search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நேர்த்திக்கடன்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஒன்றாவது வயதுவரை குழந்தை இறைவனின் சொத்து.
    • எந்த ஒரு பொருளின் மீதும் பற்று இருக்காது.

    ஆண்டவனின் சொத்தை நமது சொத்தாக அங்கீகரித்துக் கொள்ளும் நிகழ்வு அது. ஒன்றாவது வயதுவரை அந்த குழந்தை இறைவனின் சொத்து. ஒரு வயதிற்கு உட்பட்ட கைக்குழந்தைகள் உறங்கும் போது சிரிப்பதை காணலாம். அவர்களது கனவில் கடவுள் வந்து விளையாட்டு காட்டுவதாக வீட்டுப் பெரியவர்கள் சொல்வார்கள். ஒரு வயதுவரை அந்த குழந்தைக்கு இந்த உலக வாழ்க்கை பற்றி ஏதும் தெரியாது. எந்த ஒரு பொருளின் மீதும் பற்று இருக்காது. அதனால் தான் குழந்தையும் தெய்வமும் ஒன்று என்கிறார்கள்.

    ஒரு வயது முடிந்து இரண்டாம் வயதைத் தொடங்கும் குழந்தைக்கு மெள்ள, மெள்ள ஆசை தலை தூக்குகிறது. இது என் பொம்மை, இந்த பந்து எனக்கு வேண்டும் என்று கொஞ்சம், கொஞ்சமாக நான், எனது என்று சுயநலமாக சிந்திக்கத் தொடங்குகிறது. பற்றற்ற நிலை காணாமல் போகிறது. தெய்வத்தன்மை குறையத் தொடங்கி மனிதனுக்கு உரிய குணங்கள் வளர ஆரம்பிக்கின்றன.

    ஆசைகளை முற்றிலுமாகத் துறந்து ஒரு மனிதனால் வாழ இயலாது என்றாலும் அவனது ஆசைக்கு ஒரு அளவு இருக்க வேண்டும் என்ற எண்ணத்தினாலும், அழகு என்பது முக்கியமல்ல, ஆண்டவனின் அருள்தான் முக்கியம் என்பதை உணர்த்துவதற்காகவும் குலதெய்வ ஆலயத்திற்கு சென்று அழகு தரக்கூடிய முடியைக் காணிக்கையாகச் செலுத்துகிறார்கள்.

    இறைவன் கொடுத்த மதிப்பிட முடியாத இந்த சொத்தினை மனிதர்களாகிய நாங்கள் அனுபவிக்க இருக்கிறோம் என்ற அடையாளத்திற்காகவும் அந்த குழந்தையின் உடம்பில் விபத்து, நோய் முதலான காரணங்களால் எந்தவித பின்னமும் உண்டாகக்கூடாது, அதற்காக நாங்களே ஒரு பின்னத்தை உண்டாக்கி நீ கொடுத்திருக்கும் சொத்தினைப் பெற்றுக் கொள்கிறோம் என்று ஆண்டவனிடம் விண்ணப்பிக்கும் விதமாக அந்த குழந்தைக்குக் காது குத்துகிறார்கள்.

    'தான்' என்ற அகங்காரம் அந்த குழந்தைக்கு எந்த வயதிலும் வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் ஒருவயது முடியும் தறுவாயில் குழந்தைக்கு மொட்டை அடித்து காது குத்துகிறார்கள் என்றும் பொருள் கொள்ளலாம்.

    • சுற்று வட்டார கிராமங்களில் உள்ள ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோவிலில் குவிந்தனர்.
    • கால்நடைகளின் உருவார பொம்மைகளை நேர்த்திக்கடன் செலுத்தியும், கன்றுகளை தானமாக அளித்தும், சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்தும், விவசாயிகள் கொண்டாடுகின்றனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள சோமவாரப்பட்டியில் மால கோவில் என அழைக்கப்படும் ஆல் கொண்டமால் (கிருஷ்ணன்) கோவில் உள்ளது. பொங்கல் திருநாளை ஒட்டி இந்த கோவிலில் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 3 நாள் தமிழர் திருவிழா கொண்டாடப்படும்.

    கால்நடைகள் நோய் நொடியின்றி வாழவும் செல்வம் பெருகவும் கால்நடைகளின் உருவார பொம்மைகளை நேர்த்திக்கடன் செலுத்தியும், கன்றுகளை தானமாக அளித்தும், சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்தும், விவசாயிகள் கொண்டாடுகின்றனர்.

    நேற்று முன்தினம் கோவிலில் பொங்கல் திருவிழா துவங்கியது. இதில் சுற்று வட்டார கிராமங்களில் உள்ள ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோவிலில் குவிந்தனர். நேற்று காலை கிருஷ்ணனுக்கு சிறப்பு அலங்காரம், பாலாபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். நேர்த்திக்கடனாக கால்நடைகளின் உருவார பொம்மைகளை காணிக்கையாக செலுத்தினர். இதனால் கோவிலில் உள்ள நந்தி சிலை முன்பு உருவார பொம்மைகள் மலை போல் குவிந்தன. மேலும் சில விவசாயிகள் ஆடு, மாடுகளை கோவிலுக்கு தானமாக வழங்கினர். சலகருது ஆட்டம், தேவராட்டம் நடந்தது.

    விழா இன்றுடன் நிறைவு பெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் அமரநாதன், செயல் அலுவலர் ராமசாமி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • ஆணிக்காலணி அணிந்த கோவில் பூசாரி ஆசி வழங்கினார்.
    • சிறப்பு வழிபாட்டில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

    வேடசந்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள நாகம்பட்டியில் ஸ்ரீ மகாலட்சுமி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆயுத பூஜை, நவராத்திரி விழா கடந்த 10 நாட்களாக நடைபெற்றது. இதையொட்டி பக்தர்கள் தங்கள் கையில் காப்பு கட்டி விரதம் இருந்து வந்தனர்.

    கோயில்களில் தீர்த்தம் தெளிக்கப்பட்டு, ஆற்றுக்குச் சென்று கரகம் பாலித்து சேர்வை ஆட்டத்துடன் சுவாமிகளை ஊர்வலமாக கோயிலுக்கு அழைத்து வந்தனர்.

    அதைத் தொடர்ந்து சாமிகளுக்கு அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக விரதம் இருந்த ஆண்கள் மற்றும் பெண்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் கோவில் முன்பாக அமர்ந்தனர்.

    அப்போது ஆணிக்காலணி அணிந்த கோவில் பூசாரி ஆசி வழங்கினார். பின்னர் கோவில் முன்பாக வரிசையாக உட்கார்ந்திருந்த பக்தர்களின் தலையில் பூசாரி ஒவ்வொரு தேங்காயாக உடைத்தார்.

    அதனைத்தொடர்ந்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள் கோயிலுக்கு சென்று சாமியை வழிபாடு செய்தனர். இந்த சிறப்பு வழிபாட்டில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

    • ஏழைகாத்தம்மன் கோவில் திருவிழா ஆண்கள் உடலில் வைக்கோல் சுற்றி நேர்த்திக் கடன் செலுத்தினர்.
    • 7 குழந்தைகளை அம்மனாக சித்தரித்து அதேபோல் நடந்து கோவிலுக்கு கூட்டிச் சென்றனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள வெள்ளலூர். இதனை வெள்ளலூர் நாடு என்று இப்பகுதி மக்களால் அழைக்கப்படுவர். இங்கு பிரசித்தி பெற்ற ஏழைகாத்தம்மன் கோவில் உள்ளது.

    வெள்ளலூரை தலைமை இடமாகக் கொண்டு 60 கிராமங்கள் உள்ளன. இப் பகுதி மக்களுக்கு ஏழைகாத்த அம்மன் காவல் தெய்வமாய் விளங்கி வருகிறது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாத திருவிழா நடைபெறும்.

    அதே போல் இந்த ஆண்டு திருவிழா வெள்ள லூர் கோவில் திருவிழா நடந்தது. முன்னதாக நேர்த்திக்கடன் செலுத்தும் நூற்றுக்கணக்கான ஆண்கள் தங்கள் உடலில் வைக்கோல் பிரி சுற்றி முகத்தில் முகமூடி அணிந்து பெரிய ஏழை காத்தம்மன் கோவிலுக்கு சுமார் 6 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.

    அதனைத் தொடர்ந்து 7 குழந்தைகளை அம்மனாக சித்தரித்து அதேபோல் நடந்து கோவிலுக்கு கூட்டிச் சென்றனர். நடுத்தர வயதுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் சேலையை மட்டும் அணிந்து மதுக்களையம் தூக்கியும், திருமண வயதுடைய பெண்கள் சாமி சிலைகளை தூக்கி ஊர்வலம் சென்றனர். இத்திருவிழா இப்பகுதி மக்கள் நலமாக வாழவும், விவசாயம் செழிக்கவும் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • பக்தர்கள் உடல் முழுவதும் சேறு பூசி வினோத நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    • திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்

    பசும்பொன்

    கமுதி அருகே செங்கப்படை அழகு வள்ளியம்மன் கோவில் ஆவணி பொங்கல் திருவிழா கடந்த 3-ம் தேதி காப்பு கட்டி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

    பின்னர் தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. 9-ம் நாள் திருவிழாவான நேற்று முன்தினம் இரவு பெண்கள் திருவிளக்கு பூஜை கூட்டு வழிபாட்டில் ஈடுபட்டனர். இதில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பக்தி பாடல் பாடி பூஜை நடத்தினர்.பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    10-ம் நாள் திருவிழாவில், நேற்று இரவு வான வேடிக்கை மேளதாளங்க ளுடன் கரகம் எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.இன்று காலை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அழகு வள்ளியம்மனுக்கு பக்தர்கள் அக்கினி சட்டி எடுத்தல் மற்றும் கரும்பாலை தொட்டில், பூக்குழி இறங்குதல், உடல் முழுவதும் சேறு பூசி சேர்த்தாண்டி வேடமிடும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    அப்பகுதியில் உள்ள ஊரணியில் உடல் முழுவதும் சேறு பூசி, மேள தாளத்துடன் கையில் வேப்பிலை யுடன் ஆட்டமாடிக் கொண்டு, கிராமத்தில் இருந்து அழகு வள்ளியம்மன் கோவில் வரை வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    பின்னர் மாலையில் சாக்கு வேடம் அணிந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் களை நிறைவேற்றுதல், பெண்கள் முளைப்பாரி ஊர்வலமாக சென்று அம்மன் ஆலயம் வலம் சென்று ஆற்றில் கரைத்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்

    • ஆயக்காரன்புலம் பத்ரகாளியம்மன் கோவிலில் ஆவணி திருவிழா நடைபெற்றது.
    • மாவிளக்கு போடுதல், பால்குடம், காவடி எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்தினர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம் மூன்றாம் சேத்தி பகுதியில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் ஆவணி திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

    முன்னதாக அம்மனுக்கு அர்ச்சனை செய்தல், மாவிளக்கு போடுதல், பால்குடம், காவடி எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்தினர்.

    தொடர்ந்து, அம்மனுக்கு பால், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று.

    பின்னர், வண்ண மலர்களால் அலங்கரி க்கப்பட்டு தீபாராதனை காண்பி க்கப்பட்டது.

    இதில் ஏராள மான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • விழா நாட்களில் தினமும் பல்வேறு வாகனங்களில் அம்பாள் வீதிஉலா நடைபெற்றது.
    • ஏராளமான பக்தர்கள் குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அடுத்த ஆடுதுறை மாமரத்து மாரியம்மன் கோவிலில் தீமிதி விழா கடந்த 5-ந்தேதி காப்பு கட்டுதல், பூச்சொரிதலுடன் தொடங்கியது.

    விழா நாட்களில் தினமும் பல்வேறு வாகனங்களில் அம்பாள் வீதிஉலா நடைபெற்றது.

    விழாவில் அம்பாள் காசி விஸ்வநாதர் கோவிலில் இருந்து சிறப்பு அலங்காரத்துடன் புறப்பட்டு வீதிஉலா நடைபெற்றது.

    தொடர்ந்து, விரதமிருந்த பக்தர்கள் பால்குடம், அழகு காவடி எடுத்து ஊர்வலமாக வந்தனர்.

    பின்னர், தீமிதி விழா நடந்தது.

    இதில் ஏராளமான பக்தர்கள் குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    தொடர்ந்து, சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்த மாரியம்மனுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் மாவிளக்கு போட்டு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை நாட்டாண்மைகள், கிராம மக்கள் செய்திருந்தனர்.

    • நினைத்த காரியத்தை நிறைவேற்றித்தர சாக்கு வேடமணிந்து நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள்.
    • விழாவிற்கான ஏற்பாடு–களை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பாம்புல்நாயக் கன்பட்டி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கரியமல் லம்மன் கோவிலில் ஆடி பொங்கல் திருவிழா கடந்த வாரம் காப்புக் கட்டுடன் தொடங்கியது. அன்று முதல் அம்மனுக்கு தினமும் விஷேச பூஜை மற்றும் அபி–ஷேகம், அலங்காரம் நடை–பெற்று வந்தது.

    பக்தர்கள் காப்பு கட்டி விரதமிருந்து அம்மனை வழிபட்டு வந்தனர். விழா–வின் முக்கிய நிகழ்ச்சியாக ஏராளமான பக்தர்கள் கோவில் முன்பு பொங்கல் வைத்து வழிபட்டனர். பின்னர் இரவு முதல் காலை வரை 300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் விடிய, விடிய நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் ஏராளமான பெண், ஆண் பக்தர்கள் அக்கினிச் சட்டி எடுத்து வந்தனர்.

    மேலும் 21 சட்டி, ஆயிரம் கண் பானை மற்றும் பால்கு–டம் போன்ற நேர்த்திக்கடன் களை செலுத்தினர். பின்னர் 100-க்கும் மேற்பட்ட ஆண் பக்தர்கள் உடல் முழுவதும் அடையாளம் தெரியாத அளவில் களிமண் சேறு பூசி சேத்தாண்டி வேடமிட்டு, கோவிலில் இருந்து மேள தாளத்துடன் நடனமாடி ஊரை நகர் வலம் வந்து கரியமல்லம்மனை வழிபட்ட–னர்.

    நேற்று மாலை முளைப் பாரி ஊர்வலம் நடைபெற் றது. வாண வேடிக்கை, மேளதாளத்துடன் நடை–பெற்ற இந்த ஊர்வலத்தில் ஏராளமான பெண்கள் தலையில் முளைப்பாரி சுமந்து சென்றனர். இதில் பக்தர்கள் உடல் முழுவதும் வைக்கோலை வைத்து, சாக்கு ஆடை அணிந்து ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    இவ்வாறு சாக்கு வேடம் அணிவதால் நினைத்த காரி–யத்தை கரியமல்லம்மன் நிறைவேற்றி தருவதாக தங்களது நம்பிக்கை என்று கூறினர். முக்கிய வீதிகள் வழியாக வந்த ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட முளைப்பாரி அப்பகுதியில் உள்ள ஆற்றில் கரைக்கப்பட் டது.

    இந்த திருவிழாவில் தமிழ–கத்தின் பல்வேறு பகுதியிலி–ருந்து 2000-க்கும் மேற் பட்டோர் கலந்துகொண்டு கரியமல்லம்மனை வழிபட்ட–னர். விழாவிற்கான ஏற்பாடு–களை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • ஆடி கடைசி வெள்ளியை யொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
    • திரளான பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்ததிக்கடன் செலுத்தினர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள மாதானம் கிராமத்தில் முத்து மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு வெட்டி துண்டுகளாக போடப்பட்ட புளியமரம் மீண்டும் துளிர்விட்டு பெரிய மரமாக காட்சியளித்து வருகிறது.

    இந்த கோயிலில் ஆடி மாத கடைசி வெள்ளி க்கிழமையையொட்டி நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மாலை சித்தர்கள் கரகம் மற்றும் காவடி எடுத்து வந்து கோயில் முன்புறம் உள்ள கீழ குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். சுமார் 10,000 பேர் கலந்துகொண்டு தீக்குண்டத்தில் இறங்கி நேர்ததிக் கடன் செலுத்தினர்.

    விழாவை முன்னிட்டு சீர்காழி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சீர்காழி மற்றும் சிதம்பரத்திலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. விழா விற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மயிலாடுது றை ஏ.டி.எஸ்.பி வேனு கோபால் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியை ஈடுபட்டிருந்தனர்.

    சீர்காழி தீயணைப்பு அலுவலர் ஜோதி தலைமையில் தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    விழாவிற்கான ஏற்பாடுக ளை கிராம மக்கள் சார்பில் முத்து மாரியம்மன் கோயில் ஆலய அறங்காவலர் நடராஜ் செய்திருந்தார்.

    • தேவகோட்டை முத்து மாரியம்மன் கோவிலில் ஆடி உற்சவ விழா நடந்தது.
    • கோவில் முன்பு பூக்குழி இறங்கி பக்தர்கள் தங்கள் நேத்து கடனை செலுத்தினர்.

    தேவகோட்டை

    தேவகோட்டை அருணகிரிபட்டினம் பகுதியில் மிகப் பழமையான முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் ஆடி உற்சவ விழா நடைபெறுவது வழக்கம் கடந்த கொரோனா காலகட்டத்தில் திருவிழாக்கள் நடைபெற்றது அதனை தொடர்ந்து சென்ற ஆண்டு இரு பிரிவினர் இடையே கருத்து வேறுபாடுகளால் திருவிழா தடைபட்டது. இந்த ஆண்டு ஆடி உற்சவ விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. காப்பு கட்டிய நாள் முதல் ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் அபிஷேகமும் நடைபெற்றது. 31ந்தேதி சுமார் 5000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட பூச்சொரிதல் விழாவும் நேற்று இரவு சக்தி கரகம் எடுத்தல் நடைபெற்று சக்தி கரகம் வீதி உலா வந்தடைந்தது.

    ஆடி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான பால்குடம், தீச்சட்டி, வேல் குத்துதல் போன்ற சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கருதாவூரணி விநாயகர் கோவிலில் இருந்து செங்கக்கோவிலார் வீதி, கண்டதேவி ரோடு போன்ற முக்கிய விதிகள் வழியாக வலம் வந்து கோவில் முன்பாக பூக்குழி இறங்கி பக்தர்கள் தங்கள் நேத்து கடனை செலுத்தினர்.

    • அய்யனார் கோவில் திருவிழாவில் பக்தர்கள் வினோத வழிபாடு நடத்தினர்.
    • புரவி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே காப்பாரப்பட்டியில் காப்பார அய்யனார் கோவில் உள்ளது. இங்கு கரடி கருப்பர் சுவாமி அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் வருடந்தோறும் திருவிழா விமரிசையாக நடைபெறும். அப்போது ஒரு சமுதாய மக்கள் விவசாயம் செழிக்க வேண்டியும், நோய் நொடியின்றி வாழவும், கரடி கருப்பர் சாமிக்கு பக்தர்கள் கரடி வேடத்தில் புரவிகள் எடுத்து வழிபாடுவார்கள்.

    அதன்படி இந்த ஆண்டு திருவிழாவை முன்னிட்டு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கரடி அமைப்பில் மண்ணால் செய்யப்பட்ட புரவிகள் எடுத்து வினோத வழிபாடு நடத்தினர்.

    திருமணமான பெண்கள் குழந்தை வரம் வேண்டியும், குழந்தைகள் நோய் நொடி யின்றி வாழவும் மண்ணால் செய்யப்பட்ட குழந்தை பதுமைகளை தலையில் சுமந்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.

    முன்னதாக சிங்கம்புணரி குலாலர் தெருவில் புரவிகளை செய்வதற்கு பிடிமண் கொடுத்து அவர்கள் செய்து வைத்திருந்த கரடி மற்றும் குழந்தை பதுமைகளை தலையில் சுமந்து கொண்டு சுமார் 5 கிலோ மீட்டர் தூரமுள்ள காப்பார அய்யனார் கோவிலுக்கு தோளிலும் தலையிலும் சுமந்து கொண்டு ஆட்டம் பாட்டத்துடன் கிராமிய சூழ்நிலையில் நேர்த்திக்கடன் செய்த காட்சிகள் மனதை கவரும் விதமாக அமைந்திருந்தது.

    • குதிரை வாகனத்தில் முனீஸ்வரன் வீதிஉலா நடந்தது.
    • ஏராளமான பக்தர்கள் குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம் மூன்றாம் சேத்தி சிங்கப்பெருமாள் குத்தகையில் உள்ள காமாட்சி அம்மன், முனீஸ்வரர் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.

    முன்னதாக முனீஸ்வ ரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, வண்ண மலர்களால் அலங்க ரிக்கப்பட்டு, தீபாராதனை காண்பி க்கப்பட்டது.

    பின், குதிரை வாகனத்தில் முனீஸ்வரன் வீதிஉலா வந்து தீக்குண்டம் முன்பு எழுந்தருளினார்.

    பின்னர், ஏராளமான பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    மேலும், அப்பகுதி பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ×