தீக்குண்டம் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா ஆனங்கூர் பகவதி அம்மன் கோவில் திருவிழா நடந்தது.கடந்த 1-ந் தேதி பகவதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், 2-ந் தேதி வடி சோறு நிகழ்ச்சி மற்றும் நேற்று மாலை பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது.
பக்தர் ஒருவர் குழந்தையுடன் தீக்குண்டத்தில் இறங்குவதையும், பகவதி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பதையும் படத்தில் காணலாம்.
பக்தர் ஒருவர் குழந்தையுடன் தீக்குண்டத்தில் இறங்குவதையும், பகவதி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பதையும் படத்தில் காணலாம்.
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா ஆனங்கூர் பகவதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு கடந்த 31-ந் தேதி ஆனங்கூர் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி, தீர்த்த குடங்களுடன் பகவதி அம்மன் கோவிலை வந்து அடைந்தனர். அதனை தொடர்ந்து இரவு பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது.

கடந்த 1-ந் தேதி பகவதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், 2-ந் தேதி வடி சோறு நிகழ்ச்சி மற்றும் நேற்று மாலை பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தீக்குண்டத்தில் இறங்கும் பக்தர்கள், காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். பின்னர் கோயில் முன்பு தயாராக இருந்த தீக்குண்டத்தில் ஏராளமான ஆண்களும், பெண்களும் குழந்தைகளுடன் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர்.

தொடர்ந்து இன்று மாலை 5 மணிக்கு மேல் ஆனங்கூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும், இரவு 8 மணி அளவில் பெண்கள் மாவிளக்குகளை ஊர்வலமாக கொண்டு வரும் நிகழ்ச்சியும், வானவே–டிக்கையும் நடைபெறுகிறது.

நாளை காலை கிடா வெட்டுதல் நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து மாலை மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும், அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் திருவிழா குழுவினர் செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com