என் மலர்
உள்ளூர் செய்திகள்
- ஞானசேகரன் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததே சரியில்லை.
- எங்களுடைய சந்தேகம் எல்லாம் அந்த சார் யார்? என்பதே.
நெல்லை:
மதுரையில் இந்த மாதம் நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்வது தொடர்பான பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்றது.
கூட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு நெல்லை தெற்கு, வடக்கு, தென்காசி மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர் நயினார் நாகேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு செல்பவர்கள் உண்மையான முருக பக்தர்கள் அல்ல என்று அமைச்சர் சேகர்பாபு பேசியுள்ளார்.
அமைச்சர் சேகர்பாபு சபரிமலைக்கு போகக்கூடியவர். நல்ல பக்தர். அவர் இருக்கக்கூடிய இடம் சரியில்லை. அதனாலேயே கூடுதலாக பேசி வருகிறார். முருகர் அதை பற்றி கேட்பார்.
ஞானசேகரன் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததே சரியில்லை. குற்றப்பத்திரிகையை சரியாக தாக்கல் செய்தால் தான் நீதி கிடைக்கும். அந்த வழக்கை சி.பி.ஐ. தான் விசாரித்து இருக்க வேண்டும். எங்களுடைய சந்தேகம் எல்லாம் அந்த சார் யார்? என்பதே.
ஒரத்தநாட்டில் ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். சென்னையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். சென்னையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்குகள் எல்லாம் ஏன் 157 நாட்களில் விசாரித்து தீர்ப்பு வழங்கப்படவில்லை.
காவல்துறை தங்களது பணியை செய்வதே இல்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. காவல்துறை ஏவல் துறையாக மாறி விட்டது.
இந்தியாவில் பல்வேறு மொழிகள் இருக்கிறது. அந்த மொழி, இந்த மொழி என்று பிரித்து பார்க்க வேண்டிய தேவை இல்லை. வேற்றுமையில் ஒற்றுமை என்பதை தான் பா.ஜ.க.வும் விரும்புகிறது.
சட்டமன்ற தேர்தலில் பெட்டி பெட்டியாக பணம் இறக்குவார்கள் என்று த.வெ.க தலைவர் விஜய் சொல்லி இருக்கிறார். அந்த வகையில் இந்த முறை தி.மு.க. பெட்டி பெட்டியாக கொடுத்தாலும் தேர்தலில் தோற்பது உறுதி.
பென்னாகரம், திருமங்கலம் தேர்தல்களில் ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள். தற்போது 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பதற்கு தயாராகி வருகிறார்கள். எவ்வளவு கொடுத்தாலும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி.
பா.ம.க.வில் இருப்பது உட்கட்சி பிரச்சனை. அது பற்றி பேச முடியாது. ஆனால் பா.ம.க. எங்களோடு கூட்டணியில் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தே.மு.தி.க.வுக்கு அடுத்த ஆண்டே ராஜ்யசபா சீட் என அ.தி.மு.க. கூறிய நிலையில் பொதுச்செயலாளர் பிரேமலதா அதிருப்தியில் உள்ளார்.
- இந்தியா கூட்டணியின் தமிழ்நாட்டின் தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார்.
அ.தி.மு.க. சார்பில் வழக்கறிஞர் இன்பதுரை, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் தனபால் மாநிலங்களவை எம்.பி. வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
ராஜ்யசபா சீட் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தே.மு.தி.க.வுக்கு அடுத்த ஆண்டே ராஜ்யசபா சீட் என அ.தி.மு.க. கூறியதால் பொதுச்செயலாளர் பிரேமலதா அதிருப்தியில் உள்ளார்.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணியில் இணைய தே.மு.தி.க.வுக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம்,
தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் விஜயகாந்திற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பிரேமலதா விஜயகாந்த் நன்றி தெரிவித்தார். கூட்டணிக்கு அவரை வரவேற்பீர்களா? என்று கேள்வி எழுப்பினர்.
* இந்தியா கூட்டணியின் தமிழ்நாட்டின் தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார்.
* என்னைப் பொறுத்தவரை அவர்களை வரவேற்க காத்திருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பல்வேறு நாடுகளில் கொரோனா அச்சுறுத்தல் தொடங்கியுள்ளது.
- திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்காக தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
வேடசந்தூர்:
உலகையே உலுக்கிய கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மக்கள் நிம்மதிப்பெருமூச்சு விட்டு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் மீண்டும் பல்வேறு நாடுகளில் கொரோனா அச்சுறுத்தல் தொடங்கியுள்ளது. இந்தியாவில் தற்போது வரை 4000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் அதற்கான தீவிரம் இன்னும் தொடங்காத நிலையில் சுகாதாரத்துறை சார்பில் எவ்வித அச்சமும் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டது.
வேடசந்தூர் ரெங்கநாதபுரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 32 வயது வாலிபருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பணி நிமித்தமாக பெங்களூர் சென்று சொந்த ஊருக்கு வந்தார்.
தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு குணமடையாததால் திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பரிசோதித்தபோது அவருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனை வேடசந்தூர் அரசு தலைமை மருத்துவர் டாக்டர் லோகநாதன் உறுதி செய்தார்.
திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்காக தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக வலையுடன் கூடிய 8 படுக்கைகள் கொண்ட வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை இங்கு கொரோனா தொற்றுடையவர்கள் யாரும் அனுமதிக்கப்படாத நிலையில் தீவிர சிகிச்சை தேவைப்படுபவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த வார்டில் தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்கள் இருப்பு வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டில் ஒரே நாளில் அதிக கொலைகள் நடைபெறுவது இது முதல் முறையல்ல.
- மக்களைப் பாதுகாப்பதும், சட்டம் - ஒழுங்கை நிலை நிறுத்துவதும் தான் ஆளும் அரசின் முதல் கடமை.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் தொடங்கி தென்காசி - தூத்துக்குடி மாவட்டங்கள் வரை ஒரே நாளில் 8 பேர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவற்றில் பல கொலைகளுக்கு மது தான் காரணமாக இருந்திருக்கிறது. தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதில் திமுக அரசும், அதன் காவல்துறையும் படுதோல்வி அடைந்து விட்டன என்பதைத் தான் இந்த படுகொலைகள் காட்டுகின்றன.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மது குடிப்பது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் பிரகதீஸ்வரன் என்ற இளைஞரும், அவரது கொலைக்கு பழிவாங்க கஸ்தூரி என்ற பெண்ணும் கொல்லப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் நடுக்காவிரியில் மதுக்கடையில் மது வாங்குவதில் ஏற்பட்ட போட்டியில் விஜய் என்பவர் கொல்லப்பட்டார். அதேபோல், தூத்துக்குடி மாவட்டம் அம்பலச்சேரியில் சுயம்புகனி, தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகில் உமா, விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம் பண்ணை அருகே இராஜசேகரன், கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடுகபாளையத்தில் அஸ்வினி, கடலூர் மாவட்டம் சின்ன கங்கணாங்குப்பத்தில் அடையாளம் தெரியாத ஒருவர் என மொத்தம் 8 பேர் ஒரே நாளில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் படுகொலைகளில் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எந்த குற்றமும் செய்யாத அப்பாவிகள் பலரும் கூட படுகொலை செய்யப்படுவது வழக்கமாகி வருகிறது. இதனால் மாநிலத்தின் எந்த பகுதியிலும் மக்கள் அச்சமின்றி நடமாட முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. படுகொலைகள் உள்ளிட்ட பெரும்பான்மையான குற்றங்களுக்கு மது, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் தான் காரணமாக உள்ளன. ஆனால், சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டும், போதைப்பொருள்களை கட்டுப்படுத்த வேண்டும் என்ற எந்த அக்கறையும் திமுக அரசுக்கு இல்லை.
தமிழ்நாட்டில் ஒரே நாளில் அதிக கொலைகள் நடைபெறுவது இது முதல் முறையல்ல. கடந்த காலங்களில் இதே போன்று படுகொலைகள் நடைபெற்ற போதெல்லாம் அதை பாட்டாளி மக்கள் கட்சி சுட்டிக்காட்டி வந்திருக்கிறது. ஆனால், கொலைகளை கட்டுப்படுத்தி, சட்டம் = ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய தமிழக அரசு, குற்றங்களை மூடி மறைப்பதிலும், பிரச்சனைகளை திசை திருப்புவதிலும் தான் ஆர்வம் காட்டுகிறது.
மக்களைப் பாதுகாப்பதும், சட்டம் - ஒழுங்கை நிலை நிறுத்துவதும் தான் ஆளும் அரசின் முதல் கடமை. ஆனால், அந்தக் கடமையை செய்யத் தவறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடைபெறுவதாகக் கூறிக் கொண்டு மாய உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். முதலமைச்சரும், அவர் கட்டுபாட்டில் இயங்கும் காவல்துறையும் இயல்பு நிலைக்கு திரும்பி சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கவும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
- இரண்டு அதிகாரிகளும் மாணவியிடம் FIR வாங்க ஒருநாள் முழுவதும் தாமதம் பண்றாங்க.
- முதலமைச்சருக்கு 2 பொறுப்புகள், 2 பதவிகள் இருக்கு.
சென்னை:
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக முன்னாள் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:-
டிச.24-ந்தேதி குற்றம் செய்தபிறகு அடுத்த நாள் ஞானசேகரன் என்ன செய்கிறான்? CDR-ஐ பொறுத்தவரைக்கும் பழக்க வழக்கம் எப்படி இருக்கு?
அந்த பகுதி 170-வது வட்ட செயலாளர் ஒரு முக்கியமான தி.மு.க.-வின் மூத்த தலைவர் கோட்டூர் சண்முகம். இவரும் ஞானசேகரனும் டிச.24-ந்தேதி காலையில் இருந்து மாலை வரை 6 முறை பேசுகிறார்கள். அன்று காலை 7.27-க்கு முதல் போன்கால் தொடங்குது. மாலை 4.01 -வரை 5 முறை பேசுகிறார்கள். அதன்பிறகு தான் 4-5 மணிநேரம் பேசலை. அந்த நேரத்தில் ஞானசேகரனை காவல்நிலையத்தில் வைத்திருக்கணும். வெளியே வந்த பிறகு ஞானசேகரனும் கோட்டூர் சண்முகமும் மறுபடியும் பேசுகிறார்கள். எதுக்கு கோட்டூர்புரம் போலீசார் 24-ந்தேதி ஞானசேகரன் காவல்நிலையத்தில் இருந்து வெளியே விட்டீர்கள்? ஆதாரங்களை அழிக்கவா? செல்போன் பதிவு மற்றும் வீடியோக்களை அழிக்கவா? இல்லை அண்ணா பல்கலைக்கழகத்தில் உபயோகத்தில் இருந்த கேமராக்களை கழட்டி வீசவா? எதற்காக 24-ந்தேதி கைது செய்யப்பட்ட ஞானசேகரனை கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் இருந்து வெளியே விடப்பட்டார்?
இந்த நேரத்தில் முக்கியமான விஷயம், ஞானசேகரன் கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் இருந்து வெளியே வந்தபிறகு இரவு 8.30 மணிக்கு மேல அமைச்சர் மா.சுப்பிரமணியனும், கோட்டூர் சண்முகமும் பேசுகிறார்கள். மறுபடியும் 8.32 மணிக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியனும், கோட்டூர் சண்முகமும் பேசுகிறார்கள். இதை நாம் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். எதற்காக? யாரை காப்பாற்றுவதற்காக இவ்வளவு பதட்டம்?
அண்ணா பல்கலைக்கழகத்தில் பணிபுரியக்கூடிய நடராஜன் என்ற முக்கியமான அதிகாரி. அவரிடம் கேட் கட்டுப்பாட்டில் உள்ளது. இதை எல்லாம் காவல்துறை தான் சொல்லணும். இது என்னுடைய வேலை கிடையாது. 48 மணிநேரம் கழித்து அந்த நடராஜன் யார் என்பது குறித்து பேசுவோம். அவர் PRO- வா? கேட் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது? என்று.
அண்ணா பல்கலைக்கழகத்தில் இருக்கக்கூடிய நடராஜனும், கோட்டூர் சண்முகமும் டிச-23-ந்தேதி முதல் டிச.26-ந்தேதி வரை 13 முறை போனில் பேசுகிறார்கள். இதையடுத்து கோட்டூர் சண்முகம் ஒரு காவல்துறை அதிகாரியை தொடர்பு கொண்டு பேசுகிறார். இதற்கு காரணம் ஆதாரம் அழிக்கப்படுகிறது. உள்ளே போயிட்டு வெளியே வந்த ஞானசேகரன் ஆதாரத்தை அழிக்கிறான். இதை நான் சும்மா சொல்லவில்லை. எஸ்ஐடி பதிவு பண்ண 11 பிரிவுகளில் ஒரு பிரிவு ஆதாரத்தை அழித்ததற்காக போட்டு இருக்காங்க. அப்படி என்ன ஆதாரத்தை அழித்தான்.
அதன்பிறகு 25-ந்தேதி ஞானசேகரனை கைது செய்த பிறகு காவல்துறை சொல்கிறது... அண்ணா பல்கலைக்கழக கேமராக்கள் வேலைசெய்யவில்லை. செல்போன் தெரியலை. மே 14-ந்தேதி தான் சொல்றாங்க ஞானசேகரன் மீது இன்னொரு வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கு. அது எந்த நிலைமையில் இருக்குன்னு கூட தெரியலை. 25-ந்தேதி காவல்துறையை பொறுத்தவரை Blank. ஆகவே கோட்டூர் சண்முகத்துக்கு எதற்காக இவ்வளவு பதட்டம்? காவல்துறை கோட்டூர் சண்முகத்தை அழைத்து விசாரித்தீர்களா? கோட்டூர் சண்முகம் எந்த காவல்துறை அதிகாரிகிட்ட பேசுனாங்க அவங்களை அழைத்து பேசுனீங்களா? அமைச்சர் மா. சுப்பிரமணியனை காவல்நிலையத்திற்கு அழைத்தீர்களா எஸ்ஐடி? அவர்கிட்ட கேட்டீங்களா எதற்காக போன் வந்தது? எதற்காக நீங்க பேசுனீங்க? இதில் உங்களுக்கு என்ன தொடர்பு? இந்த கேள்விகளை நம்முடைய எஸ்ஐடி அதிகாரிகள் கேட்டீர்களா?
இந்த நேரத்தில் 2 விஷயங்களை கவனிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவியின் வழக்கறிஞர் சொல்கிறார், பாதிக்கப்பட்ட மாணவியிடம் 2 காவல்துறை அதிகாரிகள் FIR கொடுக்க வேண்டாம். FIR கொடுத்தால் வாழ்க்கை கெட்டு போகும் என்று சொல்கிறார்கள். ஒருத்தங்க மஃப்டியில் வராங்க, இன்னொருத்தங்க சீருடையில் வராங்க. இந்த இரண்டு அதிகாரிகளும் மாணவியிடம் FIR வாங்க ஒருநாள் முழுவதும் தாமதம் பண்றாங்க.
இன்றைக்கு நாம் கேட்கக்கூடிய முக்கியமான கேள்விகள்... யார் அந்த சார்? அதே கேள்வியே கேட்கிறோம். முதலில் இருந்து கேட்கிறோம். கோட்டூர் சண்முகம் விசாரிக்கப்பட வேண்டிய நபர். அமைச்சர் மா.சுப்பிரமணியனும் விசாரிக்கப்பட வேண்டிய நபர். அந்த தெளிவை முதலமைச்சர் சொல்லாமல் எதற்காக நாடகம் போடுகிறார். முதலமைச்சருக்கு 2 பொறுப்புகள், 2 பதவிகள் இருக்கு. கட்சியின் தலையீடு ஆரம்பத்தில் இருந்து இருக்கு. காவல்துறை தலையீடு இருக்கு. இவ்வளவு விஷயங்கள் நடந்திருக்கு... 24-ந்தேதி பல விஷயங்கள் நடந்திருக்கு. அங்கு தான் யார் அந்த சார்? ஒளிந்திருக்கிறார். தொடர்ந்து கேள்விகள் கேட்போம். இதைவிட போறதில்லை என்றார்.
- கொடி கட்டி மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாரசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.
- விழாவின் 6ம் நாள் நிகழ்ச்சியாக வருகிற 8ம் தேதி இரவு 7 மணிக்கு மேல் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.
பழனி:
அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் வைகாசி விசாக திருவிழாவும் ஒன்றாகும்.
அதன்படி இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று காலை நடைபெற்றது. கொடி கட்டி மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாரசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.
பின்னர் கொடி படத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு உட்பிரகாரமாக வலம் கொண்டு வரப்பட்டது. அதனை தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க கொடி மண்டபத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் சுவாமி ரதவீதிகளில் தங்கமயில், வெள்ளிமயில், ஆட்டுக்கிடா, காமதேனு உள்ளிட்ட வாகனங்களில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
விழாவின் 6ம் நாள் நிகழ்ச்சியாக வருகிற 8ம் தேதி இரவு 7 மணிக்கு மேல் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. அன்று இரவு 8.30 மணிக்கு மேல் மணக்கோலத்தில் சுவாமி எழுந்தருளி வெள்ளி தேரில் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 9ம் தேதி காலை 9.30 மணிக்கு மேல் தேரேற்றம் நடைபெறும். அன்று மாலை 4.30 மணிக்குமேல் வைகாசி விசாக தேரோட்டம் நடைபெறும். 4 ரதவீதிகளில் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
வருகிற 12ம் தேதி காலை திருவூடல் நிகழ்ச்சி நடைபெறும். அன்று இரவு கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறும்.
- இந்திய அரசியல் வரலாற்றின் மூத்த அரசியல் தலைவர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்தநாள் இன்று.
- தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் அவர் ஆற்றிய பணிகள் என்றும் அனைவரின் மனதிலும் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளது.
சென்னை:
கலைஞர் கருணாநிதியின் 102-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவரை புகழ்ந்து பலராலும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
இந்திய அரசியல் வரலாற்றின் மூத்த அரசியல் தலைவர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்தநாள் இன்று. இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் என்பதற்கு ஏற்ப அவர் வாழ்ந்த காலம் தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் அவர் ஆற்றிய பணிகள் என்றும் அனைவரின் மனதிலும் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளது.
கேப்டனுக்கும் அவருக்குமான அந்த அன்பும் நட்பும் மிக ஆழமானது. எங்களுடைய திருமணத்தை அவர் தலைமை ஏற்று நடத்தி வைத்தார். இவை அனைத்தும் வாழ்நாளில் மறக்க முடியாதவை. எனவே அவருடைய பிறந்த நாளுக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
- பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் நீதிமன்றத்தை நாடினர்.
- நீதிமன்ற அறிவுரையின்படியே தற்போது மக்கள் கருத்துக் கேட்பு நடைபெறுகிறது.
அரியலூரில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* அரசு பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது.
* அரசு பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது என ஏற்கனவே அரசு அறிவித்துள்ளது.
* பேருந்து கட்டணத்தை உயர்த்த தமிழ்நாடு அரசு விரும்பவில்லை.
* பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் நீதிமன்றத்தை நாடினர்.
* நீதிமன்ற அறிவுரையின்படியே தற்போது மக்கள் கருத்துக் கேட்பு நடைபெறுகிறது.
* தனியார் பேருந்து கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக கருத்து கேட்டு நீதிமன்றத்திடம் விவரம் அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அப்பா! ஆசான்! தலைவர்! இதில் எந்த வார்த்தையை முதலில் சொல்லி அழைப்பது.
- நீங்கள் ஏற்றிய திராவிடத் தீயே எப்போதும் நெஞ்சினில் கனன்று எரிகிறது.
மறைந்த தி.மு.க. தலைவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 102-வது பிறந்தநாள் விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
கருணாநிதி பிறந்தநாள் செம்மொழி நாளாக கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதால் அனைத்து மாவட்டங்களிலும் இந்த விழா இன்று சிறப்பாக நடத்தப்பட்டது.
கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி தி.மு.க. எம்.பி. கனிமொழி புகழாரம் சூட்டி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
அப்பா! ஆசான்! தலைவர்! இதில் எந்த வார்த்தையை முதலில் சொல்லி அழைப்பது. பணிவும், இரக்கமும், அன்பும், புரட்சியும், தமிழும், அறமும், மனிதமும், அரசியலும் உங்களிடம் இருந்தே கற்றுக் கொண்டோம். நீங்கள் ஏற்றிய திராவிடத் தீயே எப்போதும் நெஞ்சினில் கனன்று எரிகிறது. தமிழ் போல் வாழ்க உன் புகழ்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஆன்லைன் விளையாட்டுக்களை விளையாட ஆதார் இணைப்பு கட்டாயமாக்கி தமிழக அரசு உத்தரவு
- நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஆன்லைன் விளையாட்டுக்களை விளையாட கூடாது.
தமிழ்நாட்டில் ஆன்லைன் விளையாட்டுக்களை முறைப்படுத்த, கடந்த 2022-ம் ஆண்டு தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுக்கள் ஒழுங்குமுறைச் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் ஆன்லைன் விளையாட்டுக்களை ஒழுங்குபடுத்த விதிமுறைகளை வகுத்து பிப்ரவரி 14-ந்தேதி அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டது.
அதில், ஆன்லைன் விளையாட்டுக்களை விளையாட ஆதார் இணைப்பு கட்டாயமாக்கியதையும், நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை விளையாட்டுக்கு யாரையும் அனுமதிக்க கூடாது என நேர கட்டுப்பாடு விதித்து இருந்தது.
கடந்த பிப்ரவரி மாதம் கொண்டுவரப்பட்ட இந்த விதிகளை எதிர்த்து, பிளே கேம்ஸ் 24+7 பிரைவேட் லிமிட்டெட், ஹெட் டிஜிட்டல் வொர்க்ஸ், எஸ்போர்ட் பிளேயர்ஸ் நலச்சங்கம் உள்ளிட்டோர் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் விசாரித்து வந்தனர்.
இந்த வழக்கின் அனைத்து தரப்பு சார்பிலும் எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு கட்டுப்பாடு விதித்த தமிழ்நாடு அரசின் விதிமுறைகள் செல்லும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அந்த தீர்ப்பில், ரம்மி, போக்கர் போன்ற பணம் வைத்து விளையாடும் விளையாட்டுக்கள் பொது சுகாதாரத்துக்கு அச்சுறுத்தலாக உள்ளதால், ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்கு படுத்த மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது.
தமிழக அரசின் விதிகள் மத்திய அரசின் விதிகளுக்கு முரணாக இல்லை. நிபுணர் குழுவின் அறிக்கையில் அடிப்படையில் ஆன்லைன் விளையாட்டுக்கள் ஏற்படுத்தும் எதிர்மறை பாதிப்புகளை கருத்தில் கொண்டு பார்க்கும் பொழுது இந்த ஒழுங்கு முறை விதிகள் உடனடி தேவையாகிறது.
மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப விதிகள் இன்னும் அமலுக்கு வராத நிலையில், வெற்றிடத்தை நிரப்பும் வகையில் மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தனது ஆளு மைக்குட்பட்ட பகுதியில் வர்த்தக நடவடிக்கைகளை முறைப்படுத்த மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது.
ஆன்லைன் விளையாட்டுக்களால் தற்கொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதால் பொது சுகாதாரத்துடன் நேரடி தொடர்பு கொண்ட இந்த ஆன்லைன் விளையாட்டுகளை அரசு முறைப்படுத்த முடியும். மக்கள் தீவிரமான மன மற்றும் உடல் ரீதியிலான தாக்கங்களுக்கு உள்ளாகும் போது அரசு மவுனம் காக்க முடியாது .
இந்திய அரசியலமைப்புச் சட்டம் தொழில் புரியும் உரிமை வழங்கி உள்ள போதிலும், அதற்கு நியாயமான கட்டுப்பாடுகளும் உள்ளன. தொழில் புரியும் உரிமையை மக்கள் வாழ்வுரிமையை பாதிக்கும் செயல்களை செய்ய அனுமதிக்க முடியாது. மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டிய கடமை மாநில அரசுக்கு உள்ளது என கூறி இந்த வழக்குகளை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
- மாணவர்கள் சென்று வர இலவச வாகன வசதி மற்றும் அரசின் அனைத்து சலுகைகளும் வழங்கப்படுகிறது.
- ஆசிரியர்கள் வீடு, வீடாக சென்று மாணவர்கள் சேர்க்கை குறித்து பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
ஊட்டி:
தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான பெற்றோர்கள் ஆங்கில புலமைக்காக தங்களது குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்க விரும்புகிறார்கள்.
இதனால் பெரும்பாலான அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மிகவும் குறைந்து விட்டது.
குறிப்பாக கிராமப்புறங்கள் மற்றும் குக்கிராமங்களில் உள்ள பெரும்பாலான அரசு பள்ளிகள் மூடப்பட்டு விட்டன.
மாணவர்கள் வருகை குறைந்து வரும் நிலையில், பள்ளிகளை மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் தங்கள் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் விதமாக அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கி வருகின்றனர்.
இதுபற்றிய விவரம் வருமாறு:- நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே கீழுர் என்ற பகுதி உள்ளது. இங்கு கோக்கலாடா அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
மாணவர்கள் சேர்க்கை குறைந்ததால் இந்த பள்ளி சில ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது.
இதையடுத்து ஊர் பொது மக்கள் மற்றும் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்களின் முயற்சியால் பள்ளி 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டது.
இங்கு சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 42 மாணவர்கள் படித்து வருகிறார்கள்.
இந்த பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை தொடர்ந்து அதிகரிக்க ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்கள்.
மாணவர்களின் கல்வி நலனில் மட்டும் அக்கறை செலுத்தினால் போதாது என நினைத்த ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் தற்போது பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் ரூ.5 ஆயிரம் வரை செலுத்துவதாக உறுதி அளித்து துண்டு பிரசுரங்களை வழங்கி, மாணவர்களை அரசு பள்ளியில் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி பள்ளியில் 1-ம் வகுப்பு சேர்ந்தால் பள்ளி நிர்வாகம் சார்பில் அந்த மாணவரின் வங்கி கணக்கில் ரூ.5 ஆயிரம் டெபாசிட் செய்யப்பட உள்ளது.
மேலும் 5-ம் வகுப்பு வரை எந்த வகுப்பில் சேர்ந்தாலும், ரூ.5 ஆயிரம் வங்கி கணக்கில் செலுத்தப்பட உள்ளது.
6-ம் வகுப்பிற்கு ரூ.5 ஆயிரம், 7-ம் வகுப்பிற்கு ரூ.4 ஆயிரம், 8-ம் வகுப்பு சேர்ந்தால் ரூ.3 ஆயிரமும், 9-ம் வகுப்பில் சேர்வோருக்கு ரூ.2 ஆயிரமும் டெபாசிட் செய்யப்பட உள்ளது.
இதே பள்ளியில் பயிலும் இந்த மாணவர்கள் 10-ம் வகுப்பு முடித்து செல்லும் போது அந்த டெபாசிட் முதிர்வு தொகையை பெற்றுக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர 1 செட் சீருடை, டிரக் சூட்-1 செட், ஸ்கூல் பேக், காலணி, நோட்டு புத்தகங்கள், மாணவர்கள் சென்று வர இலவச வாகன வசதி மற்றும் அரசின் அனைத்து சலுகைகளும் வழங்கப்படுகிறது.
தற்போது பள்ளி திறக்கப்பட்ட நிலையில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க இந்த பள்ளிகளை சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமார், ஆசிரியைகள் மோனிஷா, வள்ளி உள்ளிட்ட ஆசிரியர்கள் வீடு, வீடாக சென்று மாணவர்கள் சேர்க்கை குறித்து பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வரக்கூடிய சூழ்நிலையில் தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக இதுபோன்று ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள், பள்ளியில் சேரும் மாணவர்களின் வங்கி கணக்கில் பணத்தை டெபாசிட் செய்து, மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க எடுத்து வரும் முயற்சிக்கு பொதுமக்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது.
- அதிகாரிக்கும் ஞானசேகரனுக்கும் என்ன தொடர்பு?
- இந்த ஒரு வழக்கு மட்டும்தானா இன்னும் பல வழக்குகளா?
சென்னை:
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக முன்னாள் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:-
ஞானசேகரனின் தொலைபேசி எண்ணானது 90429 77907. அரசு வழக்கறிஞர் சொல்கிறார் சம்பவத்தன்று ஞானசேகரனின் மொபைல் இரவு 8.52 மணி வரை பிளைட் மோடில் இருந்தது என்று. உண்மைதான். CDR -ம் அதை தான் சொல்கிறது. நான் இன்றைக்கு தொடரும் கேள்வி திமுக அரசு குறிப்பாக முதலமைச்சர் கிட்ட கேட்கணும். முதலமைச்சர் வீட்டில் பெண் குழந்தைகள் இருக்கிறார். அவர் இன்றைக்கு நேரடியாக பதில் சொல்ல வேண்டிய கடமை கட்டாயம் இருக்கு.
8.52 மணிக்கு பிறகு 8.55 மணிக்கு ஒரு காவல்துறை அதிகாரிக்கு தான் முதல் போன் காலை ஞானசேகரன் செய்கிறார். காவல்துறை மீது நான் பெரும் மதிப்பு வைத்துள்ளேன் என்பது எல்லோருக்கும் தெரியும். அதனால் அந்த காவல்துறை அதிகாரியின் பெயரையும், பதவியையும், அவரது மொபைல் நம்பரையும் நான் வெளியிடவில்லை. 48 மணிநேரம் கழித்து அரசு என்ன சொல்றாங்க பார்த்துவிட்டு வெளியிடுகிறேன்.
8.55 மணிக்கு காவல்துறை அதிகாரிக்கு செய்த முதல் போன்கால் எதற்காக? அந்த காவல்துறை அதிகாரி 6 நிமிடங்கள் கழித்து 9.01-க்கு திரும்ப ஞானசேகரனை அந்த அதிகாரி அழைக்கிறார்? எதற்காக? விசாரித்தீர்களா? காவல்துறை அதிகாரிக்கு ஞானசேகரன் என்ன ரிப்போட் பண்றான்னு குற்றம் செய்த பிறகு. அதை chargesheet-ல் கொண்டு வந்தீங்களா? அதிகாரிக்கும் ஞானசேகரனுக்கும் என்ன தொடர்பு? இதை ஏன் நான் திரும்ப திரும்ப கேட்கிறேன் என்றால் மே 16-ந்தேதி ஞானசேகரன் மீது சி.பி.சி.ஐ.டி போலீசார் 2-வது FIR பதிவு செய்கிறார்கள். டிச.23-ந்தேதி முதல் FIR. இதுபோன்று இன்னும் பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்களா? இந்த ஒரு வழக்கு மட்டும்தானா இன்னும் பல வழக்குகளா?
அரசு என்ன பண்ணுது மே 16-ந்தேதி பதிவு பண்ண 2-வது FIR-ஐ ரகசியமாக வைத்துள்ளது. நமக்கு சொல்லலை. பாலியல் வன்கொடுமை மற்றும் ஒரு வழக்கு ஞானசேகரன் மீது மே16-ந்தேதி சிபிசிஐடி பதிவு செய்கிறது. அது என்ன நிலைமையில் இருக்கிறது தெரியாது? அதைதான் கேட்கிறேன் என்றார்.






