தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நாம் தமிழர் கட்சி சார்பில் சோழவந்தான் தொகுதி தலைவர் சங்கிலி முருகன், செயலாளர் சக்கரபாணி மற்றும் பலர் உள்ளனர்.
தீரன் சின்னமலை சிலைக்கு கவுண்டர் மகாஜன சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தீரன் சின்னமலை சிலைக்கு கவுண்டர் மகாஜன சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
Published on

அலங்காநல்லூர்

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 218-வது நினைவு நாளை முன்னிட்டு மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கல்லணை ஊராட்சியில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதன்படி கவுண்டர் மகாஜன சங்கம் சார்பில் சங்கத்தலைவர் விஜயன், செயலாளர் அழகப்பன், பொரு ளாளர் சிதம்பர நாதன், ஆலோசகர்கள் சேகர், ஜெயராமன், ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது.

சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன், அவைத் தலைவர் பாலசுப்பிர மணியன், பொதுக்குழு உறுப்பினர் முத்தையன் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அலங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் கொங்கு இளைஞர் பேரவை சார்பில் நினைவு தூணில் வைக்கப்பட்டிருந்த தீரன் சின்னமலை உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட தலைவர் பார்த்திபன், செயலாளர் தயாளன், இளைஞரணி செயலாளர் பாலகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

பாட்டாளி மக்கள் சார்பில் மாவட்ட தலைவர் செல்லம்பட்டி முருகன் தலைமையில் மாவட்ட துணைத்தலைவர் பிரபு, மாவட்ட பொருளாளர் சரோஜினி, முன்னாள் மாவட்ட தலைவர் அழகுராஜா, ஒன்றிய செயலாளர்கள் முருகன், ஈஸ்வரன் முன்னிலையில் மாவட்ட துணைத்தலைவர் ராமசந்திரன், முன்னாள் தலைவர் பாஸ்கரன், உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். நாம் தமிழர் கட்சி சார்பில் சோழவந்தான் தொகுதி தலைவர் சங்கிலி முருகன், செயலாளர் சக்கரபாணி, ஒன்றிய செயலாளர் சுரேந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். ஓ.பி.எஸ். அணி சார்பில் ஒன்றிய செயலாளர் சேது சீனிவாசன் தலைமையில் மாவட்ட செயலாளர் முருகேசன், மாநில இளைஞரணி செயலாளர் ராஜ்மோகன், மாவட்ட பொருளாளர் துதி திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலையில் ஒன்றிய செயலாளர்கள் ஜோதிமுருகன், முத்து கிருஷ்ணன், சேகர், அவைத்தலைவர் அய்யாவு, ஒன்றிய துணைத்தலைவர் முனியசாமி, வர்த்தகர் பிரிவு பெருமாள், மாவட்ட இலக்கிய அணி சேகர், புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் பாலமேடு அய்யாவு மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மேலும் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com