கள்வன் படத்தின் டிரெயிலர் வெளியீடு

ராட்சசன், மரகத நாணயம், முண்டாசுப்பட்டி படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் இப்படத்தின் இயக்குனரான பி.வி.ஷங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.இப்படம் ஏப்ரல் 4 வெளியிடுவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
கள்வன் படத்தின் டிரெயிலர் வெளியீடு
Published on

ஒளிப்பதிவாளர் பி வி ஷங்கரின் இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் கள்வன். ஜனவரி மாதம் இப்படத்தின் டீசர் வெளியானது. பாரதிராஜா, இவானா மற்றும் தீனா முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் ஏப்ரல் 4 வெளியிடுவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

டில்லி பாபு இப்படத்தை தயாரித்துள்ளார். ஜி வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ராட்சசன், மரகத நாணயம், முண்டாசுப்பட்டி படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் இப்படத்தின் இயக்குனரான பி.வி.ஷங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்படத்தின் டிரெயிலர் வெளியிடும் விழா இன்று காலை சென்னையில் நடைப்பெற்றது. இவ்விழாவில் நடிகர் ஜி வி பிரகாஷ், இவானா, இயக்குனர் வெற்றி மாறன் மற்றும் படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். கள்வன் படத்தின் டிரெயிலர் 11.30 மணி அளவில் வெளியானது.

படத்தின் டிரெயிலர் மிகவும் விறுவிறுப்பாக அமைந்துள்ளது. ஊரினுள் யானை நழைந்ததாக தகவல் வருகிறது அதனால் யாரும் காட்டுப் பகுதிக்குள் செல்ல வேண்டாம் என வனத்துறை எச்சரிக்கின்றனர். அக்காட்டுப் பகுதியில் காவல் நிப்பதற்கு யாரும் முன்வரவில்லை.

அப்பொழுது கதாநாயகனான ஜி வி பிரகாஷ் மற்றும் அவன் கூட்டாளியான தீனா காட்டு பகுதிக்குள் காவலுக்காக செல்கின்றனர் அதற்கடுத்து அவர்களுக்கு என்ன ஆனது, காட்டில் இருந்து அவர்கள் எப்படி யானையிடம் இருந்து மீண்டு வந்தனர் என்பதே மீதிக்கதை.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com