என் மலர்
நீங்கள் தேடியது "Murder"
+2
- பால்கட்டளை செல்லும் சாலையில் பேச்சிராஜனின் உறவினர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.
- பேச்சிராஜனின் தந்தை தங்கராஜ் கோரிக்கைகளை மனுவாக எழுதி கலெக்டருக்கு கொடுத்தார்.
நெல்லை:
நெல்லையில் இன்று கொலை செய்யப்பட்ட பேச்சிராஜனின் உறவினர்கள் மதுரை பைபாஸ் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பால்கட்டளை செல்லும் சாலையில் உறவினர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். சம்பவ இடத்திற்கு மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ் குமார், ஆர்.டி.ஓ.சந்திரசேகர் ஆகியோர் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பேச்சிராஜனை கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும், இழப்பீடாக ரூ.50 லட்சம் வழங்க வேண்டும், பேச்சிராஜனின் மனைவி தங்கமாரிக்கு படிப்புக்கு தகுந்த அரசு வேலை வழங்க வேண்டும், எங்கள் குடும்பத்திற்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது உள்பட சில கோரிக்கைகளை வலியுறுத்தினர். அவற்றை மனுவாக எழுதி கொடுத்தால் அரசுக்கு அனுப்பி பரிந்துரை செய்யப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
இதைத்தொடர்ந்து பேச்சிராஜனின் தந்தை தங்கராஜ் கோரிக்கைகளை மனுவாக எழுதி கலெக்டருக்கு கொடுத்தார். எனினும் கோரிக்கைகள் நிறைவேறும் வரை உடலை வாங்க மாட்டோம் என பேச்சிராஜனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
- ஆவாரங்காடு கிராமத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கச்சநத்தம் கிராமத்திற்குள் புகுந்து பயங்கர ஆயுதங்களுடன் வீடுகளை சூறையாடினார்கள்.
- இதை தடுக்க வந்த அந்த கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் (வயது65), சண்முகநாதன் (31), சந்திரசேகர் (34) ஆகியோர் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே உள்ள கச்சநத்தம்-ஆவாரங்காடு கிராம பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் கோவில் திருவிழா நடந்தது. அப்போது முதல் மரியாதை அளிப்பது தொடர்பாக இரு சமுதாயத்தினருக்கும் மோதல் ஏற்பட்டது.
இது தொடர்பாக அப்போது பழையனூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ஆவாரங்காடு கிராமத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இரவு 10 மணி அளவில் கச்சநத்தம் கிராமத்திற்குள் புகுந்து பயங்கர ஆயுதங்களுடன் வீடுகளை சூறையாடினார்கள்.
இதை தடுக்க வந்த அந்த கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் (வயது65), சண்முகநாதன் (31), சந்திரசேகர் (34) ஆகியோர் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த கொலை தொடர்பாக ஆவாரங்காடு கிராமத்தை சேர்ந்த சுமன், அருண்குமார், சந்திரகுமார், அக்னிராஜ், ராஜேஷ் உள்ளிட்ட 33 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் 3 பேர் சிறுவர்கள் ஆவார்கள். வழக்கு விசாரணையின்போது 2 பேர் இறந்து விட்டனர். ஒருவர் தலைமறைவாகி விட்டார். இதனால் மற்ற 27 பேர் மீது சிவகங்கை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள வன்கொடுமை சிறப்பு கோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது.
கடந்த 4 ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடந்தது. இருதரப்பினரிடமும் விசாரணை முடிந்த நிலையில் கடந்த 1-ந்தேதி நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பளித்தார். அப்போது 3 கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 27 பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். தண்டனை விவரம் நேற்று முன்தினம் (3-ந்தேதி) அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.
அன்றைய நாள் குற்றவாளிகள் 27 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் நீதிபதி காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்தினார். கொலை செய்யப்பட்ட 3 பேரின் உறவினர்களும் நீதிபதி தீர்ப்பு குறித்து கருத்துக்களை கேட்டார். அதனை தொடர்ந்து இன்று (5-ந்தேதி) தீர்ப்பின் முழு விவரம் அறிவிக்கப்படும் என நீதிபதி முத்துக்குமரன் அறிவித்தார்.
இதையொட்டி இன்று சிவகங்கை வன்கொடுமை தடுப்பு கோர்ட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வழக்கின் தீர்ப்பின் விவரம் அறிய கச்சநத்தம் கிராமத்தை சேர்ந்த ஏராளமானோர் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினர். தொடர்ந்து 11.45 மணி அளவில் நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பின் விவரங்களை வாசித்தார்.
அதில், 2018-ம் ஆண்டு கச்சநத்தம் கோவில் திருவிழா முன்விரோதத்தில் ஆறுமுகம், சண்முகநாதன், சந்திரசேகர் ஆகிய 3 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள 27 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்படுவதாக தெரிவித்தார்.
- செல்போன் கடை ஊழியர் ஓட, ஓட விரட்டி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்
- 6 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்
பெரம்பலூர்:
பெரம்பலூர் பெரியார் சிலை அருகேயுள்ள திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் கோபால் மகன் வினோத் (வயது 28), செல்போன் கடையில் வேலை பார்த்து வந்தார்.
இவரது நண்பர் பெரம்பலூர் சுப்பிரமணிய பாரதியார் தெருவை சேர்ந்த துரை மகன் கார்த்திக் (25). இவர்கள் இருவரும் நேற்று மாலை பெரம்பலூர் நிர்மலா நகரில் உள்ள மாரியம்மன் கோவில் திண்ணையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு 3 இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர். இருவரையும் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் ஓட, ஓட வெட்டிவிட்டு தப்பினர்.
இதில் அந்த இடத்திலேயே வினோத் உயிரிழந்தார். வெட்டுக்காயங்களுடன் தப்பிய கார்த்திக், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் கொலை நடைபெற்ற இடத்துக்கு சென்று, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, விசாரணை நடத்தியதில், முன் விரோதகாரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக தெரிவித்தனர்.
மேலும் கொலை செய்த 6 பேர் கொண்ட கும்பலை தேடிவருகின்றனர்.
- பேரையூர் அருகே வட்டி தொழில் செய்த முதியவர் படுகொலை செய்யப்பட்டார்.
- அவரது கால்கள் கட்டப்பட்ட நிலையில் உடல் மீட்கப்பட்டது.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள பி.தொட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கரன்(வயது75). இவரது மனைவி பொன்னுத்தாய். இவர்களுக்கு 3 மகன்கள், 1 மகள் உள்ளனர்.
2 மகன்கள் திருப்பூரிலும், 1 மகன் மதுரையிலும், மகள் பி.தொட்டியபட்டி கிராமத்திலும் உள்ளனர்.கணவன்-மனைவி தனியாக வீட்டில் வசித்து வந்தனர். இன்று காலை பேரையூர்- உசிலம்பட்டி சாலை அருகே சவுண்டையா என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள தண்ணீர் இல்லாத தொட்டியில் சங்கரன் பிணமாக கிடந்தார்.
அவரது கால்கள் கட்டப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்டதற்கான அடையாளம் இருந்தது. அவரை மர்மநபர்கள் கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்து உள்ளனர். இதுகுறித்து பேரையூர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. டி.எஸ்.பி. இலக்கியா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு போலீஸ் துப்பறியும் நாய் வரவழைக்கப்பட்டது. அது கிணற்று பகுதியில் இருந்து வயல் வழியாக சிறிது தூரம் சென்று நின்று விட்டது.
மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணையை துரிதபடுத்தினார். கொலையுண்ட சங்கரனின் மனைவி பொன்னுத்தாயிடம் போலீசார் விசாரித்த போது நேற்று இரவு 2 மணி வரை நான் வீட்டில் இருந்தேன். அதன் பிறகு தூங்கி விட்டேன். காலையில் எழுந்து பார்த்தபோது கணவர் வீட்டில் இல்லை என்று தெரிவித்தார்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சங்கரன் வட்டிக்கு பணம் கொடுத்து வசூல் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.
பணம் வாங்கியவர்கள் யாரேனும் திருப்பி கொடுக்க மறுத்திருக்கலாம். அதை கேட்ட சங்கரனை கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக ெதரிவித்தனர்.
மேலும் வீட்டில் தூங்கிக் கொண்டி–ருந்த சங்கரனை கடத்தி கொலை செய்தா–ர்களா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்றும் பேரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சங்கரன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொட்டியபட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- பள்ளிப் பைகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்துள்ளார்.
- சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம்.
வடகிழக்கு டெல்லியின் கஜூரி காஸ் பகுதியில் 22 வயது இளைஞரை மர்ம கும்பல் குத்திக் கொலை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் பீகாரில் உள்ள பூர்ணியா பகுதியைச் சேர்ந்த அனவருல் ஹக் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர், பள்ளிப் பைகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், அனவருல் ஹக்கை மர்ம நபர்கள் குத்திக் கொலை செய்துள்ளனர்.
இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கஜூரி காஸ் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் இளைஞர் ஒருவரை மர்ம நபர்கள் சிலர் கத்தியால் குத்தியதாக அழைப்பு வந்தது. உடனடியாக, போலீஸ் குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்றனர். ஆனால் அதற்குள், காயமடைந்த நபரை மக்கள் மருத்துவமனைக்கு மாற்றினர். இருப்பினும் சம்பந்தப்பட்ட நபர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம். குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மகேஷ் மற்றும் அவரது நண்பர் ஆறுமுகச்சாமி ஆகியோர் அலெக்சை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர்.
- முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மகேஷ், ஆறுமுகச்சாமியை கைது செய்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி முத்தையாபுரத்தை அடுத்த முள்ளக்காடு பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் அலெக்ஸ் என்ற சில்லி(வயது 28). உப்பள தொழிலாளி.
வெட்டிக்கொலை
இவர் நேற்று முத்தையாபுரம் தேவி நகரை சேர்ந்த தனது நண்பரான மகேஷ் வீட்டில் வைத்து நண்பர்களுடன் மது குடித்துக்கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட தகராறில் மகேஷ் மற்றும் அவரது நண்பர் ஆறுமுகச்சாமி ஆகியோர் அலெக்சை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர்.
இதுதொடர்பாக முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மகேஷ், ஆறுமுகச்சாமியை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், மகேசின் சகோதரரான ரமேஷ் என்பவரை கடந்த ஆண்டு அலெக்ஸ் கத்தியால் குத்தியதாக கூறி போலீசார் அவரை கைது செய்தனர்.
விசாரணை
அந்த முன்விரோதத்தில் மகேஷ் எப்படியாவது அலெக்சை தீர்த்து கட்டிவிட வேண்டும் என்று திட்டம் தீட்டியதும், அதன்படி நேற்று தனது வீட்டுக்கு மது குடிக்க அழைத்து வந்ததும் தெரியவந்தது.
அங்கு அலெக்சை அதிக அளவு மதுகுடிக்க வைத்து பின்னர் வெட்டிக்கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாமனாரின் சொத்து பத்திரங்களுடன் நெல்லையில் உள்ள உறவினர் வீட்டிற்கு முருகன் சென்றுள்ளதாக தனிப்படையினருக்கு தகவல் கிடைத்தது.
- நெல்லை வந்த தனிப்படையினர் முருகனை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரத்தை சேர்ந்தவர் சிம்சோன் (வயது75). இவருக்கும், இவரது மகளின் கணவரான ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்களத்தை சேர்ந்த முருகன் என்பவருக்கு இடையே சொத்து தகராறு தொடர்பாக முன்விரோதம் உள்ளது.
முதியவர் கொலை
இந்நிலையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில் முருகன், சிம்சோனை கொலை செய்தார். மேலும் அவரது உடலை சாக்குமூட்டையில் வைத்து கிணற்றில் வீசி முயன்ற போது போலீசார் பார்த்துவிட்டனர். உடனே அவர் தப்பி சென்றுவிட்டார்.
இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் கூடுதல் எஸ்.பி. சந்தீஷ், ஏ.டி.எஸ்.பி. லயோலா மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படையினர் அவரை தேடி வந்தனர். இந்நிலையில் மாமனாரின் சொத்து பத்திரங்களுடன் நெல்லையில் உள்ள உறவினர் வீட்டிற்கு முருகன் சென்றுள்ளதாக தனிப்படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து நெல்லை சென்ற தனிப்படையினர் முருகனை மடக்கி பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து தூத்துக்குடிக்கு அழைத்து வரப்பட்ட அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குடும்ப பிரச்சினையில் பெற்ற மகளுக்கு விஷம் கொடுத்து கொன்று தந்தையும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோபால்(வயது 42) கூலிதொழிலாளி. இவரது மனைவி வீரம்மாள் (35). இவர்களுக்கு 6 வயதில் சுபத்திராதேவி என்ற குழந்தை உள்ளது. இவர் அருகில் உள்ள அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் கோபால் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இது தொடர்பாக ஒருமுறை கோபால் மீது வீரம்மாள் போலீஸ் நிலையத்தில் புகார் செய்திருந்தார்.
இந்த சூழ்நிலையில் நேற்றிரவு மீண்டும் குடித்துவிட்டு வந்து என்னை பற்றி எப்படி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யலாம் என கூறி வீரம்மாளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றி வீரம்மாளை தாக்கினார். இதனால் வீரம்மாள் மகளை வீட்டில் விட்டு விட்டு அருகே உள்ள பள்ளிகூடத்தில் இரவு தங்கினார்.
இந்த சம்பவத்தால் மனமுடைந்த கோபால் தற்கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி மகள் சுபத்திராதேவிக்கு விஷம் கொடுத்து தானும் குடித்தார். இதில் வாயில் நுரைதள்ளியடி இருவரும் மயங்கி கிடந்தனர்.
இன்று காலை வீட்டுக்கு வந்த வீரம்மாள், கணவர், மகள் இருவரும் மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்ச்சியடைந்தார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி சுபத்திராதேவி பரிதாபமாக இறந்தார். கோபாலுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்த புகாரின் பேரில் முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
குடும்ப பிரச்சினையில் பெற்ற மகளுக்கு விஷம் கொடுத்து கொன்று தந்தையும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- புதுக்கோட்டை வ.உ.சி. நகர் பகுதியில் போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- சிம்சோன் வெளிநாட்டில் வேலை செய்து வந்துள்ளார். அவருக்கு 2 மகள்கள் உள்ளனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை வ.உ.சி. நகர் பகுதியில் போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சிவன் கோவில் பகுதியில் உள்ள கிணற்றின் அருகே ஒருவர் காரில் இருந்து ஒரு சாக்குமூட்டையை இறக்கி கொண்டிருந்தார். போலீசை பார்த்தவுடன் அவர் தப்பி சென்றுவிட்டார். போலீசார் அந்த மூட்டையை கைப்பற்றி சோதனை செய்த போது அதில் முதியவர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டு மறைத்து வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், கூடுதல் எஸ்.பி. சந்தீஷ், ஏ.டி.எஸ்.பி. லயோலா மற்றும் போலீசார் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
அப்போது கொலை செய்யப்பட்டவர் சாயர்புரத்தை சேர்ந்த சிம்சோன் (வயது75) என்பது தெரியவந்தது. அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து அவரை கொலை செய்த மர்மநபர் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது குறித்து விசாரணை நடத்த புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் அன்பரசி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
விசாரணையில் திடுக்கிடும் தகவல் கிடைத்தது. கொலை செய்யப்பட்ட சிம்சோன் வெளிநாட்டில் வேலை செய்து வந்துள்ளார். அவருக்கு 2 மகள்கள் உள்ளனர்.
மூத்த மகள் பிலசி என்பவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்களத்தை சேர்ந்த முருகன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் முருகன், மாமனார் சிம்சோனிடம் சொத்தை கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். கடந்த மே மாதம் சொத்து தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
அப்போது சிம்சோனை, முருகன் தாக்கி உள்ளார். இது தொடர்பாக அவர் சாயர்புரம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.
இந்நிலையில் நேற்று மாலை மீண்டும் சொத்து தொடர்பாக சிம்சோனிடம் முருகன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த முருகன் அவரை தாக்கி, கத்தியால் குத்தினார்.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அவரை சாக்குமூட்டையில் கட்டிய முருகன் காரில் எடுத்து சென்று புதுக்கோட்டையில் உள்ள ஒரு மொட்டை கிணற்றில் வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முடிவு செய்தார். ஆனால் போலீசார் அங்கு வந்ததை பார்த்ததும் அவர் தப்பி சென்றுவிட்டார்.
தப்பி ஓடிய முருகனை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
- பெயிண்டர் கொலையில் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
- உறவினர் பெண்ணை கேலி, கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.
விருதுநகர்
விருதுநகர் முத்தாள் நகரைச் சேர்ந்த சங்கர் என்பவர் மகன் மாரிச்செல்வம் (வயது 19), பெயிண்டர். இவர் அதே பகுதியைச் சேர்ந்த விஜய் என்பவரது உறவினர் பெண்ணை கேலி, கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.
இதுெதாடர்பாக விஜய் மற்றும் அஜித்குமார், ராஜூ ஆகியோர் மாரிச்செல்வத்திடம் தட்டிக்கேட்டுள்ளனர். இருந்தபோதிலும் மாரிச்செல்வம் தொடர்ந்து அந்த பெண்ணை தொடர்ந்து கேலி, கிண்டல் செய்து வந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த விஜய், அஜித்குமார், ராஜூ ஆகியோர் மாரிச்செல்வத்துக்கு மது வாங்கிக்கொடுத்துள்ளனர். அவர் போதையில் இருந்தபோது அவரை கொலை ெசய்துவிட்டு தப்பிச் சென்று விட்டனர்.
இதுபற்றி மாரிச்செல்வ த்தின் தந்தை சங்கர் பாண்டியன் நகர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜய், அஜித்குமார், ராஜூ ஆகிய 3 பேரையும் பிடித்து மாரிச்செல்வம் கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தி.மு.க. பிரமுகரை கொலை செய்து உடலை கிணற்றில் உடல் வீசிந்திருந்தனர்.
- அவரது கைகள் பின்பக்கமாக வைத்து கட்டப்பட்டு, சாக்கு மூட்டையில் வைத்து உடலை கிணற்றில் வீசி சென்றுள்ளனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி.கல்லுப்பட்டி எம்.சுப்புலாபுரத்தை சேர்ந்தவர் வெங்கடாஜலபதி. இவரது மகன் பாலாஜி (வயது 25). தி.மு.க. பிரமுகரான இவர் கட்சிப்பணியில் தீவிரமாக செயல்பட்டு வந்தார். இவருக்கு தர்ஷினி என்ற மனைவி உள்ளார். கடந்த 65 நாட்களுக்கு முன்பு இந்த தம்பதிக்கு குழந்தை பிறந்தது.
எல்.எல்.பி. சட்டப்படிப்பு படித்து வந்த பாலாஜி கடந்த 24-ந் தேதி வெளியே சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார். ஆனால் அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை. செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் பாலாஜியை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் நேற்று மாலை சித்துலொட்டிபட்டி பகுதியில் சாமிராஜ் என்பவரது தோட்டத்து கிணற்றில் கைகள் கட்டப்பட்ட நிலையில் ஆண் பிணம் மிதந்தது.
இதுகுறித்து காடனேரி கிராம நிர்வாகி பாலமுருகன் பேரையூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது மாயமான தி.மு.க. பிரமுகர் பாலாஜி பிணமாக கிடந்தது உறுதி செய்யப்பட்டது. அவரது கைகள் பின்பக்கமாக வைத்து கட்டப்பட்டு, சாக்கு மூட்டையில் வைத்து உடலை கிணற்றில் வீசி சென்றுள்ளனர்.
கட்சி முன்விரோதத்தில் பாலாஜி கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? கொலையாளிகள் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தி.மு.க. பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.