என் மலர்
நீங்கள் தேடியது "GV Prakash"
- சீனு ராமசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வெளியாகவுள்ள படம் இடிமுழக்கம்.
- படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கிய சீனு ராமசாமி, அடுத்ததாக இயக்கி உள்ள படம் 'இடிமுழக்கம்'. ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக காயத்ரி சங்கர் நடித்துள்ளார். மேலும் சரண்யா பொன்வண்ணன், சுபிக்ஷா, செளந்தரராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் பிறந்த நாளான இன்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனை உதயநிதி ஸ்டாலின் எம்.பி. வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டரை ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
- ஜி.வி.பிரகாஷ் இசையில் மட்டுமல்லாமல் நடிப்பிலும் தனக்கான இடத்தை பிடித்துள்ளார்.
- இவர் நடித்துள்ள படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
பிரபல இசையமைப்பாளர் மற்றும் நடிகரான ஜி. வி. பிரகாஷ் நடித்து வெளியான 'பேச்சுலர்', 'ஐங்கரன்', 'ஜெயில்' போன்ற படங்கள் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதையடுத்து இவர் நடித்துள்ள படம் 'இடி முழக்கம்' . இப்படத்தில் இவருக்கு ஜோடியாக காயத்ரி நடித்துள்ளார்.
சீனு ராமசாமி இயக்கும் இப்படத்திற்கு என்.ஆர். ரகுநந்தன் இசையமைத்துள்ளார். கவிஞர் வைரமுத்து பாடல் எழுதியுள்ளார். படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் படக்குழுவினர் இறுதிக்கட்ட பணியில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஜூன் 13-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அத்துடன் படக்குழுவினர் ஒரு புகைப்படத்தையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். நீண்ட நாட்களுக்கு பிறகு இப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.




The stunning voice behind #rowdybaby#sandakkara the lovely #Dhee sings for #Suriya38#GV70 ... recorded overseas with this superb talent ... a quirky fun trk onway ... pic.twitter.com/UBH8UqoHP9
— G.V.Prakash Kumar (@gvprakash) April 23, 2019



