search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "aalyam"

    • அவன் வேண்டுகோளை ஏற்று அவனை இரு கூறாக்கி சேவலாகவும், மயிலாகவும் மாற்றினார்.
    • மயில், வேல், சேவல், கடல், கடலை ஒட்டிய பகுதி ஆகியவற்றையும் நாம் வணங்க வேண்டும்.

    பகைவனுக்கு அருளிய கந்தன்

    உண்மையில் முருகன் சூரனை சம்ஹாரம் செய்யவில்லை. சூரன் முருகனை சரணாகதி அடைந்தான்.

    அவன் வேண்டுகோளை ஏற்று அவனை இரு கூறாக்கி சேவலாகவும், மயிலாகவும் மாற்றினார்.

    தானே அவைகளை கொடியாகவும், வாகனமாகவும் வைத்துக் கொண்டு அவனை தன்னுடனேயே சேர்த்துக் கொண்டார்.

    இப்படி பகைவனுக்கும் அருளியது கந்தன் கருணை எனப்படுகிறது.

    இப்படி சேவற்கொடியோன் ஆன மயில்வாகனனை வணங்கும்போது பகவானுடைய மயில், வேல், சேவல், கடல், கடலை ஒட்டிய பகுதி ஆகியவற்றையும் நாம் வணங்க வேண்டும்.

    • அவன் மீது போர்தொடுத்தார். பெரும் யுத்தகம் ஆரம்பமானது.
    • இதுவே கந்த சஷ்டி விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

    சஷ்டி திதியில் சூரபத்மனை அழித்த முருகப் பெருமான்

    இங்கிருந்து முருகப் பெருமான் வீரவாகு தேவரை சூரபத்மனிடம் தூது அனுப்பி நல்ல அறிவுரைகளைக் கூறச் சொன்னார்.

    ஆனால் வீரவாகுவின் பேச்சினை சூரபத்மன் கேட்கவில்லை.

    அவன் மீது போர்தொடுத்தார். பெரும் யுத்தகம் ஆரம்பமானது.

    முருகப் பெருமானின் பூதசேனைகளும், சூரனின் அசுர சேனைகளும் தொடர்ந்து யுத்தம் செய்தனர். சூரபத்மனின் பிள்ளைகளான பானுகோபன், இரணியன், அக்னிமுகம் மற்றும் தம்பியான சிங்கமுகாசுரன் ஆகியோர் முருகப்பெருமானிடம் போரிட்டு மடிந்தனர்.

    கடைசியாக திருச்செந்தூரில் ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டி திதியில் சூரனை அழித்து தன் அவதார காரணத்தை முருகப்பெருமான் முற்றுப்பெறச் செய்தார்.

    இதுவே கந்த சஷ்டி விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

    • அம்பிகையும் தனது சக்தி எல்லாவற்றையும் ஒன்று திரட்டி ஒரு வேலாயுதத்தை முருகனிடம் கொடுத்தாள்.
    • அவன் மீது போர்தொடுத்தார். பெரும் யுத்தகம் ஆரம்பமானது.

    சூரபத்மனை அழிக்க சென்ற கந்தன்

    சிவபெருமான் முருகனுக்கு அசுரனுடன் போர் செய்ய சேனைத் தளபதியாக வீரவாகுவையும், மற்ற சிவகணங்களையும் சிருஷ்டித்தார்.

    அம்பிகையும் தனது சக்தி எல்லாவற்றையும் ஒன்று திரட்டி ஒரு வேலாயுதத்தை முருகனிடம் கொடுத்தாள்.

    சகல சக்திகளுடனும், பரிவாரங்களுடனும் முருகன் அசுரரர்களை அழிக்க புறப்பட்டுச் சென்றார்.

    முதலில் சூரபத்மனின் சகோதரர்களான கஜமுகாசுரன், சிம்மமுகாசுரன், அவன் மகன் பத்மகேசரி ஆகியோரை அழித்தார்.

    பின்னர் தன் படைகளுடன் திருச்செந்தூர் வந்து அங்கு விஸ்வகர்மாவினால் அமைக்கப்பட்ட ஆலயத்தில் தங்கி தேவ குருவாகிய வியாழ பகவானால் பூஜிக்கப்பட்டார்.

    வியாழ பகவானால் பூஜிக்கப்பட்ட காரணத்தால் திருச்செந்தூர் புகழ்பெற்ற குரு தலமாக விளங்குகிறது.

    • ஒவ்வொரு திருமுகத்திலும் உள்ள நெற்றிக்கண்ணிலிருந்து ஜோதிப்பொறி தோன்றியது.
    • அவர் கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டார்.

    நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய முருகப் பெருமான்

    சிவபெருமானும் அவர்கள் வேண்டுகோளுக்கிணங்க தனது ஸத்யோஜாதம், வாமதேவம், தத்புருஷம், ஈசானம், அகோரம் என்ற ஐந்து முகங்களோடு ஞானிகளுக்கு மட்டும் புலப்படும் அதோமுகத்தையும் கொண்டு திகழ்ந்தார்.

    அப்போது ஒவ்வொரு திருமுகத்திலும் உள்ள நெற்றிக்கண்ணிலிருந்து ஜோதிப்பொறி தோன்றியது.

    அதை பார்வதி தேவியாலும் தாங்க முடியாததால் வாயு பகவான் ஏந்திச் சென்று கங்கையில் விழச் செய்தார்.

    கங்கையாலும் அதைத் தாங்க முடியாததால் அக்னி பவான் அதைத் தானே எடுத்து சரவணப் பொய்கையில் தாமரை மலர்களில் சேர்த்தார்.

    அவை ஆறு குழந்தைகளாகத் தோன்றின.

    பார்வதி தேவி பாசத்துடன் அக்குழந்தைகளை ஒன்றாக வாரிச் சேர்த்து அணைக்கவே ஆறுமுகங்களுடனும், பன்னிரண்டு கைகளுடனும் முருகப் பெருமான் தோன்றினார்.

    அவர் கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டார்.

    • அடியவர்களின் வினைகளைத் தீர்ப்பது ஒருமுகம்.
    • வேத, ஆகமங்களை முற்றுப் பெறச் செய்வது ஒரு முகம்.

    முருகனின் ஆறுமுகத்தின் செய்கைகள்

    ஏறுமயில் ஏறி விளையாடுவது ஒரு முகம்.

    அடியவர்களின் வினைகளைத் தீர்ப்பது ஒருமுகம்.

    சூரபத்மனை வதைத்து அழியாத பேரின்ப வாழ்வினைத் தருவது ஒருமுகம்.

    உயிர்களின் மன இருளைப் போக்கி ஒளிபடர்வது ஒருமுகம்.

    வள்ளி, தெய்வானைக்கு மோகம் அளிப்பது ஒருமுகம்.

    வேத, ஆகமங்களை முற்றுப் பெறச் செய்வது ஒரு முகம்.

    • முருகன் வடிவம் தமிழ் வடிவமாக அமைந்தது.
    • நீலோத்பலம் ஏந்திய கரத்துடன் தெய்வானை இடது பக்கத்திலும் அமைய காட்சித் தருவார்.

    தமிழ் கடவுள் முருக பெருமான்

    முருகன் வடிவம் தமிழ் வடிவமாக அமைந்தது.

    தமிழ்மொழியில் மெய்யெழுத்துகள் கண்களாகவும், வல்லினம், மெல்லினம், இடையினம் என வழங்கும் எழுத்துக்கள் ஆறு திருமுகங்களாகவும்,

    அகர முதலிய எழுத்துகள் பன்னிரண்டும் தோள்காளாகவும், ஆயுத எழுத்து ஞான வேலாகவும் விளங்குகிறது.

    முருகன் சிவந்த மேனியும், அபயவரதத்துடன் கூடிய கரங்களும், மார்பில் சாய்ந்த வேலும்,திருவடியில் மயிலும், தாமரை ஏந்திய கரத்துடன் வள்ளி தேவி வலது பக்கத்திலும்,

    நீலோத்பலம் ஏந்திய கரத்துடன் தெய்வானை இடது பக்கத்திலும் அமைய காட்சித் தருவார்.

    சிவபெருமானின் ஈசானம், சத்யோஜாதம், வாமேதேவம், அகோரம், தற்புருடம் என்ற ஐந்து முகங்களுடன் அதோமுகம் சேர ஆறுமுகங்களாயின.

    • மலையும், மலை சார்ந்த பகுதியும் குறிஞ்சி எனப்படும்.
    • முருகப் பெருமானை உள்ளன்புடன் உபாசனை செய்யும் பக்தர்களின் வாழ்வு சிறக்கும்.

    குன்று தோறாடும் குமரன்

    மலையும், மலை சார்ந்த பகுதியும் குறிஞ்சி எனப்படும்.

    இக்குறிஞ்சி நிலக்கடவுளாக முருகன் கருதப்படுகிறான். இதன் காரணமாக "குன்று தோறாடும் குமரன்" என்று முருகனை வழிபடுகிறோம்.

    முருகன் என்ற சொல்லுக்கு அழகு, இளமை, மணம், கடவுள் தன்மை என்ற பல பொருள் உண்டு.

    முருகப் பெருமானை உள்ளன்புடன் உபாசனை செய்யும் பக்தர்களின் வாழ்வு என்றும் மலர்ந்திருக்கும்.

    எப்பொழுதெல்லாம் நம் உள்ளத்தில் பயம் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் முருகனை நினைத்தால் ஆறுமுகம் தோன்றி நம் அச்சத்தைப் போக்கும்.

    • ஞானவடிவான முருகனை நினைத்தால் ஞானம் கைகூடும் கவலைகள் நீங்கும்.
    • முருகனை வணங்கினால் மும்மூர்த்திகளை வணங்கிய பலன் கிடைக்கும்.

    மும்மூர்த்திகளை வணங்கிய பலன் தரும் முருகன் வழிபாடு

    தமிழ் கடவுள் என்று போற்றப்படும் முருகப் பெருமான், அழகு, வீரம், ஞானம் ஒருங்கே அமையப் பெற்றவர் முருகப் பெருமான் அவதாரமாக உதித்தவர். பிறந்தவர் இல்லை.

    சத்து, சித்து, ஆனந்தம் சச்சிதானந்தமாக முருகப்பெருமான் கைலாச மலையில் வீற்றுள்ளார்.

    முருகனை வணங்கினால் மும்மூர்த்திகளை வணங்கிய பலன் கிடைக்கும்.

    இந்தப் பிறவியில் கைமேல் பலன் தருவது முருகன் திருவருள்.

    ஞானவடிவான முருகனை நினைத்தால் ஞானம் கைகூடும் கவலைகள் நீங்கும். வினைகளும், பயமும் நீங்கும்.

    • இது சென்னையில் உள்ள நவக்கிரக தலங்களில் முதன்மையான தலமாக கருதப்படுகிறது.
    • இத்தலத்தில் மூலவராக அகத்தீஸ்வர சுவாமி உள்ளார். இறைவி பெரியநாயகி அம்பிகை.

    சென்னையில் சூரிய கோவில்

    சென்னை வண்டலூரில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலை வில் உள்ள கொளப்பாக்கத்தில் சூரியனுக்கு என்றே சிறப்புத் தலம் உள்ளது.

    இது சென்னையில் உள்ள நவக்கிரக தலங்களில் முதன்மையான தலமாக கருதப்படுகிறது.

    போரூரில் இருந்து மியாத் மருத்துவமனை எதிரே செல்லும் சாலை வழியாக, கெருகம்பாக்கம் சென்றால் கொளப்பாக்கத்தை எளிதில் சென்று சேரலாம்.

    அங்கு ஆனந்தவல்லி அம்மை உடனுறை அகத்தீஸ்வரர் ஆலயம் உள்ளது.

    இத்தலத்தில் மூலவராக அகத்தீஸ்வர சுவாமி உள்ளார்.

    இறைவி பெயர் பெரியநாயகி அம்பிகை.

    இது 1300 ஆண்டுகளுக்கு முந்தைய மிகப் பழமையான கோவிலாகும்.

    இந்த கோவிலில் சிவபெருமானை பார்த்தபடி மேற்கு நோக்கிய திசையில் சூரியன் உள்ளார்.

    தனி சன்னதியில் உள்ள சூரியன், இங்கு சிவனை வணங்குவதாக ஐதீகம்.

    இங்கு சூரிய பகவானுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

    அதை உணர்த்தும் வகையில் இத்தலத்தில் உள்ள அனைத்து கடவுள்களும் சூரியனை நோக்கியே உள்ளன.

    சூரியனுக்கு உகந்த நிறமான சிவப்பு வஸ்திரம் சார்த்தி இங்கு வழிபடுகிறார்கள்.

    கோதுமை பொருட்கள் நைவேத்தியமாக படைக்கப்படுகிறது.

    இங்கு வழிபாடுகள் செய்ய ஞாயிற்றுக்கிழமை மிகவும் உகந்த நாளாகும்.

    இத்தலத்தில் சூரியனை வழிபட்டால் நினைத்தது நடக்கும்.

    உடலில் அழகு உண்டாகும்.

    அகத்திய முனிவர் இத்தலத்தில் சிறப்பு வழிபபாடுகள் செய்ததால், இறைவன் அகத்தீஸ்வரர் என்றழைக்கப்படுகிறார்.

    ராஜகணபதி, காசி விசுவநாதர், சுப்பிரமணியர், தனி சன்னதிகளில் உள்ளனர்.

    சுப்பிரமணியர் தலத்தில் உள்ள மயில் மரகதக் கல்லால் (பச்சை) உருவாக்கப்பட்டதாகும்.

    இங்குள்ள கால பைரவர் மிகவும் சக்தி வாய்ந்தவராக கருதப்படுகிறார்.

    ஞாயிறு தோறும் ராகு காலத்தில் இவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.

    6 வாரம் தொடர்ந்து பைரவரை வணங்கினால் நினைத்தது நடக்கும்.

    ராஜராஜ சோழன், குலோத்துங்க சோழன், சுந்தரபபாண்டியன், வீரராஜேந்திர சோழன் உள்பட பல அரசர்கள் இங்கு திருப்பணி செய்துள்ளனர்.

    சுமத்ராதீவு மன்னன் இங்கு வழிபாட்டு சூரிய தோஷத்தை நிவர்த்தி செய்து கொண்டதாக கல்வெட்டுக்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

    சமீப காலமாகத்தான் சென்னையில் உள்ள இந்த சூரிய தலம் பக்தர்களிடம் பிரபலமாகி வருகிறது.

    சூரியனார் கோவிலுக்கு இணையான தலம் என்பதால் அங்கு செல்ல இயலாதவர்கள் இத்தலத்திலேயே பரிகார பூஜைகளை செய்யலாம்.

    • உத்தராயணம் தொடங்கும் நாள் அனைவரும் சூரியனை பூஜிக்க வேண்டும்.
    • இதனால் நோயற்ற வாழ்வை சூர்யனிடத்திலிருந்து நாம் பெறலாம்.

    நோயற்ற வாழ்வு தரும் சூரிய வழிபாடு

    தேவர்களுக்கு மனிதர்களின் ஒரு வருஷத்தில், ஆறுமாதம் பகல், ஆறு மாதம் இரவு.

    உத்தராயணம் என்னும் தைமாதம் முதல் ஆனி மாதம் முடிய ஆறுமாத காலம் தேவர்களுக்கு பகல்.

    ஆகவே இந்த மாதங்களில் தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் செய்யவும் வீட்டில் திருமணம் போன்ற மங்கள நிகழ்ச்சிகளை நடத்தவும் மிகச் சிறந்தகாலமாக கருதப்படுகிறது.

    உத்தராயணம் தொடங்கும் நாள் அனைவரும் சூரியனை பூஜிக்க வேண்டும்.

    அனைத்து தெய்வங்களையும் சூர்ய மண்டலத்தின் நடுவில் தியானம் செய்ய வேண்டும் என்கிறது சாஸ்த்ரம்.

    இதனால் நோயற்ற வாழ்வை சூர்யனிடத்திலிருந்து நாம் பெறலாம்.

    • சென்னை வடபழனி முருகன் கோவிலில் செவ்வாய் பகவானுக்கு தனி சன்னதி உள்ளது.
    • வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமானை வழிபடுவது சிறப்பு.

    வடபழனி முருகன் கோவில்!

    சென்னை வடபழனி முருகன் கோவிலில் செவ்வாய் பகவானுக்கு தனி சன்னதி உள்ளது.

    செவ்வாய் தோஷம் உடையவர்களும், செவ்வாய்க் கிரகத்தால் பாதிப்பு அடைந்தவர்களுக்கும் இதனை வழிபட மிகச்சிறப்பான பலனைத்தரும்.

    செவ்வாய் தோஷம் நீங்கிட வடக்குவாசி என்று அழைக்கப்படும் ஸ்ரீ துர்க்கை அம்மன் தெற்கு நோக்கி இருக்கும் சங்கரன் கோவிலில் வழிபாடு செய்வது சிறந்த பரிகாரமாக அமையும்.

    மேலும் செவ்வாய் பகவானின் தோஷத்தால் திருமண தடை உள்ளவர்கள் பழனி, சுவாமிமலை, நீங்கலாக மற்ற இடங்களில் உள்ள முருகப்பெருமாளை வழிபடுவது சிறப்பாகும்.

    செவ்வாய், கடகம், மகரம், மீனம் இவற்றில் அமர்ந்து தோஷம் எற்படுத்தினால் திருச்செந்தூர் முருகனை வழிபடுவது சிறப்பு.

    பொதுவாக செவ்வாய் பகவானால் திருமண தோஷம் அடைந்தவர்கள் வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமானை வழிபடுவதே சிறப்பைத்தரும்.

    தனிச் சன்னதிகள்

    இக் கோவிலில் பல தெய்வங்களுக்கு தனிச் சன்னதிகள் காணப்படுகின்றன. வரசித்தி விநாயகர், சொக்கநாதர் சிவன், மீனாட்சி அம்மன், காளி, பைரவர், மற்றும் வள்ளி, தேவசேனா சமேத சண்முகர் சன்னதிகள் இங்கு உள்ளன.

    இக்கோவிலின் உட்பிரகாரத்தில் மூலவர் பழநி முருகன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.

    இங்கு முருகன் காலில் பாதரட்சைகளுடன் காட்சியளிக்கிறார். நவகிரகங்களில் ஒன்றான செவ்வாய்க்கென்று ஒரு தனிச் சன்னதி இருக்கிறது.

    மேலும் இங்கு தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், மகாலட்சுமி சன்னதிகளும் உள்ளன.

    இக்கோவில், திருமணங்களுக்கும் மத சொற்பொழிவுகளுக்கும் பயன்படுத்தப்படும் ஒரு விசாலமான மண்டபத்தைக் கொண்டுள்ளது.

    இது சென்னையில் உள்ள மக்கள் அடிக்கடி வரும் முருகன் ஆலயங்களில் ஒன்றாக இருக்கிறது.

    இந்த கோவிலின் முன்புற இராஜ கோபுரத்தில், கந்த புராணக் காட்சிகள் வண்ணமயமாக விளக்கப்பட்டுள்ளன.

    இக்கோவிலின் முன்புறம் திருக்குளம் உள்ளது. இங்கு தைப்பூசம் மற்றும் விழாக் காலங்களில் 'தெப்போற்சவம்' நடைபெறுகிறது.

    இதன் கிழக்கு கோபுரம் 40.8.மீ உயரம் கொண்டது. இதில் 108 பரதநாட்டிய நடன அசைவுகள் காணப்படுகின்றன.

    இக்கோவிலின் தல விருட்சமாக அத்தி மரம் உள்ளது.

    • செவ்வாய் பகவானுக்கு மங்களன் என்ற பெயர் உண்டு.
    • முஸ்லீம் முதலிய வேற்று மதத்தவர்களும் இந்தப்பரிகாரத்தை செய்கின்றனர்.

    சிறுகுடி மங்களேஸ்வரர் கோவில்!

    திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் பாதையில் பூந்தோட்டத்துக்கு முன்பாக உள்ள நாச்சியார் கோவில் செல்லும் பாதையில் சென்று,

    கடகம்பாடி என்ற ஊரில் இறங்கி, அங்கிருந்து வலப்புறமாக செல்லும் பாதையில் 3 கி.மீ. உள்ளே சென்றால் திருச்சிறுகுடியை அடையலாம்.

    அம்பிகையைக் கைப்பிடியளவு மணலால் பிடித்து வைத்து, மங்கள தீர்த்தம் உண்டாக்கி இறைவனை வழிபட்ட தலம்.

    இதுவே சிறுபிடி என்பது மருவி சிறுகுடி என்றாயிற்று.

    செவ்வாய் பகவானுக்கு மங்களன் என்ற பெயர் உண்டு.

    அதனால்தான் செவ்வாய்க் கிழமையை மங்கள வாரம் என்பார்கள்.

    இத்திருத்தலம் செவ்வாய் பகவானால் வழிபடப்பட்டதால், இத்தலத்து விநாயகர், மங்கள விநாயகர் என்றும்,

    இறைவன், மங்கள நாதர் என்றும், அம்பாள், மங்கள நாயகி என்றும், தீர்த்தம், மங்கள தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது.

    செவ்வாய் தோஷமுள்ளவர்கள், செவ்வாய்க்கிழமை காலை, மாலை இருநேரமும் மங்கள தீர்த்தத்தில் நீராடி, மங்கள விநாயகர், மங்கள நாயகி, மங்கள நாதர் ஆகியோரை வழிபட்டு திருநீறு பெற்றுக் செல்ல வேண்டும்.

    முஸ்லீம் முதலிய வேற்று மதத்தவர்களும் இந்தப்பரிகாரத்தை செய்து திருநீறு பெற்று செல்வது இத்திருத்தலத்தில் உள்ள ஆச்சரியப்படத்தக்க அதிசயமாகும்.

    மாசி மாதத்தில் வரும் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் இங்கு பிரசித் தம், விசேஷ வழிபாடுகள் உண்டு.

    ×