என் மலர்
நீங்கள் தேடியது "Zelensky"
- உக்ரைனுக்கு இங்கிலாந்து முழு ஆதரவு அளிக்கும் என லிஸ் டிரஸ் உறுதி.
- இந்திய வம்சாவளி பெண், இங்கிலாந்து உள்துறை அமைச்சராக நியமனம்.
லண்டன்:
இங்கிலாந்தின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள லிஸ் டிரஸ், அமெரிக்கா மற்றும் உக்ரைன் அதிபர்களுடன் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இது தொடர்பாக இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ் உடன் தொலைபேசி மூலம் பேசினார். அப்போது இங்கிலாந்தின் புதிய பிரதமராக பொறுப்பேற்றதற்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். வடக்கு அயர்லாந்தில் அமைதியைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.
மேலும் ரஷியா அதிபர் புதின் நடத்தி வரும் போரினால் ஏற்பட்டுள்ள தீவிர பொருளாதார பிரச்சினைகளும் குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாக கூறப்பட்டுள்ளது. இதேபோல் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் நடைபெற்ற தொலைபேசி உரையாடலில், ரஷியாவிற்கு எதிரான போரில் உக்ரைனுக்கு, இங்கிலாந்து முழு ஆதரவளிக்கும் என்று டிரஸ் உறுதியளித்தார்.

இதனிடையே, லிஸ் ட்ரஸ் தலைமையிலான இங்கிலாந்து அமைச்சரவையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுயெல்லா பிராவர்மேன் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். சுயெல்லாவின் தாயார் உமா தமிழகத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை கோவா வம்சாவளியைச் சேர்ந்த கிறிஸ்டி பெர்னாண்டஸ். 1960 ஆண்டு சுயெல்லாவின் குடும்பம் இங்கிலாந்துக்கு குடி பெயர்ந்தது.
- ஜி-7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க பிரதமர் மோடி ஜெர்மனி சென்றார்.
- ஜி-7 மாநாட்டில் ரஷியா மீது அதிகமான பொருளாதார தடைகள் விதிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
பெர்லின்:
அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜப்பான், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகள் அடங்கிய ஜி-7 மாநாடு தொடங்கியது.
இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்பட 7 நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்க பிரதமர் மோடி ஜெர்மனி சென்றுள்ளார்.
மாநாட்டில் பல்வேறு அமர்வுகளாக விவாதம் நடந்தது. அதில் உக்ரைன்-ரஷியா போர் முக்கிய இடம் பிடித்தது. ஜி 7 நாடுகளின் தலைவர்கள் உக்ரைனுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்தனர்.
இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஜி-7 மாநாட்டில் காணொலி வாயிலாக இன்று கலந்துகொண்டார்.அப்போது அவர் பேசுகையில், குளிர் காலத்துக்குள் போரை முடிவுக்கு கொண்டு வாருங்கள் என வேண்டுகோள் விடுத்தார்.
ஜி7 மாநாட்டில் பேசிய உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி குலேபா கூறுகையில், ஜி-7 மாநாட்டில் ரஷியா மீது அதிகமான பொருளாதார தடைகள் விதிக்க வேண்டும். உக்ரைனுக்கு அதிக ஆயுதங்கள் அளிக்க வேண்டும். ரஷியாவின் ஏகாதிபத்தியம் தோற்கடிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.






