search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dr.Sivanthi Aditanar College Of Physical Education"

    • கல்லூரி வளாகத்தில் உள்ள பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உள்விளையாட்டு அரங்கில் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • உணவு பாதுகாப்பு ஆய்வாளர் சக்திமுருகன் தரமற்ற உணவுப்பண்டங்களை எவ்வாறு அடையாளம் காண வேண்டும்? என்பதை மாணவ, மாணவியரிடம் எடுத்துரைத்து செய்முறை விளக்கம் கொடுத்தார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியின் அக மதீப்பீட்டின் (ஐகியுஏசி) சார்பில் கல்லூரி வளாகத்தில் உள்ள பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உள்விளையாட்டு அரங்கில் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. கல்லூரி முதல்வர் சாம்ராஜ் தலைமை தாங்கினார். உதவிபேராசிரியர் கணேசன் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக மாவட்ட உணவு பாதுகாப்பு ஆய்வாளர் சக்திமுருகன் கலந்து கொண்டு தரமற்ற உணவுப் பண்டங்களை எவ்வாறு அடையாளம் காண வேண்டும்? என்பதை மாணவ, மாணவியரிடம் எடுத்துரைத்து செய்முறை விளக்கம் கொடுத்தார். நிகழ்ச்சிகளை உதவிபேராசிரியர் செல்வகுமார் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில், கல்லூரி பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். கல்லூரி அக மதீப்பீட்டு ஒருங்கிணைப்பாளர் இணை பேராசிரியை தனலெட்சுமி நன்றி கூறினார்.

    • பி.பி.இ.எஸ். இளநிலை பட்டப்படிப்பு படிக்க பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    • பள்ளிகளுக்கு இடையேயான ஏதேனும் ஒரு விளையாட்டு போட்டியில் பங்கேற்று சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

    மாணவர் சேர்க்கை

    திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பு (பி.பி.இ.எஸ்.) மூன்று வருட படிப்பு, இளநிலை உடற்கல்வியியல் (பி.பி.எட்) இரண்டு வருட படிப்பு, முதுநிலை உடற்கல்வியியல் (எம்.பி.எட்) இரண்டு வருட படிப்புகான மாணவர் சேர்க்கை நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.

    பி.பி.இ.எஸ். இளநிலை பட்டப்படிப்பு படிக்க பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பள்ளிகளுக்கு இடையேயான குடியரசு தின போட்டி அல்லது பாரதியார் தின போட்டிகள் ஏதேனும் ஒரு விளையாட்டு போட்டியில் பங்கேற்று சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மாணவ-மாணவிகள் 21 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆதிதிராவிட மாணவர்களுக்கு வயது வரம்பில் 3 ஆண்டுகள் சலுகை வழங்கப்படும்.

    இளநிலை பட்டப்படிப்பு

    பி.பி.எட். படிக்க இளநிலை பட்டப்படிப்புடன் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இடையேயான ஏதேனும் ஒரு விளையாட்டு போட்டியில் பங்கேற்ற சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இளநிலை பட்டப்படிப்பில் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

    ஆதிதிராவிட மாணவர்களுக்கு வயது வரம்பில் 3 ஆண்டுகள் சலுகை வழங்கப்படும். மாணவ-மாணவிகள் இளநிலை பட்டப்படிப்பு படிக்கும்போது பல்கலைக்கழகம் சார்பில் ஏதேனும் ஒரு விளையாட்டில் பங்கு பெற்றிருந்தால் (பார்ம் III) அந்த மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை வழங்கப்படும். மேலும், இக்கல்லூரியில் பி.பி.இ.எஸ். பயின்றோருக்கும் மற்றும் ஆதித்தனார் கல்வி அறநிலையத்தால் நடத்தப்படும் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பு பயின்றோருக்கும் கல்வி கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை வழங்கப்படும்.

    முதுநிலை பட்டப்படிப்பு

    எம்.பி.எட். முதுநிலை உடற்கல்வியியல் படிக்க இளநிலை உடற்கல்வியியல் பயின்று இருக்க வேண்டும். மேலும் அதில் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். மாணவ-மாணவிகள் வயது 35-க்குள் இருக்க வேண்டும். ஆதிதிராவிட மாணவர்களுக்கு 3 ஆண்டுகள் வயது வரம்பில் சலுகை உண்டு. டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் பி.பி.எட். படித்தவர்களுக்கு கல்வி கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை வழங்கப்படும். மேலும் பல்கலைக்கழக தேர்வில் இளநிலை உடற்கல்வியியலில் தங்கப்பதக்கம் (முதல் தரவரிசை) பெற்றவர்களுக்கும் கல்வி கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை வழங்கப்படும்.

    சிறப்பு அம்சங்கள்

    இந்த கல்லூரி சென்னை தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்றது. தேசிய தரமதிப்பீட்டு குழு மறுமதிப்பீட்டில் 'A' சான்று பெற்று உள்ளது. தரமான ஆசிரியர்கள், விளையாட்டு மைதானங்கள், தங்கும் விடுதிகள் இக்கல்லூரியின் சிறப்பு அம்சங்கள் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் பல்கலைக்கழக அளவில் மாணவ-மாணவிகள் பதக்கங்கள் பெற்று வருகிறார்கள். கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் 100 சதவீதம் வேலைவாய்ப்பு சார்ந்த பயிற்சி அளிக்கப்பட்டு அனைவருக்கும் கல்லூரி நிர்வாகம் வேலைவாய்ப்பை பெற்றுத்தருகிறது.

    விண்ணப்பிக்கும் முறை

    கல்லூரி பற்றிய அனைத்து விவரங்களும் கல்லூரியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. கல்லூரியில் சேர விருப்பம் உள்ளவர்கள் கல்லூரியின் www.drsacpe.com என்ற இணையதளத்தில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியினை தேர்வு செய்து மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தில் கல்வி சான்றிதழ், விளையாட்டு சான்றிதழ் மற்றும் மருத்துவ சான்றிதழ் போன்றவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் மாணவர் சேர்க்கையில் குறைவான இடங்களே இருப்பதால் விரைவில் விண்ணப்பித்து கல்லூரியில் சேரவும்.

    இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு 04639-245110, 220590 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று கல்லூரி முதல்வர் பொ.சாம்ராஜ் தெரிவித்து உள்ளார்.

    ×