என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "white paper"
- "உண்மையை மூடி மறைத்து இதனை எப்படியாவது மடைமாற்றி திசை திருப்பி விடலாம்" என நினைக்கும் அரசுக்கு சவால் விடுகிறேன்.
- எதிர்க்கட்சியின் ஆக்கப்பூர்வமான கருத்துகளையும் கேட்டு உயிரைக் காக்கின்ற பணிகளில் ஈடுபட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
அதிமுக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருப்பதாவது,
கருணாபுரம் கள்ளச்சாராய மரணச் செய்தியறிந்தவுடனே, கடந்த 20-ம் தேதி காலை கள்ளக்குறிச்சி விரைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து, அவர்களுக்கு அளிக்கப்படக்கூடிய சிகிச்சை முறைகளை கேட்டறிந்தேன்.
34 உயிர்களை இழந்திருந்த அந்த நிமிடம்வரை, "மெத்தனால் விஷ முறிவு மருந்தான உயிர்க் காக்கும் Fomepizole மருத்துவமனையில் இருப்பு இல்லை" என்கிற வேதனையை செய்தியாளர்களிடத்தில் பகிர்ந்திருந்தேன். இதனை, அங்கு பணியில் இருந்த மருத்துவர்களே கவலையுடன் தெரிவித்தனர்.
நான் சுட்டிக்காட்டிய பிறகே நேற்று (21ம் தேதி) அவசர அவசரமாக விஷ முறிவு மருந்தான Fomepizole ஆர்டர் செய்யப்பட்டு,
50-க்கும் மேற்பட்ட உயிர்களை இழந்தபிறகு இன்று (22ம் தேதி) மும்பையில் இருந்து தருவிக்கப்பட்ட Fomepizole மருந்துகள் விழுப்புரம் மற்றும் சேலம் அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டு இருக்கின்றன.
"உண்மையை மூடி மறைத்து இதனை எப்படியாவது மடைமாற்றி திசை திருப்பி விடலாம்" என நினைக்கும் அரசுக்கு சவால் விடுகிறேன்.
ஜூன் 20-ம் தேதி அரசு மருத்துவமனைகளில் எவ்வளவு "Fomepizole" மருந்துகள் கையிருப்பில் இருந்தன என்பதற்கான ஆதாரத்தை வெளியிட தயாரா?
#கருணாபுரம் கள்ளச்சாராய மரணச் செய்தியறிந்தவுடனே, கடந்த 20-ம் தேதி காலை #கள்ளக்குறிச்சி விரைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து, அவர்களுக்கு அளிக்கப்படக்கூடிய சிகிச்சை
— Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@EPSTamilNadu) June 22, 2024
முறைகளை கேட்டறிந்தேன்.
34 உயிர்களை இழந்திருந்த அந்த நிமிடம்வரை, "மெத்தனால் விஷ முறிவு மருந்தான… pic.twitter.com/VuIak4LOBu
ஜூன் 20 உயிர்க் காக்கும் விஷ முறிவு மருந்தான Fomepizole பயன்படுத்தப்பட்டிருந்தால் அதற்கான Patient Case Sheet, Hospital Drug Inventory records மற்றும் TNMSC கையிருப்பு பட்டியலை வெள்ளை அறிக்கையாக வெளியிட தயாரா?
'ஒவ்வொரு நொடியும் ஓர் உயிரைக் காக்க போர்க்கால சிகிச்சை' அளிக்கப்பட வேண்டிய பொன்னான நேரத்தை வீணடித்துவிட்டு, 54 உயிர்களை இழந்த பிறகும்; வீண் விவாதத்தை தொடராமல், எதிர்க்கட்சியின் ஆக்கப்பூர்வமான கருத்துகளையும் கேட்டு உயிரைக் காக்கின்ற பணிகளில் ஈடுபட வேண்டுமென வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.
- பாராளுமன்றத்தில் காங்கிரஸ் ஆட்சி, மோடி ஆட்சி கால பொருளாதரம் குறித்து வெள்ளை அறிக்கை.
- உலகளாவிய பொருளாதார நெருக்கடியை உங்களால் கையாள முடியவில்லை- என நிர்மலா சீதாராமன் விமர்சனம்.
பிரதமர் மோடி கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பதவி ஏற்றார். அதற்கு முன்னதாக இந்தியாவின் பொருளாதார நிலை, பிரதமர் மோடி பதவி ஏற்றபின் இந்தியாவின் பொருளாதாரத்துடன் ஒப்பிட்டு பாராளுமன்றத்தில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்தது.
அதன்படி நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளை அறிக்கையை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இன்று அவர் மக்களவைவில் வெள்கை அறிக்கை தொடர்பாக பேசினார். அப்போது நீங்கள் (UPA- காங்கிரஸ் ஆட்சி காலத்தில்) நிலக்கரியை சாம்பலாக்கி விட்டீர்கள். நாங்கள் நிலக்கரியை வைரமாக்கியுள்ளோம். நிலக்கரி ஊழல் தொடர்பான சிஏஜி அறிக்கையில், இந்தியாவுக்கு ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
உலகளாவிய பொருளாதார நெருக்கடியை உங்களால் கையாள முடியவில்லை. அதை எப்படி கையாள வேண்டும் என்று இப்போது பாடம் எடுக்கிறார்கள். 2008 பொருளாதார நெருக்கடி கொரோனா நெருக்கடி காலம் போன்றது போல் தீவிரமாக இல்லை. காங்கிரஸ் அரசாங்கம் நேர்மையாக கையாண்டிருக்க வேண்டும். நாட்டின் நலனை பாதுகாக்க ஒன்றும் செய்யவில்லை. ஆனால் ஊழல் மேல் ஊழல் தொடர்ந்தது. இப்படி பட்ட சூழ்நிலையில்தான் ஆட்சியில் இருந்து வெளியேறினார்கள்" என்றார்.
- பாராளுமன்ற கூட்டத்தொடர் நாளை மறுதினத்துடன் முடிவடைகிறது.
- நாட்டின் பொருளாதாரம் குறித்த வெள்ளை அறிக்கையை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
புதுடெல்லி:
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளையுடன் முடிவடைய இருந்த நிலையில், மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான 2014-க்கு முந்தைய மத்திய அரசின் 10 ஆண்டு காலத்தில் இந்தியாவின் பொருளாதார நிலையுடன் தற்போது மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியில் இந்தியாவின் பொருளாதாரத்தை ஒப்பிடும் வகையில் மத்திய அரசு வெள்ளை அறிக்கை கொண்டு வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாராளுமன்றத்தில் இன்று நாட்டின் பொருளாதாரம் குறித்த வெள்ளை அறிக்கையை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். ஆங்கிலம், இந்தி ஆகிய 2 மொழிகளில் வெள்ளை அறிக்கையை அவர் தாக்கல் செய்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:
2014-ம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது பொருளாதாரம் மிகவும் பலவீனமாக இருந்தது.
டெலிகாம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் மிகவும் மோசமாக இருந்தது.
வாராக்கடன் அதிகமாக இருந்ததால் வங்கிகள் பலவீனமாக இருந்தன.
காமன்வெல்த் போட்டியில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. எதிர்கால வளர்ச்சி வாய்ப்புகளை அதிகரிக்க உள்கட்டமைப்பில் காங்கிரஸ் அரசு முதலீடு செய்யவில்லை.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் முதலீடுகள் குறைந்த அளவிலேயே இருந்தன.
முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் விட்டுச்சென்ற சவால்களை கடந்த 10 ஆண்டுகளில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வெற்றிகரமாக சமாளித்தது.
இந்தியாவை நிலையான வளர்ச்சிப் பாதையில் வைக்க கடினமான முடிவுகளை எடுத்துள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
- நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மக்களவையில் வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்தார்
புதுடெல்லி:
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளையுடன் முடிவடைய இருந்த நிலையில், மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அப்போது காங்கிரஸ் தலைமையிலான 2014-க்கு முந்தைய மத்திய அரசின் 10 ஆண்டு காலத்தில் இந்தியாவின் பொருளாதார நிலையுடன் தற்போது மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியில் இந்தியாவின் பொருளாதாரத்தை ஒப்பிடும் வகையில் மத்திய அரசு வெள்ளை அறிக்கை கொண்டு வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்தார்.
- காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசின் பொருளாதாரத்துடம் ஒப்பிடும் வகையில் வெள்ளை அறிக்கை.
- பா.ஜனதா வெள்ளை அறிக்கை கொண்டு வரும் நிலையில், போட்டியாக கருப்பு அறிக்கை கொண்டு வர முடிவு.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளையுடன் முடிவடைய இருந்த நிலையில், மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அப்போது காங்கிரஸ் தலைமையிலான 2014-க்கு முந்தைய மத்திய அரசின் 10 ஆண்டு காலத்தில் இந்தியாவின் பொருளாதார நிலையுடன் தற்போது மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியில் இந்தியாவின் பொருளாதாரத்தை ஒப்பிடும் வகையில் மத்திய அரசு வெள்ளை கொண்டு வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இரு அவைகளிலும் வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்ய இருக்கிறார். அதன்மீது விவாதம் நடைபெற்று வாக்கெடுப்பு நடத்தப்படும்.
இந்த நிலையில் காங்கிரஸ் கருப்பு அறிக்கை கொண்டு வர இருப்பதாக தகவல் வெளியாகியுளு்ளது. மோடியின் 10 ஆண்டு அரசு தொடர்பாக கருப்பு அறிக்கையை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கொண்டு வருவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் சனிக்கிழமை (பிப்ரவரி 10-ந்தேதி) பாராளுமன்ற இரு அவைகளிலும் காரசார விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இந்தியாவின் பொருளாதார நிலை எப்படி இருந்தது.
- பிரதமர் மோடி ஆட்சி அமைந்ததும் பொருளாதார நிலை எப்படி மாற்றத்தை சந்தித்தது குறித்து வெள்ளை அறிக்கை.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 31-ந்தேதி தொடங்கியது. அன்றைய தினம் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். அடுத்த நாள் பிப்ரவரி 1-ந்தேதி மந்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் மத்திய இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அதனைத் தொடர்ந்து கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் பிரதமர் மோடி ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் விவாதங்களுக்கு பதில் அளிக்கும் விதமாக மக்களவையில் பேசினார். இன்று மாநிலங்களவையில் பேசுகிறார். நாளைமறுநாள் (பிப்ரவரி 9-ந்தேதி) வெள்ளிக்கிழமையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடைய இருந்தது.
இந்த நிலையில் பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி, 2014-க்கு முன் இந்திய பொருளாதாரம், மோடி தலைமையிலான பா.ஜனதா அமைந்த பின் 2014-க்குப்பின் நாட்டின் பொருளாதாரம் தொடர்பான ஒப்பீடு குறித்து வெள்ளை அறிக்கை மக்களைவில் தாக்கல் செய்யப்படும் என அறிவித்தார்.
இந்த நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 9-ந்தேதி முடிவடையும் நிலையில், மேலும் ஒருநாள் நீட்டிக்கப்பட்டு 10-ந்தேதி வரை நடைபெறும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இருந்த நாட்டின் மோசமான பொருளாதார நிலை, பிரதமர் மோடி தலைமையிலான தற்போதைய அரசு எப்படி திருப்பத்தை கொண்டு வந்தது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்ய இருக்கிறார். இரு அவைகளிலும் வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்ய இருக்கிறார்.
பொதுவாக பாராளுமன்றத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அலுவல் பணிகள் செயல்படாது. இருந்த போதிலும் சனிக்கிழமைகளில் நடைபெற்ற நிகழ்வுகள் உள்ளன.
- மொத்த உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சி அடைந்துள்ளது.
- பயங்கரவாதமும், கள்ள நோட்டுகளும் அதிகரித்துள்ளன.
புதுடெல்லி :
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் 6-ம் ஆண்டு நிறைவையொட்டி, காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் கவுரவ் வல்லப் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
பணமதிப்பிழப்பு மூலமாக சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய, திட்டமிட்ட கொள்ளை இதே நாளில் அரங்கேற்றப்பட்டது. 6 ஆண்டுகள் ஆன நிலையில், பணமதிப்பிழப்பின் தாக்கம் குறித்து பிரதமர் மோடி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
ஏனென்றால், நாம் என்ன சாதித்தோம், என்ன இழந்தோம் என்று தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்தது. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன.
கருப்பு பணம் வெளிவரும் என்று சொன்னீர்கள். ஆனால், வறுமைதான் வந்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சி அடைந்துள்ளது. பயங்கரவாதமும், கள்ள நோட்டுகளும் அதிகரித்துள்ளன.
மொத்தத்தில், இது பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுத்த காவிய தோல்வி.
இவ்வாறு அவர் கூறினார்.
தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் அரிசி உற்பத்தி குறித்து மாநில அரசு தரும் புள்ளி விவரங்கள் நம்பகத்தன்மை வாய்ந்தவைதானா என்ற பலத்த சந்தேகம் பல தரப்பினரிடமும் ஏற்பட்டிருக்கிறது. காரணம், அரிசி உற்பத்தி குறித்து மாநில அரசு தந்துள்ள புள்ளி விவரத்திற்கும், இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரத்திற்கும் இடையிலான பெருமளவு வேறுபாடுகள் தான்.
கடந்த 2013-2014 மற்றும் 2014-2015-ம் ஆண்டுகளில் அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் நெல் விளைச்சலில் ‘பம்பர் அறுவடை’ நடந்ததாக ஜெயலலிதா தலைமையில் இருந்த அ.தி.மு.க. அரசு ஊரெங்கும் தம்பட்டம் அடித்துக்கொண்டது. அதன் புள்ளி விவரப்படி, 2013-2014-ம் ஆண்டில் அரிசி உற்பத்தி 71.15 லட்சம் டன்களாகும். அதுபோல 2014-2015-ம் ஆண்டில் அரிசி உற்பத்தி 79.49 லட்சம் டன்கள் என தமிழக அரசு புள்ளிவிவரம் தந்துள்ளது.
அதே நேரத்தில், இந்த 2 ஆண்டு காலத்திற்கான அரிசி உற்பத்தி குறித்து, இந்திய ரிசர்வ் வங்கி 2018-ம் ஆண்டு மே மாதம் வெளியிட்டுள்ள இந்திய மாநிலங்கள் குறித்த புள்ளி விவரங்கள் தொடர்பான கையேட்டில், 2013-2014-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் அரிசி உற்பத்தி 53.49 லட்சம் டன்கள்தான் என்றும், 2014-2015-ம் ஆண்டில் அரிசி உற்பத்தி 57.27 லட்சம் டன்கள்தான் என்றும் தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் பார்க்கும்போது, 2013-2014-ம் ஆண்டின் அரிசி உற்பத்தியை ஏறத்தாழ 18 லட்சம் டன்களும், 2014-2015-ம் ஆண்டின் அரிசி உற்பத்தியை ஏறத்தாழ 22 லட்சம் டன்கள் அளவுக்கும் தமிழ்நாடு அரசின் புள்ளி விவரம் செயற்கையாக உயர்த்திக் காட்டியிருப்பது தெரியவருகிறது.
மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் துறை தந்த புள்ளி விவரங்களின் அடிப்படையில், தனது கையேட்டில் தகவல்கள் பதிப்பிக்கப்பட்டிருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவிக்கின்ற நிலையில், மாநிலத்தை ஆளும் அ.தி.மு.க. அரசு தந்துள்ள புள்ளி விவரங்கள் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறிக்குள்ளாகிறது.
காவிரி டெல்டா மாவட்டங்கள் உள்பட தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் அ.தி.மு.க ஆட்சியில் அதன் பிற்போக்குத்தனமான அணுகுமுறையினால், விவசாயிகளின் தற்கொலையும் பட்டினிச் சாவுகளும் அதிகரித்து வரும் நிலையில், அரிசி உற்பத்தியில் ‘பம்பர் சாதனை’ படைத்ததாகக் காட்டிக்கொண்டு, உண்மையை மறைக்க இப்படி இட்டுக்கட்டி பொய்யான புள்ளி விவரங்களை ஆட்சியாளர்கள் வழங்குகிறார்களோ என்ற ஐயமும் எழுகிறது.
அ.தி.மு.க. ஆட்சியில் சட்டமன்றம் தொடங்கி மக்கள் மன்றங்கள் வரை சரியான புள்ளிவிவரங்கள் தரப்படுவதில்லை. சில தருணங்களில், நீதிமன்றத்திலேயே திசைதிருப்பக்கூடிய வகையில் தவறான புள்ளிவிவரங்களை அளித்து குட்டுப்பட்டதுடன், அதன் காரணமாக தமிழகத்தின் உரிமைகள் பறிபோனதும் உண்டு.
முழுமையான விவரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் எனப் பலமுறை வலியுறுத்தியபோதும், எந்த ஒரு துறை சார்பாகவும் வெள்ளை அறிக்கை வெளியிட அ.தி.மு.க. அரசு தயாராக இல்லை. அதற்கு மாறாக, அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் தருகின்ற கருப்புப் புள்ளிவிவரங்கள் அனைத்தும் அரிசி உற்பத்தி போல, மூட்டை மூட்டையாகப் பொய் சொல்லும் வகையில்தான் அமைந்துள்ளனவோ? மக்களை ஏமாற்றுவதற்காகவே புள்ளி விவரங்களை ஆட்சியாளர்கள் வெளியிடுகிறார்களோ?.
ஜனநாயக மாண்புகளைக் குழிதோண்டிப் புதைக்கும் அ.தி.மு.க. ஆட்சியாளர்கள், தங்களை ஆட்சியில் அமர்த்திய மக்களிடம் பொய்யையும், புரட்டையும், புளுகையும் காட்டி, இதுபோல தொடர்ந்து ஏமாற்ற நினைத்தால், அந்த மக்களே சரியான நேரத்தில் தக்க பாடம் புகட்டுவார்கள் என எச்சரிப்பதுடன், அரிசி உற்பத்தி தொடர்பான முழுமையான உண்மையான வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்