search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மங்களேஸ்வர்"

    • சென்னை வடபழனி முருகன் கோவிலில் செவ்வாய் பகவானுக்கு தனி சன்னதி உள்ளது.
    • வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமானை வழிபடுவது சிறப்பு.

    வடபழனி முருகன் கோவில்!

    சென்னை வடபழனி முருகன் கோவிலில் செவ்வாய் பகவானுக்கு தனி சன்னதி உள்ளது.

    செவ்வாய் தோஷம் உடையவர்களும், செவ்வாய்க் கிரகத்தால் பாதிப்பு அடைந்தவர்களுக்கும் இதனை வழிபட மிகச்சிறப்பான பலனைத்தரும்.

    செவ்வாய் தோஷம் நீங்கிட வடக்குவாசி என்று அழைக்கப்படும் ஸ்ரீ துர்க்கை அம்மன் தெற்கு நோக்கி இருக்கும் சங்கரன் கோவிலில் வழிபாடு செய்வது சிறந்த பரிகாரமாக அமையும்.

    மேலும் செவ்வாய் பகவானின் தோஷத்தால் திருமண தடை உள்ளவர்கள் பழனி, சுவாமிமலை, நீங்கலாக மற்ற இடங்களில் உள்ள முருகப்பெருமாளை வழிபடுவது சிறப்பாகும்.

    செவ்வாய், கடகம், மகரம், மீனம் இவற்றில் அமர்ந்து தோஷம் எற்படுத்தினால் திருச்செந்தூர் முருகனை வழிபடுவது சிறப்பு.

    பொதுவாக செவ்வாய் பகவானால் திருமண தோஷம் அடைந்தவர்கள் வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமானை வழிபடுவதே சிறப்பைத்தரும்.

    தனிச் சன்னதிகள்

    இக் கோவிலில் பல தெய்வங்களுக்கு தனிச் சன்னதிகள் காணப்படுகின்றன. வரசித்தி விநாயகர், சொக்கநாதர் சிவன், மீனாட்சி அம்மன், காளி, பைரவர், மற்றும் வள்ளி, தேவசேனா சமேத சண்முகர் சன்னதிகள் இங்கு உள்ளன.

    இக்கோவிலின் உட்பிரகாரத்தில் மூலவர் பழநி முருகன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.

    இங்கு முருகன் காலில் பாதரட்சைகளுடன் காட்சியளிக்கிறார். நவகிரகங்களில் ஒன்றான செவ்வாய்க்கென்று ஒரு தனிச் சன்னதி இருக்கிறது.

    மேலும் இங்கு தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், மகாலட்சுமி சன்னதிகளும் உள்ளன.

    இக்கோவில், திருமணங்களுக்கும் மத சொற்பொழிவுகளுக்கும் பயன்படுத்தப்படும் ஒரு விசாலமான மண்டபத்தைக் கொண்டுள்ளது.

    இது சென்னையில் உள்ள மக்கள் அடிக்கடி வரும் முருகன் ஆலயங்களில் ஒன்றாக இருக்கிறது.

    இந்த கோவிலின் முன்புற இராஜ கோபுரத்தில், கந்த புராணக் காட்சிகள் வண்ணமயமாக விளக்கப்பட்டுள்ளன.

    இக்கோவிலின் முன்புறம் திருக்குளம் உள்ளது. இங்கு தைப்பூசம் மற்றும் விழாக் காலங்களில் 'தெப்போற்சவம்' நடைபெறுகிறது.

    இதன் கிழக்கு கோபுரம் 40.8.மீ உயரம் கொண்டது. இதில் 108 பரதநாட்டிய நடன அசைவுகள் காணப்படுகின்றன.

    இக்கோவிலின் தல விருட்சமாக அத்தி மரம் உள்ளது.

    • செவ்வாய் பகவானுக்கு மங்களன் என்ற பெயர் உண்டு.
    • முஸ்லீம் முதலிய வேற்று மதத்தவர்களும் இந்தப்பரிகாரத்தை செய்கின்றனர்.

    சிறுகுடி மங்களேஸ்வரர் கோவில்!

    திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் பாதையில் பூந்தோட்டத்துக்கு முன்பாக உள்ள நாச்சியார் கோவில் செல்லும் பாதையில் சென்று,

    கடகம்பாடி என்ற ஊரில் இறங்கி, அங்கிருந்து வலப்புறமாக செல்லும் பாதையில் 3 கி.மீ. உள்ளே சென்றால் திருச்சிறுகுடியை அடையலாம்.

    அம்பிகையைக் கைப்பிடியளவு மணலால் பிடித்து வைத்து, மங்கள தீர்த்தம் உண்டாக்கி இறைவனை வழிபட்ட தலம்.

    இதுவே சிறுபிடி என்பது மருவி சிறுகுடி என்றாயிற்று.

    செவ்வாய் பகவானுக்கு மங்களன் என்ற பெயர் உண்டு.

    அதனால்தான் செவ்வாய்க் கிழமையை மங்கள வாரம் என்பார்கள்.

    இத்திருத்தலம் செவ்வாய் பகவானால் வழிபடப்பட்டதால், இத்தலத்து விநாயகர், மங்கள விநாயகர் என்றும்,

    இறைவன், மங்கள நாதர் என்றும், அம்பாள், மங்கள நாயகி என்றும், தீர்த்தம், மங்கள தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது.

    செவ்வாய் தோஷமுள்ளவர்கள், செவ்வாய்க்கிழமை காலை, மாலை இருநேரமும் மங்கள தீர்த்தத்தில் நீராடி, மங்கள விநாயகர், மங்கள நாயகி, மங்கள நாதர் ஆகியோரை வழிபட்டு திருநீறு பெற்றுக் செல்ல வேண்டும்.

    முஸ்லீம் முதலிய வேற்று மதத்தவர்களும் இந்தப்பரிகாரத்தை செய்து திருநீறு பெற்று செல்வது இத்திருத்தலத்தில் உள்ள ஆச்சரியப்படத்தக்க அதிசயமாகும்.

    மாசி மாதத்தில் வரும் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் இங்கு பிரசித் தம், விசேஷ வழிபாடுகள் உண்டு.

    • ஒரு துளி அமிர்தம் கடம்பவன காட்டில் வீழ்ந்து சுயம்பு லிங்கமாக மாறியது.
    • பிற்காலத்தில் கடம்பவனம் கடம்பூர் என வழங்கலாயிற்று.


    மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோவில்!

    புராண வரலாறு

    தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலை கடைந்து அமுத கலசம் பெற்றனர். முழு முதற்கடவுளான விநாயகரை வழிபடாமல் அமுதுண்ண அமர்கின்றனர்.

    அவர்களுக்கு பாடம் புகட்ட எண்ணி விநாயகர் அமுதகலசத்தினை பூலோகத்தில் மறைத்து வைக்க எடுத்துவரும் வழியில் ஒரு துளி அமிர்தம் கடம்பவன காட்டில் வீழ்ந்து சுயம்பு லிங்கமாக மாறியது.

    அவரே இத்தல அமிர்தகடேசுவரர்.

    பிற்காலத்தில் கடம்பவனம் கடம்பூர் என வழங்கலாயிற்று. தல மரமும் கடம்ப மரமாக ஆனது.

    இத்திருக்கோயிலை இந்திரனின் தாய் தினம்தோறும் வந்து வழிபட்டாள்.

    தன் தாயின் கடமையை எளிதாக்க எண்ணி இந்திரன் இத்தல இறைவனையும், பிற தெய்வங்களையும் அழகிய தேரில் வைத்து எடுத்து செல்ல முற்பட்டான.

    தலவினாயகரின் அனுமதி பெறாமல் காரியம் செய்ய முற்பட்டதால் விநாயகர் அவன் ஆணவத்தினை அடக்க விசுவரூபம் எடுத்து அவன் தேரினை காலால் அழுத்த, தேர் கல்லாய் சமைந்தது.

    பிழை உணர்ந்த இந்திரன் பாப விமோசனம் கோருகிறான்.

    ஓர் நாழிகையில் கோடி லிங்கம் பிரதிட்டை செய்ய ஆணையிடுகிறார், செய்ய இயலாமல் போகவே ருத்திர கோடி ஜபம் செய்து ஒரு லிங்கம் பிரதிட்டை செய்து பிழைநிவர்த்தி பெறுகிறான்.

    ருத்ரகோடி ஜபம் செய்து பிரதிட்டை செய்த அக்கோயில் இத்தலத்தின் கிழக்கே ஒரு கி.மி. தூரத்தில் ருத்ரகோடீச்வரர் ஆலயம் என்ற பெயரில் விளங்குகிறது.

    அப்பர் தேவாரத்தில் "கடம்பூர் இளங்கோயில் தன்னில் கயிலாய நாதனை காணலாமே" என போற்றுகிறார்.

    நீண்ட காலமாய் சிதிலமடைந்திருந்த இக்கோயிலை தமிழக தொல்பொருள் துறை மூலம் புதுப்பிக்கப்பட்டு விமான கட்டுமானம் இன்றி காட்சி தருகிறது.

    இது கடலூர் மாவட்டத்தில் உள்ள மேலக்கடம்பூரில் அமைந்துள்ளது.

    செவ்வாய்ப்பகவான் வழிபட்டதோடு அவரது அதி தேவதையாகிய முருகப்பெருமான் இங்கு வழிபட்டு வில் பெற்ற சிறப்புத்தலமும் ஆகும்.

    எனவே இத்திருத்தலம் செவ்வாய்த் தோஷ பரிகாரத்துக்கு சிறப்பான ஒரு தலமாகும்.


    • இத்தலத்தில் முருகனை செவ்வாய் பகவன் வழிபட்டார்.
    • முதலில் சண்முகா நதி, சரவணப்பொய்கையில் நீராட வேண்டும்.

    முருகனின் ஆறுபடை வீடுகளில் பழனி ஒன்றாகும். இத்தலத்தில் முருகனை செவ்வாய் பகவன் வழிபட்டார்.

    பழனி முருகனை வழிபட செல்பவர்கள் முதலில் சண்முகா நதி, சரவணப்பொய்கையில் நீராட வேண்டும்.

    பிறகு மலை அடிவாரத்தில் உள்ள திருவாவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமியை வழிபட வேண்டும்.

    பிறகு 450 அடி உயரத்தில் உள்ள மலையில் ஏறி போகரால் செய்து அமைக்கப்பட்ட நவபாஷான முருகனை தரிசிக்க வேண்டும்.

    செவ்வாய் தோஷத்தால் திருமணம் ஆகாமல் இருப்பவர்கள், இத்தலம் சென்று பரிகாரம் செய்யக்கூடாது.

    அவர்கள் வைத்தீஸ்வரன் கோவில் சிறுகுடி, மேலக் கடம்பூர் போன்ற தலங்களுக்கு சென்றே பரிகாரம் வழிபாடு செய்யவேண்டும்.

    சாதாரண செவ்வாய் தோஷ பரிகாரத்துக்கே பழனி முருகனையும் சுவாமிமலை முருகனையும் தரிசிக்க வேண்டும்.

    திருமண தோஷத்திற்கு மட்டும் செல்ல கூடாது இதனை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.



    ×