search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Collector interview"

    • திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ. 300 கோடியில் பல்வேறு திட்டப்பணிகள் தொடங்கப்பட உள்ளது.
    • சூரசம்காரம் நடைபெறக்கூடிய நாட்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ. 300 கோடியில் பல்வேறு திட்டப்பணிகள் தொடங்கப்பட உள்ளது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக நாளை மறுநாள் (28-ந்தேதி) தொடங்கி வைக்கிறார்.

    இந்நிலையில் மெகா திட்டப்பணிகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள், அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    கண்காணிப்பு காமிரா

    மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி போக்குவரத்து மண்டலங்களிலிருந்து இருந்து கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகிறது. குலசேகரன்பட்டினத்தை சுற்றி 48 இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் அமைக்கப்பட்டு பக்தர்கள் பாதுகாப்பு குறித்து கண்காணிக்கப்படும்.

    சூரசம்காரம் நடைபெறக்கூடிய நாட்களில் 2 ஆயிரத்தி ற்கும் மேற்பட்ட காவலர்கள் மற்றும் ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

    ஆதரவற்றவர்கள்

    தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்க ப்பட்டு மனநலம் பாதிக்கப்ப ட்டவர்கள், ஆதரவற்றவர்கள் மீட்கப்பட்டு வருகிறார்கள்.

    ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், கோவில்களில் உள்ள ஆதரவற்றவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு காப்பகங்களில் சேர்த்து பராமரிக்கப்படுவார்கள்.

    திருச்செந்தூர் கோவிலில் பக்தர்களிடம் திருநங்கைகள் அநாகரிகமான முறையில் யாசகம் பெற்று வருவதாக தொடர்ந்து புகார்கள் வருகிறது. அந்த வகையில் திருநங்கைகள் தனியாக தொழில் தொடங்கவும் சொந்தகாலில் நிற்கவும் அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திருநங்கைகள் தொழில் தொடங்கி சொந்தக்காலில் நிற்பதற்கான வழிமுறைகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.

    அது போல் இங்கு யாசகம் பெறும் திருநங்கைகளை கணக்கெடுத்து அவர்கள் சொந்தக்காலில் நிற்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    ×