search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Traffic Signal"

    • திருநங்கைகளுக்கு பொதுமக்கள் தானாக முன்வந்து யாசகம் வழங்கும் தொகையை விட அதிக பணம் வேண்டும் வலுக்கட்டாயமாக கேட்கிறார்கள்
    • போக்குவரத்து சிக்னல்கள் மற்றும் வீடுகளில் திருநங்கைகள் யாசகம் பெற போக்குவரத்து போலீசார் தடை

    மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள போக்குவரத்து சிக்னல்கள் மற்றும் வீடுகளில் திருநங்கைகள் யாசகம் பெற போக்குவரத்து போலீசார் தடை விதித்துள்ளனர்.

    திருநங்கைகள் யாசகம் பெறுவது வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக பலரும் புகார் தெரிவித்ததை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    தடையை மீறி திருநங்கைகள் யாசகம் பெற முயன்றால், சிசிடிவி மூலம் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    திருநங்கைகளுக்கு பொதுமக்கள் தானாக முன்வந்து யாசகம் வழங்கும் தொகையை விட அதிக பணம் வேண்டும் வலுக்கட்டாயமாக கேட்கிறார்கள் என்கிற தகவல் எங்களுக்கு கிடைத்தது. அதன் அடிப்படையில் தான் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று காவல்துறை ஆணையர் அமிதேஷ் குமார் தெரிவித்தார். 

    • போக்குவரத்து சிக்னல்களை அகலப்படுத்த திட்டம் நடந்து வருகிறது.
    • மேலமடை சந்திப்பில் பாலம் அமைகிறது.

    மதுரை

    மதுரை மாநகர் ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டு பல்வேறு மேம்பாட்டு திட்டங்கள் தொடர்ச்சியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மதுரை மாநகரில் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக உள்ள போக்குவரத்து நெரி சலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு பல்வேறு முயற்சிகளை போக்குவரத்து போலீ சாரும், மாநகராட்சி மாவட்ட நிர்வாகமும் மேற்கொண்டு வருகின்ற னர்.

    அந்த வகையில் மதுரை யில் போக்குவரத்து நெரி சல் மிக்க ஒன்றாக சிவகங்கை ரோடு உள்ளது. அண்ணா பஸ் நிலைய சந்திப்பில் இருந்து மேல மடை சந்திப்பு வரை உள்ள பகுதிகளில் உள்ள சாலை யில் சாதாரண நேரங்களில் கூட போக்குவரத்து நெரி சல் அதிகமாக காணப்படு கிறது.

    அண்ணா நகர், தெப்பக் குளம், கே.கே.நகர், மாட்டுத் தாவணி போன்ற நகரின் முக்கிய பகுதிகளுக்கான இணைப்பு சாலைகள் சிக்னல்களில் சந்திக் கின்றன. மேலும் அரசு ஆஸ்பத்திரி, கலெக்டர் அலுவலகம், முக்கிய மருத்துவமனைகள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள், பூங்கா மால்கள், கல்லூரிகள் உள்ளன.

    மதுரை நகரில் இருந்து திருச்சி, சென்னை, தூத்துக் குடி நான்கு வழிச்சாலை, ரிங்ரோடு செல்லும் வாக னங்களும் இந்த சாலையை பயன் படுத்தி வருகின்றனர். அண்ணா பஸ் நிலையம், ஆவின் பாலகம், மேலமடை சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது.

    தினசரி பல்லாயிரக் கணக்கான வாகனங்கள் இந்த சாலையில் சென்று வருகின்றன. இதனால் வாக னங்கள் சிக்னல்களில் அதிக நேரம் நீண்ட வரிசை யில் வேண்டி உள்ளது. இந்த நிலையில் இந்த சாலையில் போக்கு வரத்து நெரிசலை குறைக்கவும், வாகனங்கள் சிரம மின்றி செல்லவும், இந்த மூன்று சிக்னல் பகுதிகளை அகலப் படுத்தி மேம்படுத்தி நெடுஞ்சாலை துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

    இதற்காக நிலம் கையகப் படுத்தும் படுத்தும் பணி களை மாவட்ட நிர்வா கத்தின் சார்பில் வருவாய்த் துறையினர் மேற்கொண்டு வருவதாக தெரிய வருகிறது. அத்துடன் மேலமடை சந்திப்பில் அதிக நெரிசல் இருப்பதால் அங்கு மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    அண்ணா பஸ் நிலையம், ஆவின், ேமலமடை ஆகிய 3 சிக்னல்களிலும் 45 முதல் 50 அடி வரை சாலையை அகலப்படுத்தி ரவுண்டானா அமைக்கவும் திட்டமிட்டுள் ளது. இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    மதுரை மாநகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக சிவகங்கை ரோட்டில் உள்ள 3 முக்கிய சிக்னல்களை அகலப்படுத்தி மேம்படுத்த திட்டமிடப் பட்டுள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களில் சாலையை சீரமைக்கும் பணிகள் தொடங்கும்.

    இதற்காக சுமார் ரூ.160 கோடி திட்ட மதிப்பீட்டில் சாலையை மேம்படுத்தும் பணி மற்றும் பாலம் அமைக்கும் பணி மேற் கொள்ளப்பட உள்ளது. மேலமடை சந்திப்பில் பாண்டிகோவில் ரோடு, ஆவின் ரோட்டை இணைக்கும் வகையில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு பாலம் அமைக்கப்பட உள்ளது.

    • போக்குவரத்து சிக்னல்களில் ஒலிக்கும் ‘கரோக்கி’ இன்னிசையை வாகன ஓட்டிகள் வரவேற்கின்றனர்.
    • ஹெல்மெட் அணிவது அவசியம் போன்ற விழிப்புணர்வு வாசகங்களும் இடம் பெறுகின்றன.

    மதுரை

    மதுரையில் போக்கு வரத்து சிக்னலில் காத்தி ருக்கும் வாகன ஓட்டிகள் கடந்த சில நாட்களாக இனிய அனுபவத்தை சந்தித்து வருகிறார்கள். சிக்னலில் காத்திருக்கும் போது காற்றில் மிதந்து வரும் கரோக்கி இன்னி சையால் வாகன ஓட்டிகள் இன்ப அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.

    சிக்னல்களில் காத்தி ருக்கும் போது எரிச்சல் அடைபவர்கள் அதிகம் இதனால் அவர்கள் வாக னத்தில் வெறுப்புடன் காத்திருப்பார்கள். ஆனால் தற்போது சிக்னலில் காத்தி ருக்கும் போது இனிமையான இசை காதுகளில் தாலாட்டு வதால் எரிச்சல் அடை யாமல் காத்திருக்கின்றனர்.

    மேலும் இடையிடையே இரு சக்கர வாகனம் இருவர் செல்வதற்காக மட்டுமே படியில் பயணம் நொடியில் மரணம் வேகமாக வாகனத்தை இயக்க வேண்டாம். ஹெல்மெட் அணிவது அவசியம் போன்ற விழிப்புணர்வு வாசகங்களும் இடம் பெறுகின்றன. இதற்கு வாகன ஓட்டிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக போக்குவரத்து சிக்னலில் அதிக நேரம் காத்திருக்கும் கோரிப்பாளையம், காள வாசல், ஆரப்பாளையம், தெற்குவாசல், பெரியார் நிலையம், கீழவாசல் சிக்னல்களில் காத்திருப்ப வர்கள் இந்த நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டதை பெரிதும் வரவேற்கின்றனர்.இதுகுறித்து போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தங்கமணி கூறியதாவது:-

    சென்னை திருச்சி நகரங்களில் சிக்னல்களில் கரோக்கி இசையை ஒலி பரப்பும் நடைமுறைக்கு வரவேற்பு கிடைத்ததை அடுத்து மதுரை போலீஸ் கமிஷனர் லோகநாதன் போக்குவரத்து துணை கமிஷனர் குமார் ஆகி யோரின் முயற்சியில் கடந்த 28-ந்தேதி முதல் மதுரையில் செயல்பட்டு வருகிறது.

    மதுரை மாநகரில் உள்ள 32 சிக்னல்களில் கரோக்கி இசை ஒலிபரப்பு செயல் பாட்டில் இருக்கிறது. போக்குவரத்து கூடுதல் துணை ஆணையர் திருமலை குமார் வழிகாட்டு தலில், போக்குவரத்து உதவி ஆணையர்கள் செல்வின் மாரியப்பன் ஆகியோரின் மேற்பார்வை யில் இந்தத் திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது.

    சிக்னலில் வாகனங்களில் காத்திருக்கும் போது வாகன ஓட்டிகளை அமைதியான மன நிலைக்கு கொண்டு வரும் முயற்சியாக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. வாகன ஓட்டிகளும் இதனை வரவேற்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    • கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 2 சிக்னல் கம்பங்கள் திடீரென்று உடைந்து சாய்ந்தன.
    • 6 இடங்களில் புதிய சிக்னல் கம்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

    ஊத்துக்கோட்டையில் 6 இடங்களில் போக்குவரத்து போலீஸ் சார்பில் கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் சிக்னல்கள் அமைக்கப்பட்டன. பராமரிப்பு இல்லாத காரணத்தால் இவை பழுதடைந்தன.

    கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 2 சிக்னல் கம்பங்கள் திடீரென்று உடைந்து சாய்ந்தன. சிக்னல்கள் செயல்படாததால் ஊத்துக்கோட்டை பகுதியில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டாக புதிதாக பொறுப்பேற்ற கணேஷ்குமார், புதிய போக்குவரத்து சிக்னல்கள் அமைக்க முயற்சி மேற்கொண்டார். அதன்படி தற்போது 6 இடங்களில் புதிய சிக்னல் கம்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

    • மக்களோடு மக்களாக சிக்னலில் நின்று காத்திருந்து பயணம் செய்ய விரும்புகிறேன்.
    • கோடை வெயிலில் மக்கள் சிரமத்தை தவிர்க்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவையில் முதல்-அமைச்சர், அமைச்சர்கள், போலீஸ் டி.ஜி.பி, தலைமை செயலர் ஆகியோர் வாகனங்களில் செல்லும் போது, போக்குவரத்து சிக்னல்கள் நிறுத்தப்பட்டு வி.ஐ.பிக்கள் சென்ற பின்பு சிக்கனல்கள் இயக்கப்படுவது வழக்கம்.

    இதற்கிடையே கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிக்னலில் நிற்க மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் பகல் நேரத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமியின் வாகனம் சென்றபோது அவருக்காக போக்குவரத்து சிக்னல் நிறுத்தப்பட்டு அவரது வாகனம் சென்ற பின்பு சிக்னல் இயக்கப்பட்டது.

    தனது வாகனத்தால் பொதுமக்கள் வெயிலில் அவதிப்படுவதை கண்ட முதல்-அமைச்சர் ரங்கசாமி போலீசாருக்கு திடீர் உத்தரவு பிறப்பித்தார்.

    எனது வாகனம் செல்லும் போது சிக்னல்களை நிறுத்தி யாரையும் காத்திருக்க வைக்க வேண்டாம். மக்களோடு மக்களாக சிக்னலில் நின்று காத்திருந்து பயணம் செய்ய விரும்புகிறேன்.

    கோடை வெயிலில் மக்கள் சிரமத்தை தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார். முதல்-அமைச்சர் ரங்கசாமியின் இந்த உத்தரவை முன் உதாரணமாக கொண்டு அமைச்சர்கள், அதிகாரிகளும் சிக்னலில் காத்திருந்து செல்வார்களா? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.

    • கரூர் - கோவை சாலை பிரிவில் செயல்படாத போக்குவரத்து சிக்னலால் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர்.
    • நடவடிக்கை எடுக்க வேண்டும்

    கரூர்:

    கரூர் - கோவை சாலை பிரிவில் போக்குவரத்து சிக்னல் செயல் படாமல் உள்ளதால், அந்த பகுதியில், விபத்துகள் ஏற்படுகின்றன.

    கரூர் கோவை மற்றும் ஈரோடு பிரிவு சாலையில் தனியார், அரசு பள்ளிக்கூடங்கள், தனியார் வங்கியின் தலைமை அலுவலகம், காவலர் குடியிருப்பு மற்றும் ஏராளமான வர்த்தக நிறுவனங்கள் உள்ளன.

    இப்பகுதியில், பல மாதங்களுக்கு முன், சிக்னல் அமைக்கப்பட்டது. தற்போது அந்த சிக்னல் சேதமடைந்து, செயல்படாமல் உள்ளது. இதனை, நெடுஞ்சாலை துறை மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் போலீசார் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.

    இதனால், அந்த பகுதியில் அடிக் கடி போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, கரூர் - கோவை மற்றும் ஈரோடு சாலை பிரிவில், சேதமடைந்துள்ள போக்குவரத்து சிக்னலை உடனடி யாக சரி செய்ய, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஒட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
    • அரசு மதுபான கடைகளில் விலை அதிகம் வைத்து மதுபானம் விற்பதை தடுக்க வேண்டும்.

    பல்லடம் :

    திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது. பொதுச்செயலாளர் கே. சி. எம். பி. சீனிவாசன் தலைமை வகித்தார். வர்த்தகர் அணி செந்தில்குமார், பொருளாதார அணி மனோகர் ,ஒன்றியத் தலைவர் ரமேஷ், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஒன்றிய பொதுச் செயலாளர் கார்த்திகேயன் வரவேற்றார். இந்தக் கூட்டத்தில்,அரசு மதுபான கடைகளில் விலை அதிகம் வைத்து மதுபானம் விற்பதை தடுக்க வேண்டும், காரணம்பேட்டை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளுக்கும் நீர் பாசன வசதி ஏற்படுத்தி தர வேண்டும், விசைத்தறி தொழிலை பாதுகாத்திட வேண்டும் , காரணம் பேட்டை சிக்னலில் போக்குவரத்து காவலர் நியமிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தக் கூட்டத்தில்,திருப்பூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 12-ம் வகுப்பு தேர்வில் 2 இடம் பிடித்த காரணம்பேட்டையை சேர்ந்த பாலசண்முகத்திற்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.பல்லடம் நகர பா.ஜ.க செயற்குழு கூட்டம் நகர தலைவர் வடிவேலன் தலைமையில் நடைபெற்றது. இதில் மகளிர் அணி மாநில செயலாளர் சுதா மணி, திருப்பூர் வடக்கு மாவட்ட துணைத்தலைவர் வினோத் வெங்கடேஷ், மற்றும் நிர்வாகிகள் மணிவேல், மனோகரன், பன்னீர் செல்வகுமார், நகர்மன்ற உறுப்பினர்கள் சசிரேகா ரமேஷ், ஈஸ்வரி, உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல பல்லடம் வடக்கு ஒன்றிய பா.ஜ.க. செயற்குழு கூட்டம் ஒன்றிய தலைவர் பூபாலன் தலைமையில் நடைபெற்றது.

    இதில் மாநில செயற்குழு உறுப்பினர் நாச்சிமுத்து, விவசாய அணி ரமேஷ்,மற்றும் குருமூர்த்தி,உள்ளிட்ட பா.ஜ.க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ×