search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "young woman suicide attempt"

    • இளம்பெண்ணுக்கு சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்த திருமணம் ஆகாத வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.
    • பொதுமக்கள் இளம்பெண்ணின் வீட்டிற்குள் இருந்த வாலிபரை பிடித்து வடக்கிப்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர்.

    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்கிப்பாளையம் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவர் மற்றும் ஒரு மகன், ஒரு மகள் ஆகியோர் உள்ளனர்.

    இந்தநிலையில் கணவன் -மனைவிக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதனால் இளம்பெண் தனது கணவரை பிரிந்து குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.

    இந்தநிலையில் இளம்பெண்ணுக்கு சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்த திருமணம் ஆகாத 29 வயது வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. வாலிபர் மின்சார வாரியத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. அடிக்கடி வாலிபர் இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்று அவருடன் ஜாலியாக இருந்து வந்தார். சம்பவத்தன்று இரவு இளம்பெண் வாலிபரை தனது வீட்டிற்கு அழைத்தார். பின்னர் 2 பேரும் வீட்டில் ஜாலியாக இருந்தனர். வாலிபர் வீட்டில் இருப்பதை பார்த்த சிலர் வேண்டும் என்றே திருடன்... திருடன்... என சத்தம் போட்டனர். இதனையடுத்து இளம்பெண்ணின் வீட்டு முன்பு ஊர் பொதுமக்கள் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    பின்னர் பொதுமக்கள் இளம்பெண்ணின் வீட்டிற்குள் இருந்த வாலிபரை பிடித்து வடக்கிப்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர்.

    போலீசார் வாலிபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் இளம்பெண்ணை காதலிப்பதாகவும் அவர் அழைத்ததின் பேரில் வந்ததாகவும் வாலிபர் கூறினார். இளம்பெண்ணும் தான் அழைத்ததின் பேரில் தான் வாலிபர் வந்ததாகவும், எனவே நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டாம் என போலீசாரிடம் கூறினார்.

    இதனையடுத்து போலீசார் வாலிபரை விடுவித்தனர்.

    வெளியே சென்ற வாலிபர் இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுத்து விட்டார். இதனால் மனவேதனை அடைந்த இளம்பெண் வாழ்க்கையில் விரக்தி அடைந்து சாணிப்பவுடரை கரைத்து குடித்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்தநிலையில் வடக்கிப்பாளையம் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விஷம் குடித்தற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் வாலிபர் திருமணம் செய்ய மறுத்து விட்டதால் மனவேதனை அடைந்து தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தார். மேலும் தன்னுடைய இந்த நிலைக்கு வாலிபர் தான் காரணம் என போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார்.

    போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டிற்கு சென்று மயங்கிய நிலையில் இருந்த மனைவி மற்றும் குழந்தையை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.
    • சம்பவம் குறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை:

    கோவை கோவில்பாளையம் அருகே உள்ள கொங்குநகரை சேர்ந்தவர் கார்த்திகேயன். தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி லஷிகா (வயது 23). இவர்களுக்கு கேசின்யா என்ற 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.

    சம்பவத்தன்று லஷிகா தனது கணவரிடம் குழந்தையை சலூன் கடைக்கு அழைத்து சென்று முடிவெட்டி விட்டு வரும்படி கூறினார். அதற்கு கார்த்திகேயன் குழந்தைக்கு 3-வது மொட்டை பழனி முருகன் கோவிலில் எடுக்க வேண்டியது உள்ளது. எனவே முடி வெட்ட வேண்டாம் என கூறினார்.

    இதனையடுத்து லஷிகா தனது குழந்தைக்கு அவரே முடி வெட்டினார். இதனை பார்த்த கார்த்திக்கேயன் தனது மனைவியை கண்டித்தார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கார்த்திகேயன் வெளியே சென்றார்.

    இதில் மனவேதனை அடைந்த லஷிகா தற்கொலை செய்வது என முடிவு செய்தார். அதன்படி பெண் குழந்தை கேசின்யாவுக்கு விஷம் கொடுத்து தானும் குடித்தார். சிறிது நேரத்தில் அவர்கள் வாந்தி எடுத்தனர். இதுகுறித்து லஷிகா, தனது கணவருக்கு தகவல் தெரிவித்தார். இதனை கேட்டு கார்த்திகேயன் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர் வீட்டிற்கு சென்று மயங்கிய நிலையில் இருந்த மனைவி மற்றும் குழந்தையை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு 2 பேருக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் டாக்டர்கள் லஷிகா, கேசின்யா ஆகியோரை மேல் சிகிச்சைக்காக விமான நிலையம் அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதுகுறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தன்னை மேலாளர் ஆசைக்கு இணங்கும்படி அழைத்தது குறித்தது கேட்க சென்ற கணவரிடம் தகாத வார்த்தைகளால் பேசியதால் மிகுந்த மனவேதனை அடைந்தார்.
    • வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் வைத்து விஷத்தை குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார்.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் 26 வயது இளம்பெண். இவர் பீட்சா கடை ஒன்றில் சமையல் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கணவர் உள்ளார்.

    இந்தநிலையில் அதே கடையில் மேலாளராக வேலை பார்க்கும் ஊட்டியை சேர்ந்த 32 வயது மதிக்கத்தக்க நபர் இளம்பெண்ணை தனது ஆசைக்கு இணங்கும்படி அழைத்து வந்தார். நாளுக்கு நாள் அவரது தொல்லை அதிகரித்து போகவே இளம்பெண் இது குறித்து தனது கணவரிடம் தெரிவித்தார்.

    உடனடியாக இளம்பெண்ணின் கணவர் தனது நண்பர்கள் 2 பேருடன் அந்த கடைக்கு சென்றார். அங்கு இருந்த மேலாளரிடம் இளம்பெண்ணை ஆசைக்கு இணங்கும்படி அழைத்தது குறித்து கேட்டனர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் மேலாளர் இளம்பெண்ணை தகாத வார்த்தைகளால் பேசினார். இதனை பார்த்த அங்கு இருந்தவர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    தன்னை மேலாளர் ஆசைக்கு இணங்கும்படி அழைத்தது குறித்தது கேட்க சென்ற கணவரிடம் தகாத வார்த்தைகளால் பேசியதால் மிகுந்த மனவேதனை அடைந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் வைத்து விஷத்தை குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த இளம்பெண்ணின் கணவர் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இது குறித்து மகாலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    குடியாத்தம் அருகே குடும்ப தகராறு காரணமாக இளம்பெண் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குடியாத்தம்:

    குடியாத்தம் அருகே உள்ள ஒலக்காசி ரோடு இந்திரா நகரை சேர்ந்தவர் மதிவாணன். இவரது மனைவி கனிமொழி (வயது37). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    மதிவாணன் வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தினமும் கனிமொழியிடம் தகராறு செய்துவந்தார். இதனால் தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இதனால் மனமுடைந்து காணப்பட்ட கனிமொழி இன்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து அவர் மீது மண்எண்ணையை ஊற்றி தீ பற்ற வைத்து கொண்டார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர். அவரை மீட்டு குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து குடியாத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குத்தாலம் அருகே வீடு புகுந்து தாக்கியதால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்த சம்பவம் குறித்து 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    குத்தாலம்:

    நாகை மாவட்டம் குத்தாலம் அருகே செங்குழி கீழதெருவை சேர்ந்த கண்ணயைன் என்பவர் மகள் வசந்தி (வயது 32) இவரும், அதே பகுதியை சேர்ந்த வீரமணி மகள் ஐஸ்வர்யா என்பவரும் அத்திகாடு என்ற இடத்தில் செயல்படும் ஒரு கடையில் டைலராக வேலைபார்த்து வந்தனர்.

    இந்த நிலையில் வசந்தியையும், ஐஸ்வர்யாவையும திடீரென நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே அதே கடைக்கு ஐஸ்வர்யா மட்டும் மீண்டும் வேலைக்கு செல்வது வசந்திக்கு தெரியவந்தது. இதுதொடர்பாக அவர் ஐஸ்வர்யாவிடம் கேட்ட போது அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    இதுபற்றி ஐஸ்வர்யா தனது குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வீரமணி, அவரது மனைவி தவமணி மகன் சுரேந்தர் ஆகியோர் வசந் வீட்டுக்கு சென்று தகராறு செய்து அவரை கட்டையால் அடித்துள்ளனர். இதனால் மனமுடைந்த வசந்தி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுபற்றிய புகாரின் பேரில் குத்தாலம் போலீசார் வழக்குப்பதிவுசெய்து வீரமணி, சுரேந்தர் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். #tamilnews
    போலீஸ் பிடியில் உள்ள காதலனை விடுவிக்ககோரி திருவள்ளூர் கோர்ட்டு வளாகத்தில் இளம்பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த வயலார் நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சங்கீதா. இவரும் திருமழிசையை சேர்ந்த எபினேசர் ராஜனும் காதலித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் எபினேசர் ராஜனை ஒரு வழக்கு தொடர்பாக விசாரணை செய்வதற்காக வெள்ளவேடு போலீசார் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

    இதுபற்றி அறிந்ததும் சங்கீதா, போலீஸ் நிலையத்துக்கு வந்து எபினேசர் ராஜனை விடுவிக்ககோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவரை போலீசார் சமாதானம் பேசி அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே எபினேசர் ராஜனை போலீசார் திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்துவார்கள் என்று நினைத்து சங்கீதா இன்று காலை கோர்ட்டுக்கு வந்தார்.

    அப்போது திடீரென அவர், எபினேசர் ராஜனை விடுவிக்க வேண்டும் இல்லையேல் தற்கொலை செய்வேன் என்று கூச்சலிட்டபடி கோர்ட்டு வளாக மாடிக்கு ஏற முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் சங்கீதாவை மடக்கி பிடித்து தடுத்து நிறுத்தினர்.

    உடனே சங்கீதா மறைத்து வைத்திருந்த பிளேடால் தனது கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். அவரை பாதுகாப்புக்கு நின்ற போலீசார் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரிடம் திருவள்ளூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இச்சம்பவத்தால் திருவள்ளூர் கோர்ட்டு வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. #Tamilnews
    ×