திருநங்கைகள் மீது தாக்குதல்

திருநங்கைகள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கருத்து வேறுபாடு காரணமாக கணவன்-மனைவி பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
திருநங்கைகள் மீது தாக்குதல்
Published on

ராஜபாளையம்

ராஜபாளையம் அருகே உள்ள சோலைசேரியை சேர்ந்தவர் ஐவராஜா (வயது28). அவர் கடையநல்லூரை சேர்ந்த திருநங்கை ஹன்சிகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இருவரும் குடும்பம் நடத்தி வந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக ஐவராஜா சொந்த ஊருக்கு வந்து விட்டார். இந்த நிலையில் அவரை பார்ப்பதற்காக ஹன்சிகா மற்றும் திருநங்கைகள் பிருந்தா, முகிலா, செல்லா, தீபா ஆகியோர் சோலைசேரிக்கு வந்தனர்.

அப்போது ஐவராஜாவின் குடும்பத்தினருக்கும், திருநங்கைகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக வெடித்தது. இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.

இந்த சம்பவம் குறித்து சேத்தூர் புறக்காவல் சப்-இன்ஸ்பெக்டர் லவகுசா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com