search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Ukraine president"

  • உக்ரைன் தாக்குதல் நடத்துவதால் அமைதி முயற்சியை செயல்படுத்துவது கடினம் என்றார்.
  • போர்நிறுத்தம் என்ற யோசனையை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் நிராகரித்துள்ளார்.

  உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொண்ட ரஷியா, முக்கிய பகுதிகளை கைப்பற்றியது. ஆரம்பத்தில் உக்ரைன் தரப்பு பின்னடைவை சந்தித்த நிலையில், அதன்பின்னர் எழுச்சி பெற்று பதில் தாக்குதல்களை தீவிரப்படுத்தி இழந்த பகுதிகளை மீட்டு வருகிறது. அத்துடன் ரஷியாவை குறிவைத்தும் தாக்கத் தொடங்கி உள்ளது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வந்து உக்ரைனில் அமைதி திரும்ப ஆப்பிரிக்க நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

  இந்த அமைதி திட்டம் குறித்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் ஆப்பிரிக்க தலைவர்கள், ரஷிய அதிபர் புதின் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த புதின், ஆப்பிரிக்க முன்முயற்சி உக்ரைனில் அமைதிக்கு ஒரு அடிப்படையாக இருக்கலாம், ஆனால் உக்ரைன் தாக்குதல் நடத்துவதால் அந்த அமைதி முயற்சியை செயல்படுத்துவது கடினம் என்றார்.

  'இந்த அமைதி முயற்சியின் விதிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் அதில் செயல்படுத்த கடினமாக அல்லது சாத்தியமற்ற விஷயங்களும் உள்ளன. இந்த முன்முயற்சிகளில் ஒன்று போர் நிறுத்தம். ஆனால் உக்ரைன் தரப்பு பெரிய அளவிலான தாக்குதல் நடவடிக்கையை செயல்படுத்துகிறது. தாக்குதலுக்கு உள்ளாகும்போது எங்களால் போர் நிறுத்தத்தை அமல்படுத்த முடியாது' என்று புதின் குறிப்பிட்டார்.

  அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்குவது குறித்த கேள்விக்கு பதிலளித்த புதின், "நாங்கள் அமைதி பேச்சுவார்த்தையை நிராகரிக்கவில்லை. ஆனால் இந்த செயல்முறை தொடங்குவதற்கு, இரு தரப்பிலும் உடன்பாடு இருக்க வேண்டும்" என்றார்.

  அதேசமயம் போர்நிறுத்தம் என்ற யோசனையை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் நிராகரித்துள்ளார். தனது நாட்டின் ஐந்தில் ஒரு பகுதியை ரஷியா தனது கட்டுப்பாட்டில் தொடர்ந்து வைத்திருக்கவும், 17 மாதங்கள் நீடித்த போருக்குப் பிறகு அதன் படைகளை மீண்டும் ஒருங்கிணைக்கவும் போர் நிறுத்தம் வாய்ப்பாக அமைந்துவிடும் என்கிறார் ஜெலன்ஸ்கி.

  • நீங்கள் ஜெர்மனியை நம்பலாம் என்று ஜெர்மன் ஜனாதிபதி ஃபிராங்க்- வால்டர் ஸ்டெய்ன்மியர் தெரிவித்துள்ளார்.
  • உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை சந்திக்க ஆவலுடன் காத்திருப்பதாக கூறினார்.

  ஜெர்மன் ஜனாதிபதி ஃபிராங்க்- வால்டர் ஸ்டெய்ன்மியர் இன்று உக்ரைனுக்கு திடீர் பயணமாக வந்தடைந்தார். பிப்ரவரி 24ம் தேதி அன்று ரஷியா உக்ரைன் மீது படையெடுத்த பிறகு ஜெர்மனர் அதிபர் மேற்கொண்டுள்ள முதல் பயணம் இதுவாகும்.

  இதுகுறித்து ஜெர்மன் அதிபர் கூறுகையில், "உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை சந்திக்க ஆவலுடன் காத்திருப்பதாக" குறிப்பிட்டிருந்தார்.

  மேலும் அவர், "உக்ரைன் மக்களுக்கு எனது செய்தி: நீங்கள் ஜெர்மனியை நம்பலாம்!" என்றார்.

  ஸ்டெய்ன்மியர் மேலும் கூறுகையில், ராணுவ ஆதரவைத் தவிர, குளிர்காலம் வருவதற்கு முன்பு, மின் கட்டமைப்புகள், நீர் குழாய்கள் மற்றும் வெப்ப மூட்டும் அமைப்புகள் போன்ற அழிக்கப்பட்ட உள்கட்டமைப்பை சரி செய்வதில் தனது பயணம் கவனம் செலுத்தும் என்று குறிப்பிட்டுள்ளார்.

  • ஜெலன்ஸ்கிக்கு உடலில் எந்த இடங்களில் காயங்கள் ஏற்பட்டது என்ற எந்த விவரம் வெளியிடவில்லை.
  • கார் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  உக்ரைன் மீது ரஷிய படைகள் நடத்தி வரும் தாக்குதலில் பல நகரங்கள் சின்னாபின்னமாகிவிட்டது. இந்த போர் மூலம் ரஷிய படைகள் கைப்பற்றிய சில நகரங்களை உக்ரைன் மீண்டும் மீட்டுள்ளது.

  இதையடுத்து மீட்கப்பட்ட உக்ரைன் வடக்கு பிராந்தியத்தில் உள்ள இசியம் நகருக்கு அதிபர் ஜெலன்ஸ்கி சென்று போரால் சேதமான பகுதிகளை பார்வையிட்டார்.

  அதன் பிறகு அவர் கிவ் நகருக்கு காரில் திரும்பி கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் சென்ற கார் மற்றொரு வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் அதிபர் ஜெலன்ஸ்கி லேசான காயம் அடைந்ததாக அவரது செய்தி தொடர்பாளர் நிகிபோ ரோவ் தெரிவித்து உள்ளார்.

  விபத்து நடந்ததும் அவருடன் சென்ற மருத்துவர்கள் ஜெலன்ஸ்கி மற்றும் அவரது கார் ஓட்டுனர் ஆகியோருக்கு முதல் உதவி சிகிச்சை அளித்துள்ளனர். பின்னர் 2 பேரும் ஆம்புலன்சில் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். ஆனால் ஜெலன்ஸ்கிக்கு உடலில் எந்த இடங்களில் காயங்கள் ஏற்பட்டது என்ற எந்த விவரமும் தெரியவில்லை.

  இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  ஊழலுக்கு எதிரான கதாபாத்திரத்தில் தோன்றியதன் மூலம் குறுகிய காலத்தில் மிகப்பெரிய செல்வாக்கை பெற்ற காமெடி நடிகர் உக்ரைன் நாட்டின் புதிய அதிபராக இன்று பதவியேற்றார்.
  கீவ்:

  கிழக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள மிகப்பெரிய நாடு உக்ரைன். இந்நாட்டின் அதிபரான பெட்ரோ பொரஷென்கோவின் (வயது 53), பதவி காலம் அடுத்த மாதம் முடிவடைகிறது. எனவே அங்கு அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
   
  இதில் பெட்ரோ பொரஷென்கோ தனது அதிபர் பதவியை தக்கவைத்துக்கொள்ள மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்து, அரசியலில் எந்தவித அனுபவமும் இல்லாத டி.வி. நகைச்சுவை நடிகரான ஓலோடோமய்ர் ஜெலன்ஸ்கி (41) களம் இறங்கினார்.

  அரசியலில் புதிய மாற்றத்தை விரும்பிய உக்ரைன் மக்கள் ஜெலன்ஸ்கியை ஆதரித்தனர். இதனால் களத்தில் இருந்த மற்ற 35 வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளி பெட்ரோ பொரஷென்கோவிற்கு நேரடி போட்டியாளராக ஜெலன்ஸ்கி மாறினார்.

  தனது அரசியல் கொள்கை இதுதான் என்பதை தெளிவுப்படுத்தாத ஜெலன்ஸ்கி தேர்தல் நேர விவாதங்கள் மற்றும் நேர்காணல்களை தவிர்த்தார். இதனால் அவர் விமர்சனத்துக்குள்ளான போதும், மக்களின் மத்தியில் அவருக்கு ஆதரவு குறையவில்லை. இந்த சூழலில் கடந்த மாதம் 31-ந் தேதி அதிபர் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்கு பதிவு நடந்தது.

  இதில், பெட்ரோ பொரஷென்கோவை விட ஜெலன்ஸ்கி 70 சதவீதம் அதிக வாக்குகளை பெற்று முன்னிலை பெற்றார். இரண்டாவது கட்ட தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் ஜெலன்ஸ்கி சுமார் 74 சதவீத வாக்குகளை கைப்பற்றி அமோக வெற்றிப்பெற்றார்.  பொருளாதார பேராசிரியரான அலெக்சாண்டர் ஜெலன்ஸ்கிக்கு மகனாக பிறந்த ஜெலன்ஸ்கி, தனது 17 வயதில் உள்ளூர் தொலைக்காட்சி நடத்திய நகைச்சுவை போட்டியில் பங்கேற்றார்.

  அதனை தொடர்ந்து, டி.வி. தொடர்களில் நகைச்சுவை கதாப்பாத்திரங்களில் நடிக்க தொடங்கினார். அவரது டி.வி. தொடர்கள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதால் பிரபல நகைச்சுவை நடிகராக உருவெடுத்தார். கடந்த 2003-ம் ஆண்டு, தனது பள்ளி தோழியான ஒலனா கியாஷ்கோவை காதல் திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளன.

  ஜெலன்ஸ்கி கதாநாயகனாக நடித்த ‘மக்களுக்கான வேலைக்காரன்’ (சர்வண்ட் ஆப் பீப்புள்) என்கிற டி.வி. தொடர் கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாக தொடங்கியது.

  கதையின்படி பள்ளிக்கூட ஆசிரியரான ஜெலன்ஸ்கி, நாட்டில் நடக்கும் ஊழலை விமர்சித்து பேசும் வீடியோ சமூகவலைத் தளங்களில் வேகமாக பரவி, அதன் மூலம் அவர் நாட்டின் அதிபர் ஆவார்.

  இந்த கதைக்களம்தான் ஜெலன்ஸ்கியை அரசியலுக்கு வரத் தூண்டியது. ‘மக்களுக்கான வேலைக்காரன்’ தொடர் மக்களிடம் பெரும் ஆதரவை பெற்றதன் மூலம், உக்ரைன் மக்கள் தற்போதைய அரசின் மீது அதிருப்தியில் இருப்பதை அவர் தெரிந்துகொண்டார்.

  இதையடுத்து, தனது டி.வி. தொடரின் தலைப்பையே தனது கட்சியின் பெயராக கொண்டு ‘மக்களுக்கான வேலைக்காரன்’ என்ற கட்சியை கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கினார். மாற்றத்தை விரும்பும் மக்களின் மனநிலையை உணர்ந்து, அதிபர் தேர்தலில் களம் இறங்கினார்.

  அதன்படியே மாற்றத்துக்காக மட்டுமே அரசியலில் துளியும் அனுபவம் இல்லாத ஜெலன்ஸ்கியை அதிபராக மக்கள் தேர்வு செய்தனர்.

  வாக்குப்பதிவு முடிவுகளுக்கு பின்னர் மக்கள் மத்தியில் பேசிய ஜெலன்ஸ்கி, “நான் உங்களை ஒருபோதும் விட்டுவிடமாட்டேன்” என்றார். மேலும் அவர் “நான் இன்னும் அதிகாரப்பூர்வமாக அதிபராகவில்லை. ஆனால், உக்ரைனின் குடிமகனாக அனைத்து நாடுகளிடமும் ஒன்றை தெரிவிக்க விரும்புகிறேன். எங்களை பாருங்கள், இங்கு எல்லாமுமே சாத்தியமானது” எனவும் கூறினார். 

  இந்நிலையில், உக்ரைன் நாட்டின் புதிய அதிபராக பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பைபிள் மற்றும் அந்நாட்டின் அரசியலமைப்பு சட்டப் புத்தகத்தின்மீது கைவைத்து ’உக்ரைன் நாட்டின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்தை பேணிப் பாதுகாப்பேன்’ என அவர் உறுதிமொழி ஏற்றார்.

  பின்னர், தன்னை அதிபராக தேர்வு செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்த அவர், ‘பொதுமக்களுக்கு சேவை செய்யும் மனப்பான்மை கொண்டவர்கள் அதிகாரத்துக்கு வர வேண்டும்’ என்று குறிப்பிட்டார்.
  ரஷியாவுடன் முழு போரில் ஈடுபடும் நிலை ஏற்பட்டு இருப்பதாக உக்ரைன் அதிபர் புரோசென்கோ தெரிவித்துள்ளார். #UkrainePresident #PetroPoroshenko
  மாஸ்கோ:

  கடந்த காலத்தில் ரஷியாவை ஒட்டி இருந்த பல நாடுகள் சோவியத் யூனியன் என்ற பெயரில் ரஷியாவுடன் இணைந்து ஒரே நாடாக இருந்தன.

  பின்னர் அந்த நாடுகள் ரஷியாவுடன் இருந்து பிரிந்து சென்று விட்டன. அதில், முக்கிய நாடு உக்ரைன்.

  பிரிந்து சென்ற பிறகு இருநாடுகளும் பகை நாடுகளாக மாறி விட்டன. சில ஆண்டுகளுக்கு முன்பு உக்ரைனின் ஒரு பகுதியான கிரிமியாவை ரஷியா வலுக்கட்டாயமாக கைப்பற்றி தன்னுடன் இணைத்து கொண்டது.

  அதன் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு மிகவும் அதிகரித்தது.

  இந்த நிலையில் ரஷிய கடல் பகுதியில் சென்ற உக்ரைனின் 4 கப்பல்களை ரஷியா சிறை பிடித்துள்ளது.

  இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் வரலாம் என்ற சூழ்நிலை நிலவுகிறது. எனவே, உக்ரைன் தனது படைகளை எல்லையில் குவித்து வருகிறது.

  பதிலுக்கு ரஷியாவும் எல்லையில் அதிக ஆயுதங்களை குவித்து வருகிறது. போர் பதட்டம் நிலவுவதால் உக்ரைனில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

  இது சம்பந்தமாக உக்ரைன் அதிபர் புரோசென்கோ கூறும் போது, உக்ரைன் கடுமையான மிரட்டலுக்கு ஆளாகி இருக்கிறது.

  தற்போது நடக்கும் நிகழ்வுகள் விளையாட்டுத்தனமான வி‌ஷயம் அல்ல. ரஷியா தாக்குதலுக்கு தயாராகி உள்ளது.

  எனவே, ரஷியாவுடன் நாங்கள் முழு போரில் ஈடுபடும் நிலை ஏற்பட்டு இருக்கிறது என்று கூறினார்.

  தங்களுக்கு உதவும் வகையில் நேட்டோ நாடுகள் தங்கள் நாட்டு கப்பல்களை அனுப்பி வைக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  இதற்கிடையே ரஷிய அதிபர் புதின் இதுபற்றி கூறும் போது, உக்ரைனுடன் மோதும் எண்ணம் எங்களுக்கு இல்லை. உக்ரைனில் நடக்கும் தேர்தலில் ஆதாயம் பெறுவதற்காக அந்த நாட்டு அதிபர் அச்சுறுத்தல் இருப்பதாகவும், போர் நடக்க போகிறது என்று கூறியும் நாடகம் ஆடுகிறார் என தெரிவித்துள்ளார். #UkrainePresident #PetroPoroshenko
  ×