என் மலர்

  நீங்கள் தேடியது "Boycott Elections"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தேர்தலை புறக்கணிக்குமாறு முண்டக்கையில் உள்ள விவசாயிகள் மற்றும் தோட்ட தொழிலாளர்களுக்கு மாவோயிஸ்டுகள் சுவரொட்டிகள் மற்றும் பேனர்கள் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர். #LokSabhaElection #Maoist #BoycottElection
  வயநாடு:

  கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். 23-ந் தேதி, அங்கு வாக்குப்பதிவு நடக்கிறது. இந்நிலையில், அந்த தொகுதிக்கு உட்பட்ட முண்டக்கை நகரில் மாவோயிஸ்டுகள் ஒட்டிய சுவரொட்டிகள் மற்றும் பேனர்கள் நேற்று காணப்பட்டன.

  அதில், தேர்தலை புறக்கணிக்குமாறு முண்டக்கையில் உள்ள விவசாயிகள் மற்றும் தோட்ட தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வாசகங்கள் இடம்பெற்று இருந்தன. இதையடுத்து, அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக துணை ராணுவப்படைகள் வரவழைக்கப்பட்டன. நிலைமையை கண்காணித்து வருவதாகவும், விசாரணையை தொடங்கி உள்ளதாகவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கருப்பசாமி தெரிவித்தார்.

  கடந்த மாதம் 6-ந் தேதி, மாவோயிஸ்டு தலைவர் ஜலீல், துப்பாக்கி சண்டையில் கொல்லப்பட்டதில் இருந்தே வயநாட்டில் போலீசார் உஷார்நிலையில் இருந்து வருகிறார்கள். #LokSabhaElection #Maoist #BoycottElection 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜம்மு காஷ்மீரின் தேசிய மாநாட்டு கட்சி, உள்ளாட்சி தேர்தலை தொடர்ந்து சட்டசபை மற்றும் பாராளுமன்ற தேர்தல்களை புறக்கணிக்க போவதாக மிரட்டல் விடுத்துள்ளது. #FarooqAbdullah #NC
  ஸ்ரீநகர்:

  இந்திய ஜனாதிபதியின் உத்தரவின்  பேரில் கடந்த 1954-ம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு  சட்ட சாசனத்தில் 35-ஏ என்னும் சட்டப்பிரிவுஇணைக்கப்பட்டது. 

  இந்தப் பிரிவின் மூலம் ஜம்மூ- காஷ்மீர் மாநிலத்தைச் சேராதவர்கள் அங்கு நிலம் வாங்க முடியாதென்று விதியுள்ளது. அதேபோல, அம்மாநில பெண்கள் வெளி மாநில ஆண்களை திருமணம் முடித்தால், அங்கு சொத்துரிமை கோர முடியாது என்றும் விதி வகுக்கப்பட்டுள்ளது. 

  இந்த 35-ஏ பிரிவை நீக்குவது தொடர்பாக தொடுக்கப்பட்டுள்ள வழக்கு சுப்ரீம் கோர்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்ததில் இருந்தே அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.

  இதற்கிடையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பஞ்சாயத்து மற்றும் உள்ளாட்சி தேர்தல்கள் விரைவில் நடைபெறவுள்ளதால் இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என அம்மாநில அரசின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை சுப்ரீம் கோர்ட் ஏற்று விசாரணையை ஒத்திவைத்துள்ளது.  ஜம்மு காஷ்மீரில் முக்கிய எதிர்க்கட்சியாக செயல்பட்டு வரும் தேசிய மாநாட்டு கட்சி உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கப் போவதாக முன்னர் அறிவித்திருந்தது. 

  இந்நிலையில்,  தேசிய மாநாட்டு கட்சியின் நிறுவனர் ஷேக் மொகமது அபதுல்லாவின் 36வது ஆண்டு நினைவு தின நிகழ்ச்சியில் பரூக் அப்துல்லா இன்று கலந்து கொண்டார்.

  அப்போது அவர் பேசுகையில், மத்திய அரசு ஒருபுறம் உள்ளாட்சி தேர்தலை நடத்த முடிவு செய்துள்ளது. மறுபுறம் சட்டப்பிரிவு 35 ஏ-ஐ நீக்கவும் முடிவெடுத்துள்ளது. அதுபோல், 370 சட்டப்பிரிவை நீர்த்துப் போக செய்வதன் மூலம் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தின் மீது தாக்குதல் நடத்த முயற்சிக்கிறது. 

  எனவே,  மத்திய அரசை கண்டிக்கும் வகையில் சட்டசபை மற்றும் பாராளுமன்ற தேர்தல்களை புறக்கணிக்கப் போகிறோம் என தெரிவித்துள்ளார். #FarooqAbdullah #NC
  ×