search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jewelry flush"

    • இவரது மனைவி சத்யா (வயது 35). பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
    • சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து செயின் பறிப்பு ஆசாமியை தேடி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் ஜெய்நகர் 4-வது வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி சத்யா (வயது 35). பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஆசாமி ஒருவர் சத்யா கழுத்தில் அணிந்திருந்த 1½ பவுன் தங்க சங்கிலியை திடீரென்று பறித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சத்யா திருடன், திருடன் என்று கூச்சலிட்டார். அதற்குள் அந்த ஆசாமி அங்கிருந்து தப்பி சென்றார். இது குறித்து நல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து செயின் பறிப்பு ஆசாமியை தேடி வருகின்றனர்.

    • திண்டிவனத்தில் துணிகரம்: கணவருடன் மோட்டார்சைக்கிளில் சென்ற பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டது
    • திண்டிவனம் புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளி அருகே பள்ளி மோட்டார்சைக்கிள் சென்றது.அப்போது இவர்களை பின் தொடர்ந்து மோட்டார்சைக்கிளில் வந்த ஹெல்மெட் அணிந்த 2 மர்ம நபர்கள் மல்லிகா கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.

    விழுப்புரம்:

    திண்டிவனம் தென்றல் நகரை சேர்ந்தவர் முனுசாமி ஓய்வுபெற்ற கண்டக்டர். இவரது மனைவி மல்லிகா (வயது 62) ஓய்வு பெற்ற அரசு செவிலியர். இவர்கள் மோட்டார்சைக்கிளில் திண்டிவனம் அடுத்த கீழ்கரானையில் கோவிலுக்கு சென்றுவிட்டு சுமார் இரவு பத்து மணி அளவில் திண்டிவனம் பஜார் வழியாக வீட்டிற்கு திரும்பினர்.

    திண்டிவனம் புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளி அருகே பள்ளி மோட்டார்சைக்கிள் சென்றது.அப்போது இவர்களை பின் தொடர்ந்து மோட்டார்சைக்கிளில் வந்த ஹெல்மெட் அணிந்த 2 மர்ம நபர்கள் மல்லிகா கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.

    அதிர்ச்சி அடைந்த மல்லிகா கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து மர்மநபர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.

    இது குறித்து முனுசாமி திண்டிவனம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    திண்டிவனம் மற்றும் சுற்றுப்புற இடங்களில் கடந்த சில தினங்களாக ஹெல்மெட் மற்றும் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    சேரன்மகாதேவி அருகே ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் நகை பறித்த 2 இளம்பெண்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    சேரன்மகாதேவி அருகே உள்ள பத்தமடை சிவானந்தா தெருவை சேர்ந்தவர் செல்லக்குட்டி. இவரது மனைவி செண்பகம் (வயது 65). இவர் நெல்லையில் பொருட்கள் வாங்கிவிட்டு டவுன் பஸ்சில் பத்தமடைக்கு சென்று கொண்டிருந்தார்.

    பத்தமடை பஸ் நிறுத்தத்தில் இறங்கும்போது, கூட்ட நெரிசலில் இவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க சங்கிலியை பின்னால் இருந்து 2 பெண்கள் இழுத்து அறுத்தது தெரியவந்தது.

    உடனே அவர் கூச்சல் போட்டார். பஸ்சில் இருந்த பயணிகள் அந்த பெண்ணுக்கு பின்னால் நின்ற 2 பெண்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அந்த 2 பெண்களும் நாங்கள் திருடவில்லை என்று கூறி பஸ் நிறுத்தத்தில் இறங்கி தப்பி ஓட முயன்றனர். ஆனால் பஸ்சில் வந்த பயணிகள் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். பத்தமடை போலீசார் அந்த 2 பெண்களையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது திருடப்பட்ட செயின் அவர்களிடம் இருந்தது தெரியவந்தது. அதை போலீசார் பறிமுதல் செய்தனர். உடனடியாக அந்த 2 பெண்களையும் கைது செய்தனர்.

    கைதான பெண்கள் திருச்சி மணப்பாறையை சேர்ந்த மணி என்பவரது மனைவி பிரியா (27), ரவி மனைவி சுப்பு (37) என்று தெரியவந்தது.

    இவர்கள் மேலும் பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டி உள்ளார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஆய்குடி அருகே நகை பறிப்பில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தென்காசி:

    சுரண்டையை அடுத்த ஆய்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அகரகட்டில் வசித்து வரும் பத்துரோஸ் திரவியம் என்பவர் அப்பகுதியிலுள்ள கல்லூரியில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்துள்ளார்.

    சம்பவத்தன்று கல்லூரிக்கு செல்லும் வழியில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இவர் அணிந்திருந்த தங்கச்சங்கிலியை பறித்து சென்றதாக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வேல்கனி தலைமையிலான தனிப்படையினர் விசாரணை நடத்தினர். இதில் நகை பறிப்பில் ஈடுபட்டது சங்கரன்கோவில் புதுமனை தெருவை சேர்ந்த அல்ஹாஜன் (32), சொக்கம்பட்டி திரிகூடபுரம் பகுதியை சேர்ந்த இஸ்மாயில் கனி (50) உள்பட 3 பேர் என்பது தெரிய வந்தது.

    மேலும் இந்த 3 பேரும் தென்காசி பகுதியில் 2 இடங்களில் செயின் பறிப்பில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து தங்கச்சங்கிலி பறிமுதல் செய்யப்பட்டது.

    கோவையில் பெண்களிடம் நகைபறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்களை பொதுமக்கள் அடித்து உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கோவை:

    கோவை பி.என்.புதூரை சேர்ந்த சிவராமன் என்பவரது மனைவி ரமாதேவி (வயது 71).

    இவர் அப்பகுதியில் நடந்து சென்ற போது, மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் 2 பேர் ரமாதேவி அணிந்திருந்த 4 பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர்.

    சாய்பாபாகாலனி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கூறி மாநகரின் அனைத்து போலீஸ் நிலையங்களையும் உஷார்படுத்தினர்.

    இந்நிலையில் வெள்ள லூர்பட்டணம் சாலை முல்லை நகரில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம், மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் நகையை பறிக்க முயன்றனர். உடனே அந்த பெண் சத்தம் போடவும், பொதுமக்கள் திரண்டு நகைபறிக்க முயன்ற வாலிபர்களை மடக்கிப் பிடித்தனர்.

    ஆவேசமடைந்த பொதுமக்கள் கொள்ளையர்கள் இருவரையும் மரத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்தனர். ஒரு இளம்பெண் கட்டையால் கொள்ளையர்களை தாக்கினார். பின்னர் இருவரையும் போத்தனூர் போலீசில் ஒப்படைத்தனர்.

    விசாரணையில் அவர்கள் சென்னையை சேர்ந்த விஜய ராகவன், கார்த்திக் என்பது தெரிய வந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சென்னையில் நகைபறிப்பு வழக்கில் கைதான இவர்கள் சமீபத்தில் தான் ஜாமீனில் வெளிவந்துள்ளனர்.

    இவர்கள் இதற்கு முன்பு கோவையில் ஈடுபட்டுள்ளனர். அதன்பேரில் மீண்டும் கோவையில் கைவரிசை காட்ட திட்டமிட்டு வந்துள்ளனர். அதன்படி சாய்பாபா காலனியில் ரமாதேவியிடம் நகையை பறித்து விட்டு, அடுத்ததாக வெள்ளலூருக்கு சென்று நகைபறித்த போது பொதுமக்களிடம் சிக்கியது தெரிய வந்தது. அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நகைபறிப்பு கொள்ளையர்களை பொதுமக்கள் கட்டி வைத்து தாக்குவதை சிலர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்.

    தற்போது இந்த வீடியோ காட்சிகள் வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    மாதவரம் மற்றும் கும்மிடிப்பூண்டி பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்ட 4 வாலிபர்களை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து பணம், நகைகளை பறிமுதல் செய்தனர்.
    மாதவரம்:

    மாதவரம் பகுதியில் வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிக அளவு நடந்து வருகின்றன. கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் மாதவரம் புதிய பஸ்நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்ற 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.

    அவர்கள் வியாசர்பாடியை சேர்ந்த வடிவேலு, தனசேகர் என்பதும், இருவரும் பல்வேறு இடங்களில் வழிப்பறி மற்றும் கொள்ளையில் ஈடுபட்டு வந்ததும் தெரிந்தது.

    இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    இருவர் மீதும் எம்.கே.பி.நகர் போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன.

    கைதானவர்களிடம் இருந்து 5 பவுன் நகை, ரூ.35 ஆயிரம் ரொக்கம், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன.

    கும்மிடிப்பூண்டி அருகே உள்ள வேற்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி அலமேலு. இவர் கடந்த மாதம் 13-ந்தேதி வீட்டு வாசலின் அருகே பால் வாங்குவதற்காக நின்று கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் அலமேலுவின் கழுத்தில் கிடந்த 5 சவரன் தங்கசங்கிலியை பறித்து தப்பி சென்று விட்டனர்.

    இது தொடர்பாக கும்மிடிப்பூண்டியை அடுத்த சித்தராஜ கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த வினோத்குமார், சதிஷ்குமார் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். #tamilnews
    கடை உரிமையாளரை தாக்கி நகைபறித்த 3 போலீஸ் அதிகாரிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து, மனித உரிமை ஆணைய நீதிபதி துரைஜெயச்சந்திரன் உத்தரவிட்டார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் கடைவீதியை சேர்ந்தவர் செல்வராசு (வயது 52). இவர் அப்பகுதியில் நகைக்கடை மற்றும் நகை அடகு கடை வைத்துள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ந் தேதி செல்வராசு வழக்கம்போல் தனது கடையில் வியாபாரம் செய்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு சென்ற ஒரு போலீஸ்காரர், காரில் அமர்ந்திருக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் உங்களை கூப்பிடுகிறார் என அழைத்துள்ளார்.

    இதையடுத்து செல்வராசு அங்கு சென்றபோது, காருக்குள் அமர்ந்திருந்த அரியலூர் மாவட்டம் திருமானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னர்மன்னன், அரியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ராஜவேலு ஆகியோர் வலுக்கட்டாயமாக செல்வராசை போலீஸ் ஜீப்பில் ஏற்றிச்சென்று திருட்டு நகையை வாங்கியதாக கூறி, அவரை தாக்கி அவர் அணிந்திருந்த 9 பவுன் தங்க நகை மற்றும் ரூ.15 ஆயிரம் பணத்தை பறித்துக்கொண்டு விடுவித்தார்கள்.

    இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான செல்வராசு, தன்னிடம் மனித உரிமை மீறலில் ஈடுபட்ட 3 போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாநில மனித உரிமை ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கை விசாரித்த மனித உரிமை ஆணைய நீதிபதி துரைஜெயச்சந்திரன், மனுதாரர் குறிப்பிட்ட போலீஸ் அதிகாரிகள் 3 பேரும் மனித உரிமை மீறலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்ட செல்வராசுக்கு அரசு இழப்பீடாக ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும்.

    அந்த தொகையை குற்றம் சாட்டப்பட்ட போலீஸ் அதிகாரிகள் 3 பேரிடம் இருந்தும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் வசூல் செய்து வழங்க வேண்டும் என்றும், மேலும் 3 பேர் மீதும் துறைரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

    இதில் மன்னர்மன்னன் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை இன்ஸ்பெக்டராகவும், சிவராஜ் நாகப்பட்டினம் மாவட்டம் கீழவேளூர் இன்ஸ்பெக்டராகவும், ராஜவேலு அரியலூர் மாவட்டம் கீழப்பழூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராகவும் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews
    மதுரை அருகே பெண்ணிடம் நகை பறித்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுரை:

    மதுரை மாவட்டம், துவரிமான் கீழத்தெருவைச் சேர்ந்தவர் நாகஜோதி. இவரது மனைவி முருகேஸ்வரி (28). வீட்டின் அருகே உள்ள கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய முருகேஸ்வரியிடம் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் முகவரி கேட்பது போல நடித்து அவர் அணிந்திருந்த 2 பவுன் நகையை பறித்தனர்.

    அப்போது அவர் கூச்சலிட்டார். எனவே வழிப்பறி ஆசாமிகள் தப்ப முயன்றனர். பொதுமக்கள் விரட்டிச் சென்று 2 பேரையும் பிடித்து நாகமலை புதுக்கோட்டை போலீசில் ஒப்படைத்தனர்.

    இன்ஸ்பெக்டர் பாலாஜி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், அவர்கள் செக்கானூரணியைச் சேர்ந்த சிவ பிரகாஷ் (வயது 23), விக்கிரமங்கலத்தைச் சேர்ந்த சூரியபிரகாஷ் (24) என்பது தெரியவந்தது.

    2 பேரையும் கைது செய்த போலீசார் வேறு எந்த சம்பவத்திலும் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுரை சமயநல்லூர் ஆர்.சி.தெருவைச் சேர்ந்தவர் பிரபு (38). இவர் சமயநல்லூர் மெயின்ரோட்டில் டீக்கடை நடத்தி வருகிறார்.

    நேற்று முன்தினம் இரவு அதே பகுதியைச் சேர்ந்த ரவுடி ரமேஷ் (28) என்பவர் டீக்கடைக்குள் புகுந்து பிரபுவிடம் குடிக்க பணம் கேட்டார்.

    அவர் தர மறுத்ததால் கத்தியை காட்டி மிரட்டியதுடன் அங்குள்ள பொருட்களை சேதப்படுத்தினார். பின்னர் கல்லாப் பெட்டியில் இருந்த ரூ.1400 ரொக்கம் மற்றும் சைக்கிள் கடை அரவிந்த் என்பவரிடம் இருந்து ரூ.200 ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பிவிட்டார்.

    இது குறித்து சமயநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் தர்மர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். #tamilnews
    எண்ணூர் பஸ் நிலையத்தில் இருந்து வீட்டுக்கு நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறித்த வாலிபருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.
    எண்ணூரில் பெண்ணிடம் நகை பறித்த வாலிபருக்கு தர்ம அடி  
    வடபழனியில் நிதிநிறுவன அதிபரை காரில் கடத்தி ரூ.33 லட்சம் மற்றும் 28 பவுன் நகை, விலை உயர்ந்த செல்போன் ஆகியவற்றை பறித்துச் சென்ற 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
    கோயம்பேடு:

    சென்னை மேற்கு மாம்பலம் விவேகானந்தபுரம் 2-வது தெருவைச் சேர்ந்தவர் மோகன்(வயது 49). இவர் வடபழனி, பிள்ளையார் கோவில் தெருவில் விநாயகா எண்டர்பிரைசஸ் என்ற பெயரில் நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து நிதிநிறுவனம் நடத்திவருகிறார். ஒரு மாதத்துக்கு முன்பு வங்கிக் கடன் வாங்கித்தரும் முகவர் என்று கூறிக்கொண்டு சரவணகுமார் என்பவர் மோகனுக்கு அறிமுகமானார். அதன்பிறகு அவர்களுக்கு இடையே நட்பு தொடர்ந்தது.

    இந்தநிலையில் கடந்த 23-ந் தேதி மோகனை செல்போனில் தொடர்புகொண்டு பேசிய சரவணகுமார், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் கம்பெனிக்கு ரூ.20 லட்சம் கடன் தேவைப்படுகிறது என்றார். எனவே அந்த கம்பெனிக்கு சென்று பார்த்துவிட்டு வருவோம் என்றார்.

    அதன்படி சரவணகுமார், வடபழனியில் உள்ள மோகனின் அலுவலகத்துக்கு காரில் சென்று அவரையும் அழைத்துக்கொண்டு காரில் சென்றார். சரவணகுமார், மோகன் மற்றும் டிரைவர் ஆகிய 3 பேர் மட்டுமே காரில் இருந்தனர். ஆனால் கார் கிழக்கு கடற்கரை சாலை நோக்கி செல்லாமல் தாம்பரம் நோக்கி சென்றது.

    இதனால் சந்தேகம் அடைந்த மோகன், சரவணகுமாரிடம் இதுபற்றி கேட்டார். அதற்கு அவர், போக்குவரத்து நெரிசல் காரணமாக பாதை மாறிச்செல்வதாக கூறினார். இதனால் அவர் சமாதானம் அடைந்தார். கார் தாம்பரத்தை அடுத்த மப்பேடுக்குள் நுழைந்து ஆள்நடமாட்டம் இல்லாத ஒரு இடத்தில் நின்றது. அங்கிருந்த மேலும் 3 பேர் காரில் ஏறிக்கொண்டனர்.அவர்கள் மோகனின் கழுத்தில் கத்தியை வைத்து ரூ.1 கோடி தரும்படி கேட்டு மிரட்டினர். இதனால் மோகன் அதிர்ச்சி அடைந்தார். அதன்பிறகு தான் அவருக்கு காரில் கடத்திவரப்பட்டது தெரியவந்தது.

    பின்னர் மோகன், தற்போது தன்னிடம் ரூ.33 லட்சம் மட்டுமே உள்ளதாக கூறினார். அதற்கு சரவணகுமார் உள்பட 5 பேரும், கோயம்பேடில் உள்ள தமிழக தேர்தல் ஆணைய அலுவலகம் முன்பு வரும் எங்கள் கூட்டாளியிடம் அந்த பணத்தை கொடுத்தால் தான் உன்னை இங்கிருந்து விடுவிப்போம் என்றனர்.

    இதையடுத்து மோகன், தனது சகோதரரை செல்போனில் தொடர்புகொண்டு ரூ.33 லட்சத்தை கோயம்பேடு சென்று, அங்குள்ளவரிடம் கொடுக்கும்படி கூறினார். அவரும் அதன்படி பணத்தை கொடுத்ததாக தெரிகிறது.

    பணம் கைமாறிய தகவல் உறுதி ஆனதும், 5 பேரும் மோகன் அணிந்து இருந்த 28 பவுன் நகைகள், விலை உயர்ந்த செல்போன் ஆகியவற்றையும் பறித்துக்கொண்டனர்.

    பின்னர் அவரை மப்பேடு கிராமத்துக்கு வெளியே காரில் அழைத்துவந்து சென்னை -திருச்சி நெடுஞ்சாலையில் இறக்கிவிட்டு சரவணகுமார் உள்பட 5 பேரும் தப்பிச் சென்றுவிட்டனர்.இதுகுறித்த புகாரின்பேரில் வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய சரவணகுமார் மற்றும் அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.

    மோகன் தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து நிதிநிறுவனம் நடத்தி வருகையில் இவரை மட்டும் குறிப்பிட்டு கடத்தி இருப்பதும், மோகன் 28 பவுன் நகைகள் அணிந்து இருந்ததும் போலீசாருக்கு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். #tamilnews
    காற்றுக்காக மாடி கதவை திறந்து வைத்து தூங்கிய மூதாட்டியிடம் 12 பவுன் தங்க சங்கிலியை மர்ம மனிதன் பறித்துச் சென்றான்.
    உசிலம்பட்டி:

    உசிலம்பட்டி-வத்தலக்குண்டு சாலையில் உள்ளது அன்னம்பார்பட்டி. இங்குள்ள மொக்கராஜ் தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகர், விவசாயி. இவருடைய மனைவி தனலட்சுமி (வயது 63).

    நேற்று இரவு வீட்டு மாடியில் படுத்திருந்தபோது தனலட்சுமி காற்றுக்காக பால்கனி கதவை திறந்து வைத்திருந்தார். இதனை பயன்படுத்தி இன்று அதிகாலை 3 மணி அளவில் மர்ம மனிதன் நைசாக வீட்டுக்குள் புகுந்துள்ளான். அவன் தனலட்சுமி கழுத்தில் கிடந்த 12 பவுன் தாலி சங்கிலியை நைசாக அபேஸ் செய்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டான்.

    நகை மாயமானது தெரிய வந்ததும் தனலட்சுமி அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உசிலம்பட்டி டவுன் போலீசில் சந்திரசேகர் புகார் செய்தார். போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் பதிவு செய்யப்பட்டன.

    காற்றுக்காக கதவை திறந்து வைத்திருந்த மூதாட்டியிடம் நகை பறிப்பு சம்பவம் நடைபெற்று இருப்பது உசிலம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ×