ராஜபாளையம் அருகே வாலிபரை வெட்டிக்கொன்ற தொழிலாளி

படுகாயமடைந்த அன்பழகன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த வாலிபரை தொழிலாளி வெட்டிக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜபாளையம் அருகே வாலிபரை வெட்டிக்கொன்ற தொழிலாளி
Published on

ராஜபாளையம்:

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரத்தை சேர்ந்தவர் கண்ணன் என்ற அன்பழகன்(வயது31). இவர் மீது வனவிலங்குகளை வேட்டையாடுதல், கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இது தொடர்பாக அவரை போலீசார் கைது செய்து கடந்த மாதம் சிறையில் அடைத்தனர்.

இந்தநிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அவர் ஜாமீனில் வெளியே வந்தார். அன்பழகனுக்கும், அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி கனகராஜ் என்பவரது மனைவிக்கும் சில ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக கனகராஜ் மற்றும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அன்பழகன் ஜாமீனில் வெளியே வந்த நிலையில் கனகராஜின் மனைவி, குழந்தைகளை அழைத்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். அன்பழகனின் வீடும், கனகராஜின் அத்தை வீடும் அருகில் உள்ளன.

நேற்று கனகராஜ் தனது அத்தை வீட்டுக்கு வந்து தங்கியிருந்தார். இது பற்றி அறிந்த கனகராஜ், அன்பழகனை கொலை செய்ய திட்டமிட்டார். நள்ளிரவில் அரிவாளுடன் சென்ற கனகராஜ் தூங்கிக்கொண்டிருந்த அன்பழகனை சரமாரியாக வெட்டினார்.

இதில் படுகாயமடைந்த அன்பழகன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி சேத்தூர் போலீஸ் நிலையத்தில் அன்பழகனின் உறவினர்கள் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

அன்பழகனை வெட்டிக்கொலை செய்த கனகராஜை கைது செய்தனர். மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த வாலிபரை தொழிலாளி வெட்டிக்கொன்ற சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com