ஊத்துக்கோட்டையில் போக்குவரத்து சிக்னல் சீரமைப்பு

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 2 சிக்னல் கம்பங்கள் திடீரென்று உடைந்து சாய்ந்தன. 6 இடங்களில் புதிய சிக்னல் கம்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
ஊத்துக்கோட்டையில் போக்குவரத்து சிக்னல் சீரமைப்பு
Published on

ஊத்துக்கோட்டையில் 6 இடங்களில் போக்குவரத்து போலீஸ் சார்பில் கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் சிக்னல்கள் அமைக்கப்பட்டன. பராமரிப்பு இல்லாத காரணத்தால் இவை பழுதடைந்தன.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 2 சிக்னல் கம்பங்கள் திடீரென்று உடைந்து சாய்ந்தன. சிக்னல்கள் செயல்படாததால் ஊத்துக்கோட்டை பகுதியில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டாக புதிதாக பொறுப்பேற்ற கணேஷ்குமார், புதிய போக்குவரத்து சிக்னல்கள் அமைக்க முயற்சி மேற்கொண்டார். அதன்படி தற்போது 6 இடங்களில் புதிய சிக்னல் கம்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com