search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளக்குறிச்சி  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வு: கல்லூரி முதல்வர் தகவல்
    X

    கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வு: கல்லூரி முதல்வர் தகவல்

    • மாணவர் சேர்க்கை முதல் கட்ட கலந்தாய்வு மே 31, ஜூன் 1 மற்றும் 2 ஆகிய நாட்களில் நடைபெறுகிறது.
    • முன்னாள் ராணுவத்தினர் குழந்தைகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் போன்ற மாணவர்களுக்கு சிறப்பு கலந்தாய்வு நடைபெறும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மணிமேகலை செய்தி குறிப்பு வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது:-

    கல்லூரியில் இளங்கலை பிரிவில் பி.ஏ. தமிழ், பி.ஏ. ஆங்கிலம், பி.காம் வணிகவியல் மற்றும் இளநிலை அறிவியல் பிரிவில்பி.எஸ்.சி. வேதியியல், பி.எஸ்.சி. இயற்பியல்,பி.எஸ்.சி. கணினி அறிவியல்,பி.எஸ்.சி. கணிதம் ஆகிய 7 பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை முதல் கட்ட கலந்தாய்வு வருகின்ற 31- ந்தேதி, ஜூன் 1 மற்றும் 2 ஆகிய நாட்களில் நடைபெறுகிறது.

    இதில் 31- ந்தேதி சிறப்பு பிரிவு மாணவர்களான மாற்றுத்திறனாளிகள், .என்.சி.சி., என்.எஸ்.எஸ், முன்னாள் ராணுவத்தினர் குழந்தைகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் போன்ற மாணவர்களுக்கு சிறப்பு கலந்தாய்வு நடைபெறும். அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு ஜூன் 2- ந்தேதி (வியா ழக்கிழமை) வேதியியல் துறை, கணிணித் துறை. கணிதத் துறை, இயற்பியல் துறைக்கு கலந்தாய்வு நடைபெறும். இதில் 2- ந்தேதி அனைத்து கலைப்பிரிவு தமிழ் ஆங்கிலம் வணிகவிய ல்போன்ற பாடப்பி ரிவுகளுக்கு கலந்தாய்வு நடைபெறும்.

    தமிழக அரசின் இட ஒது க்கீட்டின் விதிமுறைகளின் படி மாணவர் சேர்க்கை நடைபெறும். கல்லூரி கல்விக் கட்டணம் ரூபாய் 2500(தோராயமாக) செலுத்த வேண்டும். கல்லூரி சேர்க்கைக்கு வரும் மாணவர்கள் இணைய வழி விண்ணப்ப படிவத்தை நகல், மாற்றுச் சான்றிதழ், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பதினொன்றாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஆதார் அட்டை, சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், தேசிய வங்கி கணக்கு புத்தகம் முதல் பக்கம் நகல், 4 வண்ண புகைப்படம் ஆகியவற்றை எடுத்து வரவேண்டும். மேலும் அனைத்து சான்றிதழ்களும் 2 செட் ஜெராக்ஸ் காப்பி எடுத்து வரவேண்டும். கலந்தாய்வுக்கு அலைபேசி . மின் அஞ்சல் மூலமாகவும் வாட்ஸ் அப் மூலம் அழைப்பு வந்தவ ர்களுக்கு மட்டும் கனியாமூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×