search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sincerely"

    • தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • நாம் தமிழர் கட்சி சார்பில் சோழவந்தான் தொகுதி தலைவர் சங்கிலி முருகன், செயலாளர் சக்கரபாணி மற்றும் பலர் உள்ளனர்.

    அலங்காநல்லூர்

    சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 218-வது நினைவு நாளை முன்னிட்டு மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கல்லணை ஊராட்சியில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    அதன்படி கவுண்டர் மகாஜன சங்கம் சார்பில் சங்கத்தலைவர் விஜயன், செயலாளர் அழகப்பன், பொரு ளாளர் சிதம்பர நாதன், ஆலோசகர்கள் சேகர், ஜெயராமன், ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது.

    சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன், அவைத் தலைவர் பாலசுப்பிர மணியன், பொதுக்குழு உறுப்பினர் முத்தையன் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    அலங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் கொங்கு இளைஞர் பேரவை சார்பில் நினைவு தூணில் வைக்கப்பட்டிருந்த தீரன் சின்னமலை உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட தலைவர் பார்த்திபன், செயலாளர் தயாளன், இளைஞரணி செயலாளர் பாலகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    பாட்டாளி மக்கள் சார்பில் மாவட்ட தலைவர் செல்லம்பட்டி முருகன் தலைமையில் மாவட்ட துணைத்தலைவர் பிரபு, மாவட்ட பொருளாளர் சரோஜினி, முன்னாள் மாவட்ட தலைவர் அழகுராஜா, ஒன்றிய செயலாளர்கள் முருகன், ஈஸ்வரன் முன்னிலையில் மாவட்ட துணைத்தலைவர் ராமசந்திரன், முன்னாள் தலைவர் பாஸ்கரன், உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். நாம் தமிழர் கட்சி சார்பில் சோழவந்தான் தொகுதி தலைவர் சங்கிலி முருகன், செயலாளர் சக்கரபாணி, ஒன்றிய செயலாளர் சுரேந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். ஓ.பி.எஸ். அணி சார்பில் ஒன்றிய செயலாளர் சேது சீனிவாசன் தலைமையில் மாவட்ட செயலாளர் முருகேசன், மாநில இளைஞரணி செயலாளர் ராஜ்மோகன், மாவட்ட பொருளாளர் துதி திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலையில் ஒன்றிய செயலாளர்கள் ஜோதிமுருகன், முத்து கிருஷ்ணன், சேகர், அவைத்தலைவர் அய்யாவு, ஒன்றிய துணைத்தலைவர் முனியசாமி, வர்த்தகர் பிரிவு பெருமாள், மாவட்ட இலக்கிய அணி சேகர், புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் பாலமேடு அய்யாவு மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மேலும் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

    • அடுத்த மாதம் (ஆகஸ்டு) 11-ந் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்துவர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் மாதானம் கிராமத்தில் புகழ்பெற்ற முத்து மாரியம்மன் கோயில் உள்ளது.

    இங்கு 500 வருடங்களுக்கு முன்பு துண்டு துண்டாக வெட்டி போடப்பட்டிருந்த புளியமரம் மீண்டும் துளிர்த்து மரமாக இருந்து வருவதை இன்றும் கோயில் வளாகத்தில் பார்க்கலாம்.

    அன்று முதல் இக்கோயிலுக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று வழிபாடு செய்து வருகின்றனர்.

    வருடம் தோறும் ஆடி மாத கடை வெள்ளியில் நடைபெறும் தீமிதி திருவிழாவில் சுமார் 10,000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.

    மேலும் இங்கு தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களிலிருந்தும் சுமார் 1 லட்சம் பக்தர்கள் வந்து கலந்து கொள்வார்கள்.

    வருடம் தோறும் தீமிதி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது.

    கடந்த காலங்களில் மாதானம் தீமிதி திருவிழாவிற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    அந்த நடைமுறையை பின்பற்றி இந்த ஆண்டும் ஆகஸ்ட 11ம் தேதி மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறை அளித்திட பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பக்தர்கள் பால் குடம் சுமந்தும் காவடி எடுத்தும் அழகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    • அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்,

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை அடுத்த மங்கலூர் கிராமத்தில் உள்ள பிரசித்திபெற்ற மஹா காளியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா நடந்தது. இதனையடுத்து தினமும் பல்வேறு நிகழ்சிகள் சிறப்பு அபிசேகம் ஆராதனைகள் நடந்தது.

    அதனை தொடர்ந்து அம்மனுக்கு பக்தர்கள் பால் குடம் சுமந்தும் காவடி எடுத்தும் அழகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    பின்னர் அம்மனுக்கு பால்குடம் அபிஷேகம் நடைபெற்று.

    தொடர்ந்து கரகம் எடுத்தல், அம்மனுக்கும் பரிவார தெய்வங்களுக்கும் தீபாராதனையும் சிங்க வாகனத்தில் அம்மன் வீதியுலா காட்சிகள் நடந்து அம்பாளுக்கு சந்தன காப்பு அலங்காரம் மாவுக்கு போடுதல் அர்ச்சனை சிறப்பு அபிசேகம், அன்னதானம் நடைபெற்றது.

    இரவும் கலைநிகழ்ச்சிகள் போன்றவை நடைபெற்றது

    . இதில் ஏராளமான பக்தர்கள் வந்து கலந்துக் கொண்டனர்.

    • திரளான பக்தர்கள் குண்டத்தில் இறங்கி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    • நாளை விடையாற்றி மற்றும் அம்பாள் ஊஞ்சலாட்டு விழா நடைபெற உள்ளது.

    கபிஸ்தலம்:

    கபிஸ்தலம் பூண்டி தெற்கு செங்குந்தர் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.

    விழாவையொட்டி கடந்த 5-ந்தேதி பந்தல்கால் முகூர்த்தம் நிகழ்ச்சியும், சுவாமி வீதி உலாவும் நடந்தது.

    விழாவில் நேற்றுமுன்தினம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்மன் சிலை சத்திரம் காவிரி படித்துறையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு தீமிதிக்கும் இடத்தை வந்தடைந்தது.

    பின்னர் அங்கு திரளான பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    நேற்று காப்பு அவிழ்த்தல் நிகழ்ச்சியும், மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெற்றது.

    நாளை (வெள்ளிக்கிழமை) விடையாற்றி மற்றும் அம்பாள் ஊஞ்சலாட்டு விழாவும் நடைபெற உள்ளது.

    இதற்கான ஏற்பாடுகளை தெற்கு செங்குந்தர் தெரு கிராம தலைவர் மற்றும் நாட்டாண்மைகள் செய்திருந்தனர்.

    • பக்தர்கள் மஞ்சள் ஆடை அணிந்து மஞ்சள் கயறு கட்டி ஊர்வலமாக வந்தனர்.
    • தீக்குண்டத்தில் இறங்கி பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    திருவாரூர்:

    குடவாசல் அருகே சீதக்கமங்கலத்தில் வீரபத்திர மகாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் 9-ம் ஆண்டு தீமிதி திருவிழாவுக்கான பூச்சொரிதல் விழா கடந்த 18-ந் தேதி நடந்தது. அதையடுத்து தினசரி அம்மன் வீதியுலா காட்சி நடைபெற்றது.

    நேற்று காலை அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், தேன், திரவியம், பஞ்சாமிர்தம், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அம்மன் புஷ்ப அலங்காரத்தில் திருமலைராஜன் ஆற்றுக்கு எடுத்து செல்லப்பட்டது.

    அங்கிருந்து நேர்த்தி கடன் செலுத்தும் பக்தர்கள் மஞ்சள் ஆடை அணிந்து மஞ்சள் கயறு கட்டி ஊர்வலமாக வந்தனர்.

    பின்னர் கோவில் எதிரே அமைக்கப்பட்டு இருந்த தீக்குண்டத்தில் இறங்கி பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • பராசக்தி மாரியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    • இதன் காரணமாக விருது நகர் திருவிழாக்கோலம் பூண்டுள்ளது.

    விருதுநகர்

    விருதுநகரில் பிரசித்தி பெற்ற பராசக்தி மாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் திருவிழா கடந்த மாதம் 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு விருதுநகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக் கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர்.

    தினசரி அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். விழாவில் நேற்று பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. கோவில் வளாகத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் பொங்கல் படை யலிட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    விழாவில் இன்று அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மஞ்சள் ஆடை உடுத்தி 21 அக்னி சட்டி, 101 அக்னி சட்டி எடுத்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்தனர். மேலும் பலர் குழந்தையை கரும்பு தொட்டிலில் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதன் காரணமாக விருது நகர் திருவிழாக்கோலம் பூண்டுள்ளது.

    • 1000-த்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    • மாவிளக்கு தீபமிட்டு அம்மனை வழிபாடு செய்தனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை காவி ரிக்கரையில் அமைந்துள்ள தீப்பாய்ந்தாள் அம்மன் கோவிலில் 131-வது ஆண்டாக தீமிதி திருவிழா நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு, கூறைநாடு காக்கும் பிள்ளையார் கோயிலிருந்து பக்தர்களுக்கு விரதமிருந்து அலகு காவடி, சக்தி கரகம், சிவப்பு மஞ்சள் உடை உடுத்தி மேளதாள வாத்தியங்கள் முழங்க காளிஆட்டத்துடன் ஊர்வலமாக புறப்பட்டு, முக்கிய வீதிகள் வழியே வீதிஉலாவாக கோயிலை வந்தடைந்தனர்.

    கோயிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை 1000-த்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    இதில் ஏராளமானோர் தங்கள் குழந்தைகளை தோளில் சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    விழாவில் மாவிளக்கு தீபமிட்டு அம்மனை வழிபாடு செய்தனர்.

    கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை செங்கமேட்டு தெரு நாட்டாமை ஞானசேகரன், பொருளாளர் செல்வம், கோயில் நிர்வாகிகள் லட்சும ணன், வெங்கட்ராமன், மற்றும் விழா குழுவினர்கள் செய்திருந்தனர்.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா ஆனங்கூர் பகவதி அம்மன் கோவில் திருவிழா நடந்தது.
    • கடந்த 1-ந் தேதி பகவதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், 2-ந் தேதி வடி சோறு நிகழ்ச்சி மற்றும் நேற்று மாலை பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா ஆனங்கூர் பகவதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு கடந்த 31-ந் தேதி ஆனங்கூர் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி, தீர்த்த குடங்களுடன் பகவதி அம்மன் கோவிலை வந்து அடைந்தனர். அதனை தொடர்ந்து இரவு பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது.

    கடந்த 1-ந் தேதி பகவதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், 2-ந் தேதி வடி சோறு நிகழ்ச்சி மற்றும் நேற்று மாலை பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து தீக்குண்டத்தில் இறங்கும் பக்தர்கள், காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். பின்னர் கோயில் முன்பு தயாராக இருந்த தீக்குண்டத்தில் ஏராளமான ஆண்களும், பெண்களும் குழந்தைகளுடன் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர்.

    தொடர்ந்து இன்று மாலை 5 மணிக்கு மேல் ஆனங்கூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும், இரவு 8 மணி அளவில் பெண்கள் மாவிளக்குகளை ஊர்வலமாக கொண்டு வரும் நிகழ்ச்சியும், வானவே–டிக்கையும் நடைபெறுகிறது.

    நாளை காலை கிடா வெட்டுதல் நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து மாலை மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும், அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் திருவிழா குழுவினர் செய்துள்ளனர்.

    ×