search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "worker arrested"

    • பெரியசாமி (வயது 36). இவர் நாமக்கல்லில் உள்ள கோழிப்பண்ணைகளில் இருந்து லாரிகள் மூலம் கோழி லோடு ஏற்றிச் செல்லும் வேலைக்கு செல்கிறார்.
    • இதனிடையே மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பெரியசாமி சேந்தமங்கலம் சாலை மேம்பாலம் அருகே தனியாக வசித்து வருகிறார்.

    நாமக்கல்:

    நாமக்கல்லை அடுத்த முத்துகாப்பட்டி சேரமாதேவி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் பெரியசாமி (வயது 36). இவர் நாமக்கல்லில் உள்ள கோழிப்பண்ணைகளில் இருந்து லாரிகள் மூலம் கோழி லோடு ஏற்றிச் செல்லும் வேலைக்கு செல்கிறார். இவரது மனைவி வனிதா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன.

    கத்திக்குத்து

    இதனிடையே மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பெரியசாமி சேந்தமங்கலம் சாலை மேம்பாலம் அருகே தனியாக வசித்து வருகிறார். தனது குழந்தைகளை அவ்வப்போது மனைவியின் வீட்டிற்கு சென்று பார்த்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் பெரியசாமி தங்கி உள்ள வீட்டிற்கு வனிதாவின் சகோதரர் செந்தில்குமரன் (40) சென்று குடும்ப பிரச்சனை குறித்து பேசி உள்ளார். இதில் இருவருக்கும் இடைேய திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    அப்போது செந்தில்குமர னின் வயிற்று பகுதியில் பெரியசாமி கத்தியால் குத்தினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    கைது

    இதையடுத்து செந்தில்குமரன் கொடுத்த புகாரின்பேரில் நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெரியசாமியை கைது செய்து நாமக்கல் கிளை சிறையில் அடைத்னர்.

    இந்த கத்திகுத்து சம்பவம் நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நித்தியானந்தம் (36) இவரது வீட்டில் தாதகாப்பட்டி மூனாங்கரடு, அம்பாள் ஏரி ரோடு 8-வது கிராஸ்பகுதியைச் சேர்ந்த மணி (24), குமார், சம்பத்குமார், சுரேஷ், ஆகியோர் கடந்த ஒரு வாரமாக பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுப்பட்டு வந்தனர்.
    • பீரோவில் இருந்த ஒரு பவுன் தங்கச் செயின் மற்றும் 1/2 பவுன் தங்க தோடு ஆகியவை காணாமல் போனது கண்டு நித்தியானந்தம் அதிர்ச்சி அடைந்தார்.

    சேலம்:

    சேலம் கிச்சிப்பாளையம் எருமாபாளையம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் நித்தியானந்தம் (36) இவரது வீட்டில் தாதகாப்பட்டி மூனாங்கரடு, அம்பாள் ஏரி ரோடு 8-வது கிராஸ்பகுதியைச் சேர்ந்த மணி (24), குமார், சம்பத்குமார், சுரேஷ், ஆகியோர் கடந்த ஒரு வாரமாக பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுப்பட்டு வந்தனர்.

    அப்போது வீட்டின் பீரோவில் இருந்த ஒரு பவுன் தங்கச் செயின் மற்றும் 1/2 பவுன் தங்க தோடு ஆகியவை காணாமல் போனது கண்டு நித்தியானந்தம் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து நித்தியானந்தம் கிச்சிபாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு நகைகளை திருடியதாக மணியை கைது செய்து அவரிடமிருந்து நகைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    • வாழப்பாடி பகுதியில் கள்ளச்சாரயம் விற்பனையை தடுக்க உரிய நடவ டிக்கை எடுக்கு மாறு போலீசாருக்கு டி.எஸ்.பி. ஹரி சங்கரி உத்தரவிட்டார்.
    • இதனையடுத்து வாழப்பாடி இன்ஸ்பெக்டர் உமாசங்கர் தலைமையிலான போலீசார் கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    வாழப்பாடி:

    வாழப்பாடி பகுதியில் கள்ளச்சாரயம் விற்பனையை தடுக்க உரிய நடவ டிக்கை எடுக்கு மாறு போலீசாருக்கு டி.எஸ்.பி. ஹரி சங்கரி உத்தரவிட்டார். இதனையடுத்து வாழப்பாடி இன்ஸ்பெக்டர் உமாசங்கர் தலைமையிலான போலீசார் கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது வாழப்பாடி அடுத்த மலை யாளப்பட்டி கிராமத்தில் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த 110 லிட்டர் சாரா யத்தை போலீசார் பறிமுதல் செய்த னர். இதை விற்பனை செய்வ தற்காக பதுக்கி வைத்திருந்த அதே பகுதியைச் சேர்ந்த தொழி லாளி நாச்சி (வயது 49) என்ப வரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோவையில் சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்தனர்.
    • 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    கோவை,

    கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சாந்திமேட்டில் உள்ள தனியார் ஓட்டல் அருகே சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதனையடுத்து பெரிய நாயக்கன் பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜா தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு கஞ்சா பதுக்கி விற்பனை செய்து கொண்டு இருந்த வாலிபரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    அவரிடம் இருந்து போலீசார் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். போலீசார வாலிபரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் கே. கவுண்டன்பாளையம் ஸ்ரீபாரதி நகரை சேர்ந்த கூலித் தொழிலாளி மாரியப்பன் (வயது 44) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • கரூர்-சேலம் சாலையில் பிள்ளைகளத்தூர் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான வாட்டர் சர்வீஸ் ஸ்டேஷன் அருகில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
    • பெட்டிக்கடையில் மதுப்பாட்டில்களை வைத்து விற்பனை செய்து வருவதாக பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    பரமத்தி வேலூர்:

    ஒடிசா மாநிலம் ஸ்ரீ சண்டன்பூர் பகுதியை சேர்ந்தவர் சுடரசன்சாகு (வயது 51). இவர் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி அருகே கரூர்-சேலம் சாலையில் பிள்ளைகளத்தூர் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான வாட்டர் சர்வீஸ் ஸ்டேஷன் அருகில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் இவர் பெட்டிக்கடையில் மதுப்பாட்டில்களை வைத்து விற்பனை செய்து வருவதாக பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பந்தப்பட்ட பெட்டி கடைக்கு சென்று சோதனை நடத்தி அவரை கைது செய்தனர். அவர் விற்பனைக்கு வைத்திருந்த 10 மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பரமத்தி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    • 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது
    • போலீசார் விசராணை

    ராணிப்பேட்டை,

    ஆற்காடு அடுத்த அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் 27 வயது பெண். இவருக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து பெற்று தாய் வீட்டில் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் இந்த பெண்ணுக்கும் திருவண்ணாமலை மாவட்டம் களம்பூர் அடுத்த ஏத்துவாம்பாடி கிராமத்தை சேர்ந்த வேல்முருகன்(28) கூலி தொழிலாளி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இளம்பெண் வீட்டில் தனியாக இருந்தார்.

    அங்கு வந்த வேல்முருகன் பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளார்.

    இதில் அந்த பெண் தற்போது 5 மாதம் கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்து அவர் வேல்முருகனை நேரில் சந்தித்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறினார்.

    இதற்கு வேல்முருகன் எனக்கும் இந்த கர்ப்பத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறி திருமண செய்ய மறுத்ததாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக அந்த பெண் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் கொடுத்தார்.

    புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஷாகின் வழக்கு பதிவு செய்து வேல்முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • பல்லடம் அருகே உள்ள பெரும்பாலி என்ற இடத்தில் குட்டை உள்ளது.
    • தீக்குளித்த அந்தப் பெண்ணை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள பெரும்பாலி என்ற இடத்தில் குட்டை உள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை அந்தக் குட்டை பகுதியில் ஒரு பெண் தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டுள்ளதாக பல்லடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடம் சென்ற போலீசார். தீக்குளித்த அந்தப் பெண்ணை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக அவர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் அவர் உயிரிழந்தார். அது குறித்து போலீசார் விசாரணை செய்தனர். அதில், தீக்குளித்த அந்த பெண், பல்லடம் அருகே உள்ள அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் மனைவி கலா(47) என்பதும், கணவர் இறந்துவிட்ட நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இவரது வீட்டுக்கு கட்டட வேலை செய்ய வந்த பெரும்பாலியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன்(46) என்ற தொழிலாளியுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. சிறிது காலம் பேசிப் பழகிய பாலசுப்பிரமணியன் கடந்த சில மாதங்களாக கலாவுடன் பேசுவதில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அவர் வசிக்கும் பெரும்பாலி வீட்டிற்கு சென்று அவரை சந்திக்க முயன்றுள்ளார். அப்போது எனக்கு குடும்பம் உள்ளது. இனிமேல் நீ என்னை சந்திக்க வர வேண்டாம் என பாலசுப்பிரமணியன் கூறியதாக கூறப்படுகிறது. இதனால் வேதனையடைந்த கலா தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதையடுத்து பாலசுப்பிரமணியனை கைது செய்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • படுகாயமடைந்த அன்பழகன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
    • மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த வாலிபரை தொழிலாளி வெட்டிக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரத்தை சேர்ந்தவர் கண்ணன் என்ற அன்பழகன்(வயது31). இவர் மீது வனவிலங்குகளை வேட்டையாடுதல், கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இது தொடர்பாக அவரை போலீசார் கைது செய்து கடந்த மாதம் சிறையில் அடைத்தனர்.

    இந்தநிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அவர் ஜாமீனில் வெளியே வந்தார். அன்பழகனுக்கும், அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி கனகராஜ் என்பவரது மனைவிக்கும் சில ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக கனகராஜ் மற்றும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அன்பழகன் ஜாமீனில் வெளியே வந்த நிலையில் கனகராஜின் மனைவி, குழந்தைகளை அழைத்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். அன்பழகனின் வீடும், கனகராஜின் அத்தை வீடும் அருகில் உள்ளன.

    நேற்று கனகராஜ் தனது அத்தை வீட்டுக்கு வந்து தங்கியிருந்தார். இது பற்றி அறிந்த கனகராஜ், அன்பழகனை கொலை செய்ய திட்டமிட்டார். நள்ளிரவில் அரிவாளுடன் சென்ற கனகராஜ் தூங்கிக்கொண்டிருந்த அன்பழகனை சரமாரியாக வெட்டினார்.

    இதில் படுகாயமடைந்த அன்பழகன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி சேத்தூர் போலீஸ் நிலையத்தில் அன்பழகனின் உறவினர்கள் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

    அன்பழகனை வெட்டிக்கொலை செய்த கனகராஜை கைது செய்தனர். மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த வாலிபரை தொழிலாளி வெட்டிக்கொன்ற சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • நாங்குநேரி அருகே உள்ள கீழக்காரங்காடு, கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 50). கூலி தொழிலாளி.
    • இவருக்கும், இவரது தம்பி மாசானம் என்ற வெள்ளப்பாண்டிக்கும் (45) குடும்ப சொத்து சம்பந்தமாக தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வருகிறது.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள கீழக்காரங்காடு, கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 50). கூலி தொழிலாளி.

    இவருக்கும், இவரது தம்பி மாசானம் என்ற வெள்ளப்பாண்டிக்கும் (45) குடும்ப சொத்து சம்பந்தமாக தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று முன் தினம் முருகன், அதே ஊரில் உள்ள தனது தாயார் நம்பிநாச்சியாரிடம் சென்று சொத்து குறித்து பேசினார். பின்னர் வீட்டை விட்டு வெளியே வந்த போது, அவரது தம்பி வெள்ளப்பாண்டிக்கும், அவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனை பார்த்த முருகனின் மனைவி பிரேமா (45) தகராறை விலக்கி விட சென்றார். அப்போது வெள்ளப்பாண்டி பிரேமாவை மண்வெட்டியால் தாக்கினார். இதையடுத்து முருகன் அவரை தடுத்தார். ஆத்திரம் அடைந்த வெள்ளப்பாண்டி முரு கனையும் மண்வெட்டியால் தலையில் தாக்கினார். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தார். இதனால் காயமடைந்த முருகன், அவரது மனைவி பிரேமா ஆகியோர் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த மோதலில் வெள்ளப்பாண்டிக்கும் காயம் ஏற்பட்டது. அவர் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் புறநோயாளியாக சிகிச்சை பெற்று திரும்பினார். இதுபற்றி முருகன் நாங்குநேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி, இது தொடர்பாக வெள்ளப்பாண்டியை கைது செய்தனர்.

    • செல்வகுமார் ஊராட்சி செயலாளரிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
    • போலீசார் வழக்குபதிவு செய்து செல்வகுமாரை கைது செய்தனர்.

    பந்தலூர்

    பந்தலூர் அருகே சேரங்கோடு ஊராட்சி மன்ற அலுவலக்கதில் ஊராட்சி செயலாளர் சஜீத் பணியில் இருந்துள்ளார். அப்போது சேரம்பாடி பகுதியை சேர்ந்த தொழிலாளியான செல்வகுமார் (வயது 50) அங்கு சென்று, ஊராட்சி செயலாளரிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் சேரம்பாடி போலீல் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தினேஸ்குமார் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து செல்வகுமாரை கைது செய்தனர்.

    • ராஜேந்திரன் ஈரோடு ரெயில் நிலையம் எதிரே உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் தனது நண்பர்களுடன் மது அருந்திய போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
    • போலீசார் ராஜேந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு ரெயில் நிலையம் எதிரே 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் இறந்து கிடப்பதாக சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்து கிடந்த நபர் ஈரோடு நாடார் மேடு பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் ராஜேந்திரன் (48) என்பதும் இவருக்கு திருமணமாகி பாக்கியலட்சுமி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது.

    ராஜேந்திரன் ஈரோடு ரெயில் நிலையம் எதிரே உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் தனது நண்பர்களுடன் மது அருந்திய போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் ராஜேந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜேந்திரனுடன் மது அருந்திய சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சமையல் தொழிலாளியான கண்ணன் என்கிற கண்ணப்பன் (45) என்பவரை பிடித்து விசாரணை நடத்தியதில், ராஜேந்திரனும், கண்ணப்பனும் நண்பர்களாக இருந்து வந்தது தெரியவந்தது.

    இந்நிலையில் நேற்று இரவு 2 பேரும் சேர்ந்து மது அருந்திய நிலையில் போதையில் அவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த கண்ணப்பன் மரக்கட்டையால் ராஜேந்திரனை தாக்கியுள்ளார். இதில் சிறிது நேரத்திலேயே ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தது தெரியவந்தது. இதையடுத்து கண்ணப்பனை சூரம்பட்டி போலீசார் கைது செய்தனர்.

    குமாரபாளையம் அருகே டிரைவரை பாட்டிலால் குத்திய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
    குமாரபாளையம்:

    குமாரபாளையம் கொத்துக்காரன்காடு பகுதியை சேர்ந்தவர் தனசேகரன் (வயது38). டிரைவர்.  அதே பகுதியை சேர்ந்தவர் மாதேஸ்(46),சுமை தூக்கும் தொழிலாளி. இருவரும் நண்பர்கள். 

    சம்பவத்தன்று  அவர்கள் தியேட்டர் பஸ் நிறுத்தம் அருகே உள்ள பாரின் வெளியில் மது குடித்தனர். அப்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. 

    இதில் ஆத்திரமடைந்த மாதேஸ், தனசேகரன் தலையில் மது பாட்டிலால் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த அவர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். 

    இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாதேஷை கைது செய்தனர்.

    ×