search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Foodstuffs"

    • சென்னையை புயல் மிரட்டும் சூழ்நிலையில் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் நிவாரண முகாம்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • நிவாரண முகாம்களில் கூடுதலாக உணவு தயாரிக்கவும், பொதுமக்களுக்கு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பெய்த கனமழையில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

    கடந்த மாதம் பெய்த மழையின்போது 37 இடங்களில் மட்டுமே தண்ணீர் தேங்கியது. ஆனால் தற்போது பெய்த கனமழையால் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. தேங்கிய மழைநீர் வெள்ளத்தை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர்.

    ஆனாலும் இன்று வரை 38 இடங்களில் மழை வெள்ளம் வடியால் தேங்கி நிற்பதால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை வெள்ளநீரை வெளியேற்ற அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் முகாமிட்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    குறிப்பாக மேற்கு மேம்பாலம், கொளத்தூர், கொரட்டூர் பகுதியில் மழை வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் பாதிக்கப்பட்டனர். நேற்று மாலை வரை 64 இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது.

    தொடர் நடவடிக்கையின் மூலமாக 26 பகுதிகளில் தேங்கிய நீர் வடிந்தது. ஆனாலும் 38 இடங்களில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநகராட்சி சார்பில் நிவாரண முகாம்கள் தயார்படுத்தி வைக்கப்பட்டிருந்தன. நேற்று 306 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு நேற்று மாநகராட்சி சார்பில் உணவு வழங்கப்பட்டது.

    தண்ணீர் சூழ்ந்த பகுதியில் வசித்த மக்களுக்கு 10 ஆயிரம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. இன்று காலை மற்றும் மதியமும் உணவு பொட்டலம் வினியோகிக்கப்பட்டது. இதுவரையில் 20 ஆயிரம் உணவு பாக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

    சென்னையை புயல் மிரட்டும் சூழ்நிலையில் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் நிவாரண முகாம்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதால் பாதிப்பு உள்ள பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்டுகிறது. மீண்டும் அங்கு தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    நிவாரண முகாம்களில் கூடுதலாக உணவு தயாரிக்கவும், பொதுமக்களுக்கு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    • தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
    • வாராவாரம் குடிமை பொருள் வழங்கல் துறையின் இணையதளத்தில் பதிவிட வேண்டும்.

    கடலூர்:

    அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை கடுமையாக ஏறி வருகிறது. இதையடுத்து மளிகை, பருப்பு வகைகள், கோதுமை, காய்கறி போன்றவைகளை பதுக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன்படி, துவரம் பருப்பு, கடலை பருப்பு, பாசி பருப்பு, கோதுமை போன்றவைகளின் வணிகர்கள் தங்களிடம் உள்ள இருப்பு விவரங்களை அரசின் இணையதளத்தில் பதிவிட வேண்டும். வாராவாரம் வெள்ளிக்கிழமை இதனை பதிவிட வேண்டும்.

    குடிமை பொருள் வழங்கல் துறையினரால் ஆய்வு மேற்கொள்ளப்படும் போது, இதில் வித்தியாசம் வரக்கூடாது. இதனை மீறி யாரேனும் பதுக்கி அதிக விலைக்கு விற்க முயற்சித்தால் அவர்களின் மீது 1955-ம் ஆண்டு வெளியிடப்பட்ட உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு உணவு பொருள் வியாபாரிகள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினரும், கடலூர் மாவட்ட சேம்பர் ஆப் காமர்சின் இணை செயலாளருமான என். செல்லபாண்டியன் கூறியதாவது;-

    நாடு முழுவதும் பொதுமக்களின் உணவுத் தேவை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதே சமயம் விளைச்சல் குறைவதால், பொருட்களின் பற்றாக்குறை உருவாகிறது. இதனால் வியாபாரிகள் அனைவரும் தங்களிடம் உள்ள பருப்பு வகைகள் மற்றும் கோதுமையின் இருப்பு விபரத்தை வாராவாரம் குடிமை பொருள் வழங்கல் துறையின் இணையதளத்தில் பதிவிட வேண்டும். கடந்த ஆண்டு எண்ணெய் தட்டுப்பாடு நிலவியபோது, தங்களிடம் உள்ள இருப்புகளை பதிவு செய்ததை போல இதனையும் பதிவு செய்ய வேண்டும். எனவே, மொத்த வியாபாரிகள், மில் உரிமையாளர்கள் மற்றும் பெரு மற்றும் சிறு வணிகர்கள் இதனை பின்பற்றி அரசின் விதிகளை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்த உத்தரவு வரும் மார்ச் மாதம் 2024-ம் ஆண்டு வரையில் நீடிக்கும்.

    மேலும், எதிர்வரும் மாதங்களில் பண்டிகைகள் அதிகளவில் வரும் என்பதால் அரசு இது போன்ற நடவடிக்கைகளை எடுக்கிறது. இதற்கு வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். மேலும், இது தொடர்பாக தங்களுக்கு ஏதேனும் தகவல் வேண்டுமெனில், கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள குடிமை பொருள் வழங்கல் துறை அதிகாரிகளை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

    • தாராபுரம் உணவு பாதுகாப்பு துறை இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி மற்றும் நடமாடும் உணவு பாதுகாப்பு துறை ஆய்வுக்கூட நிபுணர்கள் ஆகியோர் ஆய்வு நடத்தினார்கள்.
    • தரத்தை உயர்த்துவதற்கான ஆலோசனைகளை உணவு பாதுகாப்பு துறை மூலம் வழங்கப்படும் என்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தாராபுரம்:

    தாராபுரத்தில் உணவு பாதுகாப்பு துறையினர் திடீரென கடைவீதி பகுதியில், பொள்ளாச்சி சாலை, பூக்கடை கார்னர், பெரியகடை வீதி, பழைய நகராட்சி பகுதியில் செயல்படும் ஓட்டல்கள், பழக்கடைகள், டீக்க–டைகள் மற்றும் பேக்கரி உள்ளிட்ட 40 கடைகளில் மாதிரி எடுக்கப்பட்டு நடமாடும் சோதனை கூடத்தில் தரம் குறித்து பரிசோதனை செய்யப்பட்டது.

    திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மாவட்ட அலுவலர் டாக்டர் விஜயலலிதாம்பிகை உத்தரவின் பேரில் தாராபுரம் உணவு பாதுகாப்பு துறை இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி மற்றும் நடமாடும் உணவு பாதுகாப்பு துறை ஆய்வுக்கூட நிபுணர்கள் ஆகியோர் ஆய்வு நடத்தினார்கள்.

    தாராபுரம் பெரிய கடைவீதி, சின்னகடைவீதி, பொள்ளாச்சி ரோடு பூக்கடைக்கார்னர், என்.என்.பேட்டை வீதி பகுதிகளில் உள்ள மளிகைக்கடை, பேக்கரி, தள்ளுவண்டி கடைகள் குளிர்பான கடைகளில் உணவு மாதிரிகளை எடுத்தனர். எண்ணெய், குளிர்பானம், பருப்பு உள்பட பல்வேறு மாதிரிகள் எடுக்கப்பட்டது. நடமாடும் சோதனை கூடத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

    லேபிள் சோதனை செய்ததன் அடிப்படையில் மாதிரி எடுத்தவர்களின் பொருட்கள் தரம் குறைவாக இருந்ததால் அந்த கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டு அறிவுறுத்தப்பட்டது. மேலும் தரத்தை உயர்த்துவதற்கான ஆலோசனைகளை உணவு பாதுகாப்பு துறை மூலம் வழங்கப்படும் என்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • வெளி உணவுப் பொருள்களை விநியோகிக்க அனுமதிக்கக் கூடாது என பக்தா்கள், பொதுமக்கள் கோவில் நிா்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனா்.
    • திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே சிவன்மலையில் புகழ்பெற்ற முருகன் மலைக் கோவில் உள்ளது.

    காங்கயம்:

    திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே சிவன்மலையில் புகழ்பெற்ற முருகன் மலைக் கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு வரும் பக்தா்கள், தாங்கள் வீட்டிலிருந்து சமைத்துக் கொண்டு வரும் உணவுப் பொருள்களை கோவிலுக்கு வரும் பொதுமக்களுக்கு விநியோகித்து வந்தனா்.

    அவா்கள் கொண்டு வரும் உணவுப் பொருள்கள் எந்த அளவுக்கு சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து எதுவும் தெரியாததால், வெளி உணவுப் பொருள்களை விநியோகிக்க அனுமதிக்கக் கூடாது என பக்தா்கள், பொதுமக்கள் கோவில் நிா்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனா்.இதையடுத்து, வெளியில் இருந்து கொண்டு வரும் உணவுப் பொருட்களை இக்கோவிலுக்கு வரும் பக்தா்களுக்கு வழங்கக் கூடாது என சிவன்மலை முருகன் கோவில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • அங்காடியில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவு பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
    • கீழ்புத்தூரில் தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்றதையும் ஆய்வு செய்யப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது: தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றியம் ஆலங்குடி கொத்தாட்டையில் புதிய நெற்களம் கட்டும் பணி குறித்தும், கொத்தடடை கிராமத்தில் ஊராட்சி புதிய அங்கன்வாடி கட்டிடத்தின் கட்டுமான பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

    ஆலங்குடி ஊராட்சி அருள் மொழி பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புரைமைக்கப்பட்ட கழிவறை கட்டிட பணி குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டது. பள்ளியில் பயிலும் மாணவ- மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும், ஆலங்குடி ஊராட்சி கொத்தட்டையில் உள்ள அங்கனவாடியில் பயிலும் குழந்தைகளின் வளர்ச்சி குறித்தும், கன்னித்தோப்பு பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதை குறித்தும் ஆய்வு நடத்தினோம்.

    ஆலங்குடி ஊராட்சியில் உள்ள பொது விநியோகத் திட்ட அங்காடியில் பொது மக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

    தஞ்சாவூர் ஒன்றியம் மாரியம்மன் கோவில் சமுத்திரம் ஏரியில் நீர்வளத்துறை கல்லணை கால்வாய் கோட்டம் சார்பில் புனரமைக்கும் பணி நடைபெற்று வருவதையும், அம்மாபேட்டை பேரூராட்சி சார்பில் தமிழ்நாடு சாலை கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புத்தூரில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்றதையும் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

    மேற்கண்ட பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது .

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை தேர்வுநிலை பேரூராட்சி பேருந்து நிலையம் அருகே மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் அம்மாபேட்டை தேர்வு நிலை பேரூராட்சி சார்பில் நெகிழி மாசில்லா தஞ்சாவூர் மாவட்டம் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடக்கி வைத்தார்.

    இந்த ஆய்வின்போது பாபநாசம் தாசில்தார் பூங்கொடி, அம்மாபேட்டை செயல் அலுவலர் ராஜா, வட்டார வார்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், மதியரசன், கூத்தரசன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • மதுரை ஓட்டல்களில் உணவுப்பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.
    • பல கடைகளில் பொருட்களை கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக கூறப்படுகிறது.

    மதுரை

    பெட்ரோல்-டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை அடிக்கடி அதிகரிக் கப்பட்டு வருகிறது. இந்த விலையேற்றம் சாமானிய மக்களின் தலையில் இடி யாக இறங்குகிறது.

    பெட்ரோல்-டீசல், கியாஸ் சிலிண்டர் விலை யேற்றம் காரணமாக அன்றா டம் பயன்படுத்தும் அத்தி யாவசிய பொருட்களின் விலையும் உயர்த்தப்படுகி றது. இதனால் பொது மக்கள் கடும் அவதியடை கின்றனர்.

    இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகளில் 10 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப் பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வும் பொதுமக்களுக்கு மேலும் மேலும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

    அனைத்து பொருட்களின் விலையும் அதிகரிக்கப்பட்டு இருப்பதால் மதுரை மாநக ரில் பெரும்பாலான ஓட் டல்கள், டீக்கடைகளில் உணவுப் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

    உணவுப் பொருட்களின் விலையை ரூ.1 முதல் ரூ.10 வரை அதிகரித்துள்ளனர். மார்ச் 31-ந்தேதி வரை ஓட்டல்களில் இட்லி, பொங்கல், தோசைக்கு ரூ.3 வரை விலை ஏற்றப் பட்டுள்ளது. சாப்பாடு ரூ.5 வரை விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது.

    இதுகுறித்து ஓட்டல் நிர்வாகத்தினரிடம் கேட்ட போது, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, சுங்கச்சாவடி கட்டண விலை அதிகரிப்பு உள்ளிட்டவைகளை சமாளிக்க உணவுப் பொருட் களின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளோம் என தெரிவித்தனர்.

    உணவுப் பொருட்களை போன்று பல கடைகளில் டீ, காபியின் விலை ரூ.1 வரை உயர்த்தப்பட்டு உள்ளது. சில கடைகளில் விலை உயர்த்தப்படாத நிலையில், வழக்கத்தை விட குறைவான அளவில் டீ, காபி கொடுப் பதாக பொதுமக்கள் தரப்பில் தெரிவித்தனர்.

    தற்போது வெயில் சுட்டெரித்து வருவதால் வெப்பத்தை தணிக்கக்கூடிய பழங்கள் மற்றும் பழச்சாறு உள்ளிட்டவைகளும் பல கடைகளில் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக கூறப்படுகிறது.

    • மத்திய பா.ஜனதா அரசு உணவு பொருட்களுக்கு 5 சதவீத வரி விதித்துள்ளது.
    • பெரிய நிறுவனங்கள் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    காங்கிரஸ் ஆட்சி காலத்தில் சாமானிய மக்கள் பயன்படுத்தும் உணவு பொருட்கள் ஜி.எஸ்.டி. வரி வளையத்தில் இருந்து வெளியே இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. ஆனால் தற்போது மத்திய பா.ஜனதா அரசு அவற்றை மாற்றி உணவு பொருட்களுக்கும் 5 சதவீத வரி விதித்துள்ளது.

    இதனால் அரசுக்கு பெரிய அளவில் வருவாய் கிடைக்காது. அதனால் உணவு பொருட்கள் மீதான 5 சதவீத ஜி.எஸ்.டி. வாியை வாபஸ் பெற வேண்டும். இதற்கு பதிலாக மத்திய அரசு வரி கசிவு ஏற்படும் பகுதிகளில் கவனம் செலுத்தி அதை தடுக்க வேண்டும். பணக்காரர்களுக்கு வரி விதிப்பதை விட்டுவிட்டு ஏழைகள் மீது வரியை விதிப்பது ஏற்புடையது அல்ல.

    பெரிய நிறுவனங்கள் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது. 5 சதவீத வரியை நுகர்வோரிடம் வசூலிக்க கூடாது என்று கூறி இருப்பதாக முதல்-மந்திரி சொல்கிறார். ஆனால் எந்த நிறுவனமும் இதை ஏற்றுக்கொள்ளாது. முதல்-மந்திரி சொல்வது பொய்யான தகவல். மக்களின் கவனத்தை திசை திருப்பும் நோக்கத்தில் அவர் அவவாறு கூறுகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அதிகாரிகள் சாலையோர பழக்கடைகள் முதல் டீ கடை, வணிக வளாகங்கள் உள்ளிட்ட கடைகளில் தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • கடைக்கு வரும் உணவு பார்சல் வாங்க வருகை தரும் வாடிக்கையாளர்கள் வீட்டில் இருந்து பாத்திரம் மற்றும் பைகளை கையோடு எடுத்து வருமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

    திருச்சி:

    திருச்சி மாநகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பைகளை ஒழிப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன் தொடர்ச்சியாக அதிகாரிகள் சாலையோர பழக்கடைகள் முதல் டீ கடை, வணிக வளாகங்கள் உள்ளிட்ட கடைகளில் தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அப்போது அந்த கடைகளில் இருக்கும் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து கடை உரிமையாளர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகின்றது. நேற்று மட்டும் 497 கடைகளில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டு சுமார் 502 கிேலா பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். மாநகராட்சியில் உள்ள 5 கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நேற்றையதினம் வரையில் ரூ.1 லட்த்து 42 ஆயிரம் அபராதமாக வசூலாகியுள்ளது.

    இதனால் டீக்கடைகள், ஓட்டல்களின் உரிமையாளர்கள் தொடர்ந்து கலக்கம் அடைந்துள்ளனர். மேலும் திருச்சி மாநகரில் கடைகள் நடத்தி வரும் உரிமையாளர்கள் கடைக்கு வரும் உணவு பார்சல் வாங்க வருகை தரும் வாடிக்கையாளர்கள் வீட்டில் இருந்து பாத்திரம் மற்றும் பைகளை கையோடு எடுத்து வருமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

    மேலும் இதுகுறித்து ஓட்டல் உரிமையாளர்கள் கூறுகையில், டீ கடைகள், மளிகை கடைகள், ஓட்டல்கள் உள்ளிட்ட கடைகளில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தி தான் பார்சல்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. சாம்பார், சட்னி உள்ளிட்ட குழம்பு வகைகளும் பாலித்தீன் பைகளில் தான் வழங்கபடுகிறது.

    ஆனால் தற்போது திருச்சி மாநகரில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். அதுவும் அனைத்து கடைகள், நிறுவனங்களில் ஆய்வுகள் நடத்தப்பட்டு பிளாஸ்டிக் பயன்பாடு இருந்தால் தொடர்ந்து அபராதம் விதிக்கிறார்கள். அந்த பொருட்களையும் பறிமுதல் செய்கிறார்கள்.இதனால் தொடர்ந்து ஓட்டல்கள், கடைகள் நடத்த முடியாமல் திணறி வருகிறோம். முடிந்த அளவிற்கு வாழை இலையில் தான் பொது மக்களுக்கு பார்சல் வழங்கி வருகிறோம்.

    ஆகவே பொதுமக்களாகிய நீங்கள் ஓட்டல்களுக்கு உணவு பொருட்கள் வாங்க வருகின்ற பொழுது வீட்டிலிருந்தே பைககள் அல்லது பாத்திரங்களை கொண்டு வந்தால் அதில் தங்களுக்கான உணவு பொருட்களை வாங்கி செல்லலாம். எங்களுக்கும் அதிகாரிகள் ஆய்வின் போது எந்தவித பிரச்சினையும் ஏற்படாது.

    பொதுமக்களும் எவ்வித அச்சமுமின்றி வீட்டிற்கு உணவு பொருட்களை எடுத்து செல்லலாம் என்றனர்.

    ×