என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • ஒன்றிய அமைச்சர் ஒருவர், "பிரிவினையைத் தூண்டுகிறது திராவிட மாடல்" என்று சொல்லி இருக்கிறார்.
    • மாவட்ட காஜிகளுக்கு மாதந்தோறும் ரூ.20,000 மதிப்பூதியம் வழங்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    சென்னை தலைமை செயலகத்தில் சிறுபான்மையினர் நலத்துறை ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

    * எல்லோருக்கும் என்பதில் பெரும்பான்மையும் உண்டு, சிறுபான்மையும் உண்டு.

    * திராவிட மாடல் என்பது யாரையும் பிரிக்காது. பிளவுபடுத்தாது, உயர்வு தாழ்வு கற்பிக்காது.

    * ஒன்றிய அமைச்சர் ஒருவர், "பிரிவினையைத் தூண்டுகிறது திராவிட மாடல்" என்று சொல்லி இருக்கிறார்.

    * அனைவருக்கும் அனைத்தையும் கிடைக்கச் செய்யும் ஆட்சி தான் திராவிட மாடல் ஆட்சியாகும்.

    * சிறுபான்மையினரின் நலனை பாதுகாப்பதிலும், மேம்படுத்துவதிலும் முன்னோடியாக உள்ளது திமுக அரசு.

    * சிறுபான்மையினரின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்கு ஆதரவு வழங்கி வருவது திமுக அரசு.

    * சிறுபான்மையினரின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் திமுக அரசு.

    * 2007-ல் சிறுபான்மையினர் நல இயக்குநரகம் உருவாக்கியது முன்னாள் முதல்வர் கருணாநிதி.

    * உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியங்கள் மூலம் பல்வேறு திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

    * 5 மாவட்டங்களில் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் உருவாக்கம்.

    * 2023ல் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொண்ட 3,987 பயனாளிகளுக்கு ரூ.10 கோடி நிதி உதவி.

    * மாவட்ட காஜிகளுக்கு மாதந்தோறும் ரூ.20,000 மதிப்பூதியம் வழங்கப்பட்டு வருகிறது.

    * எண்ணற்ற திட்டங்களை சிறுபான்மையினர் நலனுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    * 6 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் புதுமைப்பெண் திட்டத்தில் சேர்ப்பதற்கான அரசாணை.

    * சிறுபான்மையின மாணவர்களுக்கு 5 லட்சம் வரை கல்விக்கடன் வழங்கப்படும்.

    * சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கு வாழ்நாள் அங்கீகாரம் விரைவில் வழங்கப்படும்.

    * 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் இஸ்லாமிய மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை.

    * சிறுபான்மையின நலத்துறை சார்பில் தற்போது அறிவிக்கப்பட்ட உத்தரவுகள் உடனடியாக அமல்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.

    • தேர்தல் பத்திரங்கள் மூலமாக நன்கொடை பெறுவது சட்டவிரோதம் எனக்கூறி உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியிருக்கிறது.
    • தேர்தல் பத்திர நன்கொடை வழக்கில் நீதி கிடைத்ததைப் போல காங்கிரஸ் கட்சிக்கும் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பா.ஜ.க. ஆட்சியில் கார்ப்பரேட் அதிபர்களிடமிருந்து லஞ்சமாக பெறுவதற்கு பதிலாக தேர்தல் பத்திர நன்கொடை திட்டத்தை அறிமுகப்படுத்தி 2018 முதல் 2023 வரை 13,000 கோடி ரூபாய் பெறப்பட்ட மொத்த நன்கொடையில் ரூபாய் 6572 கோடியை பா.ஜ.க. மட்டும் பெற்றுள்ளது.

    இது மொத்த நன்கொடையில் 50 சதவிகிதம் ஆகும். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் பத்திரங்கள் மூலமாக நன்கொடை பெறுவது சட்டவிரோதம் எனக்கூறி உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

    தேர்தல் பத்திர நன்கொடை மூலமாக ரூபாய் 1 கோடி கொடுத்தவர்களின் எண்ணிக்கை 6812. இதன்மூலம் ரூபாய் 6812 கோடி நன்கொடையை வழங்கியது யார்? யார் இந்த கார்ப்பரேட்டுகள்? இந்த நன்கொடைக்கு ஈடாக கார்ப்பரேட்டுகளுக்கு பா.ஜ.க. செய்த உதவி என்ன? அதானி, அம்பானி உள்ளிட்ட தொழிலதிபர்களுக்கு பா.ஜ.க. செய்த சட்டவிரோத உதவிகளுக்கு ஈடாக நிதி பெறப்பட்டிருக்கிறது என்பதை மறுக்க முடியுமா? இதன்மூலம் இந்திய ஜனநாயகம் தேர்தல் களத்தில் இல்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

    உச்சநீதிமன்ற தீர்ப்பில் நீதி வழங்கினாலும், மோடி அரசு காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளை முடக்கியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் திங்கட்கிழமை முறையிட காங்கிரஸ் கட்சி முடிவெடுத்துள்ளது. தேர்தல் பத்திர நன்கொடை வழக்கில் நீதி கிடைத்ததைப் போல காங்கிரஸ் கட்சிக்கும் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.



    எனவே, ஒன்றிய பா.ஜ.க. அரசு வருமான வரித்துறை மூலம் காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கை முடக்கியதை கண்டிக்கிற வகையில் அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் எங்கெங்கு வருமான வரித்துறை அலுவலகங்கள் இருக்கிறதோ அதற்கு முன்பாக வருகிற 19-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 11 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டுமென அகில இந்திய காங்கிரஸ் அறிவுறுத்தி உள்ளது.

    அதன்படி மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் ஏற்பாடு செய்கிற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் ஆகியோர் பெருந்திரளாக பங்கேற்று மோடி அரசின் பாசிச, ஜனநாயக விரோத போக்கை கண்டிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாம் தமிழர் கட்சி சார்பில் களம் இறங்கும் 40 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • சீமான் தலைமையில் இந்த மாத இறுதியில் பிரமாண்டமான முறையில் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற உள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலை சந்திக்க சீமானின் நாம் தமிழர் கட்சி தயாராகி வருகிறது.

    தமிழகம் மற்றும் புதுவையில் 40 தொகுதிகளில் தனித்தே களம் இறங்கும் நாம் தமிழர் கட்சி 20 தொகுதிகளை பெண்களுக்கு ஒதுக்குவதற்கு முடிவு செய்துள்ளது. வேட்பாளர் தேர்வு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்துக்கும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் திட்டமிட்டுள்ளார்.

    இது தொடர்பாகவும், பாராளுமன்ற தேர்தல் பணிகள் குறித்தும் சென்னையில் இன்று நாம் தமிழர் கட்சியின் ஆலோசனை மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அண்ணா நகர் மேற்கு விரிவாக்கம் 100 அடி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு சீமான் பேசினார்.

    இதில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள், பேச்சாளர்கள் பங்கேற்றனர். பாராளுமன்ற தேர்தலில் எப்படி பணியாற்ற வேண்டும் என்பது பற்றி சீமான் இந்த கூட்டத்தில் விரிவாக விளக்கி பேசினார்.

    இந்த கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

    நாம் தமிழர் கட்சி சார்பில் களம் இறங்கும் 40 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. சீமான் தலைமையில் இந்த மாத இறுதியில் பிரமாண்டமான முறையில் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற உள்ளது.

    அந்த மேடையிலேயே சீமான் தனது தேர்தல் பிரசாரத்தையும் தொடங்க உள்ளார். இதைத் தொடர்ந்து அனைத்து பாராளுமன்ற தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் செய்து சீமான் பிரசாரம் செய்ய உள்ளார். அடுத்த வார இறுதியில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் கூட்டம் நடைபெற்ற மண்டபத்தில் சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த விவசாயி சின்னத்தை வேறு ஒருவருக்கு வேண்டுமென்றே ஒதுக்கியுள்ளனர். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துடன் பேச்சு நடத்தி வருகிறோம். அதில் உடன்பாடு ஏற்பட்டு விவசாயி சின்னத்தை பெறுவோம் என்கிற நம்பிக்கை உள்ளது. சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டால், வருகிற 20-ந்தேதி கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளோம். அதில் எங்கள் தரப்பு வாதங்களை எடுத்துக் கூறி நிச்சயம் விவசாயி சின்னத்தை பெறுவோம்.

    எந்த சூழலிலும் கூட்டணி என்பது கிடையாது. தனித்து போட்டியிட்டு 7 சதவீதத்துக்கும் அதிகமாக ஓட்டு வாங்கியுள்ளோம். கூட்டணி அமைத்து போட்டியிட்டால் 0.7 சதவீதம் ஓட்டு கூட கிடைக்காது.

    இவ்வாறு சீமான் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரசிகர் மன்றத்தை அரசியல் கட்சியாகவும் பதிவு செய்துள்ளதாக அறிவித்தார்.
    • அரசியல் வருகைக்கு பலதரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர்.

    தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் விஜய். அதிகளவில் ரசிகர் பட்டாளம் கொண்ட விஜய் அரசியலில் களமிறங்குவதை சமீபத்தில் உறுதிப்படுத்தி இருந்தார். மேலும் தனது ரசிகர் மன்றத்தை அரசியல் கட்சியாகவும் பதிவு செய்துள்ளதாக அறிவித்தார்.

    தனது அரசியல் கட்சிக்கு "தமிழக வெற்றி கழகம்" என விஜய் பெயர் சூட்டியிருந்தார். இவரின் அரசியல் வருகை குறித்து ஏற்கனவே பலரும் தகவல் தெரிவித்து வந்தனர். அந்த வகையில், விஜயின் அரசியல் வருகைக்கு பலதரப்பினரும் தங்களது வாழ்த்துகள் மற்றும் கருத்துக்களை தெரிவித்தனர்.

     


    மேலும், இவரது அரசியல் கட்சியின் பெயர் தொடர்பாக பலரும் கருத்துக்களை தெரிவித்தனர். சிலர் கட்சி பெயரில் எழுத்து பிழை இருப்பதாகவும், சிலர் தமிழகமா தமிழ்நாடா? என்பதில் சந்தேகம் தெரிவித்தனர். இந்த நிலையில், கட்சி பெயரில் எழுத்து பிழை இருப்பதை விஜய் ஏற்றுக் கொண்டிருப்பதாகவும், அதனை திருத்தவும் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஏற்கனவே தேர்தல் ஆணையத்தில் தமிழக வெற்றி கழகம் என்ற பெயர் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது வெற்றிக்கு பக்கத்தில் "க்" என்ற எழுத்தை சேர்த்து "தமிழக வெற்றிக் கழகம்" என திருத்தம் செய்து மீண்டும் பதிவு செய்யப்படும் என கூறப்படுகிறது. 

    • நாளை முதல் படகுகளில் கருப்பு கொடி கட்டி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை மீனவர்கள் தொடங்க உள்ளனர்.
    • 3 நாட்கள் பேரணியாக சென்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்துள்ளனர்.

    ராமேசுவரம்:

    இலங்கை கடற்படை கைது செய்த மீனவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து காலவரையற்ற போராட்டம் நடத்த மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.

    இந்நிலையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் மீனவர்களுக்கு சிறை தண்டனை வழங்குவதை கண்டித்து நாளை முதல் ஆர்ப்பாட்டம் நடத்த தமிழக மீனவர்கள் முடிவு செய்துள்ளனர். மேலும் கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிக்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

    நாளை முதல் படகுகளில் கருப்பு கொடி கட்டி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை மீனவர்கள் தொடங்க உள்ளனர்.

    3 நாட்கள் பேரணியாக சென்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்துள்ளனர். வரும் 20-ந்தேதி மீன்வளத்துறை அலுவலகத்தில் இருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி மீனவர்கள் பேரணியாக செல்ல உள்ளனர்.

    • முதற்கட்ட விசாரணையில் எரிந்த பள்ளி சீருடைகள், நடுநிலை பள்ளி மாணவிகள் அணியும் அளவிற்கு தைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
    • பள்ளி மாணவிகளின் சீருடைகள் விநியோகிக்கப்படாமல் எரித்தவர்கள் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கல்வித்துறை அலுவலர்களிடம் வற்புறுத்தி உள்ளனர்.

    கந்தர்வகோட்டை:

    புதுக்கோட்டை கந்தர்வகோட்டையில் உள்ள தஞ்சை சாலையில், பொது மயானம் உள்ளது. இந்த மயானத்திற்கு பின்புறம் அங்கமுத்து என்கிறவரின் விவசாய நிலம் உள்ளது.

    இதற்கு அருகில் பாசனத்திற்கான கிணறு ஒன்று உள்ளது. நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததன் காரணமாக இந்த கிணறு வறண்டு உள்ளது.

    இந்த கிணற்றில் இருந்து திடீரென புகை எழுந்து உள்ளது. புகை மண்டலம் குறித்து அப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு தகவல் அளித்துள்ளனர்.

    இதனை தொடர்ந்து அப்பகுதி விவசாயிகள் வந்து கிணற்றுக்குள் என்ன எரிகிறது என்று பார்த்த போது அதிர்ச்சி அடைந்தனர். காரணம் உள்ளே ஆயிரக்கணக்கான பள்ளி மாணவிகளுக்கான, பள்ளி சீருடைகள் எரிந்து கொண்டிருந்தன.

    உடனடியாக தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட பொதுமக்கள் தீயை போராடி அணைத்தனர். இதனை தொடர்ந்து தமிழக அரசு பள்ளி மாணவிகளுக்கு வழங்கும் இலவச சீருடைகள் எரிந்தது குறித்து காவல்துறை, பள்ளிக்கல்வித்துறை, அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு தகவல் அளித்தனர்.

    அங்கு வந்த காவல்துறையினரும், பள்ளி மற்றும் அரசு அலுவலர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் எரிந்த பள்ளி சீருடைகள், நடுநிலை பள்ளி மாணவிகள் அணியும் அளவிற்கு தைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து ஆயிரக்கணக்கான சீருடைகளை இங்கு வந்து கொட்டி எரித்தது யார்? இந்த சீருடைகள் திருடப்பட்டதா? அல்லது மாணவிகளுக்கு வழங்காமல் பள்ளி கல்வித்துறை அலுவலர்கள் இங்கு கொண்டு வந்து எரித்தனரா? என்று பல்வேறு கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

    பள்ளி இடை நில்லாமல் இருக்க வேண்டும், கல்வி கற்றோரின் சதவீதத்தை ஆண்டுக்கு ஆண்டு உயர்த்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் தமிழக அரசு இலவச சீருடை, புத்தகம், மதிய உணவு, காலை உணவு திட்டம் என்று பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு கல்வியை வளர்த்து வரும் நிலையில், இவ்வாறு பள்ளி மாணவிகளின் சீருடைகள் விநியோகிக்கப்படாமல் எரித்தவர்கள் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கல்வித்துறை அலுவலர்களிடம் வற்புறுத்தி உள்ளனர்.

    • குழந்தை கடத்தல் தொடர்பாக பொய்யான வதந்தி பரப்புவதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.
    • மக்களுக்கு சந்தேகம் இருந்தால் காவல்துறை உதவி எண் 100, 112-ஐ தொடர்பு கொள்ள வேண்டும்.

    சென்னை:

    சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

    * குழந்தைகளை கடத்த முயற்சிப்பது போன்று சமூக வலைதளங்களில் வீண் வதந்தி பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    * குழந்தை கடத்தல் தொடர்பாக பொய்யான வதந்தி பரப்புவதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.

    * மக்களுக்கு சந்தேகம் இருந்தால் காவல்துறை உதவி எண் 100, 112-ஐ தொடர்பு கொள்ள வேண்டும்.

    * 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு சந்தேகங்களை மக்கள் கேட்டறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கட்சியின் மாநில நிர்வாகிகள் மற்றும் உயர்மட்ட குழுவினருடன் மீண்டும் ஆலோசனை நடத்த பிரேமலதா முடிவு செய்துள்ளார்.
    • விஜயகாந்த் இல்லாத நிலையில் கட்சியை வலுவாக்க வேண்டிய கட்டாயம் பிரேமலதாவுக்கு ஏற்பட்டு உள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. அந்த வகையில் தே.மு.தி.க.வும் தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகி வருகிறது.

    விஜயகாந்தின் மறைவுக்கு பிறகு நடைபெறும் முதல் தேர்தல் என்பதாலும் பிரேமலதா பொதுச்செயலாளரான பிறகு நடைபெறும் தேர்தல் என்பதாலும் வருகிற பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. எந்த மாதிரியான முடிவை எடுக்க போகிறது, என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வருகிற தேர்தலில் வெற்றி பெற்று முதல் முறையாக பாராளுமன்றத்தில் கால் பதித்து விட வேண்டும் என்கிற எண்ணத்தில் காய் நகர்த்தி வரும் தே.மு.தி.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற கூட்டத்தில் பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் அ.தி.மு.க.வுடனான கூட்டணியையே விரும்பினார்கள் அதற்கேற்பவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க. இன்னும் வெளிப்படையாக பேச்சுவார்த்தையை தொடங்காத நிலையில் ரகசிய பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    தொகுதி பங்கீடு தொடர்பாக விரைவில் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகள் தொடங்க உள்ளன.

    தே.மு.தி.க. சார்பில் தொகுதி பங்கீடு பற்றி பேச்சு நடத்துவதற்காக அடுத்த வாரம் குழு அமைக்கப்பட உள்ளது. வருகிற 21-ந்தேதி இது தொடர்பான அறிவிப்பை பிரேமலதா வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதன் பின்னர் கட்சியின் மாநில நிர்வாகிகள் மற்றும் உயர்மட்ட குழுவினருடன் பிரேமலதா மீண்டும் ஆலோசனை நடத்தவும் முடிவு செய்துள்ளார். இந்த கூட்டத்துக்கு பிறகு அ.தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவுடன் தே.மு.தி.க. நிர்வாகிகள் முறைப்படி பேச்சு நடத்த உள்ளனர்.

    இந்த பேச்சுவார்த்தையின் போது 14 தொகுதிகளை கேட்பதற்கு தே.மு.தி.க. சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு மேல்-சபை எம்.பி. பதவியை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் தே.மு.தி.க. சார்பில் கோரிக்கை வைக்கப்பட உள்ளது.

    அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெறும் பட்சத்தில் தே.மு.தி.க.வுக்கு 14 தொகுதிகளை ஒதுக்குவதற்கு முன் வராது என்பது அனைவரும் அறிந்ததே. அது போன்ற சூழலில் கேட்டது கிடைக்காவிட்டால் கிடைக்கும் தொகுதிகளில் போட்டியிடலாம் என்பதே தே.மு.தி.க.வினரின் விருப்பமாக உள்ளது.

    அதே நேரத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் நிச்சயம் 7 தொகுதிகள் வரையிலாவது கேட்டுப்பெற்று விட வேண்டும் என்பதே தே.மு.தி.க.வினரின் எண்ணமாகவும் உள்ளது.

    இந்த தேர்தலை பொறுத்தவரையில் தே.மு.தி.க.வுக்கு மிகவும் முக்கியமான தேர்தலாகும்.



    விஜயகாந்த் இல்லாத நிலையில் கட்சியை வலுவாக்க வேண்டிய கட்டாயம் பிரேமலதாவுக்கு ஏற்பட்டு உள்ளது. அதற்கேற்ப தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையின் போது 14 தொகுதிகள் என்கிற முடிவை மாற்றிக் கொள்ளவும் தே.மு.தி.க. திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடனான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் கோபத்தில் தே.மு.தி.க. வெளியேறியது. இந்த முறை அது போன்று நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதும் கட்சியின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது.
    • அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. அதேநேரம் அணைக்கு வரும் நீர்வரத்தை விட பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 72.19 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 287 கனஅடியாக நீர் வந்து கொண்டிருக்கிறது. கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 2,000 கன அடியாக திறக்கப்பட்ட தண்ணீர் இன்று முதல் 1,800 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 700 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் 2,600 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 39. 61 அடியாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 2.42 அடியாகவும், வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 29.46 அடியாகவும் குறைந்து உள்ளது. மழை பொழிவு இல்லாததாலும், நீர்வரத்து குறைந்ததாலும் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பஞ்சு மிட்டாயில் புற்றுநோய் செல்லை உருவாக்கும் வேதிப்பொருள் இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • உணவு பாதுகாப்புத்துறை பரிந்துரையின் அடிப்படையில் தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில் "ரோடமைன் பி" கெமிக்கல் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை ஏற்படுத்தும் நிறமி சேர்க்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து பச்சை, ஊதா உள்ளிட்ட பல்வேறு நிறங்களில் விற்பனை செய்யப்படும் பஞ்சு மிட்டாய்களை சாப்பிடக்கூடாது என்று உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்தது.

    இந்நிலையில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    பஞ்சு மிட்டாயில் புற்றுநோய் செல்லை உருவாக்கும் வேதிப்பொருள் இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்புத்துறை பரிந்துரை அடிப்படையில் தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

    தடையை மீறி பஞ்சு மிட்டாய் விற்பனை செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    • பெரும்பாலும் வங்கி பரிவர்த்தனைகள் அதிகம் செய்வோரிடமும், தொழில் அதிபர்களிடமும் தான் குற்றவாளிகள் குறிவைத்து மோசடி செய்கிறார்கள்.
    • பெண்கள் தங்கள் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

    ஈரோடு:

    தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் பல்வேறு புதிய மோசடிகள் ஒவ்வொரு நாளும் அரங்கேறி வருகிறது.

    இது குறித்து போலீசார் என்னதான் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தினாலும் ஆங்காங்கே மோசடி சம்பவங்கள் நடைபெற்று தான் வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் சமீப காலமாக செல்போன் மூலம் வங்கி அதிகாரி போல் பேசி மோசடியில் ஈடுபடும் சம்பவம் நடந்து வருகிறது.

    இதுகுறித்து ஈரோடு மாவட்ட சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    பொதுமக்கள் செல்போன் எண்ணிற்கு வேறு மாநில காவல் அதிகாரிகள் பேசுவதாக கூறி வி.பி.எண்.+ 2222856817, 2244444121 போன்ற எண்களில் இருந்து செல்போன் அழைப்பு மூலமாகவோ அல்லது வாட்ஸ்-அப் கால், மெசஞ்சர் கால், ஸ்கைப் லிங்க் இதுபோன்ற ஆன்லைன் கால் மூலமாகவோ தொடர்பு கொண்டால் அதை நிராகரித்து விட வேண்டும்.

    தங்களுடைய ஆதார் அட்டை மூலம் செல்போன் எண் ஒன்று வாங்கப்பட்டுள்ளதாகவும், அந்த செல்போனில் குற்ற வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரிவித்தால் அதை யாரும் நம்ப வேண்டாம். தங்களிடம் ரகசியமாக பேச வேண்டும் என்பதால் தனியறையில் அமர்ந்து பேசுமாறும் உடன் இருக்கக்கூடாது என்று கூறினால் அதையும் தவிர்க்க வேண்டும்.

    பெரும்பாலும் வங்கி பரிவர்த்தனைகள் அதிகம் செய்வோரிடமும், தொழில் அதிபர்களிடமும் தான் குற்றவாளிகள் குறிவைத்து மோசடி செய்கிறார்கள். அதனால் இவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பொதுமக்கள் யாரும் வாட்ஸ்-அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டெலிகிராம் ஆகியவற்றில் வரும் விளம்பரத்தில் பார்ட் டைம் ஜாப் தொடர்பான செய்திகளை நம்ப வேண்டாம்.

    பெண்கள் தங்கள் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்வதை தவிர்க்க வேண்டும். குற்றவாளிகள் தங்களது புகைப்படங்களை மார்பிங் செய்து அதை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப் போவதாக மிரட்டி பணம் பறிக்கக்கூடும். கடந்த சில மாதங்களாக இது போன்ற மோசடி அதிகமாக நடைபெறுவதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

    இது தொடர்பாக ஏதேனும் சந்தேகமாக இருந்தால் 1930 என்ற இலவச எண்ணுக்கு தொடர்பு கொள்ள வேண்டும். அல்லது சைபர் கிரைம் போலீசாரின் இணையதள முகவரி www.CyberCrime.gov.in தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முத்துராஜை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றனர்.
    • விக்ரம் வீட்டுக்கு சென்று அடுத்தடுத்து 2 பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தாள முத்துநகர் தாய் நகரை சேர்ந்தவர் முத்துராஜ் (வயது 24). இவர் தனது நண்பர்களான ரிஜோ (21), ஹவுசிங் போர்டு விக்னேசுவரன் (20) மற்றும் வாலிபர்கள் 2 பேருடன் சேர்ந்து கதிர்வேல்நகர் குப்பைகிடங்கு அருகில் மது குடித்தனர்.

    அப்போது அங்கு வந்த விக்ரம் (22), ராபர்ட் ஆகிய 2 பேருக்கும் முத்துராஜிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த விக்ரம், ராபர்ட் ஆகிய 2 பேரும் வீட்டில் இருந்து அரிவாளை எடுத்து வந்து முத்துராஜை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றனர்.

    இதில் படுகாயமடைந்த முத்துராஜ் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் முத்துராஜின் நண்பர்கள் நள்ளிரவில் பிஅன்டி காலனியில் உள்ள உள்ள விக்ரம் வீட்டுக்கு சென்று அடுத்தடுத்து 2 பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர்.

    இதில் வீட்டின் வளாக முன்பகுதியில் விழுந்த பெட்ரோல் குண்டுகள் வெடித்து தீப்பிடித்தது. வீட்டில் உள்ளவர்கள் உடனே தீயை அணைத்தனர். இதுகுறித்து இருதரப்பினரும் அளித்த புகாரின்பேரில், சிப்காட் போலீசார் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஹவுசிங் போர்டு திருமுருகன் (19), ஸ்வீட்டன் ரிஜோ (21) ராஜகோபால் நகர் சந்தோஷ் ராஜா (20) மற்றும் 17 வயது சிறுவன் உட்பட 4 பேரை கைது செய்தனர். மேலும் மில்லர் புரத்தை சேர்ந்த விக்னேஸ்வரன் (20), மதன் (18) ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர்.

    ×