search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாதானம் கோவில் திருவிழாவுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும்
    X

    மாதானம் கோவில் திருவிழாவுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும்

    • அடுத்த மாதம் (ஆகஸ்டு) 11-ந் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்துவர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் மாதானம் கிராமத்தில் புகழ்பெற்ற முத்து மாரியம்மன் கோயில் உள்ளது.

    இங்கு 500 வருடங்களுக்கு முன்பு துண்டு துண்டாக வெட்டி போடப்பட்டிருந்த புளியமரம் மீண்டும் துளிர்த்து மரமாக இருந்து வருவதை இன்றும் கோயில் வளாகத்தில் பார்க்கலாம்.

    அன்று முதல் இக்கோயிலுக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று வழிபாடு செய்து வருகின்றனர்.

    வருடம் தோறும் ஆடி மாத கடை வெள்ளியில் நடைபெறும் தீமிதி திருவிழாவில் சுமார் 10,000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.

    மேலும் இங்கு தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களிலிருந்தும் சுமார் 1 லட்சம் பக்தர்கள் வந்து கலந்து கொள்வார்கள்.

    வருடம் தோறும் தீமிதி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது.

    கடந்த காலங்களில் மாதானம் தீமிதி திருவிழாவிற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    அந்த நடைமுறையை பின்பற்றி இந்த ஆண்டும் ஆகஸ்ட 11ம் தேதி மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறை அளித்திட பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×