என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது தேசிய மாநாடு - அக்டோபர் மாதம் ஆந்திராவில் நடக்கிறது
  X

  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா.

  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது தேசிய மாநாடு - அக்டோபர் மாதம் ஆந்திராவில் நடக்கிறது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இந்திய அளவில் பெரும் சவால்கள் எழுந்துள்ள நிலையில் கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்துக்களை பலரும் எதிர்பார்க்கின்றனர்.
  • பாஜக. அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது.

  திருப்பூர் :

  திருப்பூரில் உள்ள வித்யா கார்த்திக் திருமண மண்டபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25 -வது மாநில மாநாடு கடந்த சனிக்கிழமை தொடங்கியது. இந்தநிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கட்சியின் 24 -வது தேசிய மாநாடு வரும் அக்டோபர் 14 முதல் 18 -ந்தேதி வரையில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடைபெறவுள்ளது. இதற்கு முன்னதாக அனைத்து மாநிலங்களிலும் மாநில மாநாடுகளை நடத்தி வருகிறோம். இதன்படி திருப்பூரில் தற்போது தமிழ்நாடு மாநில மாநாடு நடைபெற்று வருகிறது. இதற்குப் பின்னர் பல மாநிலங்களிலும் மாநாடுகள் நடைபெறவுள்ளது.

  கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த மாநாடுகள் எல்லாம் மிகுந்த அரசியல் முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. அகில இந்திய அளவில் பெரும் சவால்கள் எழுந்துள்ள நிலையில் கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்துக்கள் என்ன என்பதை பலரும் எதிர்பார்க்கின்றனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை பொருத்தவரையில் மத்திய பாஜக. அரசு மக்கள் விரோத, தேச விரோத கொள்கைகளை பொருளாதாரம், அரசியல் சமூக தளத்தில் பின்பற்றி வருகிறது. பாஜக. அரசு அப்பட்டமாக பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. உலக அளவில் அனைத்து கருத்துக்கணிப்புகளும் சொல்வது இந்தியாவில் வறுமை வளர்ந்து கொண்டிருப்பதுடன், பசி வளர்ந்து மக்கள் உணவற்ற நிலையில் தவிக்கின்றனர். மக்கள் வேலையில்லாத் திண்டாட்டத்தை அனுபவித்து வருகின்றனர். ஊடகங்கள் உள்பட மக்களின் கருத்துச் சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுகிறது என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கின்றனர். இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ள பொதுத்துறை தனியார் மயமாக்குகிறது. அம்பானி, அதானி போன்ற பெருமுதலாளிக்களுக்கு ஆதரவான அனைத்தையும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு செய்து கொண்டிருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்களில்தான் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு உள்ளது. தனியார் துறையில் இதுவரையில் இட ஒதுக்கீடு கொண்டுவரப்படவில்லை. இதற்கு மத்திய அரசு தயாராக இல்லை. இதன் காரணமாகத்தான் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படுவது சமூக நீதி கொள்கைக்கு எதிரானது என்று நாம் குற்றம் சொல்லுகிறோம். பொருளாதாரம் என்று வரும்போது விவசாயத்துறையைப் பார்க்க வேண்டும். இந்த விவசாயிகள் ஒரு ஆண்டு போராடி 700 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப்பெற்றுள்ளது.

  இந்த சட்டங்களை திரும்பப்பெற்ற பின்னர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றப்படவில்லை. விவசாயிகளின் விலை பொருளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, பயிர் காப்பீடு திட்டம் ஆகியவை செயல்படுத்தப்படவில்லை. விவசாயிகள் மீண்டும் கிளர்ச்சியில் இறங்குவோம் என்று எச்சரித்துள்ளனர். நாடு முழுவதும் வங்கித்துறை, எல்ஐசி, விமான நிலையங்கள், துறைமுகங்கள் தனியார் மயமாகி வருகிறது. இந்த சூழ்நிலையில்தான் மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கையை எதிர்த்துப் போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. மாநில உரிமைகள் அனைத்தையும் மத்திய அரசு பறித்துவருகிறது. கல்வி மாநில பட்டியலில் இடம் பெற வேண்டிய நிலையில் கல்விக் கொள்கைகளைத் தீர்மானிப்பது மத்திய அரசு மாநிலங்களைக் கலந்து ஆலோசிப்பது இல்லை. இதன் காரணமாகத்தான் புதிய கல்விக் கொள்கை எல்லோராலும் எதிர்க்கப்படக்கூடிய ஒன்றாக வந்துள்ளது. தேசிய கல்விக்கொள்கையானது கல்வியை தனியார்மயமாகவும், வாணிபமயமாகவும் மாற்றுகிறது.

  இந்தியாவை ஒற்றைப்பரிமாண நாடாக மாற்ற வேண்டும் என்று மத்திய அரசு செயல்பட்டுக் கொண்டிருகிறது. பல மொழிகளையும், பல பரிமாணங்களையும் கொண்ட நாடாகும். இந்தியாவில் சமூக, மத நல்லிணக்கம், சமூக நீதி கொள்கைகள், கூட்டாட்சி நெறிமுறைகள் எல்லாம் தகர்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான் அகில இந்திய அளவில் பாஜக.முறியடிக்கப்பட வேண்டும். இந்திய அரசியல் சட்டம், இந்திய ஜனநாயகம், நாட்டின் பன்முகத் தன்மை காப்பாற்றப்பட வேண்டும் என்றால் வரும் 2024 -ம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. முறியடிக்கப்பட வேண்டும் என்றார். இந்த சந்திப்பின்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் எம்.ரவி உடனிருந்தார்.

  Next Story
  ×