முத்துமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

திரளான பக்தர்கள் குண்டத்தில் இறங்கி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.நாளை விடையாற்றி மற்றும் அம்பாள் ஊஞ்சலாட்டு விழா நடைபெற உள்ளது.
முத்துமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
Published on

கபிஸ்தலம்:

கபிஸ்தலம் பூண்டி தெற்கு செங்குந்தர் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.

விழாவையொட்டி கடந்த 5-ந்தேதி பந்தல்கால் முகூர்த்தம் நிகழ்ச்சியும், சுவாமி வீதி உலாவும் நடந்தது.

விழாவில் நேற்றுமுன்தினம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்மன் சிலை சத்திரம் காவிரி படித்துறையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு தீமிதிக்கும் இடத்தை வந்தடைந்தது.

பின்னர் அங்கு திரளான பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

நேற்று காப்பு அவிழ்த்தல் நிகழ்ச்சியும், மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெற்றது.

நாளை (வெள்ளிக்கிழமை) விடையாற்றி மற்றும் அம்பாள் ஊஞ்சலாட்டு விழாவும் நடைபெற உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை தெற்கு செங்குந்தர் தெரு கிராம தலைவர் மற்றும் நாட்டாண்மைகள் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com