என் மலர்
ஈரோடு
ஈரோடு திண்டல் கார பாறை, பங்காருநகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 55). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி பெருமாயி (45).
ராமசாமிக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்தது. இது பெருமாயிக்கு தெரியவந்தது. எனவே கள்ளத்தொடர்பை கைவிடுமாறு கூறி கண்டித்தார்.
இதனால் கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த ராமசாமி சவுக்கு கட்டையால் பெருமாயி தலையில் தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த பெருமாயி ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
எனினும் சிகிச்சை பலனின்றி பெருமாயி பரிதாபமாக இறந்தார். இதைத் தொடர்ந்து ஈரோடு தாலுகா போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து ராமசாமியை கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு ஈரோடு மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் இன்று நீதிபதி திருநாவுக்கரசு தீர்ப்பு வழங்கினார்.
மனைவியை கொலை செய்த ராமசாமிக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து அவர் தீர்ப்பு கூறினார். அபராதம் கட்ட தவறினால் மேலும் 2 ஆண்டுகள் ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் அவர் தனது தீர்ப்பில் கூறி இருந்தார். இந்த வழக்கில் அரசு சார்பில் வக்கீல் (பொறுப்பு) நாகரத்தினம் ஆஜரானார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் முழுவதும் நெடுஞ்சாலையோரம் உள்ள மதுக்கடைகள் கோர்ட்டு உத்தரவுப்படி மூடப்பட்டது.
அதற்கு பதிலாக புதிய கடைகள் திறக்கப்பட்டது. ஆனால் பொதுமக்களின் கடும் எதிர்ப்பால் புதிய மதுக் கடைகள் திறக்க மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் தடுமாறி வருகிறது.
அது மட்டுமல்லாமல் பல ஆண்டாக உள்ள மதுக்கடை களை மூடவும் பெண்கள் வரிந்து கட்டிக் கொண்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் பொது மக்களின் போராட்டத்தால் மூடப்பட்ட மதுக்கடைகளை எப்பேற்பட்டாவது மீண்டும் திறந்தே ஆக வேண்டும் என மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் கோதாவில் இறங்கி உள்ளது. இதனால் மதுக்கடைகளுக்கு எதிராக மீண்டும் மக்களின் போராட்டம் எழுச்சி அடைந்துள்ளது.
சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம்பாளையம் பகுதியில் உள்ள மதுக்கடையை அகற்றக் கோரி அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சத்தி-கோபி ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட திரண்டு வந்தனர்.
இதை அறிந்து அங்கு வந்த சத்தி போலீசார் மக்களை தடுத்தனர். மறியல் நடத்தினால் அனைவரையும் கைது செய்ய நேரிடும் என்று கூறினர்.
இதை தொடர்ந்து பொது மக்கள் சத்தி தாசில்தார் அலுவலகத்துக்கு சென்று தாசில்தார் புகழேந்தியிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
இதே போல் சத்தியமங்கலம் அருகே உள்ள கொண்டப்பநாயக்கன் பாளையத்தில் மூடப்பட்ட மதுக்கடை மீண்டும் திறக்கப்பட்டது. இதனால் ஆவேசம் அடைந்த அந்த பகுதி மக்கள் அந்த கடையை அகற்ற கோரி கடை முன் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு ‘‘மூடு.. மூடு மதுக்கடையை மூடு’’ ‘‘வேண்டாம்.. வேண்டாம் மதுக்கடை வேண்டாம்’’ போன்ற கோஷங்களை முழங்கினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது அங்கு வந்த போலீசார் அவர்களை எச்சரித்து விரட்டினர். மேலும் சத்தி தென்றல் நகரில் மதுக்கடை திறக்கப்பட்டது. இதனால் கோபம் அடைந்த அந்த பகுதி மக்கள் சத்தியில் நடந்த ஜமா பந்தி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட வருவாய் அதிகாரி சதீசிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
ஆனால் இது பற்றி அவர் எதுவும் கூறாததால் பொது மக்கள் சத்தி-மைசூர் ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இப்படி சத்தியமங்கலம் பகுதியில் மதுக்கடைகளுக்கு எதிராக மக்களின் போராட்டம் எழுச்சி அடைந்துள்ளது.
பெருந்துறையை அடுத்துள்ள காஞ்சிக்கோவில் நால்ரோடு பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடையில் காஞ்சிக்கோவில், முத்துக்கவுண்டன் பாளையம் பகுதியை சேர்ந்த ரங்கசாமி(45) என்பவர் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார்.
இரவு இந்த கடைக்கு கவுந்தப்பாடி தட்டார் பாளையம் பகுதியை சேர்ந்த சேகர்(25) மற்றும் செந்தில்குமார்(27) ஆகிய இருவரும் சரக்கு வாங்குவதற்காக வந்துள்ளனர்.
தனித்தனி பைக்கில் வந்த அவர்கள் இருவரும் தங்களது பைக்கை ரோட்டின் மீதே நிறுத்தி விட்டு இறங்கி வந்துள்ளனர். இதனைகண்ட ரங்கசாமி அவர்களிடம் பைக்கை ஓரமாக நிறுத்தி விட்டு வருமாறு கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் இருவரும் அருகே ரோட்டில் கிடந்த காலி பாட்டிலை எடுத்து சூப்பர்வைசர் ரங்கசாமியின் தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது. அவர் சத்தம் போடவே, அங்கிருந்து அவர்கள் இருவரும் பைக்குகளில் தப்பிச்சென்றனர்.
தலையில் ரத்தகாயத்துடன் ரங்கசாமி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக காஞ்சிக்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
சத்தியமங்கலம் அடுத்த ஒன்டியூர் புதுதோட்டத்தை சேர்ந்தவர் துரைசாமி (வயது62). இவர் சம்பவத்தன்று சத்தியமங்கலம்- கொடிவேரி ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது திடீரென துரைசாமி மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி அந்த வழியாக சென்ற ஒரு பெண் மீது மோதியது. இதில் துரைசாமிக்கு தலை மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அந்த பெண்ணுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
அக்கம்பக்கத்தினர் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக ஆம்புலன்சு மூலம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி துரைசாமி பரிதாமாக இறந்து விட்டார். பின்னர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த பள்ளபாளையம் காஞ்சி கோவில் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் மாரப்பன். இவரது மகள் விஜயா.
இவர் இன்று கலெக்டர் அலுவலகத்துக்கு மண் எண்ணை கேனுடன் வந்தார். திடீரென மண் எண்ணையை தன் உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.
விஜயா கடந்த 10 ஆண்டுகளாக பெருந்துறை பஞ்சாயத்து அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒருவரை காதலித்து வந்தார். தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினார். ஆனால் திருமணம் செய்து கொள்ள முடியாது என அந்த நபர் கூறி விட்டாராம்.
இது குறித்து விஜயா சில தினங்களுக்கு முன் கலெக்டர் முகாம் அலுவலகத்தில் மனு கொடுத்திருந்தாராம். இருந்தபோதிலும் விஜயாவை காதலன் ஏற்கவில்லை என்று தெரிகிறது.
எனவேதான் அவர் காதலனுடன் தன்னை சேர்த்து வைக்கக்கோரி தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்டது தெரிய வந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
இறைச்சிக்காக மாடுகளை விற்கவோ, வாங்கவோ மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி போராட்டங்கள் நடந்து வருகிறது. தமிழகத்திலும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
ஈரோட்டில் இன்று தமிழ் புலிகள் கட்சியினர் போராட்டம் நடத்தினர். மத்திய அரசை கண்டித்து அவர்கள் இன்று பிரதமர் மோடி உருவ பொம்மை எரிக்கப்படும் என்றும், மாட்டுக்கறி சாப்பிடுவோம் என்றும் கூறி இருந்தனர்.
அதன்படி சுமார் 20-க்கும் மேற்பட்ட தமிழ் புலிகள் கட்சியினர் மாவட்ட செயலாளர் சிந்தனை செல்வன் தலைமையில் ஈரோடு பன்னீர் செல்வம் பார்க் அருகே திரண்டனர்.
விஸ்வநாதன், இளம் புலிகள் செயலாளர் ராமு, துணை செயலாளர் செம்பன், பாலச்சந்திரன், பிரவின்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சிறிது நேரத்தில் அவர்கள் மோடியின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஈரோடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் உருவ பொம்மையை பறித்து எரிக்க முயன்றதை தடுத்தனர்.
இந்த நேரத்தில் அதே இடத்தில் தமிழ் புலிகள் கட்சியின் மற்றொரு குழுவினர் மாட்டு இறைச்சியை தின்றனர். மத்திய அரசை கண்டித்து அவர்கள் கோஷம் எழுப்பினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் புலிகள் கட்சியை சேர்ந்த 25 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் இன்று பரபரப்பு நிலவியது.
மொடக்குறிச்சி:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனுக்கு ஈரோடு மாவட்ட நிர்வாகிகளால் மொடக்குறிச்சி அடுத்த சோலாரில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாதிகளால் ஏற்பட்டுள்ள பதட்டம், விவசாயிகளின் தொடர் போராட்டம், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, வேலையின்மை, எந்த ஒரு திட்டமும் சரியாக நிறைவேற்றாததால் மக்களிடையே ஏற்பட்டுள்ள அதிருப்தி உள்ளிட்ட குழப்பங்களை மறைக்கவே மாட்டு இறைச்சிக்கு தடை செய்யும் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
இது தனி மனித உரிமையை பறிக்கும் இந்த சட்டம் கண்டிக்கத்தக்கது. இதை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
தனியார் பால் நிறுவன பாலில் கலப்படம் செய்வதை தமிழக அரசு பால் வளத்துறை அதிகாரிகள், சுகாதாரதுறையினர் இணைந்து கண்காணித்து கடும் நடவடிக்கை எடுத்து சுகாதாரமான முறையில் பால் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மணல் விலை உயர தட்டுப்பாடுதான் காரணம். தனியாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அவசரகால நடவடிக்கையாக மணல் தட்டுப்பாட்டை போக்கினால் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்.
டாஸ்மாக் கடைகளை மூட போராட்டம் நடத்துபவர்கள், பெண்களும், சமூக ஆர்வலர்களும்தான். அவர் கள் மீது பொய்வழக்கு போடுவதை உடனே நிறுத்த வேண்டும். மேலும் படிப்படியாக தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்த தமிழக அரசு முன் வர வேண்டும்.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் உருவபடத்தை சட்டசபையில் திறக்கும் விவகாரத்தில் மற்றவர்கள் அரசியலாக்காமல் அரசியல் சாசன விதிகளுக்குட்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ளாட்சி நிர்வாகம் சீரான நடைபெற வேண்டுமானால் உள்ளாட்சி தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும். தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அனைத்து நடவடிக்கைகளையும் தீவிரமாக எடுத்து வருகிறது.
தமிழக அமைச்சரவையில் குற்றம்சாட்டப்பட்ட அமைச்சர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் நடவடிக்கை இல்லை என்றால் மக்கள் அவர்களை மன்னிக்க மாட்டார்கள். அவர்களுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள்.
அவருடன் முன்னாள் எம்.எல்.ஏ விடியல்சேகர், மாவட்ட தலைவர் ஆறுமுகம், வேளாளர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் எஸ்.டி.சந்தரசேகர் உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் இருந்தனர்.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டும் அரசின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயனாளிகள் தேர்வு மற்றும் இலவச மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி, பொது மக்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனை, சிறப்பு மருத்துவ சிகிச்சை முகாம் ஆகியவை கோபியில் நடைபெற்றது.
மாவட்ட வருவாய் அலுவலர் சதீஸ் தலைமை தாங்கினார். மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர் கனகாச்சலகுமார் வரவேற்றார்.
மருத்துவ முகாமை அமைச்சர் கே.ஏ.செங்கோட் டையன் தொடங்கி வைத்து பேசியதாவது:-
கோபி தொகுதியை ஒரு பொற்கால தொகுதியாக அமைய பாடுபட்டு வருகிறேன். இந்த அரசு மக்களுக்கு பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மேட்டூர் அணையில் தூர்வாரி தொடங்கி வைத்துள்ளார். மேலும் தமிழகத்தில் உள்ள ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டு வருகின்றன.
இந்த அரசு நீடிக்காது என பேசி வருகிறார்கள். 5 ஆண்டுகள் என்ன 50 ஆண்டு காலம் இந்த அரசு நீடிக்கும். உங்களுடைய அரசாக இருந்து சரித்திரத்தை படைக்க உள்ளது.
மேலும் தமிழகத்தில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளை பிரதமர் மோடியே பாராட்டி உள்ளார். அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படித்து வரும் மாணவ- மாணவிகளுக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளது. அரசு ரேசன் கடையில் பொருட்களை வாங்க ஸ்மார்ட் கார்டுகளை வழங்கியுள்ளது. அதே போல மாணவ- மாணவிகளுக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்க உள்ளோம்.
பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகளையும் தொடங்க உள்ளோம். இனி மேல் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளும் செயல்படும் என்பதில் அய்யமில்லை. பள்ளிக்கல்வித்துறைக்கு இந்த ஆண்டு ரூ.26,892 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு நாடு முன்னேறுவதற்கு கல்வி தான் முக்கியம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ராஜாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., சிட்கோ வாரிய முன்னாள் தலைவர் சிந்து ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பெருந்துறை:
பெருந்துறை, காந்தி நகரை சேர்ந்தவர் மஞ்சு என்கிற மஞ்சுநாதன். இவரது மனைவி கோமதி (வயது 20).
கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் கடந்த 2 மாதத்திற்கு முன்பு கோமதி மஞ்சுநாதனுடன் கோபித்து கொண்டு அதே பகுதியில் இருக்கும் தனது தாய் வீட்டிற்கு வந்து விட்டார்.
வீட்டில் உள்ள பெரியவர்கள் கோமதிக்கு புத்திமதி சொல்லி கணவருடன் சேர்ந்து வாழுமாறு கூறினர். ஆனால் கோமதி தன் கணவர் வந்து கூப்பிட்டால் தான் போவேன் என்று கூறியதாக தெரிகிறது.
ஆனால் மஞ்சுநாதன் கோமதியை வரட்டும் என்று கூறியதாக தெரிகிறது. இதனால் கோமதி கடந்த சில நாட்களாக மன வேதனையுடன் இருந்தாராம்.
சம்பவத்தன்று தற்கொலை முடிவெடுத்த கோமதி வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து ஊற்றி தீக்குளித்தார். கோமதியின் அலறல் சத்தத்தை கேட்டு பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைத்தனர்.
கோமதியை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி கோமதி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.
சூப்பர் ஸ்டார்ரஜினி காந்த் நேரடியாக அரசியலுக்கு வந்தால் அதுபற்றி கருத்து கூறலாம். ஆனால் அவர் ஆண்டவன் உத்தரவிட்டால் அரசியலுக்கு வருவேன் என்கிறார். ரஜினிக்கு உத்தரவிடும் ஆண்டவனுக்கும் எனக்கும் நேரடி தொடர்பு இல்லாததால் அவர் அரசியலுக்கு வருவாரா? என்பது பற்றி எனக்கு தெரியவில்லை.

ரஜினி ஆண்டவனிடம் நேரடி தொடர்பு வைத்துள்ளார். எனக்கு நேரடி தொடர்பு இல்லை. இருந்தால் இது குறித்து நானே ஆண்டவனிடம் கேட்டு சொல்லிவிடுவேன். அவர் ஆண்டவனிடம் பேசி சொல்லும் வரை பொறுமை காப்போம்.
இவ்வாறு பார்த்திபன் கூறினார்.
ஈரோட்டில் சுற்றுச்சுழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அனைத்து துறைகளும் வளர்ச்சி அடைந்து வருகிறது.
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகம் தினம் தோறும் ஊடகங்களில் வர வேண்டும் என்பதற்காகவும், தன்னை பற்றிய செய்தி தினமும் வர வேண்டும் என்பதற்காகவும் ஏதேதோ பேசி வருகிறார்.
தமிழகத்தில் தற்போது வறட்சி, தண்ணீர் பிரச்சனைகள் உள்ளது. இதை பற்றி அவர் கேள்வி கேட்பதில்லை. தமிழகத்தில் அமைதியாக இருக்கும் மக்களிடம் அவர் போராட்டத்தை தூண்டி விடுகிறார்.
ஈரோடு, பவானி பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் சாய கழிவு நீர் குழாய் மூலம் கலப்பது குறித்து தகவல் கிடைத்தால் நான் நேரிடையாக அந்த இடத்துக்கு சென்று உரிய நடவடிக்கை எடுப்பேன்.
ஈரோடு சூளையில் சாயம் மற்றும் தோல் கழிவுகளை சுத்திகரிக்கும் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி ஒரு வாரம் தொடங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

‘‘ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சட்டசபையில் ஜெயலலிதா படத்தை திறக்கக் கூடாது என்று கூறியுள்ளரே என்று கேட்டதற்கு, ‘‘ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை தமிழக மக்கள் தலைவராகவே ஏற்று கொள்ளவில்லை. எனவே அவரது கருத்துகள் குறித்து யாரும் கவலைப்படபோவது இல்லை’’ என்று அமைச்சர் கருப்பண்ணன் கூறினார்.
பேட்டியின் போது எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், தென்னரசு உள்பட பலர் உடன் இருந்தனர்.
கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து சென்னை எழும்பூர் நோக்கி நேற்று முன்தினம் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டு இருந்தது.
இந்த ரெயிலில் சென்னையை சேர்ந்த மகாராஜன், அவரது மனைவி சரஸ்வதி (வயது 68) ஆகியோர் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்தனர்.
ரெயில் நேற்று முன்தினம் அதிகாலையில் ஈரோடு ரெயில் நிலையத்திற்கு வந்தது. அதிகாலை நேரம் என்பதால் முன்பதிவு பெட்டியில் பயணிகள் அனைவரும் அசந்து தூங்கி கொண்டிருந்தனர்.
அந்த நேரத்தில் ரெயில் பெட்டியில் ஏறிய மர்மநபர் சரஸ்வதி கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் நகையை பறித்து கொண்டு ஓடினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சரஸ்வதி திடுக்கிட்டு எழுந்தார். திருடன்...திருடன்... என கத்தினார். ஆனால் அதற்குள் அந்த மர்மநபர் ரெயிலில் இருந்து குதித்து தப்பி ஓடி விட்டார்.
இது குறித்து சரஸ்வதி ஈரோடு ரெயில் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஓடும் ரெயிலில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






