என் மலர்

  நீங்கள் தேடியது "woman passenger"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் பெண் பயணியிடம் 72 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  சென்னை:

  சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மனைவி விசால லட்சுமி(வயது 37). இவர் தனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக கோவில்பட்டி சென்றிருந்தார். பின்னர் நேற்று முன்தினம் இரவு நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னை நோக்கி புறப்பட்டார். ரெயில் நேற்று மாம்பலம் ரெயில் நிலையம் அருகே வந்தபோது விசால லட்சுமி இறங்குவதற்காக தனது உடைமைகளை எடுத்தார். அப்போது அவருடையை 72 பவுன் நகை வைத்திருந்த பெட்டி காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

  இது குறித்து மாம்பலம் ரெயில்வே போலீசாரிடம் விசால லட்சுமி புகார் அளித்தார். அதன்பேரில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜகார்த்தா நோக்கி சென்ற விமானத்தில் பயணித்த பெண்ணுக்கு குழந்தை பிறந்ததையடுத்து விமானம் மும்பைக்கு திருப்பி விடப்பட்டது. #EtihadAirways #JakartaFlight
  மும்பை:

  அபுதாபியில் இருந்து இன்று இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகருக்கு எத்திஹாட் ஏர்வேஸ் பயணிகள் விமானம்  வந்துகொண்டிருந்தது. இந்திய வான் பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது, விமானத்தில் பயணம் செய்த கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

  இதுபற்றி விமான பணிப்பெண்கள் மற்றும் விமானிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மருத்துவ உதவிக்கு ஏற்பாடு செய்தனர். சிறிது நேரத்தில் அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. தொடர்ந்து அவருக்கு மருத்துவ சிகிச்சை தேவை என்பதால், விமானம் உடனடியாக மும்பைக்கு திருப்பி விடப்பட்டது.  மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதும், அந்த பெண்ணையும் குழந்தையையும் அந்தேரி மருத்துவமனையில் சேர்த்தனர்.  அதன்பின்னர் விமானம் மும்பையில் இருந்து மற்ற பயணிகளுடன் ஜகார்த்தாவுக்கு புறப்பட்டுச் சென்றது.

  விமானம் மும்பைக்கு திருப்பி விடப்பட்டதும், 2 மணி நேரம் தாமதமாக ஜகார்த்தா செல்லும் என்றும், இதனால் பயணிகளுக்கு ஏற்படும் அசவுகரியங்களுக்காக வருந்துவதாகவும் விமான நிறுவனம்  தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. #EtihadAirways #JakartaFlight

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர், மிதமிஞ்சிய போதையில் பக்கத்து இருக்கையில் சிறுநீர் கழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. #AIFlight #DrunkPassenger
  புதுடெல்லி:

  நியூயார்க்கில் இருந்து நேற்று புதுடெல்லிக்கு ஏர் இந்தியா விமானம் வந்தது. அதில் பயணம் செய்த ஒரு பயணி, அளவுக்கு அதிகமாக மது அருந்திய நிலையில் தள்ளாடியபடி அங்குமிங்கும் சென்றுள்ளார். பின்னர், ஒரு பெண் பயணியின் இருக்கையில் சிறுநீர் கழித்துள்ளார். இது அந்த பெண் பயணி மற்றும் சக பயணிகளை முகம் சுளிக்க வைத்தது.

  இதுபற்றி விமான ஊழியர்களுக்கு தகவல் கொடுக்க, அவர்கள் வந்து பெண் பயணியை வேறு இருக்கைக்கு மாற்றி உள்ளனர். விமானம் டெல்லி வந்து சேர்ந்ததும், அந்த பெண் பயணிக்கு நேர்ந்த அவமரியாதை மற்றும் அதிர்ச்சி அனுபவம் குறித்து அவரது மகள் இந்திராணி கோஷ் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

  ஏர் இந்தியா விமானத்தில் தனது தாய் விமானத்தில் பயணம் செய்தபோது, அவரது இருக்கையில் போதையில் இருந்த ஒரு பயணி ஒருவர் சிறுநீர் கழித்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி இந்திராணி கோஷ் பதிவிட்டுள்ளார். அதில், மத்திய மந்திரிகள் சுரேஷ் பிரபு, சுஷ்மா சுவராஜ் மற்றும் ஏர் இந்தியா நிறுவனத்தை டேக் செய்திருந்தார்.

  இதையடுத்து நடந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்தி விமான போக்குவரத்து அமைச்சகம் மற்றும் சிவில் விமான போக்குவரத்து ஆணையத்திற்கு அறிக்கை அளிக்கும்படி ஏர் இந்தியா நிறுவனத்திற்கு விமான போக்குவரத்து துறை இணை மந்திரி உத்தரவிட்டுள்ளார். மேலும், பெண் பயணிக்கு நேர்ந்த மோசமான அனுபவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்றும் ஜெயந்த் சின்கா தெரிவித்துள்ளார். #AIFlight #DrunkPassenger
  ×