காரணம்பேட்டை சிக்னலில் போக்குவரத்து காவலர் நியமிக்க வேண்டும் - பா.ஜ.க. வலியுறுத்தல்

திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது.அரசு மதுபான கடைகளில் விலை அதிகம் வைத்து மதுபானம் விற்பதை தடுக்க வேண்டும்.
 பா.ஜ.க.  செயற்குழு கூட்டம்   நடைபெற்ற காட்சி.
 பா.ஜ.க. செயற்குழு கூட்டம் நடைபெற்ற காட்சி.
Published on

பல்லடம் :

திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது. பொதுச்செயலாளர் கே. சி. எம். பி. சீனிவாசன் தலைமை வகித்தார். வர்த்தகர் அணி செந்தில்குமார், பொருளாதார அணி மனோகர் ,ஒன்றியத் தலைவர் ரமேஷ், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஒன்றிய பொதுச் செயலாளர் கார்த்திகேயன் வரவேற்றார். இந்தக் கூட்டத்தில்,அரசு மதுபான கடைகளில் விலை அதிகம் வைத்து மதுபானம் விற்பதை தடுக்க வேண்டும், காரணம்பேட்டை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளுக்கும் நீர் பாசன வசதி ஏற்படுத்தி தர வேண்டும், விசைத்தறி தொழிலை பாதுகாத்திட வேண்டும் , காரணம் பேட்டை சிக்னலில் போக்குவரத்து காவலர் நியமிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தக் கூட்டத்தில்,திருப்பூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 12-ம் வகுப்பு தேர்வில் 2 இடம் பிடித்த காரணம்பேட்டையை சேர்ந்த பாலசண்முகத்திற்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.பல்லடம் நகர பா.ஜ.க செயற்குழு கூட்டம் நகர தலைவர் வடிவேலன் தலைமையில் நடைபெற்றது. இதில் மகளிர் அணி மாநில செயலாளர் சுதா மணி, திருப்பூர் வடக்கு மாவட்ட துணைத்தலைவர் வினோத் வெங்கடேஷ், மற்றும் நிர்வாகிகள் மணிவேல், மனோகரன், பன்னீர் செல்வகுமார், நகர்மன்ற உறுப்பினர்கள் சசிரேகா ரமேஷ், ஈஸ்வரி, உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல பல்லடம் வடக்கு ஒன்றிய பா.ஜ.க. செயற்குழு கூட்டம் ஒன்றிய தலைவர் பூபாலன் தலைமையில் நடைபெற்றது.

இதில் மாநில செயற்குழு உறுப்பினர் நாச்சிமுத்து, விவசாய அணி ரமேஷ்,மற்றும் குருமூர்த்தி,உள்ளிட்ட பா.ஜ.க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com