search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Zelensky"

    • ரஷியா 11 ஏவுகணைகளை மூலம் தாக்குதல் நடத்தியது.
    • ஏழு ஏவுகணைகளை வெற்றிகரமாக தாக்கி அழிக்கப்பட்டது.

    ரஷியா உக்ரைனின் கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த 11-ந்தேதி டிரிபில்லியா மின்சார உற்பத்தி நிலையத்தை ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் உற்பத்தி நிலையம் முழுமையாக சேதம் அடைந்து 100 சதவீதம் மின்சாரம் தயாரிக்கும் திறனை இழந்ததாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஜெலன்ஸ்கி கூறுகையில் "ரஷியா 11 ஏவுகணைகளை மின்சார உற்பத்தி நிலையம் நோக்கி வீசியது. அதில் உக்ரைன் ராணுவம் ஏழு ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியது. 4 ஏவுகணைகள் டிரிபில்லியா மின்சார நிலையத்தை தாக்கிவிட்டது. ஏனென்றால் எங்களிடம் ஏவுகணைகளை எதிர்த்து தாக்குதல் நடத்தும் ஏவுகணைகள் இல்லை. மின்சார நிலையத்தை பாதுகாப்பதற்கான ஏவுகணை அனைத்தும் தீர்ந்துவிட்டன" என்றார்.

    இந்த மின்சார உற்பத்தி நிலையம் கீவ் நகரின் தெற்குப்பகுதியில் 30 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. கீவ், ஜிடோமிர், செர்காசி ஆகிய நகரங்களுக்கு மின்சாரம் வழங்கி வருகிறது.

    ரஷியாவின் தாக்குதலில் சிறந்த முறையில் எதிர்கொள்ளும் இடமாக உக்ரைன் தலைநகர் விளங்குகிறது. ஆனால், உக்ரைனுக்கு நிதியுதவி வழங்கும் விவகாரம் அமெரிக்காவின் பாராளுமன்றத்தில் தொடர்ந்து நிலுவையில் உள்ளதால் வான்பாதுகாப்பில் சற்று குறைபாடு ஏற்பட்டுள்ளது.

    • உக்ரைனுக்கு வந்து, எங்கள் நகரங்களை எரித்தனர், பின்னர் உக்ரைனைக் குறை கூற முயன்றனர்.
    • தங்கள் சொந்த நாட்டிற்குள் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி கவலைப்படுவதில்லை.

    மாஸ்கோவில் நடந்த தாக்குதலில் தங்களுக்கு தொடர்பு இல்லை என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    மாஸ்கோவில் என்ன நடந்தது என்பது வெளிப்படையானது. இந்த தாக்குதலுக்கு புதினும், மற்றவர்களும் எங்கள் மீது குற்றம்சாட்ட முயற்சிக்கிறார்கள். அவர்களின் முறைகள் எப்போதும் ஒரே மாதிரியானவை. அதையெல்லாம் முன்பே பார்த்திருக்கிறோம். எப்போதும் மற்றவர்களை குறை கூறுவார்கள். அவர்கள் உக்ரைனுக்கு வந்து, எங்கள் நகரங்களை எரித்தனர், பின்னர் உக்ரைனைக் குறை கூற முயன்றனர். அவர்கள் மக்களை சித்ரவதை செய்து கற்பழிக்கிறார்கள்-பின்னர் அவர்கள் மீது குற்றம் சாட்டுகிறார்கள். எங்களுக்கு எதிராக போரை நடத்துகிறார்கள், ஆனால் அவர்கள் தங்கள் சொந்த நாட்டிற்குள் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி கவலைப்படுவதில்லை.

    ரஷிய குடிமக்களை பற்றி பேசுவதற்குப் பதிலாக, இத்தாக்குதலை உக்ரைனுடன் எவ்வாறு இணைப்பது என்று யோசித்து புதின் ஒரு நாள் அமைதியாக இருந்தார். உக்ரேனிய மண்ணில் தற்போது கொல்லப்படும் நூறாயிரக்கணக்கான ரஷ்யர்கள், அவர்கள் நாட்டில் இருந்திருந்தால் நிச்சயமாக பயங்கரவாதிகளை தடுத்திருக்க முடியும். புதின் தனிப்பட்ட அதிகாரத்திற்காக இந்த சூழ்நிலைகளில் அதிகமானவற்றைப் பயன்படுத்த முயற்சிப்பார். தீவிரவாதிகள் எப்போதும் தோற்க வேண்டும் என்றார்.

    • உக்ரைனின் ஒடேசா நகரில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் ரஷியா டிரோன் தாக்குதலை நடத்தியது.
    • இந்த தாக்குதலில் குழந்தைகள் உள்பட 8 பேர் பரிதாபமாக பலியானார்கள்.

    கீவ்:

    உக்ரைனுக்கு எதிராக ரஷியா போர் தொடந்து 2 ஆண்டு கடந்துள்ளது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் நிதி உதவி அளித்து வருகின்றன.

    இந்நிலையில், உக்ரைனில் ஒடேசா நகரில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் ரஷியா டிரோன் தாக்குதலை நடத்தியது. இதில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.

    இந்த தாக்குதலில் குழந்தைகள் உள்பட 8 பேர் பரிதாபமாக பலியானார்கள். டிரோன் தாக்குதலில் 18 வீடுகள் சேதமடைந் தன.

    இதுதொடர்பாக, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறுகையில், உக்ரைனுக்கு ஆயுத விநியோகம் தாமதப்படுத்துவதாகவும், ஆயுதங்களை விரைவாக வழங்கி இருந்தால் ரஷிய டிரோன் தாக்குதலை தவிர்த்திருக்கலாம் என தெரிவித்தார்.

    • ரஷியாவுக்கு எதிரான போர்க்களத்தில் உக்ரைன் வீரர்கள் தீவிரமாக போராடி வருகின்றனர்.
    • உக்ரைனுக்கான ராணுவ உதவிக்கு அமெரிக்கா நிச்சயமாக ஒப்புதல் அளிக்கும் என ஜெலன்ஸ்கி கூறினார்.

    கீவ்:

    உக்ரைன் மீது ரஷியா போர் தொடங்கி 2 ஆண்டு முடிந்து, மூன்றாம் ஆண்டாக தொடர்ந்து நடந்து வருகிறது. ரஷியாவுக்கு எதிரான போர்க்களத்தில் உக்ரைன் வீரர்கள் தீவிரமாக போராடி வருகின்றனர்.

    இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    உக்ரைனின் வெற்றி மேற்கத்திய நாடுகளின் ஆதரவைச் சார்ந்துள்ளது. உக்ரைனுக்கான ராணுவ உதவிக்கு அமெரிக்கா நிச்சயமாக ஒப்புதல் அளிக்கும்.

    ரஷியாவுடனான 2 ஆண்டு போரில் 31,000 உக்ரைன் வீரர்கள் வீர மரணமடைந்துள்ளனர். ஆனால் ரஷிய அதிபர் புதினோ, ஒன்றரை முதல் 3 லட்சம் உக்ரைன் வீரர்கள் உயிரிழந்ததாக பொய் சொல்லி வருகிறார். எங்கள் வீரர்களின் இழப்புகள் ஒவ்வொன்றும் எங்களுக்கு ஒரு பெரிய இழப்பு என தெரிவித்தார்.

    ரஷிய அதிபர் புதினுடன் பேசுவீர்களா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, உங்களால் காது கேளாத நபருடன் பேசமுடியுமா? எதிரிகளைக் கொல்லும் ஒரு மனிதனுடன் பேசமுடியுமா? அவர் 2030-ம் ஆண்டு வரை அதிகாரத்தில் இருக்க நினைக்கிறார். நாங்கள் விரைவில் வீழ்த்த விரும்புகிறோம் என்றார்.

    • ரஷியப் படைகள் உக்ரைன் எல்லைக்குள் வேகமாக ஊடுருவதை தடுப்பதில் துரிதமாக செயல்பட்டவர்.
    • இவரது தலைமையில் பதில் தாக்குதலில் ரஷியாவிடம் இருந்து சில பகுதிகளை உக்ரைன் கைப்பற்றியது.

    உக்ரைன் நாட்டின் ஆயுதப்படை தலைமை தளபதியாக இருந்தவர் வலேரி ஜலுன்ஸ்யி. இவரை அந்நாட்டின் அதிபரான ஜெலன்ஸ்கி அதிரடியாக நீக்கியுள்ளார். இருவருக்கும் இடையில் உரசல் இருந்து வந்த நிலையில் தற்போது ஜெலன்ஸ்கி இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார்.

    ரஷியப் படைகள் உக்ரைன் எல்லைக்குள் நுழைந்தபோது இவரது தலைமையிலான ஆயுதப்படை சிறப்பாக செயல்பட்டது. இதனால் இரும்பு தளபதி என அழைக்கப்பட்டார்.

    ரஷியாவை தொடக்கத்தில் சமாளித்த போதிலும், அதன்பின் ரஷியப்படைகள் உக்ரைனுக்குள் சென்று பேரழிவை ஏற்படுத்தியது.

    ரஷியாவுக்கு எதிராக போர் நடைபெற்று வரும் நிலையில், தலைமை தளபதி நீக்கப்பட்ட நிலையில், புதிதாக நியமிக்கப்படும் நபர் எப்படி படைகளை வழிநடத்திச் செல்வார் என எதிர்பார்ப்புடன் கூடிய கேள்வி எழுந்துள்ளது.

    ரஷியப்படைக்கு எதிராக உக்ரைன் எதிர்தாக்குதல் என்ற யுக்தியை கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. ரஷிய படைகள் பெரிய அளவில் தாக்குதல் நடத்தாத போதிலும், உக்ரைன் படையால் சிறிய அளவிலேயே முன்னேற முடிந்தது. தொடர்ந்து முன்னேற முடியாமல் தவித்து வருகிறது. உக்ரைன் போரில் சுமார் 1000 கி.மீட்டரை இழந்துள்ளது.

    உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

    புதிதாக நியமிக்கப்படும் தளபதி தலைமையில் உக்ரைன புதிய வியூகத்தின் போரை எதிர்கொள்ள வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

    மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து ஆயுதம் வழங்க உத்தரவாதம் வழங்காத நிலையில், ரஷியா தொடர்ந்து டிரோன் தாக்குதல் மூலம் வளங்களை அழிப்பதை தடுக்க உக்ரைன் அதிக அளவில் செயல்பாட்டை வெளிப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளது.

    டிரோன்கள் மற்றும் பிற மேம்பட்ட ஆயுதங்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மூலம் மட்டுமே உக்ரைன் ரஷ்யாவின் மிகப்பெரிய ராணுவத்துடன் போட்டியிட முடியும் என வலேரி ஜலுஸ்ன்யி தொடர்ந்து வலியுறுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இரண்டு வருடங்கள் முடிவடைய இருக்கிறது.
    • ரஷியா மிகப்பெரிய அளவில் சேதங்களை சந்தித்த நிலையிலும், போரில் முழுமையாக வெற்றிபெற முடியவில்லை.

    உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022-ம் ஆண்டு முழு அளவில் படையெடுத்தது. உக்ரைனை பிடிக்கும் வரையில் போர் ஓயாது என ரஷிய அதிபர் புதின் அறிவித்தார்.

    என்றபோதிலும் ரஷியாவால் உக்ரைனை முழுமையாக ஆக்கிரமிக்க முடியவில்லை. பிடித்து வைத்திருந்த சில இடங்களை உக்ரைன் மீட்டது. அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் உக்ரைன் சண்டையிட்டு வருகிறது. இதனால் ரஷியா மிகப்பெரிய அளவில் இழப்பை சந்தித்து வருகிறது.

    இந்த நிலையில்தான் போர் நிறுத்தம் என்பதை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நிராகரித்துள்ளார். உக்ரைன் மீதான சண்டையின் நிறுத்தம், போர் நிறுத்தம் என்ற அர்த்தமாகிவிடாது. அது ரஷியா மீண்டும் ஆயுதங்களையும், வீரர்களையும் கட்டமைக்க உதவுவதாக இருக்கும். நாங்கள் வீழ்த்தப்படுவோம். அடக்குமுறை தோற்கடிக்கப்பட வேண்டும். அடக்குமுறையாளர் தோல்வியாளராக இருக்க வேண்டும்" என்றார்.

    • உக்ரைன் மீதான ரஷியாவின் ராணுவ நடவடிக்கை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நீடித்து வருகிறது.
    • ரஷிய படையெடுப்பிற்குப் பிறகு முதல் முறையாக அதிபர் ஜெலன்ஸ்கி கனடா சென்றுள்ளார்.

    ஒட்டாவா:

    உக்ரைன் மீதான ரஷியாவின் ராணுவ நடவடிக்கை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதில் உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளையும், பொருளாதார உதவிகளையும் வழங்கி வருகின்றன.

    இதற்கிடையே, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகைக்கு சென்ற ஜெலன்ஸ்கி மற்றும் அவரது மனைவி ஒலெனா ஜெலன்ஸ்கா ஆகியோரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் வரவேற்றனர்.

    இதையடுத்து, அதிபர் ஜோ பைடன் மற்றும் அதிபர் ஜெலன்ஸ்கி இடையே வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது உக்ரைனுக்கு கூடுதலாக ஆயுதங்கள், ராணுவ தளவாடங்கள் வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    அமெரிக்கப் பயணத்தைத் தொடர்ந்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கனடா நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு விமான நிலையத்தில் ஜெலன்ஸ்கி மற்றும் அவரது மனைவி ஒலெனா ஜெலன்ஸ்கா ஆகியோரை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேரில் சென்று வரவேற்றார்.

    இந்நிலையில், கனடா நாட்டு பாராளுமன்றத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    ரஷியாவின் ஆக்கிரமிப்பு நமது வெற்றியின் மூலம் முடிவுக்கு வர வேண்டும். உக்ரைனில் மீண்டும் ஒரு இனப்படுகொலையை நிகழ்த்த முயற்சி செய்யாத வகையில் ரஷியா நிரந்தரமாக தோற்கடிக்கப்பட வேண்டும்.

    கனடா அரசு வழங்கிய ராணுவ உதவி மற்றும் பொருளாதார உதவிகளால் ஆயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.

    ரஷியா மீது பொருளாதார தடைகளை விதித்ததற்காக கனடா அரசுக்கு நன்றி. கனடா அரசு எங்களுக்கு அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி என தெரிவித்தார்.

    ரஷிய படையெடுப்பிற்குப் பிறகு முதல் முறையாக ஜெலன்ஸ்கி கனடா சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று அமெரிக்கா சென்றடைந்தார்.
    • வெள்ளை மாளிகையில் அவர் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்தார்.

    வாஷிங்டன்:

    உக்ரைன் மீதான ரஷியா போர் தொடுத்து ஒன்றரை ஆண்டுகள் கடந்துவிட்டது. உக்ரைனுக்கு அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் அந்நாட்டுக்கு ஆயுதங்களையும் வழங்கி வருகின்றன.

    உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்கா சென்று அதிபர் ஜோ பைடனைச் சந்தித்தார். அதேபோல், அதிபர் ஜோ பைடன் உக்ரைன் சென்று அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்தார்.

    இதற்கிடையே, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி செப்டம்பர் 21-ம் தேதி அமெரிக்கா வருகிறார் என வெள்ளை மாளிகை தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று வெள்ளை மாளிகை வந்தார். அவரை அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் வரவேற்றனர்.

    இந்தச் சந்திப்பின்போது உக்ரைனுக்கு கூடுதலாக ஆயுதங்கள், ராணுவ தளவாடங்கள் அளிப்பது குறித்து இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

    உக்ரைன் மீது ரஷியா போரை தொடங்கிய பிறகு அதிபர் ஜோ பைடன், அதிபர் ஜெலன்ஸ்கி இடையிலான மூன்றாவது சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

    • உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அடுத்த வாரம் அமெரிக்கா வருகிறார்.
    • வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்திக்கிறார்.

    வாஷிங்டன்:

    உக்ரைன் மீதான ரஷியா போர் தொடுத்து ஒன்றரை ஆண்டுகள் கடந்துவிட்டது. உக்ரைனுக்கு அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் அந்நாட்டுக்கு ஆயுதங்களையும் வழங்கி வருகின்றன.

    இதற்கிடையே, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்கா சென்று அதிபர் ஜோ பைடனைச் சந்தித்தார். அதேபோல், அதிபர் ஜோ பைடன் உக்ரைன் சென்று அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்தார்.

    இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அடுத்த வாரம் அமெரிக்கா வருகிறார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுலிவன் கூறுகையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி செப்டம்பர் 21ம் தேதி அமெரிக்கா வருகிறார். வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனை அதிபர் ஜெலன்ஸ்கி சந்திக்கிறார். அப்போது உக்ரைனுக்கு கூடுதலாக ஆயுதங்கள், ராணுவ தளவாடங்கள் அளிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என தெரிவித்துள்ளது.

    உக்ரைன் மீது ரஷியா போரை தொடங்கிய பிறகு அதிபர் ஜோ பைடன், அதிபர் ஜெலன்ஸ்கி இடையிலான மூன்றாவது சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

    • உக்ரைன் நாட்டின் பாதுகாப்பு மந்திரி ஒலெக்ஸி ரெஸ்னிகோவை அந்த நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி பதவி நீக்கம் செய்துள்ளார்.
    • ரெஸ்னிகோவ் நீக்கப்படும் முடிவு அந்த நாட்டு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    உக்ரைன்:

    கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்தது. அதை தொடர்ந்து நடைபெற்ற போரில் இரு தரப்பிலும் உயிர் சேதங்கள் ஏற்பட்டன. இது உலக நாடுகளிடையே கவலையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் உக்ரைன் நாட்டின் பாதுகாப்பு மந்திரி ஒலெக்ஸி ரெஸ்னிகோவை அந்த நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி பதவி நீக்கம் செய்துள்ளார். அவருக்கு பதிலாக ருஸ்டெம் உமெரோவை நியமிக்குமாறு அவர் அறிவித்து உள்ளார்.

    நாட்டு மக்களுக்கான காணொளி செய்தியில் இது தொடர்பாக குறிப்பிட்டுள்ள அதிபர் ஜெலென்ஸ்கி, பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்ஸி ரெஸ்னிகோவுக்குப் பதிலாக ருஸ்டெம் உமெ ரோவை நியமிக்க இந்த வாரம் நாடாளுமன்றத்தை நாட இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    கடந்த 550 நாட்களுக்கும் மேலாக ரஷ்யாவுக்கு எதிரான போரை முழுமையாக முன்னெடுத்தவர் ரெஸ்னிகோவ் என ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார். அவருக்கு பதிலாக ருஸ்டெம் உமெரோவை நியமிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெற இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    2021-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்தே உக்ரைன் பாதுகாப்பு மந்திரியாக ரெஸ்னிகோவ் செயல்பட்டு வருகிறார். ரஷியாவுக்கு எதிரான போரின்போது மேற்கத்திய ராணுவ உதவியைப் பெற ரெஸ்னிகோவ் நடவடிக்கை மேற்கொண்டார்.

    ரஷ்யா உக்ரைன் மீது தனது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியதில் இருந்து உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகம் மேற்கொள்ளும் முக்கியமான நடவடிக்கை இது என கூறப்படுகிறது.

    ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு உள்ளது. போர் காலத்தில் ஊழல் முறை கேடுகளுக்கு இடமில்லை என அதிபர் ஜெலென்ஸ்கி நம்பிக்கை தெரிவித்த நிலையில், ரெஸ்னிகோவ் நீக்கப்படும் முடிவு அந்த நாட்டு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 11 நாடுகளின் கூட்டணியின் பயிற்சி இந்த மாதம் தொடங்க உள்ளது.
    • 2024-ம் ஆண்டின் தொடக்கத்தில் விமானிகள் தயாராகிவிடுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    உக்ரைன், ரஷியா போர் 17 மாதங்களை தாண்டியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தப் போரில் ரஷிய தயாரிப்பான மிக்-29, சுகோய் ஜெட் போன்ற பழைய விமானங்களையே உக்ரைன் நம்பி உள்ளது.

    உக்ரைன்-ரஷியா போரில் அமெரிக்கா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஏராளமான ஆயுதங்களை வழங்கி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்க வேண்டுமென அந்த நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

    தனது போர்த்திறனை அதிகரிப்பதற்காக எப்-16 என்ற அதிநவீன போர் விமானங்களை வாங்க உக்ரைன் முடிவு செய்தது.

    இதனால் நெதர்லாந்து மற்றும் டென்மார்க் நாடுகளிடம் உக்ரைன் அதிகாரிகள் நீண்ட காலமாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். ஆனால் அதற்கு அமெரிக்காவின் ஒப்புதல் கிடைக்கவில்லை. இந்த எப்-16 போர் விமானங்கள் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டவை அதன் அனுமதி அவசியம் ஆகும்.

    இதற்கிடையே, எப்-16 விமானங்களை மற்ற நாடுகளுக்கு வழங்குவதற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக உக்ரைன் ராணுவ வீரர்களுக்கு இந்த விமானங்களை இயக்குவதற்கான பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

    இந்நிலையில், உக்ரைன் விமானிகளுக்கு எஃப்-16 போர் விமானங்களை இயக்குவதற்கு பயிற்சி அளிக்க கிரீஸ் நாடு முன்வந்துள்ளதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

    "நாங்கள் விமானக் கூட்டணிக்கு ஒரு முக்கியமான முடிவைப் பெற்றுள்ளோம். கிரீஸ் எப்-16 போர் விமானங்களில் எங்கள் விமானிகளுக்குப் பயிற்சி அளிக்கும். இந்தச் சலுகைக்கு நன்றி," என்று ஜெலென்ஸ்கி கூறினார்.

    மேலும், டென்மார்க் மற்றும் நெதர்லாந்து எப்-16 போர் விமானங்களை அதன் விமானிகள் பயன்படுத்த பயிற்சி பெற்றவுடன் உக்ரைனிடம் ஒப்படைக்கும் அமெரிக்க முடிவை உக்ரைன் வரவேற்றது.

    11 நாடுகளின் கூட்டணியின் பயிற்சி இந்த மாதம் தொடங்க உள்ளது. மேலும் 2024-ம் ஆண்டின் தொடக்கத்தில் விமானிகள் தயாராகிவிடுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • ரஷியா மீதான உக்ரைனின் டிரோன் தாக்குதல்கள் சென்ற வாரம் தீவிரமடைந்தது.
    • ரஷியாவின் தாக்குதலின் விளைவை, ரஷிய மக்கள் அனுபவிக்கிறார்கள்

    2022 பிப்ரவரி மாதம், ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது. இதனை தீவிரமாக எதிர்த்து, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியோடு உக்ரைன் போரிட்டு வருகிறது. போர் தொடங்கி 18 மாதங்கள் கடந்து சுமார் 520 நாட்கள் ஆன நிலையில் இரு தரப்பும் மாறிமாறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இரு நாடுகளிலும் பலத்த சேதங்களும் உயிர்பலிகளும் தொடர்கிறது.

    இந்நிலையில் ரஷியா மீதான உக்ரைனின் டிரோன் தாக்குதல்கள் சென்ற வாரம் தீவிரமடைந்தது.

    நேற்று ரஷியாவின் தலைநகர் மாஸ்கோ மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஒருவர் காயமடைந்தார். மேலும், 2 கட்டிடங்கள் சேதமடைந்தன. இதனால் ரஷியாவின் வ்னுகோவோ (Vnukovo) விமான நிலையம் மூடப்பட்டது.

    இத்தாக்குதல்கள் குறித்து தனது மக்களுக்கு ஆற்றிய உரையில் கருத்து தெரிவித்த உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கூறியிருப்பதாவது:

    ரஷியாவின் எல்லைக்குள் போர் நுழைந்து விட்டது. ரஷியாவின் அடையாள சின்னங்கள், ராணுவ தளங்கள் இலக்குகளாகும். இது ஒரு தவிர்க்க முடியாத ஆனால், இயற்கையான செயல்முறை. உக்ரைன் வலுப்பெற்று வருகிறது. இருந்தாலும் ரஷிய தீவிரவாதிகள் நமது எரிசக்தி கட்டமைப்பை தாக்கக்கூடும். எனவே நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

    உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலின் விளைவை, ரஷிய மக்கள் அனுபவிக்கிறார்கள் என உக்ரைன் விமானப்படை செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

    இந்நிலையில், இந்த தாக்குதல்கள் நேட்டோ நாடுகளும், அமெரிக்காவும் உக்ரைனுக்கு உதவியதால் நடந்திருக்கின்றன என ரஷியாவின் வெளியுறவுத்துறை தெரிவித்திருக்கிறது.

    இதற்கிடையே ரஷியா கைப்பற்றிய கிரிமியாவின் மீது உக்ரைன் நடத்திய 25 டிரோன் தாக்குதல்களை வெற்றிகரமாக முறியடித்ததாக ரஷியா அறிவித்துள்ளது.

    ×