என் மலர்
செய்திகள்

இளம்பெண் தீக்குளிக்க முயற்சி: காதலனை தன்னுடன் சேர்த்து வைக்க கோரிக்கை
கலெக்டர் அலுவலகத்தில் காதலனுடன் தன்னை சேர்த்து வைக்கக்கோரி இளம்பெண் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த பள்ளபாளையம் காஞ்சி கோவில் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் மாரப்பன். இவரது மகள் விஜயா.
இவர் இன்று கலெக்டர் அலுவலகத்துக்கு மண் எண்ணை கேனுடன் வந்தார். திடீரென மண் எண்ணையை தன் உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.
விஜயா கடந்த 10 ஆண்டுகளாக பெருந்துறை பஞ்சாயத்து அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒருவரை காதலித்து வந்தார். தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினார். ஆனால் திருமணம் செய்து கொள்ள முடியாது என அந்த நபர் கூறி விட்டாராம்.
இது குறித்து விஜயா சில தினங்களுக்கு முன் கலெக்டர் முகாம் அலுவலகத்தில் மனு கொடுத்திருந்தாராம். இருந்தபோதிலும் விஜயாவை காதலன் ஏற்கவில்லை என்று தெரிகிறது.
எனவேதான் அவர் காதலனுடன் தன்னை சேர்த்து வைக்கக்கோரி தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்டது தெரிய வந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

Next Story