மது விற்ற வெளிமாநில தொழிலாளி கைது

கரூர்-சேலம் சாலையில் பிள்ளைகளத்தூர் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான வாட்டர் சர்வீஸ் ஸ்டேஷன் அருகில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். பெட்டிக்கடையில் மதுப்பாட்டில்களை வைத்து விற்பனை செய்து வருவதாக பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
மது விற்ற வெளிமாநில தொழிலாளி கைது
Published on

பரமத்தி வேலூர்:

ஒடிசா மாநிலம் ஸ்ரீ சண்டன்பூர் பகுதியை சேர்ந்தவர் சுடரசன்சாகு (வயது 51). இவர் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி அருகே கரூர்-சேலம் சாலையில் பிள்ளைகளத்தூர் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான வாட்டர் சர்வீஸ் ஸ்டேஷன் அருகில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

இந்நிலையில் இவர் பெட்டிக்கடையில் மதுப்பாட்டில்களை வைத்து விற்பனை செய்து வருவதாக பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பந்தப்பட்ட பெட்டி கடைக்கு சென்று சோதனை நடத்தி அவரை கைது செய்தனர். அவர் விற்பனைக்கு வைத்திருந்த 10 மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பரமத்தி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com