search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உக்ரைன் அதிபர்"

    • உக்ரைனுக்கு வந்து, எங்கள் நகரங்களை எரித்தனர், பின்னர் உக்ரைனைக் குறை கூற முயன்றனர்.
    • தங்கள் சொந்த நாட்டிற்குள் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி கவலைப்படுவதில்லை.

    மாஸ்கோவில் நடந்த தாக்குதலில் தங்களுக்கு தொடர்பு இல்லை என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    மாஸ்கோவில் என்ன நடந்தது என்பது வெளிப்படையானது. இந்த தாக்குதலுக்கு புதினும், மற்றவர்களும் எங்கள் மீது குற்றம்சாட்ட முயற்சிக்கிறார்கள். அவர்களின் முறைகள் எப்போதும் ஒரே மாதிரியானவை. அதையெல்லாம் முன்பே பார்த்திருக்கிறோம். எப்போதும் மற்றவர்களை குறை கூறுவார்கள். அவர்கள் உக்ரைனுக்கு வந்து, எங்கள் நகரங்களை எரித்தனர், பின்னர் உக்ரைனைக் குறை கூற முயன்றனர். அவர்கள் மக்களை சித்ரவதை செய்து கற்பழிக்கிறார்கள்-பின்னர் அவர்கள் மீது குற்றம் சாட்டுகிறார்கள். எங்களுக்கு எதிராக போரை நடத்துகிறார்கள், ஆனால் அவர்கள் தங்கள் சொந்த நாட்டிற்குள் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி கவலைப்படுவதில்லை.

    ரஷிய குடிமக்களை பற்றி பேசுவதற்குப் பதிலாக, இத்தாக்குதலை உக்ரைனுடன் எவ்வாறு இணைப்பது என்று யோசித்து புதின் ஒரு நாள் அமைதியாக இருந்தார். உக்ரேனிய மண்ணில் தற்போது கொல்லப்படும் நூறாயிரக்கணக்கான ரஷ்யர்கள், அவர்கள் நாட்டில் இருந்திருந்தால் நிச்சயமாக பயங்கரவாதிகளை தடுத்திருக்க முடியும். புதின் தனிப்பட்ட அதிகாரத்திற்காக இந்த சூழ்நிலைகளில் அதிகமானவற்றைப் பயன்படுத்த முயற்சிப்பார். தீவிரவாதிகள் எப்போதும் தோற்க வேண்டும் என்றார்.

    • உக்ரைன் தாக்குதல் நடத்துவதால் அமைதி முயற்சியை செயல்படுத்துவது கடினம் என்றார்.
    • போர்நிறுத்தம் என்ற யோசனையை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் நிராகரித்துள்ளார்.

    உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொண்ட ரஷியா, முக்கிய பகுதிகளை கைப்பற்றியது. ஆரம்பத்தில் உக்ரைன் தரப்பு பின்னடைவை சந்தித்த நிலையில், அதன்பின்னர் எழுச்சி பெற்று பதில் தாக்குதல்களை தீவிரப்படுத்தி இழந்த பகுதிகளை மீட்டு வருகிறது. அத்துடன் ரஷியாவை குறிவைத்தும் தாக்கத் தொடங்கி உள்ளது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வந்து உக்ரைனில் அமைதி திரும்ப ஆப்பிரிக்க நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

    இந்த அமைதி திட்டம் குறித்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் ஆப்பிரிக்க தலைவர்கள், ரஷிய அதிபர் புதின் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த புதின், ஆப்பிரிக்க முன்முயற்சி உக்ரைனில் அமைதிக்கு ஒரு அடிப்படையாக இருக்கலாம், ஆனால் உக்ரைன் தாக்குதல் நடத்துவதால் அந்த அமைதி முயற்சியை செயல்படுத்துவது கடினம் என்றார்.

    'இந்த அமைதி முயற்சியின் விதிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் அதில் செயல்படுத்த கடினமாக அல்லது சாத்தியமற்ற விஷயங்களும் உள்ளன. இந்த முன்முயற்சிகளில் ஒன்று போர் நிறுத்தம். ஆனால் உக்ரைன் தரப்பு பெரிய அளவிலான தாக்குதல் நடவடிக்கையை செயல்படுத்துகிறது. தாக்குதலுக்கு உள்ளாகும்போது எங்களால் போர் நிறுத்தத்தை அமல்படுத்த முடியாது' என்று புதின் குறிப்பிட்டார்.

    அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்குவது குறித்த கேள்விக்கு பதிலளித்த புதின், "நாங்கள் அமைதி பேச்சுவார்த்தையை நிராகரிக்கவில்லை. ஆனால் இந்த செயல்முறை தொடங்குவதற்கு, இரு தரப்பிலும் உடன்பாடு இருக்க வேண்டும்" என்றார்.

    அதேசமயம் போர்நிறுத்தம் என்ற யோசனையை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் நிராகரித்துள்ளார். தனது நாட்டின் ஐந்தில் ஒரு பகுதியை ரஷியா தனது கட்டுப்பாட்டில் தொடர்ந்து வைத்திருக்கவும், 17 மாதங்கள் நீடித்த போருக்குப் பிறகு அதன் படைகளை மீண்டும் ஒருங்கிணைக்கவும் போர் நிறுத்தம் வாய்ப்பாக அமைந்துவிடும் என்கிறார் ஜெலன்ஸ்கி.

    • உக்ரைன் எரிசக்தி உற்பத்தி நிலையங்கள் மீது ரஷிய படைகள் தாக்குதல்.
    • மின்சார உள்கட்டமைப்பு மீது வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது.

    கீவ்:

    உக்ரைன்-ரஷியா இடையேயான போர் 8 மாதங்களாக நீடித்து வரும் நிலையில், உக்ரைனில் 40 லட்சம் மக்கள் மின்வெட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் எரிசக்தி உற்பத்தி நிலையங்கள் மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தி உள்ளதாகவும், நாட்டின் பல நகரங்கள் மற்றும் பிராந்தியங்களில் மின்சார உள்கட்டமைப்பு மீது வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதால் அந்த பகுதிகளில் இருளில் மூழ்கி உள்ளதாகவும் அவர் கூறினார். மின்தடைகளை சரி செய்ய கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி உக்ரைன் மக்களுக்கு உதவி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இந்நிலையில் ஈரானில் தயாரிக்கப்பட்ட 300க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களை (டிரோன்கள்) உக்ரைன் படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக அந்நாட்டு விமானப்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஈரானில் தயாரிக்கப்பட்ட அந்த டிரோன்களை போரில் ரஷியா பயன்படுத்தி வருவதாகவும், உக்ரைனின் முக்கிய கட்டமைப்புகளை தாக்கி அழிப்பதற்கு இந்த ஆளில்லா விமானங்களை ரஷிய பயன்படுத்துகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • நீங்கள் ஜெர்மனியை நம்பலாம் என்று ஜெர்மன் ஜனாதிபதி ஃபிராங்க்- வால்டர் ஸ்டெய்ன்மியர் தெரிவித்துள்ளார்.
    • உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை சந்திக்க ஆவலுடன் காத்திருப்பதாக கூறினார்.

    ஜெர்மன் ஜனாதிபதி ஃபிராங்க்- வால்டர் ஸ்டெய்ன்மியர் இன்று உக்ரைனுக்கு திடீர் பயணமாக வந்தடைந்தார். பிப்ரவரி 24ம் தேதி அன்று ரஷியா உக்ரைன் மீது படையெடுத்த பிறகு ஜெர்மனர் அதிபர் மேற்கொண்டுள்ள முதல் பயணம் இதுவாகும்.

    இதுகுறித்து ஜெர்மன் அதிபர் கூறுகையில், "உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை சந்திக்க ஆவலுடன் காத்திருப்பதாக" குறிப்பிட்டிருந்தார்.

    மேலும் அவர், "உக்ரைன் மக்களுக்கு எனது செய்தி: நீங்கள் ஜெர்மனியை நம்பலாம்!" என்றார்.

    ஸ்டெய்ன்மியர் மேலும் கூறுகையில், ராணுவ ஆதரவைத் தவிர, குளிர்காலம் வருவதற்கு முன்பு, மின் கட்டமைப்புகள், நீர் குழாய்கள் மற்றும் வெப்ப மூட்டும் அமைப்புகள் போன்ற அழிக்கப்பட்ட உள்கட்டமைப்பை சரி செய்வதில் தனது பயணம் கவனம் செலுத்தும் என்று குறிப்பிட்டுள்ளார்.

    • அமைதி பேச்சுவார்த்தையே தொடர வேண்டியது அவசியம்.
    • போர் நீடிப்பது அணுமின் நிலையங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

    உக்ரைன், ரஷியா இடையேயான போர் ஏழரை மாதங்களுக்கு மேலாக நீடித்து வரும் நிலையில், பிரதமர் மோடி இன்று தொலைபேசி வாயிலாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    உக்ரைனில் நிலவி வரும் தற்போதைய சூழல் குறித்து இரு நாட்டு தலைவர்களும் விவாதித்தனர். பிரச்சினைக்கு ராணுவ ரீதியாக தீர்வு காண முடியாது என்றும், தூதரக ரீதியான அமைதி பேச்சுவார்த்தையை தொடர வேண்டியது அவசியம் என்றும் பிரதமர் அப்போது கூறினார்.

    போர் நீடிப்பது அணுமின் நிலையங்களுக்கு ஆபத்தை விளைவிப்பதுடன், பேரழிவை ஏற்படுத்தும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.  ஐ.நா சாசனம், சர்வதேச சட்டம், அனைத்து நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றிற்கு மதிப்பளிக்க வேண்டியதன் முக்கியத்துவதும் குறித்து பிரதமர் எடுத்தரைத்தார்.

    உக்ரைன் - ரஷ்யா இடையேயான பிரச்னைக்கு அமைதி வழியில் தீர்வு காண உதவுவதற்கு இந்தியா தயாராக இருப்பதாக மோடி அப்போது கூறியதாகவும் பிரதமர் அலுவலக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • ஜெலன்ஸ்கிக்கு உடலில் எந்த இடங்களில் காயங்கள் ஏற்பட்டது என்ற எந்த விவரம் வெளியிடவில்லை.
    • கார் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உக்ரைன் மீது ரஷிய படைகள் நடத்தி வரும் தாக்குதலில் பல நகரங்கள் சின்னாபின்னமாகிவிட்டது. இந்த போர் மூலம் ரஷிய படைகள் கைப்பற்றிய சில நகரங்களை உக்ரைன் மீண்டும் மீட்டுள்ளது.

    இதையடுத்து மீட்கப்பட்ட உக்ரைன் வடக்கு பிராந்தியத்தில் உள்ள இசியம் நகருக்கு அதிபர் ஜெலன்ஸ்கி சென்று போரால் சேதமான பகுதிகளை பார்வையிட்டார்.

    அதன் பிறகு அவர் கிவ் நகருக்கு காரில் திரும்பி கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் சென்ற கார் மற்றொரு வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் அதிபர் ஜெலன்ஸ்கி லேசான காயம் அடைந்ததாக அவரது செய்தி தொடர்பாளர் நிகிபோ ரோவ் தெரிவித்து உள்ளார்.

    விபத்து நடந்ததும் அவருடன் சென்ற மருத்துவர்கள் ஜெலன்ஸ்கி மற்றும் அவரது கார் ஓட்டுனர் ஆகியோருக்கு முதல் உதவி சிகிச்சை அளித்துள்ளனர். பின்னர் 2 பேரும் ஆம்புலன்சில் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். ஆனால் ஜெலன்ஸ்கிக்கு உடலில் எந்த இடங்களில் காயங்கள் ஏற்பட்டது என்ற எந்த விவரமும் தெரியவில்லை.

    இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஜெர்மனி, செக் குடியரசு, நார்வே மற்றும் ஹங்கேரி நாடுகளுக்கான உக்ரைன் தூதர்கள் நீக்கம்.
    • தூதர்கள் நீக்கம் தொடர்பான காரணங்களை உக்ரைன் அதிபர் தெரிவிக்கவில்லை.

    கீவ்:

    உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 150-வது நாளை நெருங்கியுள்ளது. உக்ரைனின் பல நகரங்களை ரஷியா கைப்பற்றியுள்ளது. உக்ரைனுக்கு ராணுவ ரீதியிலான உதவி கிடைக்க சர்வதேச நாடுகளின் ஆதரவை பெற நடவடிக்கை எடுக்குமாறு பல்வேறு நாடுகளுக்கான உக்ரைன் தூதர்களை அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தி உள்ளார்.

    இந்நிலையில், ஜெர்மனி, இந்தியா, செக் குடியரசு, நார்வே மற்றும் ஹங்கேரிக்கான உக்ரைன் தூதர்களை பணிநீக்கம் செய்வதாக ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார். இதற்கான காரணங்கள் குறித்தும், அவர்களுக்கு வேறு பணிகள் வழங்கப்படுமா என்பது குறித்தும் உக்ரைன் அதிபர் மாளிகை எந்த தகவலையும் வெளியிடவில்லை.

    உக்ரைனுக்கு பொருளாதார மற்றும் ராணுவ ரீதியிலான உதவிகளை ஜெர்மனி வழங்கி வரும் நிலையில் அந்நாட்டிற்கான உக்ரைன் தூதரை ஜெலன்ஸ்கி நீக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×