search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 arrest"

    தொழிலாளி கொலை தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் மகன் கோர்ட்டில் சரணடைந்தார்.
    தாம்பரம்:

    மயிலாடுதுறையை சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணா. இவர் பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரில் தங்கி ஓட்டலில் ஊழியராக வேலை செய்து வந்தார்.

    கடந்த 5-ந் தேதி அவர் (வெள்ளிக்கிழமை) பணி முடிந்து வீட்டுக்கு சென்றார். அப்போது 3 வாலிபர்கள் அவரை கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறிக்க முயன்றனர்.

    இதில் செல்போனை கொடுக்க மறுத்த ராஜ கண்ணனை மர்ம கும்பல் சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்று விட்டனர்.

    பலத்த காயம் அடைந்த ராஜகண்ணன் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பலியானார்.

    இது குறித்து சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். கொலை தொடர்பாக பொழிச்சலூர் பகுதியை சேர்ந்த லோகேஷ், ரோகித் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    மேலும் முக்கிய குற்றவாளியான பொழிச்சலூர் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் என்பவரின் மகன் லட்சுமணனை தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்த நிலையில் லட்சுமணனை இன்று காலை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். லட்சுமணன் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. #tamilnews
    நெல்லையில் ஓட்டுனர் பயிற்சி பள்ளியில் ஜீப் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெல்லை:

    நெல்லை பேட்டையை சேர்ந்தவர் சுல்தான் அலாவு தீன்(வயது63). வியாபாரிகள் சங்க நிர்வாகியான இவர் நெல்லை சந்திப்பில் ஓட்டுனர் பயிற்சி பள்ளி நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று இவர், தனக்கு சொந்தமான ரூ.10 லட்சம் மதிப்புள்ள ஜீப்பை, தன்னுடைய பயிற்சி பள்ளியின் முன்பு நிறுத்தி வைத்து இருந்தார். மறுநாள் காலை பார்த்தபோது அதனை காணவில்லை. அவருடைய ஜீப்பை யாரோ திருடிச்சென்று விட்டனர். இதுகுறித்து சுல்தான் அலாவுதீன் நெல்லை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் குற்றப்பிரிவு உதவி கமி‌ஷனர் எஸ்கால், சப்- இன்ஸ்பெக்டர் மாடசாமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் ஜீப்பை மர்மநபர்கள் கள்ளச்சாவி போட்டு திறந்து எடுத்து சென்னைக்கு கடத்தி கொண்டு சென்றிருப்பது தெரியவந்தது. அந்த ஜீப்பை சென்னையில் ஒரு ஓட்டுனர் பயிற்சி பள்ளி நிர்வாகியிடம் அந்த கும்பல் விற்க முயற்சி செய்தனர்.

    அந்த ஓட்டுனர் பயிற்சி பள்ளி நிர்வாகிக்கு, சுல்தான் அலாவுதீனை நன்கு தெரியும் என்பதால் அவர் இதுபற்றி போனில் விவரம் கேட்டார். அப்போது சுல்தான் அலாவுதீன் தனது ஜீப் திருட்டு போயிருந்த தகவலை தெரிவித்தார். தன்னுடைய ஜீப் சென்னையில் இருப்பது குறித்து போலீசிடம் கூறினார். அதன் அடிப்படையில் தனிப்படை போலீசார் சென்னை விரைந்தனர்.

    அங்கு சுல்தான் அலாவுதீனின் ஜீப்பை கடத்தி வைத்திருந்த சென்னை திருவொற்றியூரை சேர்ந்த குமார்(40), களக்காடு திருக்குறுங்குடியை சேர்ந்த அருண்குமார் (23) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கடத்தப்பட்ட ஜீப்பை போலீசார் மீட்டு நெல்லைக்கு கொண்டு வந்தனர்.

    கைதான இருவருக்கும் வேறு கார் திருட்டு சம்பவங்களில் தொடர்பு இருக்கிறதா? என்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    குத்தாலம் அருகே வீடு புகுந்து தாக்கியதால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்த சம்பவம் குறித்து 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    குத்தாலம்:

    நாகை மாவட்டம் குத்தாலம் அருகே செங்குழி கீழதெருவை சேர்ந்த கண்ணயைன் என்பவர் மகள் வசந்தி (வயது 32) இவரும், அதே பகுதியை சேர்ந்த வீரமணி மகள் ஐஸ்வர்யா என்பவரும் அத்திகாடு என்ற இடத்தில் செயல்படும் ஒரு கடையில் டைலராக வேலைபார்த்து வந்தனர்.

    இந்த நிலையில் வசந்தியையும், ஐஸ்வர்யாவையும திடீரென நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே அதே கடைக்கு ஐஸ்வர்யா மட்டும் மீண்டும் வேலைக்கு செல்வது வசந்திக்கு தெரியவந்தது. இதுதொடர்பாக அவர் ஐஸ்வர்யாவிடம் கேட்ட போது அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    இதுபற்றி ஐஸ்வர்யா தனது குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வீரமணி, அவரது மனைவி தவமணி மகன் சுரேந்தர் ஆகியோர் வசந் வீட்டுக்கு சென்று தகராறு செய்து அவரை கட்டையால் அடித்துள்ளனர். இதனால் மனமுடைந்த வசந்தி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுபற்றிய புகாரின் பேரில் குத்தாலம் போலீசார் வழக்குப்பதிவுசெய்து வீரமணி, சுரேந்தர் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். #tamilnews
    தண்டையார்பேட்டையில் பிரியாணி கடைக்காரர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ரவுடி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராயபுரம்:

    தண்டையார்பேட்டை, திலகர் நகரில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வந்தவர் ரவி (வயது41). திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் தள்ளு வண்டியில் பிரியாணி கடை நடத்தி வந்தார்.

    நேற்று மதியம் அவர் பிரியாணி சமைக்க தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்தார். தண்டையார்பேட்டை போலீஸ் நிலையம் அருகே வந்தபோது 3 பேர் கும்பல் ரவியை வழிமறித்து வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டனர்.

    இதுகுறித்து தண்டையார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இது தொடர்பாக காஞ்சீபுரத்தில் பதுங்கி இருந்த தண்டையார்பேட்டை திலகர் நகரைச் சேர்ந்தவர் ரவுடி ரேடியோ விஜி, புளியந்தோப்பைச் சேர்ந்த ராம்குமார் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு ரவியின் பிரியாணி கடையில் ரவுடி ரேடியோ விஜி சாப்பிட்டு விட்டு அதற்கான பணத்தை கொடுக்கவில்லை. மேலும் ரவியிடம் மாமூல் பணம் கேட்டு மிரட்டியதாக தெரிகிறது.

    இதுபற்றி ரவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் ரவுடி விஜியை கைது செய்து சிறையில் அடைத்து இருந்தனர்.

    இந்த நிலையில் சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடி விஜி, போலீசில் சிக்க வைத்த ரவியை கூட்டாளிகளுடன் சேர்ந்து தீர்த்து கட்டி இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

    இந்த கொலை தொடர்பாக மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகிறார்கள். #tamilnews
    பணம் விவகாரம் மற்றும் மண்டை உடைப்பு வழக்கில் தி.மு.க. பிரமுகர்கள் 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    சேலம்:

    சிவகங்கை மாவட்டம் டி.புதூர் பகுதியை சேர்ந்தவர் தனபால். இவரது மகளுக்கு மின் வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி சேலம் பாரப்பட்டி அருகே உள்ள பூஞ்சக்காடு பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் சோலைக்குமார் என்கிற குட்டி என்பவர் ரூ.15 லட்சத்தை வாங்கியதாக கூறப்படுகிறது. பணத்தை வாங்கி 3 ஆண்டுகள் ஆகியும் இதுவரை வேலை வாங்கி கொடுக்கவில்லை.

    இதனால் தனபால் செல்போனில் தொடர்பு கொண்டு சோலைக்குமாரிடம் பணத்தை கேட்டபோது, பாரப்பட்டியில் உள்ள எனது வீட்டிற்கு வாருங்கள். பணத்தை திரும்ப தருகிறேன் என்று கூறினார்.

    இதனை நம்பிய தனபால் தனது மனைவி கிருஷ்ணவேணி மற்றும் உறவினர்கள் குருநாதன், பிரியா ஆகியோருடன் நேற்று முன்தினம் சேலம் வந்தார்.

    பின்னர் அவர்கள் பாரப்பட்டி அருகே உள்ள பூஞ்சக்காடு பகுதியில் இருக்கும் சோலைக்குமார் வீட்டிற்கு சென்றனர். அப்போது வீட்டில் அவரது மனைவி மலர்விழி இருந்தார். அவரிடம் தனபால், உங்கள் கணவர் பணம் தருவதாக கூறி எங்களை இங்கே வரச் சொன்னார். அவர் வீட்டில் இருக்கிறாரா? என கேட்டார். அதற்கு மலர்விழி, எனது கணவர் சோலைக்குமார் வீட்டில் இல்லை. வெளியே சென்று விட்டதாக கூறினார்.

    அப்போது, தனபால் நாங்கள் கொடுத்த பணத்தை உடனடியாக உங்களது கணவரிடம் இருந்து திருப்பி வாங்கி கொடுங்கள் என்று கூறியதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த மலர்விழி மற்றும் அவரது மகன் ஹரிகரன் ஆகியோர் குருநாதனை கொடுவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. குருநாதன் ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சைப் பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் தொடர்பாக கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அ.தி.மு.க. பிரமுகர் சோலைக்குமாரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மற்றும் உடந்தையாக இருந்தவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    இந்த நிலையில் பூஞ்சக்காடு பகுதியில் சோலைக்குமாரின் சகோதரர்கள் பாரப்பட்டி குமார், உமா சங்கர் ஆகியோர் இருப்பது தெரியவந்தது.

    இன்று காலை இன்ஸ்பெக்டர் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் பூஞ்சக்காடு பகுதிக்கு சென்று பாரப்பட்டி குமார், உமாசங்கர் ஆகியோரை அதிரடியாக கைது செய்தனர்.

    இவர்கள் இருவரும் தி.மு.க. பிரமுகர்கள், இதில் பாரப்பட்டி குமார் தி.மு.க. விவசாய அணி அமைப்பாளராக உள்ளார் என்பதும், உமா சங்கர் பாரப்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வந்தவர் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

    2 பேரையும் போலீசார் சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்த பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்றனர். தொடர்ந்து போலீசார் தலைமறைமாக உள்ள மலர்விழி, ஹரிகரன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

    பணம் விவகாரம் மற்றும் மண்டை உடைப்பு வழக்கில் தி.மு.க. பிரமுகர்கள் 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
    இரிடியம் கலசம் தருவதாக ரூ.1.20 கோடி மோசடி செய்த விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    திண்டுக்கல்:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 45). கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் மனோஜ் (28) இவர்களுக்கு திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தைச் சேர்ந்த வீரய்யா, ஆனந்தபாபு ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இரிடியம் கலசம் வாங்கி கொடுப்பதாக வீரய்யா, ஆனந்தபாபு ஆகியோர் முத்துக்குமார் மற்றும் மனோஜிடம் ரூ.1.20 கோடி வாங்கியுள்ளனர். ஆனால் அவர்கள் இரிடியம் கலசத்தை கொடுக்காமல் இழுத்தடித்து உள்ளனர்.

    இதனால் அதிருப்தியடைந்த முத்துக்குமார் மற்றும் மனோஜ் பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளனர்.

    ஆனால் பணம் தராமல் மறுத்துள்ளனர். இது குறித்து நத்தம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து வீரய்யா மற்றும் அவரது கார் ஓட்டுனர் ஆனந்தபாபு ஆகியோரை கைது செய்தனர்.

    மேலும் சிலருக்கு தொடர்பு உள்ளதும் தெரிய வந்தது. இவர்கள் வேறு யாரிடமும் இது போன்று மோசடி செய்துள்ளனரா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கைது செய்யப்பட்ட வீரய்யா, விடுதலை சிறுத்தை கட்சி மாநில பொறுப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews
    வாணியம்பாடியில் போலியாக தயாரிக்கப்பட்ட பீர், பிராந்தி, ரம் உள்ளிட்ட ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்தனர்.
    வாணியம்பாடி:

    வாணியம்பாடி கலால் இன்ஸ்பெக்டர் சசிக்குமார் தலைமையில் போலீசார் வாணியம்பாடி தாலுகா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கலையம்பட்டு என்ற இடத்தில் நேற்றிரவு வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது அவ்வழியாக வந்த லோடு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் போலியாக தயாரிக்கப்பட்ட பீர், பிராந்தி, ரம் உள்ளிட்ட ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களையும், மதுகடத்தி வந்த லோடு ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். மேலும், போலீசார் வழக்கு பதிவு செய்து மதுபாட்டில் கடத்தி வந்த வாணியம்பாடி நேதாஜி நகரை சேர்ந்த தங்கதுரை (வயது 26), என்பவரை கைது செய்தனர். இதேப்போல் அந்த வழியாக பைக்கில் வந்தவரை பிடித்து சோதனை நடத்தியதில் 150 லிட்டர் கள்ள சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது.

    கள்ளசாராயம் மற்றும் பைக்கை பறிமுதல் செய்து வாணியம்பாடி நேதாஜி நகரை சேர்ந்த பழனி (வயது 57), என்பவரை கைது செய்தனர். #tamilnews
    முத்திரையர் பாளையத்தில் கஞ்சா வியாபாரிகள் 2 பேரை போலீசார் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 1½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
    புதுச்சேரி:

    புதுவை முத்திரையர் பாளையம் கல்கி கோவில் அருகே புளியந்தோப்பில் 2 பேர் கஞ்சா பொட்டலங்களை விற்க தயார் செய்வதாக மேட்டுப்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமணி, சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் அதிரடிப்படை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    அப்போது போலீசாரை பார்த்ததும் 2 பேர் தப்பி ஓட முயன்றனர். ஆனால், அவர்களை போலீசார் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். அவர்களிடம் 10 கிராம் பொட்டலங்களாக மொத்தம் 1½ கிலோ கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    விசாரணையில் அவர்களில் ஒருவன் காந்தி திருநல்லூரை சேர்ந்த அய்யப்பன் (வயது 26), மற்றொருவன் திருவண்ணாமலை சமுத்திர காலனியை சேர்ந்த தர்மன் (21) என்பதும், மொத்த கஞ்சா வியாபாரியான தர்மனிடம் இருந்து கஞ்சா வாங்கி வந்து அய்யப்பன் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

    மேலும் விசாரணையில் புதுவையில் தங்கி விற்பனை செய்ய தர்மன் விரும்பியதால் தர்மனை அய்யப்பன் புதுவை அழைத்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். #tamilnews
    சிதம்பரம் அருகே காரில் கடத்தப்பட்ட 1680 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிதம்பரம்:

    புதுவையில் இருந்து சிதம்பரம் வழியாக தஞ்சாவூருக்கு காரில் மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் மதுவிலக்கு போலீசார் சிதம்பரம் அருகே வாகன சோதனை நடத்தி கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக கார் ஒன்று வேகமாக வந்தது. அந்த காரை போலீசார் வழிமறித்து சோதனை நடத்தினர். அந்த காரில் 35 அட்டைபெட்டிகள் இருந்தனர். அதனை பிரித்து பார்த்தபோது அதில் மதுபாட்டில்கள் அடுக்கி வைக்கபட்டிருந்தன. அதனை பிரித்து பார்த்தனர். அதில் மொத்தம் 1,680 மதுபாட்டில்கள் இருந்தன.

    இதனைத்தொடர்ந்து போலீசார் காரில் இருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் தஞ்சையை சேர்ந்த அறிவழகன்(27), புதுவை மாநிலம் அரியாங்குப்பத்தை சேர்ந்த அய்யப்பன்(25) என்பதும் தெரியவந்தது.

    2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் காரில் இருந்த மதுபாட்டில்களையும், காரையும் பறிமுதல் செய்தனர். #tamilnews
    மதுரை அருகே பெண்ணிடம் நகை பறித்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுரை:

    மதுரை மாவட்டம், துவரிமான் கீழத்தெருவைச் சேர்ந்தவர் நாகஜோதி. இவரது மனைவி முருகேஸ்வரி (28). வீட்டின் அருகே உள்ள கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய முருகேஸ்வரியிடம் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் முகவரி கேட்பது போல நடித்து அவர் அணிந்திருந்த 2 பவுன் நகையை பறித்தனர்.

    அப்போது அவர் கூச்சலிட்டார். எனவே வழிப்பறி ஆசாமிகள் தப்ப முயன்றனர். பொதுமக்கள் விரட்டிச் சென்று 2 பேரையும் பிடித்து நாகமலை புதுக்கோட்டை போலீசில் ஒப்படைத்தனர்.

    இன்ஸ்பெக்டர் பாலாஜி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், அவர்கள் செக்கானூரணியைச் சேர்ந்த சிவ பிரகாஷ் (வயது 23), விக்கிரமங்கலத்தைச் சேர்ந்த சூரியபிரகாஷ் (24) என்பது தெரியவந்தது.

    2 பேரையும் கைது செய்த போலீசார் வேறு எந்த சம்பவத்திலும் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுரை சமயநல்லூர் ஆர்.சி.தெருவைச் சேர்ந்தவர் பிரபு (38). இவர் சமயநல்லூர் மெயின்ரோட்டில் டீக்கடை நடத்தி வருகிறார்.

    நேற்று முன்தினம் இரவு அதே பகுதியைச் சேர்ந்த ரவுடி ரமேஷ் (28) என்பவர் டீக்கடைக்குள் புகுந்து பிரபுவிடம் குடிக்க பணம் கேட்டார்.

    அவர் தர மறுத்ததால் கத்தியை காட்டி மிரட்டியதுடன் அங்குள்ள பொருட்களை சேதப்படுத்தினார். பின்னர் கல்லாப் பெட்டியில் இருந்த ரூ.1400 ரொக்கம் மற்றும் சைக்கிள் கடை அரவிந்த் என்பவரிடம் இருந்து ரூ.200 ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பிவிட்டார்.

    இது குறித்து சமயநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் தர்மர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். #tamilnews
    திருச்சியில் கழிவு நீர் செல்வதில் ஏற்பட்ட தகராறில் இளம்பெண்ணை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    திருச்சி:

    திருச்சி வரகனேரி காமராஜர் நகரை சேர்ந்தவர் ரெங்கராஜன். இவரது மனைவி மனோரஞ்சிதம் (வயது 38).
    இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது வீட்டின் வாசல் வழியாக மனோரஞ்சிதத்தின் வீட்டின் கழிவு நீர் செல்லும் கால்வாய் உள்ளது. இதனால் இருவருக்கும் இடையே கழிவு நீர் கால்வாய் தொடர்பாக தகராறு இருந்து வந்தது.

    இந்நிலையில் இது தொடர்பாக அவர்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது அய்யப்பன் மற்றும் அவரது உறவினர்கள் சரண்யா, வீரராஜ், சுகன்ராஜ் ஆகிய 4 பேரும் சேர்ந்து உருட்டு கட்டையால் மனோ ரஞ்சிதத்தை  சராமாரியாக தாக்கினர்.

    இதில் அவர் படுகாயம் அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இது குறித்து காந்திமார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்து அய்யப்பன், சுகன்ராஜ் ஆகிய 2பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ளசரண்யா, வீரராஜை தேடி வருகிறார்கள். #tamilnews 
    அரக்கோணம் அருகே தலைமை ஆசிரியையை தாக்கி நகையை பறித்து சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    அரக்கோணம்:

    அரக்கோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் தக்கோலம், கூட்ரோடு பகுதியில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் போலீசாரை பார்த்ததும் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் வேகமாக சென்றனர். உடனே போலீசார் மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அரக்கோணம் அருகே உள்ள கோவிந்தவாடி அகரம் பகுதியை சேர்ந்த புருஷோத்தமன் (வயது 29), மேலாந்தூரை கிராமத்தை சேர்ந்த தினேஷ் (24) என்பதும், அரக்கோணம், ஏ.என்.கண்டிகை பகுதியை சேர்ந்த தலைமை ஆசிரியை கோமளாவை தாக்கி நகையை பறித்து சென்றதும் தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார், அவர்கள் 2 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 4 பவுன் நகையையும், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். #tamilnews
    ×