கள்வன் படத்தின் வீடியொ பாடல் வெளியீடு

பாரதிராஜா, இவானா மற்றும் தீனா முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
கள்வன் படத்தின் வீடியொ பாடல் வெளியீடு
Published on

ஒளிப்பதிவாளர் பி வி ஷங்கரின் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் நடிப்பில் ஏப்ரல் 4 வெளியாகிய படம் கள்வன். பாரதிராஜா, இவானா மற்றும் தீனா முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

டில்லி பாபு இப்படத்தை தயாரித்துள்ளார். ஜி வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ராட்சசன், மரகத நாணயம், முண்டாசுப்பட்டி படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் இப்படத்தின் இயக்குனரான பி.வி.ஷங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

படம் வெளியான நிலையில் மக்களிடையே கலந்த விமர்சனத்தை பெற்று வருகிறது

இந்நிலையில் படத்தின் பாடலான 'பேசாம பேசும் கண்' வீடியோ பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்பாடலின் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com