கோவை அருகே கஞ்சா பதுக்கி விற்ற தொழிலாளி கைது

கோவையில் சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்தனர்.1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கோவை அருகே கஞ்சா பதுக்கி விற்ற தொழிலாளி கைது
Published on

கோவை,

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சாந்திமேட்டில் உள்ள தனியார் ஓட்டல் அருகே சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

இதனையடுத்து பெரிய நாயக்கன் பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜா தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு கஞ்சா பதுக்கி விற்பனை செய்து கொண்டு இருந்த வாலிபரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

அவரிடம் இருந்து போலீசார் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். போலீசார வாலிபரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் கே. கவுண்டன்பாளையம் ஸ்ரீபாரதி நகரை சேர்ந்த கூலித் தொழிலாளி மாரியப்பன் (வயது 44) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com