என் மலர்
உள்ளூர் செய்திகள்

பக்தர்கள் பால் குடம் சுமந்தும் காவடி எடுத்தும் அழகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
முத்துப்பேட்டை காளியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா
- பக்தர்கள் பால் குடம் சுமந்தும் காவடி எடுத்தும் அழகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
- அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்,
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டை அடுத்த மங்கலூர் கிராமத்தில் உள்ள பிரசித்திபெற்ற மஹா காளியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா நடந்தது. இதனையடுத்து தினமும் பல்வேறு நிகழ்சிகள் சிறப்பு அபிசேகம் ஆராதனைகள் நடந்தது.
அதனை தொடர்ந்து அம்மனுக்கு பக்தர்கள் பால் குடம் சுமந்தும் காவடி எடுத்தும் அழகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பின்னர் அம்மனுக்கு பால்குடம் அபிஷேகம் நடைபெற்று.
தொடர்ந்து கரகம் எடுத்தல், அம்மனுக்கும் பரிவார தெய்வங்களுக்கும் தீபாராதனையும் சிங்க வாகனத்தில் அம்மன் வீதியுலா காட்சிகள் நடந்து அம்பாளுக்கு சந்தன காப்பு அலங்காரம் மாவுக்கு போடுதல் அர்ச்சனை சிறப்பு அபிசேகம், அன்னதானம் நடைபெற்றது.
இரவும் கலைநிகழ்ச்சிகள் போன்றவை நடைபெற்றது
. இதில் ஏராளமான பக்தர்கள் வந்து கலந்துக் கொண்டனர்.






