search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Transgenders"

    • தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் திருநங்கைகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
    • பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

    தேனி:

    தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் திருநங்கைகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது.

    முகாமில் 100-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பு களில் தங்களுக்கு வீடு ஒதுக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டது. இதில் 40 விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து, பரிசீலனை க்காக அனுப்பி வைக்க ப்பட்டுள்ளது.

    மேலும் வாக்காளர் அடையாள அட்டைகள் இல்லாத நபர்களுக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்கல் , திருத்தம் தொடர்பான படிவங்கள் வழங்கப்பட்டது.

    மேலும் கல்வி கடன் வேண்டியும், அடையாள அட்டை வேண்டியும், சுய தொழில் தொடங்க கடன் வேண்டியும் திருநங்கை அடையாள அட்டையில் முகவரி மாற்றம் செய்து தரக்கோருதல் என பல்வேறு விதமான கோரிக்கை அடங்கிய மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் வழங்கினர்.

    பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, முன்னோடி வங்கி மேலாளர் மோகன் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • திருநங்கைகளின் மேம்பாட்டிற்காக கேரள அரசு பல சிறப்பான பணிகளை செய்து வருகிறது.
    • தாழ்த்தப்பட்ட சமூகத்தின் முன்னேற்றத்திற்காக மாநில அரசு பெரும் முயற்சிகளை எடுத்து வருகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் நர்சிங் படிப்புகளில் திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கேரள மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருநங்கைகளின் மேம்பாட்டிற்காக கேரள அரசு பல சிறப்பான பணிகளை செய்து வருகிறது. அதன்படி நர்சிங் துறையில் திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு இருக்கிறது. பி.எஸ்.சி. நர்சிங் படிப்பில் ஒரு இடமும், ஜெனரல் நர்சிங் படிப்பில் ஒரு இடமும் ஒதுக்கப்படும்.

    தாழ்த்தப்பட்ட சமூகத்தின் முன்னேற்றத்திற்காக மாநில அரசு பெரும் முயற்சிகளை எடுத்து வருகிறது. இத்தகைய முயற்சிகளின் ஒரு பகுதியே செவிலியர் துறையில் திருநங்கைகளுக்கான இடஒதுக்கீடு. செவிலியர் துறையில் திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு அறிமுகப்படுத்துவது வரலாற்றிலேயே இதுவே முதல் முறை.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • பயணிகளிடம் ஆபாசமாக பேசி இடையூறு செய்வதாக அடிக்கடி புகார்கள் வந்தவாறு இருந்தது.
    • தொடர்ந்து புகார்கள் வரும் பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து அனுப்பினார்.

    சென்னை :

    சென்னை ரெயில்வே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ரெயில் நிலையங்கள் மற்றும் ரெயில்களில் திருநங்கைகள் பயணிகளிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்வதாகவும், பயணிகளிடம் ஆபாசமாக பேசி இடையூறு செய்வதாகவும் ரெயில்வேயின் உதவி மையத்துக்கு அடிக்கடி புகார்கள் வந்தவாறு இருந்தது.

    இந்த நிலையில், கடந்த மாதம் 22-ந்தேதி வியாசர்பாடி அருகே பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் சிக்னலில் நின்றபோது ரெயில் பயணியிடம் அடையாளம் தெரியாத 2 திருநங்கைகள் ரூ.15 ஆயிரத்தை பறித்துக்கொண்டு ஓடினர். இதுகுறித்து, ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், திருநங்கைகளின் சங்க நிர்வாகிகள் ஜெயா, சுதா மற்றும் சகிதா ஆகியோரை ரெயில்வே போலீஸ் எஸ்.பி.பொன்ராமு நேற்று நேரில் அழைத்து பேசினார். அப்போது சங்க உறுப்பினர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கி இனிவரும் காலங்களில் இதுபோன்ற புகார்கள் வராத வகையில் பார்த்துக்கொள்ள வலியுறுத்தினார். தொடர்ந்து புகார்கள் வரும் பட்சத்தில் அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து அனுப்பினார்.

    • திருநங்கைகள், திருநம்பிகளை சமமாக நடத்த வேண்டும் என்று நீதிபதி கூறினார்.
    • பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் கண்டாங்கிபட்டி ஊராட்சி கூட்டுறவுப்பட்டி கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் மனித கடத்தில் மற்றும் வணிக ரீதியில் பாலியல் சுரண்டலால் பாதிக்கப்படும் நபர்களுக்கான இழப்பீடு குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலா ளர்-சார்பு நீதிபதி பரமேசுவரி தலைமையில் நடந்தது.

    இதில் அவர் பேசுகையில், பள்ளி மாணவர்களுக்கு குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், குடும்ப பெண்கள் பாதுகாப்பு குறித்தும், பாலியல் சுரண்டலால் பாதிக்கப்படும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான திட்டங்கள் குறித்தும் விளக்கினார். திருநங்கை கள், திருநம்பிகள் ஆகியோர் சமமாக நடத்தப்பட்ட வேண்டும் என்று பள்ளி மாணவர்கள், பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் பேசினார்.

    இதில் சட்ட பணிகள் ஆணைக்குழு வக்கீல் கோதண்டராமன், ஊராட்சி மன்ற தலைவர் மந்தகாளை, தலைமை ஆசிரியர் பாக்கியலட்சுமி மற்றும் பொதுமக்கள் பேசினர். இந்த முகாமில் பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    • திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ. 300 கோடியில் பல்வேறு திட்டப்பணிகள் தொடங்கப்பட உள்ளது.
    • சூரசம்காரம் நடைபெறக்கூடிய நாட்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ. 300 கோடியில் பல்வேறு திட்டப்பணிகள் தொடங்கப்பட உள்ளது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக நாளை மறுநாள் (28-ந்தேதி) தொடங்கி வைக்கிறார்.

    இந்நிலையில் மெகா திட்டப்பணிகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள், அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    கண்காணிப்பு காமிரா

    மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி போக்குவரத்து மண்டலங்களிலிருந்து இருந்து கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகிறது. குலசேகரன்பட்டினத்தை சுற்றி 48 இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் அமைக்கப்பட்டு பக்தர்கள் பாதுகாப்பு குறித்து கண்காணிக்கப்படும்.

    சூரசம்காரம் நடைபெறக்கூடிய நாட்களில் 2 ஆயிரத்தி ற்கும் மேற்பட்ட காவலர்கள் மற்றும் ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

    ஆதரவற்றவர்கள்

    தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்க ப்பட்டு மனநலம் பாதிக்கப்ப ட்டவர்கள், ஆதரவற்றவர்கள் மீட்கப்பட்டு வருகிறார்கள்.

    ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், கோவில்களில் உள்ள ஆதரவற்றவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு காப்பகங்களில் சேர்த்து பராமரிக்கப்படுவார்கள்.

    திருச்செந்தூர் கோவிலில் பக்தர்களிடம் திருநங்கைகள் அநாகரிகமான முறையில் யாசகம் பெற்று வருவதாக தொடர்ந்து புகார்கள் வருகிறது. அந்த வகையில் திருநங்கைகள் தனியாக தொழில் தொடங்கவும் சொந்தகாலில் நிற்கவும் அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திருநங்கைகள் தொழில் தொடங்கி சொந்தக்காலில் நிற்பதற்கான வழிமுறைகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.

    அது போல் இங்கு யாசகம் பெறும் திருநங்கைகளை கணக்கெடுத்து அவர்கள் சொந்தக்காலில் நிற்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    • ராமநாதபுரம் அருகே பால்குடம் எடுத்து திருநங்கைகள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    • முத்துமாரி அம்மனுக்கு முதன் முறையாக முளைக்கொட்டு திருவிழாவை கோலாகலமாக நடத்தி மகிழ்ந்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே மாடக்கொட்டான் தில்லை நாயகபுரம் கிராமத்தில் முன் மும்தாஜ் என்ற திருநங்கை வீடு உள்ளது. இந்த வீட்டில் 15 திருநங்கைகள் வசித்து வருகின்றனர்.

    இவர்கள் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கவும், நாட்டு மக்கள் நோய் நொடியின்றி வாழவும் தங்களது பகுதியில் மணலில் முத்துமாரியம்மன் கோவில் அமைத்து முளைப்பாரித் திருவிழா நடத்த முடிவு செய்தனர்.

    அதன்படி முதலாம் ஆண்டாக முளைப்பாரித் திருவிழாவை நடத்தினர். இதையொட்டி காப்புக்கட்டி விரதம் இருந்து வந்தனர். தினமும் கோவில் முன்பு கும்மி கொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்தனர்.

    இந்த நிலையில் திருநங்கைகள் மாடக்கொட்டான் பகுதியில் இருந்து 2 கி.மீ. தூரம் பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    இந்த ஊர்வலத்தில் சென்னை, பெங்களூரு, கோவை, திருப்புவனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த 100-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டனர். முளைப்பாரி களை ஊர்வலமாக சுமந்து முத்துமாரியம்மன் கோவிலுக்கு எடுத்துச் சென்று சிறப்பு பூஜை செய்தனர்.

    அதனையடுத்து முளைப்பாரிகளை அங்குள்ள காட்டு ஊரணியில் கரைத்தனர். கடந்த ஒரு வார காலமாக பல்வேறு விதமான பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் திருநங்கைகள் பல்வேறு அபிஷேக ஆராதனை நடத்தி முத்துமாரி அம்மனுக்கு முதன் முறை யாக முளைக்கொட்டு திரு விழாவை கோலாகலமாக நடத்தி மகிழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • திருநங்கைகள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • கருத்து வேறுபாடு காரணமாக கணவன்-மனைவி பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள சோலைசேரியை சேர்ந்தவர் ஐவராஜா (வயது28). அவர் கடையநல்லூரை சேர்ந்த திருநங்கை ஹன்சிகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    இருவரும் குடும்பம் நடத்தி வந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக ஐவராஜா சொந்த ஊருக்கு வந்து விட்டார். இந்த நிலையில் அவரை பார்ப்பதற்காக ஹன்சிகா மற்றும் திருநங்கைகள் பிருந்தா, முகிலா, செல்லா, தீபா ஆகியோர் சோலைசேரிக்கு வந்தனர்.

    அப்போது ஐவராஜாவின் குடும்பத்தினருக்கும், திருநங்கைகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக வெடித்தது. இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.

    இந்த சம்பவம் குறித்து சேத்தூர் புறக்காவல் சப்-இன்ஸ்பெக்டர் லவகுசா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    சாலையோரமாக நின்று பாலியல் தொழிலுக்கு அழைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருநங்கைகளுக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
    சென்னை:

    நுங்கம்பாக்கம் நெல்சன் மாணிக்கம் ரோடு மற்றும் வள்ளுவர் கோட்டம் பகுதியில் இரவு நேரங்களில் திருநங்கைகள் சாலையோரமாக அணி வகுத்து நிற்பார்கள்.

    அப்போது அந்த வழியாக கார், மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்களை அவர்கள் பாலியல் தொழிலுக்கு அழைப்பதாக நீண்ட நாட்களாகவே குற்றச்சாட்டு இருந்து வந்தது.

    இதனை கட்டுப்படுத்த போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன், கூடுதல் கமி‌ஷனர் சாரங்கன் ஆகியோர் உத்தரவிட்டனர்.

    இதனை தொடர்ந்து இணை ஆணையர் அன்பு மேற்பார்வையில் திருநங்கைகளை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

    சூளைமேடு பஜனை கோவில் தெருவில் உள்ள திருமண மண்டபத்தில் இது தொடர்பான கூட்டம் நடைபெற்றது. திருவல்லிக்கேணி துணை கமி‌ஷனர் செல்வநாகரத்தினம், நுங்கம்பாக்கம் உதவி கமி‌ஷனர் முத்துவேல் பாண்டி ஆகியோர் இதில் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் சுமார் 100 திருநங்கைகள் கலந்து கொண்டனர். அப்போது சாலையோரமாக நின்று பாலியல் தொழிலுக்கு அழைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர். இதற்கு மாற்றாக உங்களுக்கு வேறு வேலை வாங்கி தருகிறோம் என்று திருநங்கைகளிடம் எடுத்துக் கூறப்பட்டது.

    அழகு கலை நிபுணராக, ஓட்டல் வரவேற்பாளராக வேலை வாங்கி தருவதற்கு தயாராக இருப்பதாக துணை கமி‌ஷனர் செல்வ நாகரத்தினம் கூறினார். இதனை ஏற்றுக் கொண்ட திருநங்கைகள் ஒன்று கூடி பேசி முடிவெடுப்பதாக கூறினர்.

    இந்த கூட்டத்தில் பங்கேற்ற திருநங்கைகளில் பலர் என்ஜினீயரிங் முடித்திருந்தனர். எம்.பி.ஏ., எம்.ஏ., எம்.எஸ்சி., பி.எஸ்.சி., டிப்ளமோ படிப்புகளை முடித்துள்ளனர். இவர்களில் பலர் நிறுவனங்களில் வேலையும் செய்து வருகின்றனர்.

    இது தொடர்பாக 15 நாள் கழித்து மீண்டும் ஒரு கூட்டம் நடத்துவதற்கும் போலீசார் முடிவு செய்துள்ளனர். #Tamilnews
    கேரளாவில் கல்வி பயிலும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உணவுடன் கூடிய இலவச தங்கும் விடுதிகளை அமைக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
    திருவனந்தபுரம் :

    மாற்று பாலினத்தவர்களுக்கு என பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை கேரள அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக  இந்தியாவிலேயே முதல் மாநிலமாக படிக்கும் மாற்று பாலினத்தவர்களுக்கு உணவுடன் கூடிய இலவச தங்கும் விடுதிகளை அமைத்துக்கொடுக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

    மாற்று பாலினத்தவர்களுக்கு என ‘சமன்வாயா’ எனும் சிறப்பு கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கல்வி திட்டத்தில் சேர்ந்து பயிலும் மாற்று பாலினத்தவர்களுக்கு உணவுடன் கூடிய தங்கும் விடுதி அமைக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா மற்றும் ஆலப்புழா உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இந்த தங்கும் விடுதிகள் அமைக்கப்பட உள்ளன.

    “தங்கும் விடுதி அல்லது வாடகை வீடுகள் போன்றவைகளில் வசிக்க மூன்றாம் பாலினத்தவர்கள் எனும் ஒரே காரணத்திற்காக அவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இதனால், அவர்கள் கல்வி பயில ஆர்வம் காட்டுவதில்லை. எனவே, உணவும் தங்கும் இடமும் அவர்கள் கல்வி கற்க ஒரு தடையாக இருக்க கூடாது என்பதால் இத்திட்டம் தொடங்கப்பட உள்ளது’’ என அம்மாநில கல்வித்துறை இயக்குனர் பி.எஸ்.ஸ்ரீகலா தெரிவித்துள்ளார்.

    சிறப்பு கல்வி திட்டத்தின் கீழ் நான்காம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை கல்வி பயிலும் மூன்றாம் பாலின மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகையும் , 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,250 உதவித்தொகையாக வழங்கப்ப உள்ளது.
    ×