என் மலர்
ஆன்மிக களஞ்சியம்

சிறுகுடி மங்களேஸ்வரர் கோவில்!
- செவ்வாய் பகவானுக்கு மங்களன் என்ற பெயர் உண்டு.
- முஸ்லீம் முதலிய வேற்று மதத்தவர்களும் இந்தப்பரிகாரத்தை செய்கின்றனர்.
சிறுகுடி மங்களேஸ்வரர் கோவில்!
திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் பாதையில் பூந்தோட்டத்துக்கு முன்பாக உள்ள நாச்சியார் கோவில் செல்லும் பாதையில் சென்று,
கடகம்பாடி என்ற ஊரில் இறங்கி, அங்கிருந்து வலப்புறமாக செல்லும் பாதையில் 3 கி.மீ. உள்ளே சென்றால் திருச்சிறுகுடியை அடையலாம்.
அம்பிகையைக் கைப்பிடியளவு மணலால் பிடித்து வைத்து, மங்கள தீர்த்தம் உண்டாக்கி இறைவனை வழிபட்ட தலம்.
இதுவே சிறுபிடி என்பது மருவி சிறுகுடி என்றாயிற்று.
செவ்வாய் பகவானுக்கு மங்களன் என்ற பெயர் உண்டு.
அதனால்தான் செவ்வாய்க் கிழமையை மங்கள வாரம் என்பார்கள்.
இத்திருத்தலம் செவ்வாய் பகவானால் வழிபடப்பட்டதால், இத்தலத்து விநாயகர், மங்கள விநாயகர் என்றும்,
இறைவன், மங்கள நாதர் என்றும், அம்பாள், மங்கள நாயகி என்றும், தீர்த்தம், மங்கள தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது.
செவ்வாய் தோஷமுள்ளவர்கள், செவ்வாய்க்கிழமை காலை, மாலை இருநேரமும் மங்கள தீர்த்தத்தில் நீராடி, மங்கள விநாயகர், மங்கள நாயகி, மங்கள நாதர் ஆகியோரை வழிபட்டு திருநீறு பெற்றுக் செல்ல வேண்டும்.
முஸ்லீம் முதலிய வேற்று மதத்தவர்களும் இந்தப்பரிகாரத்தை செய்து திருநீறு பெற்று செல்வது இத்திருத்தலத்தில் உள்ள ஆச்சரியப்படத்தக்க அதிசயமாகும்.
மாசி மாதத்தில் வரும் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் இங்கு பிரசித் தம், விசேஷ வழிபாடுகள் உண்டு.






