search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sunflower Seeds"

    • உடல் எடை குறைக்க உதவும் விதைகள்.
    • உடலில் தொப்பை வர முக்கிய காரணம் ஆரோக்கியமற்ற உணவு முறை.

    பொதுவாக உடல் எடை குறைக்க உதவும் விதைகள் பற்றி இந்த பதிவில் நாம் காணலாம்.

    இன்றைய காலகட்டத்தில் உடல் எடை காரணமாக பெரும்பாலானோர் பல்வேறு டயட் உணவுகளையும், உடற்பயிற்சிகளையும் செய்கிறார்கள். குறிப்பாக உடலில் தொப்பை வர முக்கிய காரணம் ஆரோக்கியமற்ற உணவு முறை மட்டுமே. எனவே ஆரோக்கியம் தரும் இந்த மூன்று விதைகளை உணவில் சேர்க்கும் போது அது நம் உடலில் இருக்கும் கொழுப்பை கரைத்து உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை கொடுக்க உதவுகிறது.

     சியா விதைகள்

    சியா விதைகளில் சுமார் 92 சதவீதம் அளவுக்கு நார்ச்சத்து நிரம்பியுள்ளது. இதனால், மாவுச்சத்து குறைவாக இருக்கிறது. இந்த நார்ச்சத்து என்பது கரையும் தன்மை கொண்டது. நம் குடலில் உள்ள நன்மை பயக்கும் பாக்டீரியாக்களுக்கு உணவாக பயன்படுகிறது.

    இதனால், குடல் நலன் மேம்படும். தினசரி உங்கள் உணவுப் பட்டியலில் சியா விதைகள் இருந்தால், இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை தவிர்க்கலாம். குறிப்பாக, ரத்தத்தில் உள்ள டிரிகிளைசைரைடு கொழுப்பை இது கரைக்கிறது. உடல் உள்ளுறுப்புகளின் வீக்கம் குறைவதுடன், இன்சுலின் சுரப்பு அதிகமாகிறது. உடலுக்கு நன்மை பயக்கும் ஹெச்டிஎல் கொழுப்பு அதிகரிக்கும்.

    இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் இதை காலையில் எடுத்துக் கொள்ளும் போது அதிக நேரத்திற்கு பசி எடுக்காமல் இருக்கும். குறிப்பாக வளர்ச்சிதை மாற்றத்தை விரைவுப்படுத்த உதவுகிறது. மிக முக்கியமாக இது உடல்நிலை இருக்கும் கலோரிகளை எரிக்க முக்கிய பங்கு வகிக்கிறது.

     ஆளி விதைகள்

    ஆளிவிதையில் அதிகபடியான நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கலை போக்குகிறது. ஆளிவிதையை அதிகளவில் உட்கொள்ளும்போது, வயிறு மற்றும் குடல் பகுதிகள் ஆரோக்கியமாக இருக்கும். ஆளிவிதையை இரவில் ஊறவைத்து காலையில் சுண்டல் போல தாளித்து சாப்பிட்டு வந்தால், இதயத்தைக் காப்பாற்றுகிறது, இரண்டாவது மூளையின் சக்தி அதிகரிக்கிறது. மூன்றாவது புற்றுநோய்வராமல் தடுக்கிறது.

    100 கிராம் ஆளிவிதை 530 கலோரி சக்தி, 37 கிராம் நல்ல கொழுப்பு, 28 கிராம் நார்ச்சத்து, 20 கிராம் புரதம் தருகிறது. புரதச் சத்து நிறைந்துள்ள ஆளிவிதையில் லிக்னன்ஸ், நார்ச்சத்து, ஒமேகா-3 என்ற நல்ல கொழுப்பு அமிலம், என்று மூன்று உயிராற்றலை சுறுசுறுப்பாக்கும் சத்துக்களும் உள்ளன. இதை சாப்பிடும் போது இதில் இருக்கும் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.

     சூரியகாந்தி விதை

    சூரிய காந்தி விதையின் மேற்புறத்தில் மெல்லிய ஓடு அமைந்து இருக்கும். இதனை உமி என்று குறிப்பிடுவார்கள். உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை ஏராளமாக கொண்டுள்ள இவ்விதையில், வைட்டமின் ஈ, பி, மாங்கனீசு, மக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம், துத்தநாகம், செலீனியம் போன்றவை கணிசமான அளவில் உள்ளன.

    இவைதவிர, இரும்பு மற்றும் நார்ச்சத்தும் இருக்கின்றன. களைப்பை நீக்கி, உடலுக்குப் புத்துணர்வையும், தேவைப்படும் ஆற்றலையும் தரக்கூடியது. குடல் எரிச்சல், மலச்சிக்கல் போன்ற பாதிப்புகளைக் கட்டுப்படுத்த உதவும்.

    சூரியகாந்தி விதையிலிருந்து சராசரியாக 165 கலோரி, கொழுப்பு 14 கிராம், புரதம் 5 கிராம் ஆகியவை நமக்குக் கிடைக்கின்றன.

    சூரியகாந்தி விதையை பயன்படுத்தி நாம் டீ அல்லது சூப் செய்து சாப்பிட்டு வந்தால் நல்லது. மேலும் இது உடலில் இருக்கும் கொழுப்புகளை கரைப்பது மட்டுமில்லாமல் செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களுக்கு இந்த பிரச்சனைகளை நீக்கி குடலை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.

    எனவே ஆரோக்கியமான உணவுகளை உணவில் சேர்த்து உடலை பிட்டாக வைத்து ஆரோக்கியமாக வாழலாம்.

    • நேற்று (வியாழக்கிழமை) 7 விவசாயிகள் கலந்து கொண்டு 4 ஆயிரத்து 435 கிலோ சூரியகாந்தி விதைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • மொத்தம் ரூ.2 லட்சத்து 17ஆயிரத்து 911-க்கு வணிகம் நடைபெற்றது.

    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று தேங்காய் பருப்பும் வியாழக்கிழமை அன்று சூரியகாந்தி விதைகளும் ஏலம் நடைபெற்று வருவது வழக்கம்.

    இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை. திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதைகளை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். இந்நிலையில் நேற்று (வியாழக்கிழமை) 7 விவசாயிகள் கலந்து கொண்டு 4 ஆயிரத்து 435 கிலோ சூரியகாந்தி விதைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கயம், ஈரோடு பகுதிகளை சேர்ந்த 3 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ சூரியகாந்தி விதையை அதிகபட்சமாக ரூ.50.39-க்கும், குறைந்தபட்சமாக ரூ.40.70-க்கும் கொள்முதல் செய்தனர். மொத்தம் ரூ.2 லட்சத்து 17ஆயிரத்து 911-க்கு வணிகம் நடைபெற்றது. இந்த தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    • பல்வேறு பகுதிகளில் இருந்து 50 விவசாயிகள் தங்களுடைய 916 மூட்டை சூரியகாந்தி விதைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனா்.
    • முத்தூரில் இருந்து 8 வணிகா்கள் சூரியகாந்தி விதைகளை வாங்க வந்திருந்தனா்.

    வெள்ளகோவில்:

    வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.21.46 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது.

    இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு வள்ளிப்பட்டி, வாகரை, காவல்பட்டி, விராலிபட்டி, சுள்ளெறும்பு, கொத்தயம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 50 விவசாயிகள் தங்களுடைய 916 மூட்டை சூரியகாந்தி விதைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை 45 ஆயிரத்து 87 கிலோ.ஈரோடு, சித்தோடு, நடுப்பாளையம், முத்தூரில் இருந்து 8 வணிகா்கள் சூரியகாந்தி விதைகளை வாங்க வந்திருந்தனா்.

    சூரியகாந்தி விதை கிலோ ரூ. 42.89 முதல் ரூ.51.39 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 47.52.ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ. 21.46 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக்கூட கண்காணிப்பாளா் சி. மகுடீஸ்வரன் தெரிவித்தாா். 

    • 27 ஆயிரத்து 181 கிலோ சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • ஒரு கிலோ சூரியகாந்தி விதை அதிகபட்சமாக ரூ.47.62க்கும், குறைந்தபட்சம் ரூ.39.42க்கும் கொள்முதல் செய்தனர்

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பு வியாழனன்று சூரியகாந்தி விதை ஏலம் நடைபெறும்.இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். நேற்று வியாழக்கிழமை 36 விவசாயிகள் கலந்து கொண்டு 27 ஆயிரத்து 181 கிலோ சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், ஈரோடு பகுதியைச் சேர்ந்த 7 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ சூரியகாந்தி விதை அதிகபட்சமாக ரூ.47.62க்கும், குறைந்தபட்சம் ரூ.39.42க்கும் கொள்முதல் செய்தனர்.

    நேற்று மொத்தம் ரூ.11லட்சத்து 71ஆயிரத்து 987க்கு வணிகம் நடைபெற்றது. இத்தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனை க்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    • 1,329 மூட்டைகள் சூரியகாந்தி விதைகளை விற்பனை செய்யக் கொண்டு வந்திருந்தனா்.
    • ஒரு கிலோ ரூ. 41.04 முதல் ரூ. 47.59 வரை விற்பனையானது.

    வெள்ளகோவில் :

    வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 28.33 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது.

    வேடசந்தூா், காவல்பட்டி, நடுப்பட்டி, ஆத்தூா், புங்கம்பாடி, நெல்லிக்கோம்பை, மூலனூா் உள்ளிட்ட ஊா்களில் இருந்து 77 விவசாயிகள் தங்களுடைய 1,329 மூட்டைகள் சூரியகாந்தி விதைகளை விற்பனை செய்யக் கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை 65 ஆயிரத்து 608 கிலோ. ஈரோடு, காரமடை, சித்தோடு, நடுப்பாளையம், பூனாட்சி, காங்கயத்தில் இருந்து 7 வணிகா்கள் இதை வாங்குவதற்காக வந்திருந்தனா்.

    ஒரு கிலோ ரூ. 41.04 முதல் ரூ. 47.59 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 44.44. கடந்த வார சராசரி விலை ரூ. 45.19. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ. 28.33 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூட கண்காணிப்பாளா் சி. மகுடீஸ்வரன் தெரிவித்தாா். 

    • 51 ஆயிரத்து 413கிலோ சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • சூரியகாந்தி விதை அதிகபட்சமாக ரூ.51.39க்கும், குறைந்தபட்சம் ரூ.42.19க்கும் கொள்முதல் செய்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வார ம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பும், வியாழனன்று சூரியகாந்தி விதையும் ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை. திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வந்து விற்று செல்கிறார்கள். நேற்று வியாழக்கிழமை 61 விவசாயிகள் கலந்து கொண்டு 51 ஆயிரத்து 413கிலோ சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர், இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், ஈரோடு பகுதியைச் சேர்ந்த 11வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ சூரியகாந்தி விதை அதிகபட்சமாக ரூ.51.39க்கும், குறைந்தபட்சம் ரூ.42.19க்கும் கொள்முதல் செய்தனர்.

    நேற்று மொத்தம் ரூ.24லட்சத்து 58ஆயிரத்து 480க்கு வணிகம் நடைபெற்றது. இத்தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனை க்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்து ள்ளார்.

    • 1 லட்சத்து 68ஆயிரத்து 294கிலோ சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • 219 விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பு வியாழனன்று சூரியகாந்தி விதை ஏலம் நடைபெறும். இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை. திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்,

    நேற்று வியாழக்கிழமை 219 விவசாயிகள் கலந்து கொண்டு 1 லட்சத்து 68ஆயிரத்து 294கிலோ சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், ஈரோடு பகுதியைச் சேர்ந்த 8 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ சூரியகாந்தி விதை அதிகபட்சமாக ரூ.67.10க்கும், குறைந்தபட்சம் ரூ.55.53க்கும் கொள்முதல் செய்தனர். நேற்று மொத்தம் ரூ. 1கோடியே 4லட்சத்து 54ஆயிரத்து 874-க்கு வணிகம் நடைபெற்றது.

    விவசாயிகள் சூரியகாந்தி விதைகளை புதன்கிழமை காலை 6 மணி முதல் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வரலாம் என வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
    • சமையல் எண்ணெய் விலைகள் அதிக அளவில் உயர்ந்து வருகிறது.

    வெள்ளகோவில் :

    திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் பகுதியில் உள்ள ஒழுங்கு முறை விற்பனை கூடம் வாயிலாக, விவசாயிகள் கொண்டு வரும் சூரியகாந்தி விதைகள் ஏல முறையில் நேரடியாக வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் ஒரு கிலோ சூரியகாந்தி விதைகள் 65 முதல் 73 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. சராசரி விலையாக ரூ.66-க்கு விலை போனதால் விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் ஊத்துக்குளி, குண்டடம், தாராபுரம், மடத்துக்குளம் பகுதிகளில் சூரியகாந்தி பயிரிடப்படுகிறது. உக்ரைன் போர் காரணமாக அங்கிருந்து சூரியகாந்தி விதைகள் உலக நாடுகளுக்கு ஏற்றமதியாவது தடைபட்டுள்ளது. இதன் காரணமாக சமையல் எண்ணெய் விலைகள் அதிக அளவில் உயர்ந்து வருகிறது. மேலும் மற்ற எண்ணெய் வித்துகளில் இருந்து தயாராகும் எண்ணெய் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது‌.

    இந்நிலையில், சந்தையில் சூரியகாந்தி எண்ணெய் விலை கிலோவுக்கு ரூ.230 ரூபாயை கடந்து விற்பனையாகும் நிலையில், விதைகளுக்கு போதிய விலை கிடைக்காமல் சரிவை சந்தித்து வருகிறது. சூரியகாந்தி பயிரிட்டு விதைகளை அறுவடை செய்து விற்பனைக்கு கொண்டு வரும் விவசாயிகளுக்கு போதிய விலை கிடைக்காததால் அவர்களுக்கு நஷ்டம் அடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    வெளிச்சந்தையில் சூரியகாந்தி எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையில், விதைக்கு விலை கிடைக்கவில்லை. பெரு நிறுவனங்கள் சிண்டிகேட் அமைத்து விதைக்கு விலை கிடைக்காமல் செய்வதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    ×