைவிடப்பள்ளி உள்ளது.
    • தற்போது 20 மாணவர்கள் வரை பராமரிக்கப்படுகின்றனர்.

    உடுமலை :

    உடுமலை ஒன்றியம் ஜல்லிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட லிங்கமாவூரில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான அரசு உண்டு உறைவிடப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் தற்போது 20 மாணவர்கள் வரை பராமரிக்கப்படுகின்றனர். அருகிலுள்ள ஈசல்திட்டு, குருமலை சுற்றுப்பகுதி மலைப்பகுதிகளிலிருந்து வந்து தங்கி படிக்கின்றனர்.

    பள்ளி மாணவர்களுக்கு உணவு, கல்வி, தங்குமிடத்துடன் அவர்களின் தனித்திறன்களை ஊக்குவிப்பது, விளையாட்டுப்போட்டிகள் நடத்துவது, சுற்றுச்சூழல் சார்ந்த விழிப்புணர்வு என அனைத்து வகையிலும் மேம்படுத்தும் பள்ளிகளில் இப்பள்ளியும் ஒன்றாக உள்ளது.நடப்பு கல்வியாண்டில் பள்ளி தலைமையாசிரியர் ஐயப்பன், மற்றும் ஆசிரியர்கள் மக்கள் நடமாட்டம் மிகுந்த பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் நோட்டீஸ் வினியோகித்து சேர்க்கைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.

    அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள், உண்டு உறைவிடப்பள்ளிகளில் உள்ள வசதிகள், மாணவர்களுக்கான ஊக்கத்தொகை, உதவிதொகை உள்ளிட்ட அனைத்தையும் குறிப்பிட்டு, பஸ் நிறுத்தம் பகுதியில் நோட்டீஸ் ஒட்டி வருகின்றனர். மலைவாழ் கிராமங்களுக்கும் நேரடியாக சென்று அப்பகுதி பெற்றோருக்கும் சேர்க்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். 

    • பத்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.
    • விலையில்லா மிதிவண்டி, மடிக்கணினி மற்றும் மாத உதவித்தொகையாக ரூ.750 வழங்கப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூா், தாராபுரம், உடுமலையில் உள்ள அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர பத்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

    இதுகுறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பூா் மாவட்டம், திருப்பூா், தாராபுரம் மற்றும் உடுமலையில் இயங்கி வரும் அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர பத்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம். இதில், பல்வேறு பொறியியல், மேம்பட்ட தொழில்நுட்ப படிப்புகளான மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சேர இணையதளம் மூலம் அல்லது தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு நேரில் சென்று உதவி சேவை மையத்தை அணுகலாம்.

    அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெறுபவா்களுக்கு தரமான பயிற்சி வழங்கப்படுவதுடன், விலையில்லா மிதிவண்டி, மடிக்கணினி மற்றும் மாத உதவித்தொகையாக ரூ.750 வழங்கப்படும். மேலும் குறிப்பிட்ட சில தொழிற் பிரிவுகளில் பயிற்சி பெறும் பயிற்சியாளா்களுக்கு டூல் கிட், தையல் இயந்திரம் விலையில்லாமல் வழங்கப்படும்.

    பயிற்சி முடித்த பயிற்சியாளா்களுக்கு முன்னணி தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் ஏற்பாடு செய்து தரப்படும். ஆகவே விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் ஜூன் 7 ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 94990-55695, 94990-55700, 94990-55689 ஆகிய செல்போன் எண்களை தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

    • கல்வித்துறை அறிவிப்பு
    • அரசு பள்ளி மாணவர்களுக்கு இடம் ஒதுக்கிய பின் அரசுஉதவி பெறும் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு இடம் வழங்கப்படும்.

    புதுச்சேரி:

    10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து புதுவை, காரைக்காலில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கை விண்ணப்பம் வழங்கும் பணி இன்று தொடங்குகிறது.

    வரும் 17-ந் தேதிக்குள் மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை மாணவ, மாணவிகள் தாங்கள் சேர விரும்பும் பள்ளிகளை நேரில் அணுகி பெற்று, பூர்த்தி செய்து வரும் 9-ந் தேதி மாலை 4 மணிக்குள்விண்ணப்பத்தை சமர்பிக்க வேண்டும். அதற்கு மேல் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது.

    விண்ணப்பங்கள் பெற்ற பின் மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியல் 12-ந் தேதி காலை 9 மணிக்கு அந்தந்த பள்ளிகளில் வெளியிடப்படும். அன்றே நேர்காணல் தேதி, நேரம் அறிவிக்கப்படும். மறுநாள் 13-ந் தேதி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு, மதிப்பெண் அடிப்படையில் இடம் ஒதுக்கப்படும்.

    ஒவ்வொரு நாளின் இறுதியில் மீதமுள்ள இடங்கள் பட்டியல் வெளியிடப்படும். அரசு உதவி பெறும் பள்ளிகளின் தரவரிசை 14-ந் தேதி வெளியிடப்பட்டு நேர்காணல் தேதி அறிவிக்கப்படும். அரசு பள்ளி மாணவர்களுக்கு இடம் ஒதுக்கிய பின் அரசுஉதவி பெறும் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு இடம் வழங்கப்படும்.

    தனியார் பள்ளி மாணவர்களின் தரவரிசை பட்டியல் 16-ந் தேதி வெளியிடப்படும். அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இடம் வழங்கிய பின் மீதமுள்ள இடங்கள் தகவல் பலகையில் வெளியிடப்படும். 17-ந் தேதி மதிப்பெண் இடஒதுக்கீடு முறையில் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இடம் ஒதுக்கப்படும்.

    இந்த தகவலை கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி அறிவித்துள்ளார். மாணவர் சேர்க்கை தொடர்பாக பள்ளிகளில் வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இந்த குழுவை அணுகி சந்தேகங்களை தீர்க்கலாம்.

    பிளஸ்-1 வகுப்பில் சேர மதிப்பெண் பட்டியல், மாற்று, குடியுரிமை சான்று, பெற்றோர்களுடன் மாணவர்கள் வர வேண்டும். வகுப்புகள் அடுத்தமாதம் 19-ந் தேதி தொடங்கும்.

    • 864 இடங்களுக்கு ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
    • ஜூன் 12 முதல் 20 வரை இரண்டாம் பொது கலந்தாய்வு நடக்கிறது.

    உடுமலை :

    உடுமலை அரசு கலைக்கல்லூரியில் இளநிலை, தமிழ், ஆங்கில இலக்கியம் உட்பட இளநிலையில் மட்டுமே 22 பாடப்பிரிவுகளுக்கு 864 இடங்களுக்கு ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    தற்போது தரவரிசைப்பட்டியல் மற்றும் கலந்தாய்வு தேதிகள் திருத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்களின் தரவரிசைப்பட்டியல் இன்று கல்லூரிக்கு அனுப்பப்படுகிறது.தொடர்ந்து 29-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வும், ஜூன் 1 முதல் 10 வரை பிற மாணவர்களுக்கான முதல் பொது கலந்தாய்வும், ஜூன் 12 முதல் 20 வரை இரண்டாம் பொது கலந்தாய்வும் நடக்கிறது. முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூன் 22-ந்தேதி துவங்குகிறது. 

    • (யு.ஜி.சி) சார்பில் பொது பல்கலைக் கழக நுழைவு தேர்வு (கியூட்) தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படுகிறது.
    • நடப்பாண்டுக்கான தேர்வுக்கு அதிகம் பேர் விண்ணப்பித்ததை தொடர்ந்து தேர்வு 3 கட்டங்களாக நடத்தப்படுகிறது.

    சேலம்:

    மத்திய மற்றும் மாநில அரசுகளின் முன்னணி பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்ட படிப்பு களில் மாணவர்கள் சேர ஒவ்ெவாரு ஆண்டும் பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி) சார்பில் பொது பல்கலைக் கழக நுழைவு தேர்வு (கியூட்) தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படுகிறது.

    நடப்பாண்டுக்கான தேர்வுக்கு அதிகம் பேர் விண்ணப்பித்ததை தொடர்ந்து தேர்வு 3 கட்டங்களாக நடத்தப்படுகிறது.

    சேலம், நாமக்கல்

    அதன்படி முதற்கட்டமாக நாடு முழுவதும் நேற்று 271 நகரங்களில் உள்ள 447 மையங்களில் தேர்வு நடைபெற்றது. இதில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பிளஸ்- 2 தேர்ச்சி பெற்ற மாணவ- மாணவிகள் திரளானோர் எழுதினர். சுமார் 3 மணி நேரம் 15 நிமிடங்கள் தேர்வு நடைபெற்றது. வினாத்தாள் மிகவும் எளிமையாக இருந்ததாகவும், தடுமாற்றம் இல்லாமல் தேர்வை எதிர்கொண்டதாகவும் மாணவர்கள் கருத்து தெரிவித்தனர்.

    அடுத்தக் கட்ட தேர்வுகள் ஜூன் முதல் வாரம் வரை நடைபெறுகின்றன. அதுபோல் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான பொதுப் பல்கலைக்கழக நுழைவு தேர்வு வருகிற ஜூன் மாதம் நடைபெற உள்ளது.

    • பி.பி.இ.எஸ். இளநிலை பட்டப்படிப்பு படிக்க பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    • பள்ளிகளுக்கு இடையேயான ஏதேனும் ஒரு விளையாட்டு போட்டியில் பங்கேற்று சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

    மாணவர் சேர்க்கை

    திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பு (பி.பி.இ.எஸ்.) மூன்று வருட படிப்பு, இளநிலை உடற்கல்வியியல் (பி.பி.எட்) இரண்டு வருட படிப்பு, முதுநிலை உடற்கல்வியியல் (எம்.பி.எட்) இரண்டு வருட படிப்புகான மாணவர் சேர்க்கை நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.

    பி.பி.இ.எஸ். இளநிலை பட்டப்படிப்பு படிக்க பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பள்ளிகளுக்கு இடையேயான குடியரசு தின போட்டி அல்லது பாரதியார் தின போட்டிகள் ஏதேனும் ஒரு விளையாட்டு போட்டியில் பங்கேற்று சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மாணவ-மாணவிகள் 21 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆதிதிராவிட மாணவர்களுக்கு வயது வரம்பில் 3 ஆண்டுகள் சலுகை வழங்கப்படும்.

    இளநிலை பட்டப்படிப்பு

    பி.பி.எட். படிக்க இளநிலை பட்டப்படிப்புடன் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இடையேயான ஏதேனும் ஒரு விளையாட்டு போட்டியில் பங்கேற்ற சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இளநிலை பட்டப்படிப்பில் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

    ஆதிதிராவிட மாணவர்களுக்கு வயது வரம்பில் 3 ஆண்டுகள் சலுகை வழங்கப்படும். மாணவ-மாணவிகள் இளநிலை பட்டப்படிப்பு படிக்கும்போது பல்கலைக்கழகம் சார்பில் ஏதேனும் ஒரு விளையாட்டில் பங்கு பெற்றிருந்தால் (பார்ம் III) அந்த மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை வழங்கப்படும். மேலும், இக்கல்லூரியில் பி.பி.இ.எஸ். பயின்றோருக்கும் மற்றும் ஆதித்தனார் கல்வி அறநிலையத்தால் நடத்தப்படும் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பு பயின்றோருக்கும் கல்வி கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை வழங்கப்படும்.

    முதுநிலை பட்டப்படிப்பு

    எம்.பி.எட். முதுநிலை உடற்கல்வியியல் படிக்க இளநிலை உடற்கல்வியியல் பயின்று இருக்க வேண்டும். மேலும் அதில் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். மாணவ-மாணவிகள் வயது 35-க்குள் இருக்க வேண்டும். ஆதிதிராவிட மாணவர்களுக்கு 3 ஆண்டுகள் வயது வரம்பில் சலுகை உண்டு. டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் பி.பி.எட். படித்தவர்களுக்கு கல்வி கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை வழங்கப்படும். மேலும் பல்கலைக்கழக தேர்வில் இளநிலை உடற்கல்வியியலில் தங்கப்பதக்கம் (முதல் தரவரிசை) பெற்றவர்களுக்கும் கல்வி கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை வழங்கப்படும்.

    சிறப்பு அம்சங்கள்

    இந்த கல்லூரி சென்னை தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்றது. தேசிய தரமதிப்பீட்டு குழு மறுமதிப்பீட்டில் 'A' சான்று பெற்று உள்ளது. தரமான ஆசிரியர்கள், விளையாட்டு மைதானங்கள், தங்கும் விடுதிகள் இக்கல்லூரியின் சிறப்பு அம்சங்கள் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் பல்கலைக்கழக அளவில் மாணவ-மாணவிகள் பதக்கங்கள் பெற்று வருகிறார்கள். கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் 100 சதவீதம் வேலைவாய்ப்பு சார்ந்த பயிற்சி அளிக்கப்பட்டு அனைவருக்கும் கல்லூரி நிர்வாகம் வேலைவாய்ப்பை பெற்றுத்தருகிறது.

    விண்ணப்பிக்கும் முறை

    கல்லூரி பற்றிய அனைத்து விவரங்களும் கல்லூரியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. கல்லூரியில் சேர விருப்பம் உள்ளவர்கள் கல்லூரியின் www.drsacpe.com என்ற இணையதளத்தில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியினை தேர்வு செய்து மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தில் கல்வி சான்றிதழ், விளையாட்டு சான்றிதழ் மற்றும் மருத்துவ சான்றிதழ் போன்றவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் மாணவர் சேர்க்கையில் குறைவான இடங்களே இருப்பதால் விரைவில் விண்ணப்பித்து கல்லூரியில் சேரவும்.

    இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு 04639-245110, 220590 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று கல்லூரி முதல்வர் பொ.சாம்ராஜ் தெரிவித்து உள்ளார்.

    • இக்கல்லூரியானது ஐ.எஸ்.ஓ. 9001:2015 டி.யு.வி.-ன் சான்றளிக்கப்பட்ட நிறுவனம் ஆகும்.
    • மாணவ-மாணவிகளின் திறன்களை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள், தொழில்நுட்ப கருத்தரங்குகள் நடத்தப்படுகிறது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

    பாடப்பிரிவுகள்

    திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் கட்டிடவியல் துறை (சிவில்), எந்திரவியல் துறை (மெக்கானிக்கல்), கணினி அறிவியல் துறை (சி.எஸ்.இ), மின் மற்றும் மின்னணு துறை (இ.இ.இ), தகவல் தொழில்நுட்ப துறை (ஐ.டி.), மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை (இ.சி.இ) என 6 துறைகளில் இளநிலை பட்டப்படிப்புகளும், முதுநிலை பட்ட மேற்படிப்பில் (எம்.இ.) கணினி அறிவியல் துறை, டிரைவ்ஸ் அமைப்புசார் பொறியியல் (வி.எல்.எஸ்.ஐ.) மற்றும் மேலா ண்மை துறையில் எம்.பி.ஏ. பட்ட மேற்படிப்பும் பயிற்றுவிக்கப்படுகிறது.

    இக்கல்லூரியானது ஐ.எஸ்.ஓ. 9001:2015 டி.யு.வி.-ன் சான்றளிக்கப்பட்ட நிறுவனம் ஆகும். மேலும் டி.சி.எஸ். ஐ.இ.(ஐ) அங்கீகாரம் பெற்றது. தொழில் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி துறையானது இக்கல்லூரிக்கு அறிவியல் ஆய்வுத்துறைக்கான அங்கீகாரத்தை வழங்கி உள்ளது.

    கருத்தரங்குகள்

    கட்டிடவியல் துறையின் ஸ்கேல் அமைப்பு, எந்திரவியல் துறையின் மாஸ் சங்கம், கணினி அறிவியல் துறையின் ஸ்கேன் சங்கம், தகவல் தொழில்நுட்ப துறையின் பயாஸ் சங்கம், மின் மற்றும் மின்னணு துறையின் ஈஸ் சங்கம், மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறையின் ஸ்பேஸ் சங்கம், மேலா ண்மை துறையின் ஷேர் சங்கம் சார்பில், மாணவ-மாணவிகளின் திறன்களை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள், தொழில்நுட்ப கருத்தரங்குகள் நடத்தப்படுகிறது.

    இக்கல்லூரி மாணவர்கள் பல்வேறு கருத்தரங்குகளில் பங்கேற்று தொழில்நுட்ப ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்து பல பரிசுகளை வென்றுள்ளனர். தொழில்நுட்ப சங்க நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக,

    ஒவ்வொரு துறையும் தொழில்சார்ந்த படிப்புகள், தொழில்நுட்ப விரிவுரைகள், திட்டங்கள் மற்றும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு 'கேட்' பயிற்சி ஆகியவற்றை ஏற்பாடு செய்கின்றது.

    மாணவர் சேர்க்கை

    கல்லூரியில் மாணவர்களுக்கு 2 விடுதிகளும், மாணவிகளுக்கு ஒரு விடுதியும் நவீன வசதிகளுடன் உள்ளது.

    மேலும் கல்லூரி மற்றும் விடுதி வளாகம் முழுவதும் வை-பை கணினி இணையதள சேவை வசதி உள்ளது.

    நெல்லை, தூத்துக்குடி, சாயர்புரம், சாத்தான்குளம், திசையன்விளை, நாசரேத், உடன்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்தும் கல்லூரிக்கு மாணவர்களை அழைத்து வரும் வகையில் பஸ்கள் இயக்கப்படுகிறது.

    டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. மேலும் விவரங்களுக்கு www.drsacoe.org என்ற கல்லூரி இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

    இக்கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்கள் படிப்புகள் குறித்த விவரங்களை பெறுவதற்கு drsacoe@aei.edu.in, princyengg@aei.edu.in என்ற மின்னஞ்சல் வாயிலாகவும், கல்லூரி முதல்வரை நேரிலோ அல்லது 04639- 220700, 220702, 220715, 9443246150 ஆகிய தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.

    இந்த தகவலை டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • திருக்காட்டுப்பள்ளி அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை நடை பெறுகிறது.
    • விண்ணப்பிக்க வருகிற 19-ந் தேதி கடைசி நாளாகும்

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வர் ராஜா வரதராஜா வெளியிட்டுள்ள செய்த குறிப்பில் கூறியிப்பதாவது:-

    திருக்காட்டுப்பள்ளி அரசு கலை அறிவியல் கல்லூரி தற்போது பூதலூரில் உள்ள பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.

    இந்தக் கலை அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை தற்போது தொடங்கியுள்ளது. மாணவர் சேர்க்கை முழுவதுமாக இணைய தளம் வழியில் மட்டுமே நடைபெற உள்ளது.

    தகுதியுள்ள மாணவர்கள் திருக்காட்டுப்பள்ளி அரசு கலை அறிவியல் கல்லூரியில் சேர்க்கைக்குஉரிய இணைய தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

    திருக்காட்டுப்பள்ளி அரசு கலை அறிவியல் கல்லூரியில் பி ஏ ஆங்கிலம் மற்றும் தமிழ், பி காம், பிஎஸ்சி கணினி அறிவியல், பி பி ஏ ஆகிய பாடப்பிரிவுகள் உள்ளன.

    விண்ணப்பங்கள் அனுப்ப வரும் 19ம் தேதி கடைசி நாள்.

    மேற்கொண்டு விவரங்க ளுக்கு பூதலூரில் உள்ள திருக்காட்டுப்பள்ளி அரசு கலை அறிவியல் கல்லூரியில் செயல்பட்டு வரும் மாணவர் சேர்க்கை உதவி மையத்தை அணுகி விவரம் பெற்று க்கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×