search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "National Conference"

    • காசாவில் அனைத்து பொருட்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது
    • காசாவில் ரத்தம் சிந்தப்படுவதை இந்தியா தடுக்க வேண்டும் என்றார் ஃபரூக்

    பாலஸ்தீன காசா பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்க இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரமடைகிறது.

    காசா மீது வான்வழி மற்றும் தரைவழியாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் 9 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக பாலஸ்தீனம் அறிவித்துள்ளது. காசாவில் குடிநீர், எரிபொருள், மருந்து, உணவு உட்பட அனைத்து அத்தியாவசிய பொருட்களுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

    இந்நிலையில், முன்னாள் ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லாவின் இல்லத்தில் ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து கோரும் குப்கர் மக்கள் கூட்டணி தலைவர்களின் சந்திப்பு நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து காசா பிரச்சனை குறித்து ஃபரூக் அப்துல்லா கருத்து தெரிவித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    காசா மருத்துவமனைகளில் மருந்து, நீர், மின்சாரம் எதுவும் இல்லை. நம் நாட்டு மக்கள் காசா மக்களுக்கு ஆதரவாக துணை நின்று குரல் கொடுக்க வேண்டும். அங்கு அமைதி திரும்ப இந்தியா முயற்சி எடுக்க வேண்டும். அகிம்சையை போதித்த மகாத்மா காந்தி பிறந்த நாடு இந்தியா. காசாவில் ரத்தம் சிந்தப்படுவதை தடுக்க அனைத்து வழிகளையும் இந்தியா ஆராய வேண்டும்.

    இவ்வாறு ஃபரூக் அப்துல்லா தெரிவித்தார்.

    • ஸ்ரீ ராமச்சந்திரா செவிலியர் கல்லூரியின் முதல்வர் நளினி தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
    • இதில் ஏராளமான செவிலிய பேராசிரியர்கள், செலவி லியர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

    பாகூர், ஜூன்.19-

    ஸ்ரீபாலாஜி வித்யாபீத் பல்கலைக்கழகத்தின் கீழ் பிள்ளையார்குப்பத்தில் இயங்கும் மகாத்மாகாந்தி மருத்துவ கல்லூரி வளாகத்தில் கஸ்தூரிபாய் காந்தி செவிலியர் கல்லூரி உள்ளது.

    இக்கல்லூரியில் செவிலிய ஆராச்சியை வெற்றிகரமாக மாற்று வதற்கான வழிதடங்கள் என்ற தலைப்பில் தேசிய மாநாடு நடைபெற்றது.

    நிகழச்சிக்கு ஸ்ரீபாலாஜி வித்யாபீத் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் நிஹார் ரஞ்சன் பிஸ்வாஸ் தலைமை தாங்கி உரையாற்றினார். ஸ்ரீ ராமச்சந்திரா செவிலியர் கல்லூரியின் முதல்வர் நளினி தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார்.

    கிறிஸ்டியன் செவிலியர் கல்லூரியின் பேராசிரியர் மனோரஞ்சிதம் சத்தியசீலன் கவுரவ விருந்தினராக கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

    இந்த தேசிய மாநாட்டில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள செவிலியர் கல்லூரிகளில் இருந்து செவிலியர் நிபுணர்கள், பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினர். இதில் ஏராளமான செவிலிய பேராசிரியர்கள், செலவிலியர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

    முன்னதாக கஸ்தூரி பாய்காந்தி செவிலியர் கல்லூரி பேராசிரியை கீதா வரவேற்புரையாற்றினார். முடிவில் பேராசிரியை ஆனிஅன்னாள் நன்றி கூறினார்.

    • கலசலிங்கம் மருந்தாக்கியல் கல்லூரியில் தேசிய மாநாடு நடந்தது.
    • மாநாட்டில் கலந்துகொண்ட மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    தமிழ்நாடு பர்மசூட்டிகல் சயின்சஸ் அறக்கட்டளை, இந்தியன் பர்மசூட்டிகல் அசோசியேசன்ஸ் தமிழ்நாடு மற்றும் டானிப்பா டிரஸ்ட் ஆதரவுடன் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்துடன் 2 நாள் தேசிய மாநாடு ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் மருந்தாக்கியல் கல்லூரியில் நடந்தது.

    கல்லூரியின் தலைவர் ஸ்ரீதரன் தலைமை தாங்கினார். தாளாளர் டாக்டர்.அறிவழகி, செயலாளர் எஸ்.சசி ஆனந்த், இயக்குநர் எஸ். அர்ஜுன் கலசலிங்கம் முன்னிலை வகித்தனர். முதல்வர் வெங்கடேசன் வரவேற்றார்.

    மதுரை மண்டல மருந்து கட்டுப்பாட்டு துணை இயக்குநர் என்.சி. ரவிச்சந்திரன், விருதுநகர் மண்டல மருந்துகள் கட்டுப்பாட்டு துணை இயக்குநர் ஆர்.இளங்கோ, தலைமை விருந்தினர்களாகவும், டானிப்பா டிரஸ்டின் செயலாளர் யூசுப், ஐகாரஸ் ஹெல்த்கேர் நிறுவன இயக்குநர் ஆர்.இளங்கோ கவுரவ விருந்தினர்களாகவும் பங்கேற்று பேசினர்.

    ஜெனெக்சியா பயோசெர்வின் ஆராய்ச்சி விஞ்ஞானி முகேஷ் சுப்பிரமணியன், மைலான் லெபாரட்டரிஸ் நிறுவனத்தின் உற்பத்தி இணை இயக்குநர் பிரசாத் பழனிச்சாமி, ஐகாரஸ் ஹெல்த் கேர் நிறுவனத்தின் இயக்குநர் ஆனந்த் செல்வம், பார்மா கியூ.எஸ். எல்.எல்.பி-ன் குவாலிட்டி சிஸ்டெம்ஸ் அன்ட் ஆடிட் இயக்குநர் சிவக்குமார், ஈன்நெக்ஸ்ட் பயோசயின்சஸ் நிறுவனத்தின் இயக்குநர்-தலைவர் தட்சணா மூர்த்தி ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் பேசினர்.

    பார்ம் டி முதல் பேட்ச் மாணவர்களுக்கு படிப்பு முடிந்ததற்கான சான்றிதழ்களை முனைவர் க. ஸ்ரீதரன் வழங்கினார். நிறைவு விழாவின் சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டாளர் சாரங்கபாணி பங்கேற்று பேசினார்.

    மாநாட்டில் கலந்துகொண்ட மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அமைப்பு செயலாளர்-பேராசிரியர் எஸ்.ஆர். செந்தில் குமார் நன்றி கூறினார். மாநாட்டிற்கான ஏற்பாடுகளை கன்வீனர்-பேராசிரியர் அன்புராஜ் உள்ளிட்ட பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

    • ராமநாதபுரத்தில் தேசிய மாநாடு இன்று மாலை தொடங்குகிறது,
    • வருகிற 18-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

    ராமநாதபுரம்

    முன்னாள் முதல்வர் காமராஜர் பெயரில் காமராஜர் பவுண்டேசன் ஆப் இந்தியா என்ற பெயரில் அமைப்பு இயங்கி வருகிறது. இதன் நிறுவனத் தலைவரும், கேரள முன்னாள் அமைச்சருமான நீல லோகிததாசன் நிருபர்களிடம் கூறுகையில், எங்கள் அமைப்பு சார்பில் 46-வது தேசிய மாநாடு ராமநாதபுரத்தில் இன்று மாலை (16-ந்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கி 18-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இன்றைய அரசியலுக்கு காமராஜரின் அரசியல் நாகரீகம், பண்பாடு, கலாச்சாரம் நடவடிக்கைகள் அவசியம் என்பது குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள், மாணவர்களுக்கு எடுத்துரைக்கும் வகையிலும், காமராஜரின் புகழை பரப்புதல் மற்றும் கல்வி மருத்துவ முகாம், மருத்துவ சேவை மற்றும் இன்றைய இளைய தலைமுறையினரிடையே காமராஜரின் புகழை பரப்பும் நோக்கத்திலும் இந்த மாநாடு நடைபெற உள்ளது. இதில் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொள்ள உள்ளனர் என்றார்.

    காமராஜ் பவுண்டேசன் ஆப் இந்தியா தேசிய செயலாளர் சேதுராமன், மாநாட்டு ஏற்பாட்டு குழு செயலாளர் நற்றமிழ்செல்வன், மாவட்ட செயலாளர் குகன், ஒருங்கிணைப்பாளர் சம்சுல் கபீர், இணைச் செயலாளர் அப்துல் பாசித், முருகேசன், அபுதாகிர், முஜம்மில், மருதுபாண்டி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    • இந்திய அளவில் பெரும் சவால்கள் எழுந்துள்ள நிலையில் கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்துக்களை பலரும் எதிர்பார்க்கின்றனர்.
    • பாஜக. அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது.

    திருப்பூர் :

    திருப்பூரில் உள்ள வித்யா கார்த்திக் திருமண மண்டபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25 -வது மாநில மாநாடு கடந்த சனிக்கிழமை தொடங்கியது. இந்தநிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கட்சியின் 24 -வது தேசிய மாநாடு வரும் அக்டோபர் 14 முதல் 18 -ந்தேதி வரையில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடைபெறவுள்ளது. இதற்கு முன்னதாக அனைத்து மாநிலங்களிலும் மாநில மாநாடுகளை நடத்தி வருகிறோம். இதன்படி திருப்பூரில் தற்போது தமிழ்நாடு மாநில மாநாடு நடைபெற்று வருகிறது. இதற்குப் பின்னர் பல மாநிலங்களிலும் மாநாடுகள் நடைபெறவுள்ளது.

    கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த மாநாடுகள் எல்லாம் மிகுந்த அரசியல் முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. அகில இந்திய அளவில் பெரும் சவால்கள் எழுந்துள்ள நிலையில் கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்துக்கள் என்ன என்பதை பலரும் எதிர்பார்க்கின்றனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை பொருத்தவரையில் மத்திய பாஜக. அரசு மக்கள் விரோத, தேச விரோத கொள்கைகளை பொருளாதாரம், அரசியல் சமூக தளத்தில் பின்பற்றி வருகிறது. பாஜக. அரசு அப்பட்டமாக பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. உலக அளவில் அனைத்து கருத்துக்கணிப்புகளும் சொல்வது இந்தியாவில் வறுமை வளர்ந்து கொண்டிருப்பதுடன், பசி வளர்ந்து மக்கள் உணவற்ற நிலையில் தவிக்கின்றனர். மக்கள் வேலையில்லாத் திண்டாட்டத்தை அனுபவித்து வருகின்றனர். ஊடகங்கள் உள்பட மக்களின் கருத்துச் சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுகிறது என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கின்றனர். இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ள பொதுத்துறை தனியார் மயமாக்குகிறது. அம்பானி, அதானி போன்ற பெருமுதலாளிக்களுக்கு ஆதரவான அனைத்தையும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு செய்து கொண்டிருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்களில்தான் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு உள்ளது. தனியார் துறையில் இதுவரையில் இட ஒதுக்கீடு கொண்டுவரப்படவில்லை. இதற்கு மத்திய அரசு தயாராக இல்லை. இதன் காரணமாகத்தான் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படுவது சமூக நீதி கொள்கைக்கு எதிரானது என்று நாம் குற்றம் சொல்லுகிறோம். பொருளாதாரம் என்று வரும்போது விவசாயத்துறையைப் பார்க்க வேண்டும். இந்த விவசாயிகள் ஒரு ஆண்டு போராடி 700 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப்பெற்றுள்ளது.

    இந்த சட்டங்களை திரும்பப்பெற்ற பின்னர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றப்படவில்லை. விவசாயிகளின் விலை பொருளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, பயிர் காப்பீடு திட்டம் ஆகியவை செயல்படுத்தப்படவில்லை. விவசாயிகள் மீண்டும் கிளர்ச்சியில் இறங்குவோம் என்று எச்சரித்துள்ளனர். நாடு முழுவதும் வங்கித்துறை, எல்ஐசி, விமான நிலையங்கள், துறைமுகங்கள் தனியார் மயமாகி வருகிறது. இந்த சூழ்நிலையில்தான் மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கையை எதிர்த்துப் போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. மாநில உரிமைகள் அனைத்தையும் மத்திய அரசு பறித்துவருகிறது. கல்வி மாநில பட்டியலில் இடம் பெற வேண்டிய நிலையில் கல்விக் கொள்கைகளைத் தீர்மானிப்பது மத்திய அரசு மாநிலங்களைக் கலந்து ஆலோசிப்பது இல்லை. இதன் காரணமாகத்தான் புதிய கல்விக் கொள்கை எல்லோராலும் எதிர்க்கப்படக்கூடிய ஒன்றாக வந்துள்ளது. தேசிய கல்விக்கொள்கையானது கல்வியை தனியார்மயமாகவும், வாணிபமயமாகவும் மாற்றுகிறது.

    இந்தியாவை ஒற்றைப்பரிமாண நாடாக மாற்ற வேண்டும் என்று மத்திய அரசு செயல்பட்டுக் கொண்டிருகிறது. பல மொழிகளையும், பல பரிமாணங்களையும் கொண்ட நாடாகும். இந்தியாவில் சமூக, மத நல்லிணக்கம், சமூக நீதி கொள்கைகள், கூட்டாட்சி நெறிமுறைகள் எல்லாம் தகர்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான் அகில இந்திய அளவில் பாஜக.முறியடிக்கப்பட வேண்டும். இந்திய அரசியல் சட்டம், இந்திய ஜனநாயகம், நாட்டின் பன்முகத் தன்மை காப்பாற்றப்பட வேண்டும் என்றால் வரும் 2024 -ம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. முறியடிக்கப்பட வேண்டும் என்றார். இந்த சந்திப்பின்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் எம்.ரவி உடனிருந்தார்.

    ஜம்மு காஷ்மீரில் பிடிபி மற்றும் காங்கிரஸ் இணைந்து ஆட்சியமைப்பது பற்றி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இன்று ஆளுநரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #JKGovt #Mehbooba #GrandAllianceInJK
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி), பா.ஜ.க. ஆதரவுடன் கடந்த 1-3-2015 அன்று ஆட்சி அமைத்தது. பி.டி.பி. தலைவர் முப்தி முகம்மது சயீத் முதல் மந்திரியாகவும், பா.ஜ.க. தரப்பில் நிர்மல் சிங் துணை முதல் மந்திரியாகவும் பொறுப்பேற்றனர்.  முப்தி முகம்மது சயீத் மறைவுக்கு பின்னர் அவரது மகள், மெகபூபா முப்தி தலைமையில் பிடிபி - பாஜக கூட்டணி ஆட்சி தொடர்ந்தது.

    ஆனால், ஆளும் கூட்டணி கட்சிகளுக்குள் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக, கடந்த ஜூன் மாதம் கூட்டணி அரசில் இருந்து பாஜக விலகியது. இதையடுத்து முதல்வர் மெகபூபா முப்தி ராஜினாமா செய்தார். அதன்பின்னர் எந்த கட்சியும் ஆட்சியமைக்க உரிமை கோராததால் கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாஜக அல்லாத கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சியமைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளன. இதற்காக மெகபூபா முப்தியின் பிடிபி, காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சி ஆலோசனை நடத்தின.

    இந்த ஆலோசனையின் முடிவில் பிடிபியும் காங்கிரசும் இணைந்து ஆட்சியமைக்க முடிவு செய்திருப்பதாகவும், இந்த கூட்டணிக்கு பரூக் அப்துல்லா தலைமையிலான தேசிய கூட்டணி வெளியில் இருந்து ஆதரவு அளிக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.



    3 கட்சி தலைவர்களும் ஆளுநரை சந்தித்து இன்று ஆட்சியமைக்க உரிமை கோர முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    பிடிபி கட்சியின் எம்எல்ஏக்களை இழுப்பதற்கு பாஜக முயற்சிகள் மேற்கொண்டு வருவதால், எதிர்க்கட்சிகள் மெகா கூட்டணி அமைப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    87 உறுப்பினர்களைக் கொண்ட ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டசபையில் பிடிபி கட்சிக்கு 28 உறுப்பினர்களும், தேசிய மாநாட்டு கட்சிக்கு 15 உறுப்பினர்களும், காங்கிரஸ் கட்சிக்கு 12 உறுப்பினர்களும் இருப்பதால், இந்த கூட்டணிக்கு ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை உள்ளது குறிப்பிடத்தக்கது. #JKGovt #Mehbooba #GrandAllianceInJK
    ஜம்மு காஷ்மீரின் தேசிய மாநாட்டு கட்சி, உள்ளாட்சி தேர்தலை தொடர்ந்து சட்டசபை மற்றும் பாராளுமன்ற தேர்தல்களை புறக்கணிக்க போவதாக மிரட்டல் விடுத்துள்ளது. #FarooqAbdullah #NC
    ஸ்ரீநகர்:

    இந்திய ஜனாதிபதியின் உத்தரவின்  பேரில் கடந்த 1954-ம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு  சட்ட சாசனத்தில் 35-ஏ என்னும் சட்டப்பிரிவுஇணைக்கப்பட்டது. 

    இந்தப் பிரிவின் மூலம் ஜம்மூ- காஷ்மீர் மாநிலத்தைச் சேராதவர்கள் அங்கு நிலம் வாங்க முடியாதென்று விதியுள்ளது. அதேபோல, அம்மாநில பெண்கள் வெளி மாநில ஆண்களை திருமணம் முடித்தால், அங்கு சொத்துரிமை கோர முடியாது என்றும் விதி வகுக்கப்பட்டுள்ளது. 

    இந்த 35-ஏ பிரிவை நீக்குவது தொடர்பாக தொடுக்கப்பட்டுள்ள வழக்கு சுப்ரீம் கோர்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்ததில் இருந்தே அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.

    இதற்கிடையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பஞ்சாயத்து மற்றும் உள்ளாட்சி தேர்தல்கள் விரைவில் நடைபெறவுள்ளதால் இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என அம்மாநில அரசின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை சுப்ரீம் கோர்ட் ஏற்று விசாரணையை ஒத்திவைத்துள்ளது.



    ஜம்மு காஷ்மீரில் முக்கிய எதிர்க்கட்சியாக செயல்பட்டு வரும் தேசிய மாநாட்டு கட்சி உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கப் போவதாக முன்னர் அறிவித்திருந்தது. 

    இந்நிலையில்,  தேசிய மாநாட்டு கட்சியின் நிறுவனர் ஷேக் மொகமது அபதுல்லாவின் 36வது ஆண்டு நினைவு தின நிகழ்ச்சியில் பரூக் அப்துல்லா இன்று கலந்து கொண்டார்.

    அப்போது அவர் பேசுகையில், மத்திய அரசு ஒருபுறம் உள்ளாட்சி தேர்தலை நடத்த முடிவு செய்துள்ளது. மறுபுறம் சட்டப்பிரிவு 35 ஏ-ஐ நீக்கவும் முடிவெடுத்துள்ளது. அதுபோல், 370 சட்டப்பிரிவை நீர்த்துப் போக செய்வதன் மூலம் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தின் மீது தாக்குதல் நடத்த முயற்சிக்கிறது. 

    எனவே,  மத்திய அரசை கண்டிக்கும் வகையில் சட்டசபை மற்றும் பாராளுமன்ற தேர்தல்களை புறக்கணிக்கப் போகிறோம் என தெரிவித்துள்ளார். #FarooqAbdullah #NC
    ×