search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளா காட்டும் புதிய வழி - படிக்கும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உணவுடன் இலவச தங்குமிடம்
    X

    கேரளா காட்டும் புதிய வழி - படிக்கும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உணவுடன் இலவச தங்குமிடம்

    கேரளாவில் கல்வி பயிலும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உணவுடன் கூடிய இலவச தங்கும் விடுதிகளை அமைக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
    திருவனந்தபுரம் :

    மாற்று பாலினத்தவர்களுக்கு என பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை கேரள அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக  இந்தியாவிலேயே முதல் மாநிலமாக படிக்கும் மாற்று பாலினத்தவர்களுக்கு உணவுடன் கூடிய இலவச தங்கும் விடுதிகளை அமைத்துக்கொடுக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

    மாற்று பாலினத்தவர்களுக்கு என ‘சமன்வாயா’ எனும் சிறப்பு கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கல்வி திட்டத்தில் சேர்ந்து பயிலும் மாற்று பாலினத்தவர்களுக்கு உணவுடன் கூடிய தங்கும் விடுதி அமைக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா மற்றும் ஆலப்புழா உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இந்த தங்கும் விடுதிகள் அமைக்கப்பட உள்ளன.

    “தங்கும் விடுதி அல்லது வாடகை வீடுகள் போன்றவைகளில் வசிக்க மூன்றாம் பாலினத்தவர்கள் எனும் ஒரே காரணத்திற்காக அவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இதனால், அவர்கள் கல்வி பயில ஆர்வம் காட்டுவதில்லை. எனவே, உணவும் தங்கும் இடமும் அவர்கள் கல்வி கற்க ஒரு தடையாக இருக்க கூடாது என்பதால் இத்திட்டம் தொடங்கப்பட உள்ளது’’ என அம்மாநில கல்வித்துறை இயக்குனர் பி.எஸ்.ஸ்ரீகலா தெரிவித்துள்ளார்.

    சிறப்பு கல்வி திட்டத்தின் கீழ் நான்காம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை கல்வி பயிலும் மூன்றாம் பாலின மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகையும் , 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,250 உதவித்தொகையாக வழங்கப்ப உள்ளது.
    Next Story
    ×