கரூர் - கோவை சாலை பிரிவில் செயல்படாத போக்குவரத்து சிக்னல்

கரூர் - கோவை சாலை பிரிவில் செயல்படாத போக்குவரத்து சிக்னலால் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர்.நடவடிக்கை எடுக்க வேண்டும்
கரூர் - கோவை சாலை பிரிவில் செயல்படாத போக்குவரத்து சிக்னல்
Published on

கரூர்:

கரூர் - கோவை சாலை பிரிவில் போக்குவரத்து சிக்னல் செயல் படாமல் உள்ளதால், அந்த பகுதியில், விபத்துகள் ஏற்படுகின்றன.

கரூர் கோவை மற்றும் ஈரோடு பிரிவு சாலையில் தனியார், அரசு பள்ளிக்கூடங்கள், தனியார் வங்கியின் தலைமை அலுவலகம், காவலர் குடியிருப்பு மற்றும் ஏராளமான வர்த்தக நிறுவனங்கள் உள்ளன.

இப்பகுதியில், பல மாதங்களுக்கு முன், சிக்னல் அமைக்கப்பட்டது. தற்போது அந்த சிக்னல் சேதமடைந்து, செயல்படாமல் உள்ளது. இதனை, நெடுஞ்சாலை துறை மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் போலீசார் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.

இதனால், அந்த பகுதியில் அடிக் கடி போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, கரூர் - கோவை மற்றும் ஈரோடு சாலை பிரிவில், சேதமடைந்துள்ள போக்குவரத்து சிக்னலை உடனடி யாக சரி செய்ய, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஒட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com