search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக அமைச்சரவை"

    • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 28-ந்தேதி வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார்.
    • விரைவில் சட்டசபை கூட்டத் தொடர் கூடவுள்ள நிலையில் அதுகுறித்து ஆலோசிக்கப்பட வாய்ப்பு.

    இன்று காலை 11 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடக்கிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 28-ந்தேதி வெளிநாடு பயணம் மேற்கொள்ளும் சூழ்நிலையில் அமைச்சரவை கூடுவது முக்கியத்துவம் பெறுகிறது. விரைவில் சட்டசபை கூட்டத் தொடர் கூடவுள்ள நிலையில் அதுகுறித்து இந்த அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.

    மேலும் இந்த அமைச்சரவை கூட்டத்தில், தமிழகத்தில் புதிய தொழில்களை தொடங்குவதற்கான அனுமதி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

    ஒவ்வொரு ஆண்டின் கூட்டத் தொடரின் முதல் கூட்டத்திற்கு கவர்னர் அழைக்கப்படுவதும், அவர் உரை நிகழ்த்துவதும் மரபாக உள்ளது. முதல்-அமைச்சர் வெளிநாடு செல்வது, சட்டசபையில் தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது என வரிசையாக பெரிய நிகழ்வுகள் வரவுள்ளன. இவையெல்லாம் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பு நடைபெற வேண்டியதுள்ளது.

    எனவே சட்டசபையில் கவர்னர் உரை, பட்ஜெட் கூட்டத் தொடர் என தொடர்ச்சியான நிகழ்வுகளை அரசு நடத்த வேண்டிய நிலையில் இதுகுறித்து ஆலோசனை நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • வரும் 23-ந்தேதி தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • பிப்ரவரி மாதம் சட்டசபை கூட்டம் கூட உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.

    சென்னை:

    பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் வரும் 23-ந்தேதி தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பிப்ரவரி மாதம் சட்டசபை கூட்டம் கூட உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 23-ந்தேதி காலை 11 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்து வருகிறார்.
    • ராஜகண்ணப்பனிடம் இருந்த காதி மற்றும் கிராம தொழில்கள் துறை அமைச்சர் காந்திக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    அமைச்சராக இருந்த பொன்முடிக்கு சொத்துக் குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் அவர் எம்.எல்.ஏ. பதவியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அமைச்சர் பதவியில் நீடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் அவர் வகித்து வந்த உயர் கல்வித்துறை வேறு அமைச்சருக்கு கூடுதலாக ஒதுக்கப்பட இருந்தது. இதற்கிடையே, அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு உயர் கல்வித்துறை கூடுதல் பொறுப்பாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பு ஒதுக்கீடு செய்துள்ளதை கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்றுக் கொண்டார்.

    அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் இருந்த காதி மற்றும் கிராம தொழில்கள் வாரிய துறை அமைச்சர் காந்திக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

    • அன்பில் மகேஷ்-க்கு ஒதுக்கப்படும் எனத் தகவல் வெளியானது.
    • ராஜ கண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்து வருகிறார்.

    அமைச்சராக இருந்த பொன்முடிக்கு சொத்து குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் அவர் எம்.எல்.ஏ. பதவியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அமைச்சர் பதவியில் நீடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

    இதனால் அவர் வகித்து வந்த உயர் கல்வித்துறை வேறு அமைச்சருக்கு கூடுதலாக ஒதுக்கப்பட இருந்தது. தற்போது பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருக்கும் அன்பில் மகேஷ்-க்கு கூடுதல் பொறுப்பாக ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்த நிலையில் அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு உயர் கல்வித்துறை கூடுதல் பொறுப்பாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, கதர் கிராம தொழில்கள் துறை அமைச்சராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இரண்டரை ஆண்டு காலத்தில் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி மிகப்பெரிய அளவில் ஏற்பட்டுள்ளது.
    • ஜனவரியில் நடக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் அது புரிந்துணர்வு ஒப்பந்தமாக கையெழுத்தாகும்.

    சென்னை:

    சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. அனைத்து அமைச்சர்களும் பங்கேற்ற இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

    அந்த முடிவுகள் பற்றி தலைமைச் செயலகத்தில்பத்திரிகையாளர்களுக்கு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    இந்த இரண்டரை ஆண்டு காலத்தில் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி மிகப்பெரிய அளவில் ஏற்பட்டுள்ளது. பல்வேறு நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய போட்டி போடுகின்றன. அந்த வரிசையில் புதிய தொழில் நிறுவனங்களும், ஏற்கனவே தொழிற்சாலைகளை நடத்தி வரும் நிறுவனங்களும் புதிய முதலீடுகளை செய்வதற்காக அரசுக்கு முன்மொழிவுகளை அளித்தனர்.

    அதற்கான அமைப்பு முறைகளான தொகுப்பு சலுகைகளை வழங்குவது குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டது. செயின்ட் கொபைன், ஹான்பி டெவலப்மென்ட், ஹைக்வா டெக்னாலஜிஸ், மைலான் லேபரட்ரீஸ், ஏ.கே.டி.பி.எல்., செயன்யுபா, சுந்தரம் பாசினர்ஸ், இன்டர்நேசனல் ஏரோஸ்பேஸ் ஆகிய 8 நிறுவனங்கள் தொகுப்பு சலுகைகளை அமைப்பு முறையில் பெறுவதற்கும், தொழிற்சாலை விரிவாக்க பணிகளுக்கும் கருத்துரு ஆய்வு செய்யப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    அந்த வகையில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, கோவை ஆகிய மாவட்டங்களில் ரூ.7,108 கோடி முதலீடுகளில் 22 ஆயிரத்து 536 பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டங்களுக்கு தொகுப்பு சலுகைகளை வழங்க அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    மின்சார வாகன பாகங்கள், காலணி உற்பத்தி, விண்வெளி மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள், கண்ணாடி பொருட்கள், ஆராய்ச்சி மேம்பாடு ஆகிய துறைகளில் முதலீடுகள் செய்ய உள்ளனர். ஜனவரியில் நடக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் அது புரிந்துணர்வு ஒப்பந்தமாக கையெழுத்தாகும்.

    தமிழ்நாடு மாநில துறைமுக மேம்பாட்டுக் கொள்கை 2023-க்கு அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டது. 4 பெரிய துறைமுகங்களும், 17 சிறிய துறைமுகங்களும் உள்ளன. 2007-ம் ஆண்டு இருந்த சிறுதுறைமுகங்கள் கொள்கை தற்போது மாநில துறைமுக மேம்பாட்டுக் கொள்கையாக மாற்றப்பட்டுள்ளது. கடல் சார் வணிகத்தில் முதலீடுகளை ஈர்க்க பெரிய அளவில் போட்டிகள், மாநிலங்களுக்கு இடையே உள்ளன. தனியார் துறை முதலீடுகளை ஈர்க்கும் அளவில் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

    கப்பல் மறுசுழற்சி, மிதவை கலங்கள் கட்டுதல், துறைமுக மேம்பாடு, வணிக ரீதியான அனுமதிகள் உள்ளடக்கிய கொள்கை அது. பெரிய கப்பல்களை நிறுத்த பெரிய முதலீடு அவசியம். கடல் புறம்போக்கு பகுதிகளை நீண்டகால குத்தகைக்கு விடவும் இந்த கொள்கை வழிவகுக்கும். நீர் சவால் விளையாட்டுகள், பசுமை துறைமுக திட்டங்கள், கடல்சார் வளர்ச்சி ஆகியவை அதில் உள்ளடக்கமாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பல புதிய தொழில்களை தொடங்கவும், ஏற்கனவே உள்ள தொழில்களுக்கான விரிவாக்கத்திற்கு அனுமதி கேட்டும் தமிழக அரசுக்கு பல விண்ணப்பங்கள் வந்துள்ளன.
    • உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுவதற்கு முன்பு சில தொழில்களுக்கான அனுமதியை அமைச்சரவை வழங்க வேண்டியுள்ளது.

    சென்னை:

    தமிழக தொழில்துறை சார்பில் வரும் ஜனவரி மாதம் 7 மற்றும் 8-ந் தேதிகளில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. இந்த சூழ்நிலையில் பல புதிய தொழில்களை தொடங்கவும், ஏற்கனவே உள்ள தொழில்களுக்கான விரிவாக்கத்திற்கு அனுமதி கேட்டும் தமிழக அரசுக்கு பல விண்ணப்பங்கள் வந்துள்ளன.

    இந்த நிலையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக அனைத்து அமைச்சருக்கும் அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், 31-ந் தேதி மாலை 6.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சரவை அறையில் முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

    உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுவதற்கு முன்பு சில தொழில்களுக்கான அனுமதியை அமைச்சரவை வழங்க வேண்டியுள்ளது. இந்த கூட்டத்தில் அதற்கான அனுமதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • முதியோர் உதவித்தொகையாக தற்போது 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
    • மகளிர் உரிமைத்தொகை இவர்களுக்கு வழங்கப்பட மாட்டாது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டு வரும் முதியோர் உதவித்தொகையை 1,200 ரூபாயாக உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

    இதேபோல், கைம்பெண் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கான மாத ஓய்வூதியமும் உயர்த்தப்பட்டுள்ளது.

    மகளிர் உரிமைத் தொகை 1000 ஆயிரம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது முதியோர்களுக்கான உதவித்தொகையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் முதியோர், கைம்பெண், ஆதரவற்ற பெண்களுக்கான உயர்த்தப்பட்ட மாத ஓய்வூதியம் தொடர்பாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முதியோர் மற்றும் ஆதரவற்றோருக்கான மாத உதவித்தொகை ரூ.1000-ல் இருந்து ரூ.1,200 ஆக உயர்த்தி வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
    • கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட முகாம்கள் சென்னையில் நடந்து வருகிறது.

    சென்னை:

    தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று (சனிக்கிழமை) காலை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். அமைச்சர் செந்தில்பாலாஜி நீதிமன்ற காவலில் இருப்பதால் அவரை தவிர மற்ற அமைச்சர்கள் அனைவரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

    அமைச்சரவை கூட்டத்தில் தொழில் துறை உள்பட பல முக்கிய துறைகளுக்கான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது பற்றி விவாதித்து முடிவு எடுக்கப்பட்டது. குறிப்பாக ஒரகடத்தில் அமைய இருக்கும் புதிய தொழிற்சாலைக்கு அனுமதி கொடுப்பது பற்றி பேசப்பட்டது.

    மேலும் மகளிருக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தில் தற்போதைய நிலை தொடர்பாகவும் ஆய்வு செய்யப்பட்டது. தற்போதைய அரசியல் சூழ்நிலை, மணிப்பூர் விவகாரம், தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாகவும் கூட்டத்தில் பேசப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

    அமைச்சரவை கூட்டம் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் நீடித்தது. கூட்டம் முடிந்ததும் அமைச்சர் தங்கம் தென்னரசு அது தொடர்பான தகவல்களை நிருபர்களிடம் தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சமூக பாதுகாப்பு திட்டங்கள் மூலம் வழங்கப்படும் ஓய்வூதியங்கள் உயர்த்தப்படுகிறது. முதியோர் மற்றும் ஆதரவற்றோருக்கான மாத உதவித்தொகை ரூ.1000-ல் இருந்து ரூ.1,200 ஆக உயர்த்தி வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    முதியோர் மாத உதவித்தொகை ரூ.1000-ல் இருந்து ரூ.1,200 ஆக உயர்த்தப்படுகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கான ஓய்வூதியம் ரூ.1000-ல் இருந்து ரூ.1,500 ஆக உயர்த்தப்படுகிறது. முதியோர் உதவித்தொகை மூலம் 30 லட்சம் பயனாளிகள் பலன் பெறுவார்கள். இதன் மூலம் ஆண்டுக்கு அரசுக்கு ரூ.845.91 கோடி கூடுதல் செலவினம் ஆகும்.

    பல்வேறு துறைகளில் உள்ள பயனாளிகளுக்கு இது சென்று சேரும். தொழிலாளர் நல வாரியம், கட்டுமான தொழிலாளர் வாரியம் உள்ளிட்ட துறைகளில் உள்ள பயனாளிகள் பலன் பெறுவார்கள். கைம்பெண் மாத உதவித்தொகை ரூ.1,200 ஆக உயர்த்தப்படுகிறது.

    கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட முகாம்கள் சென்னையில் நடந்து வருகிறது. மற்ற இடங்களில் 24-ந்தேதி தொடங்க உள்ளது. இந்த முகாம்கள் 3 கட்டங்களாக நடத்தப்படுகிறது.

    ரேசன் கடைகள் ஒரு அலகுகளாக வைத்துக்கொண்டு முதல் கட்டமாக 21,031 முகாம்கள், 2-வது கட்டமாக 14,194 என 35 ஆயிரத்து 925 முகாம்கள் ஆகஸ்டு மாதத்துக்குள் 3 கட்டங்களாக நடத்தப்படும்.

    விண்ணப்பங்கள், டோக்கன் வழங்கும் பணிகள் நடந்து வருகிறது. தற்போது சுமார் 50 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. முகாம்கள் சுமூகமாக நடைபெற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இதில் அலுவலர்கள், தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    மணிப்பூர் விவகாரம் பற்றி அ.தி.மு.க. இதுவரை வாய் திறக்காதது அவர்களின் இரட்டை வேடத்தை காட்டுகிறது.

    இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முதியோர் உதவித்தொகையாக தற்போது 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது
    • மகளிர் உரிமைத்தொகை இவர்களுக்கு வழங்கப்படமாட்டாது

    தமிழக அரசு சார்பில் முதியோர்களுக்கு உதவித்தொகையாக மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இதை 1200 ரூபாயாக உயர்த்த அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

    மகளிர் உரிமைத் தொகை 1000 ஆயிரம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது முதியோர்களுக்கான உதவித்தொகையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    • தலைமை செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
    • புதிய தொழில்கள், தொழில் விரிவாக்கத்திற்கு அமைச்சரவையில் அனுமதி வழங்க வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. தலைமை செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

    கலைஞர் உரிமைத்தொகை திட்டம் உள்ளிட்ட முக்கிய திட்டங்களின் செயல்பாடு குறித்தும் ஆலோசனை நடைபெற உள்ளது.

    புதிய தொழில்கள், தொழில் விரிவாக்கத்திற்கு அமைச்சரவையில் அனுமதி வழங்க வாய்ப்பு உள்ளது. கவர்னர் செயல்பாடு, அமலாக்கத்துறை சோதனை தொடர்பாகவும் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.

    அமலாக்கத்துறை விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன தீர்மானம் கொண்டுவர காங்கிரஸ் கோருவது குறித்தும் பரிசீலிக்க வாய்ப்பு உள்ளது.

    • கவர்னரின் செயல்பாடுகள், அமலாக்கத்துறை சோதனைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
    • அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு, மத்திய அரசுக்கு எதிராக கண்டனத் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கோரிக்கை விடுத்துள்ளது.

    சென்னை:

    அமைச்சர் செந்தில் பாலாஜி கைது மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை என தமிழக அரசியலில் பரபரப்பு நிலவும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

    இதில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்துவது, கவர்னரின் செயல்பாடுகள் மற்றும் அமலாக்கத்துறை சோதனைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

    மேலும், அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு, மத்திய அரசுக்கு எதிராக கண்டனத் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கோரிக்கை விடுத்துள்ளது. அது குறித்தும் அமைச்சரவையில் விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

    • மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்த வாய்ப்பு உள்ளது.
    • பாஜகவுக்கு எதிரான கட்சிகள் பெங்களூருவில் இரண்டாவது கூட்டம் நடத்தி ஆலோசனை நடத்தின.

    சென்னை:

    தமிழகத்தில் வரும் 22ம் தேதி அமைச்சரவை கூடுகிறது. 22ம் தேதி காலை 10.30 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இக்கூட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை, ஆளுநர் செயல்பாடு, அமலாக்கத்துறை நடவடிக்கைகள் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்த வாய்ப்பு உள்ளது.

    பாராளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் பாஜகவுக்கு எதிரான கட்சிகள் பெங்களூருவில் இரண்டாவது கூட்டம் நடத்தி ஆலோசனை நடத்தின. இதில் 26 கட்சிகள் பங்கேற்றன. இந்த கட்சிகளுக்கான கூட்டணி பெயர் அறிவிக்கப்பட்டு, அடுத்தகட்ட நடவடிக்கையை தொடங்கி உள்ளனர். இதேபோல் தமிழகத்தில் அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறை நடத்திய விசாரணை, செந்தில் பாலாஜியிடம் நடைபெற்று வரும் விசாரணை என அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் தமிழக அமைச்சரவை கூடுகிறது.

    ×