என் மலர்
உலகம்
- நேரம் கடந்துவிட்டது என்று கைகளை கூப்பி கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தார்
- 11 ஆண்டுகளுக்குப் பிறகு யேமன் சிறையில் இருந்த நிமிஷாவை பிரேமா சந்தித்தார்
ஏமனில் மரண தண்டனை நிறைவேற்றப்பட இருக்கும் இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவின் தாய் கேரளா மற்றும் மத்திய அரசுகளின் உதவியை நாடியுள்ளார். தனது மகளின் மரண தண்டனைக்கு ஏமன் அதிபர் ரஷாத் அல்-அலிமி ஒப்புதல் அளித்ததையடுத்து செயல்பட அதிக நேரம் இல்லை என்று தெரிவித்துள்ளார். இன்னும் ஒரு மாதத்துக்குள் அவரின் மரண தண்டனை நிறைவேற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.

தாய் வேண்டுகோள்
இந்நிலையில் ஏமனில் இருந்து உள்ளூர் தொலைக்காட்சி சேனலில் பேசிய பிரேமா குமாரி, இந்திய அரசாங்கம் உடனடியாக தலையிட வேண்டும் என்று வலியுறுத்தினார். மகளுக்கு இன்னும் அதிக நேரம் இல்லை, என்று அவர் கூறினார்.
இந்திய மற்றும் கேரள அரசுகளுக்கும், அவளைக் காப்பாற்ற அமைக்கப்பட்ட குழுவிற்கும், இதுவரை வழங்கிய அனைத்து ஆதரவிற்கும் நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் இது எனது இறுதி வேண்டுகோள். தயவு செய்து அவளுடைய உயிரைக் காப்பாற்ற உதவுங்கள். நேரம் கடந்துவிட்டது என்று கைகளை கூப்பி கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தார்.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், 11 ஆண்டுகளுக்குப் பிறகு யேமன் சிறையில் இருந்த நிமிஷாவை பிரேமா சந்தித்தார். "என்னைப் பார்த்தவுடனே ஓடி வந்து மம்மி என்று என்னைக் கட்டிக் கொண்டாள்.இருவரும் அழுதோம்.ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து அழுதோம்.இவ்வளவு வருடங்களுக்குப் பிறகு அவளைப் பார்க்கிறேன்.கடைசியாக அவளைப் பார்த்தது திருமணம் ஆனபோதுதான். அவளை விட்டு விடுங்கள் என்று பிரியாவை சந்தித்த பிறகு தாய் குமாரி தெரிவித்தார்.
2023 டிசம்பரில் டெல்லி உயர் நீதிமன்றத்தால் குமாரி ஏமன் செல்ல அனுமதிக்கப்பட்டார், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துடன் blood money பற்றி பேச்சுவார்த்தை நடத்தவும் மற்றும் அவரது மகளை தூக்கில் இருந்து காப்பாற்றவும் இந்த அனுமதி வழங்கப்பட்டது.
நிமிஷா கொலை வழக்கு
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோடு பகுதியை சேர்ந்தவர் நிமிஷா பிரியா (வயது36). இவர் தெற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் நர்சாக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு அந்த நாட்டை சேர்ந்த தலால் அபு மஹதி என்பவரை மயக்க மருந்து செலுத்தி கொல்லப்பட்டார். இந்த வழக்கில் நிமிஷா பிரியா கைது செய்யப்பட்டார். அவருக்கு அந்த வழக்கில் 2018-ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இதையடுத்து அவர் அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டார். நிமிஷா பிரியாவை மீட்டு சொந்த ஊருக்கு அழைத்து வரும் நடவடிக்கையில் அவரது தாய் பிரேமா மேரி ஈடுபட்டு வந்தார்.

ஒரே வழி
கடந்த ஆண்டு குமாரி ஏமன் சென்று, தலைநகர் சனாவில் தங்கி, கொலை செய்யப்பட்ட மஹ்தியின் குடும்பத்தினருடன் இழப்பீட்டுத் தொகை [blood money] குறித்து பேச்சுவார்த்தை நடத்த முயன்றார். பாதிக்கப்ட்டவர் குடும்பம் பணத்தை ஏற்றுக்கொண்டு சம்மதம் தெரிவித்தால் தண்டனை குறைக்கப்படும் அல்லது ரத்து செய்யப்படும்.
இது ஏமனில் ஒரு பாரம்பரிய நடைமுறையாகும். ஆனால் நிமிஷா விஷயத்தில் blood money பேச்சுவார்த்தை முயற்சிகள் பின்னடைவைச் சந்தித்து வந்தது.
தற்போது மரண தண்டனைக்கு ஜனாதிபதி ஒப்புதல் அழித்துவிட்ட நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு blood money கொடுக்க தயாராக இருப்பதாகவும் அவர்களுடன் உடனே பேச்சுவார்த்தை நடத்தி அதை ஏற்றுக்கொள்ள சம்மதிக்க வைக்க வேண்டும் என்று குமாரி மற்றும் நிமிஷாவின் கணவர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நிமிஷாவை தூக்கிலிருந்து இனி காப்பாற்றுவதற்கான ஒரே வழி இதுவே ஆகும். எனவே மத்திய அரசு இதில் என்ன நடவடிக்கை எடுக்க உள்ளது என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
- பாகிஸ்தான் ராணுவத்தின் சோதனைச் சாவடியை கைப்பற்றியதாக தெரிக்-இ-தலிபான் பாகிஸ்தான்.
- சோதனைச் சாவடி கைவிடப்பட்டதாக பாகிஸ்தான் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் பல பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. அவர்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் ஆப்கானிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் பாகிஸ்தானுக்குள் ஊடுருவலை தடுக்க பல்வேறு இடங்களில் சோதனைப் சாவடிகள் அமைத்துள்ளது.
இந்த நிலையில் கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள பஜாயுர் மாவட்டத்தில் உள்ள பாகிஸ்தான் ராணுவத்தின் சோதனைச் சாவடியை கைப்பற்றியதாக தெரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும். அந்த இடத்தில் தெரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பின் கொடி ஏற்றப்பட்டுள்ளது. இந்த தகவலை தெரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக மூத்த பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில் "அந்த சோதனைச் சாவடி குறைக்கும் செயல்முறையில் ஒரு பகுதியாக காலி செய்யப்பட்டது. கொஞ்ச நாட்களுக்கு முன் கைவிடப்பட்டது. அங்கிருந்து ராணுவ வீரர்கள் புதிய கோட்டைக்கு மாற்றப்பட்டனர்.
இந்த செயல்முறை ஜமாயுர் மாவட்டத்துடன் நின்றுவிடவில்லை. வடக்கு மற்றும் தெற்கு வஜிரிஸ்தான் மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது" எனத் தெரிவித்தார்.
- கடற்பகுதியில் ரஷியாவின் போர்க்கப்பல் போன்றவற்றை உக்ரைன் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
- தற்போது முதன்முதலாக கடல்சார் டிரோன் மூலம் ஹெலிகாப்டரை தாக்கி அழித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து 3 ஆண்டுகள் நிறைவடைய இருக்கின்றன. ஆனால் போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. தற்போது டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் இரு நாடுகளும் பரஸ்பர தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.
அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உதவியுடன் உக்ரைன் ரஷியா மீது டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தினால், உக்ரைன் பதிலுக்கு டிரோன் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த வகையில் இன்று உக்ரைனின் கடல்சார் டிரோன் ரஷியாவின் ஹெலிகாப்டரை வெற்றிகரமாக தாக்கி அழித்துள்ளது. உக்ரைன் டிரோன் ஹெலிகாப்டரை வெற்றிகரமாக தாக்கி அழித்தது இதுவே முதல்முறையாகும்.
2014-ம் ஆண்டு ரஷியா உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை கைப்பற்றியது. இங்கு ரஷியா போர் கப்பல் மற்றும் போருக்கு தேவையான ஆயுதங்கள் போன்றவற்றை சேமித்து வைத்துள்ளது.
உக்ரைன் கடல்சார் டிரோன்கள் இவற்றை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது முதன்முறையாக ஹெலிகாப்டரைதாக்கி அழைத்து வருகிறது.
ரஷிய ஹெலிகாப்டரின் உரையாடலை இடைமறித்து கேட்டபோது "வெடிச்சத்தம் கேட்டது. ஹெலிகாப்டர் தாக்கப்பட்டுள்ளது. கடல் பகுதியில் இருந்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என விமானி தெரிவிக்கிறார்.
மேலும் ஒரு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 2-வது நடத்தப்பட்ட தாக்குதலை நான் பார்க்கவில்லை. ஆனால், முதல் தாக்குதல் நேரடியாக தாக்கியது. ஹெலிகாப்டரில் தாக்கப்பட்டதாக உண்கிறேன். சில சிஸ்டம்கள் தோல்வியடைந்துள்ளது. நான் (ஹெலிகாப்டர்) தாக்கப்பட்டேன். கீழ் நோக்கி சென்று கொண்டிருக்கிறேன்" என அவர் பேசுவது பதிவாகியுள்ளது.
இது தொடர்பாக வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.
உக்ரைனின் மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய கட்டமைப்புகளை குறிவைத்து ரஷியா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைனும் ரஷியாவுக்கு டிரோன் தாக்குதல் மூலம் அழிவை ஏற்படுத்தி வருகிறது.
உக்ரைனுக்கு எதிரான சண்டையில் ரஷியா போர்க்கப்பல், விமானம் உள்ளிட்டவைகளை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ரஷியாவின் Mi-8 ஹெலிகாப்டரை உக்ரைனின் மகுரா V5 கடல்சார் டிரோன் (Magura V5 naval drone) தாக்கி அழித்ததாக உக்ரைன் ராணுவத்தின் புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
- வருகிற மார்ச் மாதம் பூமிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- 16 சூரிய உதயங்களையும் அஸ்தமனங்களையும் காண்பார்கள்.
அமெரிக்க விண்வெளி வீராங்கணையான இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ளார். கடந்த ஜூன் 5-ந்தேதி விண்வெளிக்கு சென்ற அவர், விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பூமிக்கு திரும்ப முடியாமல் சிக்கி உள்ளார். அவர் வருகிற மார்ச் மாதம் பூமிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள சுனிதா வில்லியம்ஸ் உள்பட குழுவினர் 16 முறை புத்தாண்டு கொண்டாடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சர்வதேச விண்வெளி மையம் கூறும்போது, பூமிக்கு மேல் 400 கி.மீ உயரத்தில் மிதந்து கொண்டிருக்கும் எக்ஸ்பெடிஷன் 72 குழுவினர், பூமியைச் சுற்றி வரும்போது 2025 பிறக்கும் தருணத்தில் 16 சூரிய உதயங்களையும் அஸ்தமனங்களையும் காண்பார்கள் என்று தெரிவித்துள்ளது.
- 2025-ம் ஆண்டுக்கான கவுரவ விருதை பெறுபவர்களின் பட்டியலை இங்கிலாந்து மந்திரிசபை வெளியிட்டுள்ளது.
- பல்வேறு துறைகளை சேர்ந்த 1,200-க்கும் மேற்பட்டோருக்கு விருது வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டன்:
இங்கிலாந்தில் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டையொட்டி விளையாட்டு, சுகாதாரம், கல்வித்துறை மற்றும் தன்னார்வ சேவை ஆகியவற்றில் முன்மாதிரியாக இருப்பவர்களுக்கு கவுரவ விருது வழங்கப்படுகிறது.
அந்த வகையில் 2025-ம் ஆண்டுக்கான கவுரவ விருதை பெறுபவர்களின் பட்டியலை இங்கிலாந்து மந்திரிசபை வெளியிட்டுள்ளது.
பல்வேறு துறைகளை சேர்ந்த 1,200-க்கும் மேற்பட்டோருக்கு விருது வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்திய வம்சாவளியினர் 30 பேருக்கு இந்த கவுர விருது வழங்கப்பட உள்ளது. பட்டியலில் இடம்பெற்றவர்களுக்கு மன்னர் சார்லஸ் விருது வழங்கி கவுரவிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மீண்டும் சியாட்டில் விமான நிலையத்திற்கே திருப்பிவிடப்பட்டது.
- புகை வந்ததை பணியாளர்கள் கண்டறிந்து தெரிவித்தனர்.
ஹவாய் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றின் காக்பிட்-இல் புகை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சியாட்டில் விமான நிலையத்தில் இருந்து ஹானோலுலு நோக்கி புறப்பட்ட விமானத்தின் காக்பிட்-இல் திடீரென புகை வந்தது. இதையடுத்து விமானம் மீண்டும் சியாட்டில் விமான நிலையத்திற்கே திருப்பிவிடப்பட்டது.
திங்கள்கிழமை மதியம் 1 மணி அளவில் சியாட்டில் விமான நிலையத்தில் இருந்து 273 பயணிகள் மற்றும் பத்து பணியாளர்களுடன் ஹவாய் ஏர்லைன்ஸ்-க்கு சொந்தமான ஏர்பஸ் ஏ330 புறப்பட்டது. சியாட்டிலில் இருந்து ஹானோலுலு புறப்பட்ட விமானத்தில் திடீரென புகை வந்ததை பணியாளர்கள் கண்டறிந்து தெரிவித்தனர்.
இதையடுத்து விமானத்தில் அவசர நிலை ஏற்பட்டதாக விமானி அறிவித்தார். இதையடுத்து, விமானம் சியாட்டில் விமான நிலையத்திலேயே பத்திரமாக தரையிறக்கப்பட்டது. விமானம் தரையிறங்கும் முன்பே விமான நிலையத்தில் தீயனைப்பு துறையினர் மற்றும் மருத்துவ பணியாளர்கள் தயார் நிலையில் இருந்தனர்.
விமானம் பத்திரமாக தரையிறங்கியதும், தீயனைப்புத் துறையினர் விமானத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, புகை வந்ததற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்பதை கண்டறிந்தனர். இதனை விமான நிலைய செய்தி தொடர்பாளர் உறுதிப்படுத்தினார்.
- இன்ஸ்டாகிராம் பிரபலமான இவரை 30 லட்சம் பேர் பின்தொடர்ந்து வருகிறார்கள்.
- உங்கள் அன்புக்கு நன்றி எனக்கூறினார்.
நைஜீரியாவை சேர்ந்தவர் விக்டோரியா ரோஸ். மாடல் அழகியும், நடிகையுமான இவர் சமூக வலைத்தளத்தில் கணக்கு தொடங்கி வீடியோ, போட்டோக்கள் ஆகியவற்றை பதிவேற்றி வருகிறார். இன்ஸ்டாகிராம் பிரபலமான இவரை 30 லட்சம் பேர் பின்தொடர்ந்து வருகிறார்கள்.
இந்தநிலையில் சில நாட்களுக்கு முன்பு மர்மநபர்களால் விக்டோரியா ரோஸ் கடத்தப்பட்டதாகவும், அவரை விடுதலையை செய்ய பிணை தொகையாக ரூ.8½ கோடி (1 மில்லியன் அமெரிக்க டாலர்) கேட்பது தொடர்பான பதிவுகள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவின.
இந்தநிலையில் இந்த கடத்தல் போலியானது என்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக விக்டோரியா ரோஸ் இன்ஸ்டாகிராம் நேரலையில் தோன்றினார். அப்போது அவர், ரசிகர்களிடம் நான் மன்னிப்பு கோருகிறேன். விளையாட்டுக்காக இந்த கடத்தல் நாடகத்தை என் சகோதரனுடன் சேர்ந்து ஏற்பாடு செய்தேன். உங்கள் அன்புக்கு நன்றி எனக்கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் அழகியை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு அந்த வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.
- டிரோன் தாக்குதலில் அப்துல் ஹாதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது.
- நுக்பா படைப்பிரிவு தளபதியான அப்துல் ஹாதி சபா கொல்லப்பட்டார்.
ஹமாஸ் அமைப்பின் நுக்பா படைப்பிரிவு தளபதி அப்துல்-ஹாதி சபா கொல்லப்பட்டதை இஸ்ரேல் பாதுகாப்பு படை உறுதிப்படுத்தி இருக்கிறது. சமீபத்திய டிரோன் தாக்குதலில் அப்துல் ஹாதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது.
கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி கிபுட்ஸ் நிர் ஓஸ்-இல் நடத்தப்பட்ட கொடூர தாக்குதலை அப்துல் ஹாதி சபா வழிநடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. நுக்பா படைப்பிரிவு தளபதி தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸ் பகுதியில் வைத்து கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த எக்ஸ் தள பதிவில், "இஸ்ரேல் பாதுகாப்பு படையின் உளவுத்துறை மற்றும் ஐ.எஸ்.ஏ. தாக்குதலில் நுக்பா படைப்பிரிவு தளபதியான அப்துல் ஹாதி சபா கொல்லப்பட்டார்," என்று இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
கொல்லப்பட்ட அப்துல் ஹாதி சபா இஸ்ரேல் பாதுகாப்பு படைகளுக்கு எதிராக பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களை வழிநடத்தியுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. அக்டோபர் 7 ஆம் தேதி நடத்தப்பட்ட கொடூர தாக்குதலில் பின்புலமாக இருந்த அனைத்து பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடரும் என்று இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
- 2011-ம் ஆண்டு அந்நாடுகளுடன் தென்ஆப்பிரிக்கா நாடும் இணைந்தது.
- 8 நாடுகளும் முதல் பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பினர் நாடுகளாகின்றன.
பாங்காக்,
பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகளில் ஒன்றாக தாய்லாந்து நாடும் இணைகிறது. இதன்படி, 2025-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் அந்நாடு அமைப்பில் உறுப்பினர் அந்தஸ்து பெறுகிறது.
இதுபற்றி தாய்லாந்து நாட்டின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், பிரிக்ஸ் அமைப்பின் 2024-ம் ஆண்டுக்கான தலைமையையேற்ற ரஷியா, கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் 28-ந்தேதி வெளியிட்ட செய்தியில், 2025-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் பிரிக்ஸ் நாடுகளில் ஒன்றாக தாய்லாந்தும் இணையும் என உறுதிப்படுத்தி இருந்தது என அமைச்சக செய்தி தெரிவிக்கின்றது.
இதனால், வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பினர் நாடுகளுடனான பொருளாதார உறவுகளை மேம்படுத்த உதவும் வகையில் ஒத்துழைப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று அமைச்சகம் தெரிவிக்கின்றது.
தாய்லாந்து நாட்டுடன் பெலாரஸ், பொலிவியா, இந்தோனேசியா, கஜகஸ்தான், கியூபா, உகாண்டா, மலேசியா மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய 8 நாடுகளும் முதல் பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பினர் நாடுகளாகின்றன.
பிரிக்ஸ் அமைப்பானது நாடுகளுக்கு இடையேயான கூட்டமைப்பை ஏற்படுத்தும் வகையில், 2006-ம் ஆண்டு ரஷியாவால் நிறுவப்பட்டது. இதில், ரஷியா, சீனா, இந்தியா மற்றும் பிரேசில் நாடுகள் உறுப்பினராக இருந்த நிலையில், 2011-ம் ஆண்டு அந்நாடுகளுடன் தென்ஆப்பிரிக்கா நாடும் இணைந்தது.
சுழற்சி முறையில் 2024-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி ரஷியா இதன் தலைமையை ஏற்றது. 2024-ம் ஆண்டு தொடக்கத்தில் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை அமைப்பின் உறுப்பினராக அதிகாரப்பூர்வ முறையில் இணைந்தன.
- விபத்தில் மஜித் இறந்ததும் குடும்பத்தினர் துயரத்தில் ஆழ்ந்தனர்.
- விமான விபத்திற்கான காரணம் பற்றி விமான போக்குவரத்து கழகம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் ராஸ் அல் கைமா பகுதியில் இலகு ரக விமானம் ஒன்று பயணித்தது. அப்போது, அது விபத்தில் சிக்கியதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர் சுலைமான் அல் மஜித் (வயது 26) உள்பட 2 பேர் உயிரிழந்தனர். இணை விமானியாக சுலைமான் இருந்துள்ளார். அவருடன், பாகிஸ்தானை சேர்ந்த 26 வயது பெண் ஒருவர் சென்றுள்ளார். 2 பேரும் விமான விபத்தில் பலியாகி விட்டனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் பிறந்து வளர்ந்தவரான சுலைமான், அவருடைய குடும்பத்தினருடன் பல்வேறு இடங்களை சுற்றி பார்க்கும் ஆவலில் விமானம் ஒன்றை வாடகைக்கு அமர்த்தியுள்ளார். அவருடைய தந்தை, தாய் மற்றும் இளைய சகோதரர் ஆகியோர் விமானம் நிறுத்தும் கிளப்பில் இருந்தனர். விமானம் எப்படி பறக்கிறது என்று பார்வையிட்டனர்.
சுலைமான் வந்த பின்னர், அவருடைய இளைய சகோதரர், அடுத்து செல்வதற்காக திட்டமிடப்பட்டு இருந்தது. அதற்குள் விபத்தில் மஜித் இறந்ததும் குடும்பத்தினர் துயரத்தில் ஆழ்ந்தனர்.
பீச்சை ஒட்டி இருந்த கோவ் ரோடனா ஓட்டல் அருகே இருந்து விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்து ஏற்பட்டு உள்ளது. கட்டுப்பாட்டு அறையுடனான சிக்னல் தொடர்பை விமானம் இழந்ததும், பின்னர் அவசர தரையிறக்கம் செய்ய முயற்சித்ததும் முதல்கட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இங்கிலாந்தில் மருத்துவ கூட்டமைப்பில் தீவிர தொடர்பில் இருந்த அவர் தர்ஹாம் கவுன்டி மற்றும் டார்லிங்டன் என்.எச்.எஸ். அறக்கட்டளையில் மருத்துவராகவும் இருந்து வந்துள்ளார்.
இளநிலை டாக்டர்களை பயிற்சி டாக்டர்களாக வகைப்படுத்த கோரியும், முறையான சம்பளம் வழங்க கோரியும் கூட்டமைப்புடன் இணைந்து, அதற்கான நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில், விமான விபத்திற்கான காரணம் பற்றி விமான போக்குவரத்து கழகம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
- தைவான் தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என சீனா உரிமை கொண்டாடி வருகிறது.
- தைவானுக்கு ஆதரவளிக்கும் பல்வேறு நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
பீஜிங்:
சீனாவில் இருந்து 1949-ல் உள்நாட்டுப் போருக்கு மத்தியில் தைவான் பிரிந்தது. ஆனாலும் சீனா தனது ராணுவ பலத்தின் மூலம் தைவானை அடைய தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது.
இதற்கிடையே, தைவான் தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இதனால் தைவானுடன் பல்வேறு நாடுகள் தங்களது தொடர்பை வலுப்படுத்தி வருவது சீனாவுக்கு கடும் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது.
அதன்படி, தைவானுடன் இணக்கமாக செயல்பட்டு வரும் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், சீன தொலைக்காட்சியில் அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் புத்தாண்டு செய்தி வெளியிட்டார். அப்போது அவர் கூறுகையில், தைவான் ஜலசந்தியின் இருபுறமும் உள்ள சீனர்களான நாங்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தைவானை சீனாவுடன் இணைப்பதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.
தைவானை தனது பிரதான நிலப்பகுதியின் ஒரு பகுதியாக சீனா உரிமை கோருகிறது. மாற்றம் மற்றும் கொந்தளிப்பு ஆகிய இரண்டும் உள்ள உலகில் சீனா ஒரு பொறுப்பான பெரிய நாடாக, உலகளாவிய நிர்வாக சீர்திருத்தத்தை தீவிரமாக ஊக்குவித்து, உலகளாவிய தெற்கிடையே ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பை ஆழமாக்குகிறது என தெரிவித்தார்.
- பெய்ரூட் பதுங்குகுழியில் இருந்த ஹிஸ்புல்லாவின் 32 வருடகால தலைவரான ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார்
- க ஹவுதிகள் ஏவிய ஏவுகணைகளை தடுக்க அமெரிக்கா வழங்கிய தாட் ஏவுகணை எதிர்ப்பு தொழில்நுட்பத்தை முதல் முறையாக பயன்படுத்தியது.
இஸ்ரேல் - லெபனான் - ஹிஸ்புல்லா
பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தாக்குதலை எதிர்த்து அண்டை நாடான லெபனானில் இருந்து ஹமாஸ் அமைப்பின் நட்பில் உள்ள ஹிஸ்புல்லா ஆயுதக்குழு எல்லையில் இருந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வந்தது.
இதன் விளைவாக ஆண்டில் இடைப்பகுதி முதல் இஸ்ரேல் லெபனான் முழுவதும் பலகட்டங்களாக தாக்குதல் நடத்தி தாக்கி 3,500 பேர் வரை கொன்றது.தலைநகர் பெய்ரூட் கடும் தாக்குதலுக்கு உள்ளானது. லெபனான் மீதான இஸ்ரேலின் தரைப்படை ஆக்கிரமிப்பு மற்றும் குண்டுவீச்சுகளால் 1.4 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக ஐநா மதிப்பிட்டுள்ளது.

பெய்ரூட் பதுங்குகுழியில் இருந்த ஹிஸ்புல்லாவின் 32 வருடகால தலைவரான ஹசன் நஸ்ரல்லா செப்டம்பர் இஸ்ரேல் குண்டுகளை வீசியபோது படுகொலை செய்யப்பட்டார்.

இதற்கு ஒரு வாரம் முன்னர் செப்டம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் ஹிஸ்புல்லா உறுப்பினர்கள் மீது இஸ்ரேல் அதிநவீன தாக்குதல் ஒன்றை முன்னெடுத்தது. லெபனான் முழுவதிலும் ஹிஸ்புல்லா உறுப்பினர்களின் பேஜ்ர்கள் திடீரென வெடித்துச் சிதறின.
இதில் 35 பேர் வரை கொல்லப்பட்டனர். ஆயிரக்கனோர் படுகாயமடைந்தனர். தொடர்ந்து வாக்கிடாக்கிகள் உள்ளிட்ட தொலைத் தொடர்பு சாதனங்களும் வெடிக்கத் தொடங்கின. தாய்லாந்தில் வெடி மருந்து வைத்து தயாரிக்கப்பட்ட பேஜர்களை இஸ்ரேல் உளவுத்துறை ஹிஸ்புல்லாவுக்கு ஏமாற்றி விற்றது பின்னர் தெரியவந்தது.

தொடர்ந்து அக்டோபர் மற்றும் நவம்பரில் இஸ்ரேலின் தாக்குதல்கள் லெபனானில் தீவிரமடைந்த நிலையில் நவம்பர் இறுதியில் உலக நாடுகள் முயற்சியால் போர் நிறுத்தம் வந்தது. ஆனால் ஹிஸ்புல்லா இயக்கம் அதற்குள் பெரும் பாதிப்புக்கு உள்ளானது.
இஸ்ரேல் - ஈரான்
பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தாக்குதலை எதிர்த்து மற்றொரு இஸ்லாமிய நாடான ஈரான் நேரடி தாக்குதல் மூலம் உலகை அசர வைத்தது.
இது மத்திய கிழக்கில் ஒரு முழு அளவிலான போர் ஏற்படும் அபாயத்தை உருவாக்கியது. ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா செப்டம்பர் 27 இல் கொல்லப்பட்டதற்கும், ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஜூலை 31 அன்று ஈரானில் சீர்த்திருத்த கட்சியை சேர்ந்த புதிய அதிபர் மசூத் பெசஸ்கியான் பதவியேற்பில் கலந்துகொள்ள வந்தபோது தெஹ்ரானில் அவரது தங்குமிடத்தில் வெடிகுண்டு தாக்குதல் மூலம் இஸ்ரேலால் கொல்லப்பட்டார்.
இவை அனைத்துக்கும் பதிலடியாக அக்டோபர் 1 ஆம் தேதி இஸ்ரேல் மீது சுமார் 200 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் ஈரான் தாக்கியது.
இதில் பெரிய பாதிப்புகள் இல்லாத போதிலும், ஒரு மத்திய கிழக்கு நாடு திருப்பி அடிப்பதை மேற்கு நாடுகள் கடுமையாக கண்டித்தன.

தொடர்ந்து சுமார் 25 நாட்கள் கழித்து அக்டோபர் 26 ஆம் தேதி ஈரான் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின.
ஈரானிய தலைநகர் தெஹ்ரானுக்கு அருகிலுள்ள இடங்களிலும், மேற்கு மாகாணமான இலாம் மற்றும் தென்மேற்கு குசெஸ்தானிலும் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இந்த தாக்குதலில் 4 வீரர்கள் கொல்லப்பட்டதாக ஈரான் ராணுவம் தெரிவித்தது. ஈரானின் முக்கிய அணு சக்தி தளத்தை அளித்ததாக இஸ்ரேல் பின்னர் தெரிவித்தது.

இஸ்ரேல் - ஏமன் - ஹவுதி கிளர்ச்சியாளர்கள்
பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தாக்குதலை எதிர்த்து ஏமன் நாட்டில் இருந்து செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எதிர்வினை ஆற்றி வருகின்றனர்.
அரபு நாடுகளிலேயே ஏழ்மையான நாடான ஏமன் தலைநகர் சனா மற்றும் நாட்டின் வடக்கின் பெரும்பகுதியை ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்படுத்துகின்றனர்.
இவர்களுக்கும் தெற்கில் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கப் படைகளுக்கும் இடையே 10 ஆண்டுகால உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. செங்கடலில் வரும் கப்பல்களைத் தாக்கி, உலகின் முக்கிய கடல்வழிப் பாதைகளில் அவர்களின் ஆதிக்கத்தால் அமெரிக்க உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் சரிக்குக்கப்பல்கள் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன.
மேலும் ஹவுதிகள் இஸ்ரேல் மீதும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை முடுக்கிவிட்டுள்ளனர். இதற்கு பதில் தாக்குதலாக ஏமனில் ஹவுதிக்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் இடங்கள் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.
சமீபத்தில் சனா விமான நிலையத்தில் இஸ்ரேல் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் உலக சுகாதர அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் நூலிழையில் உயிர்பிழைத்தார். முன்னதாக ஹவுதிகள் ஏவிய ஏவுகணைகளை தடுக்க அமெரிக்கா வழங்கிய தாட் ஏவுகணை எதிர்ப்பு தொழில்நுட்பத்தை முதல் முறையாக பயன்படுத்தியது.
சிரியாவின் உள்நாட்டு போர் வெற்றி
மத்திய கிழக்கு நாடான சிரியாவில் கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் அதிபர் பஷர் அல் ஆசாத் ஆட்சி நடந்து வந்தது. கடந்த 50 ஆண்டுகளாக அவரது குடும்பமே சிரியாவில் ஆட்சியில் இருந்தது.

இதற்கிடையே அதிபர் பஷர் அல் ஆசாத் நாட்டில் நிலவும் வேலையில்லா திண்டாட்டம், பொருளாதார பிரச்சனைகள், சர்வாதிகாரப் போக்கு ஆகியவற்றை எதிர்த்து கடந்த 2011 ஆம் ஆண்டு உள்நாட்டு போர் தொடங்கியது. ரஷியாவின் உதவியுடன் அப்போது தனது ஆட்சியை ஆசாத் காப்பற்றிக்கொண்டார்.

உலக சக்தியான ரஷியாவின் உதவியுடன் கிளர்ச்சி ஒடுக்கப்பட்டாலும் மக்கள் மத்தியில் அமைதியின்மை தொடரவே செய்தது. அதன் விளைவாக ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) தலைமையில், பல கிளர்ச்சிப் குழுக்கள் கடந்த டிசம்பரில் ஒரே வாரத்தில் அலெப்போ, ஹமா, தாரா உள்ளிட்ட முக்கிய நகரங்களையும் கடைசியாக டிசம்பர் 8 ஆம் தேதி தலைநகர் டமாஸ்கஸ் ஐ கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளனர். அதிபர் ஆசாத் ரஷியாவுக்கு தப்பியோடினார்.







